ஈழத்திற்கும், காசுமீருக்கும், மலேசியாவிற்கும், சோவியத்திற்கும், கோவாவின் விடுதலைக்குமென திராவிட இயக்கம் ஆதரவளித்ததும், உலக விடுதலைப் போராட்டங்களை தமது மேடைகளில் முழங்கியதற்குமான காரணம், திராவிட இயக்கத்தின் சனநாயக மரபும், கோட்பாடும் அடிப்படை காரணம். ‘விடுதலை’ உணர்வே திராவிடர் இயக்கக் கோட்பாட்டின் அடிப்படை. அம்மரபே திராவிட மாடல் ஆகும். இந்தியப் பார்ப்பனியத்தின் கோட்பாடுகளுக்கு ஏற்ப நடத்தப்படும் ஆட்சி அதிகாரம் என்பது அக்கட்சிகளின் ‘மாடலாக’ இருக்கலாம், அது திராவிட மாடலாக மாறுவது சற்று அதிகப்படியான சிரமத்தை அவர்களுக்கு கொடுக்கும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed