நீட் ஊழலில் புரளும் பாஜக மோ(ச)டி அரசு

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு, சமஸ்கிருதம் தெரிந்தால் தான் மருத்துவம் படிக்க இயலும் என்ற நிலையை நீதிக்கட்சி உடைத்தெறிந்தது. அதற்குப் பின்னரே தமிழர்கள் மருத்துவத் துறையில் கால்பதிக்க முடிந்தது. மருத்துவக் கட்டமைப்பும் வலுவானது. இந்த கட்டமைப்பை உடைக்கவே பார்ப்பனிய-பனியா நலனிற்கான ஆட்சி நடத்தும் மோடி அரசு நீட் தேர்வை புகுத்தியது. தமிழ்நாட்டு பாடத்திட்டத்தை புறக்கணித்து ஒன்றிய பாடத்திட்டத்தின் படி நீட் தேர்வாணையம் தேர்வுகளை நடத்த அனுமதி அளித்தது. தகுதி, திறமை என சொல்லி புகுத்திய இந்த தேர்வில் இப்போது இந்த பூஜ்ஜிய சதவரிசை (zero percentile) அறிவிப்பு எந்த தரத்தை பூர்த்தி செய்யும் என்பது அப்பட்டமான மக்கள் விரோத செயலாகும்.