நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது சமூகநலத் திட்டங்களா பெருநிறுவனங்களின் கடனா?

வெறும் 5,000-க்கும் குறைவாகவே இருக்கும் பெருநிறுவனங்களால் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு கிட்டத்தட்ட 14 லட்சம் கோடி. ஆனால் மாத வருமானம் ரூ.10,000 கூட ஈட்ட முடியாத நிலையில் இருக்கும் சாமானிய மக்களுக்கு வழங்கப்பட்ட சொற்பத் தொகைகளான சில ஆயிரம் கோடிகளில் வளர்ச்சி தடைபட்டு விட்டதாக மோடி சொல்கிறார்.