அமெரிக்க கறுப்பின வரலாற்றை படம்பிடித்த சம்மர் ஆஃப் சோல்

இலட்சக்கணக்கான கறுப்பினத்தவர்கள் கலந்துகொண்டு, கறுப்பினத்தவர்களின் இசையை, கலையை கொண்டாடிய 1969 ஹார்லெம் கலாச்சார திருவிழா என்னும் மாபெரும் வரலாற்று நிகழ்வை மீள்பதிவு செய்ய 2021-ஆம் ஆண்டு, கியூஸ்ட்லவ் என்ற இயக்குநரால் உருவாக்கப்பட்டது தான் ‘சம்மர் ஆஃப் சோல்’ என்னும் ஆஸ்கர் விருது வென்ற ஆவணப்படம்.