‘சில்வர்டன் சீஜ்’ – திரைப்படம் பேசும் வரலாறு

எண்ணெய் கிடங்கை தகர்க்க செல்லும் முன்னர் கால்வின் குமெலோ தன் சக தோழர்களிடம், “இதை சரியாக செய்தால் நமக்கு வெற்றி, இல்லையெனில் நமக்கு சிறைவாசம் இல்லை, மரணம் தான்” என்று கூறுவார். அவர்கள் அனைவரும் அன்று தங்களின் இன மக்களின் விடுதலைக்காகவும், தங்களின் கோரிக்கைகளுக்காகவும் தங்களின் உயிரை தியாகம் செய்தனர். பலனாக நெல்சன் மண்டேலாவை விடுதலை செய் எனும் முழுக்கம் கருப்பின மக்களிடையே மட்டுமல்லாது உலகம் முழுவதும் எதிரொலித்தது. அதன் தொடக்கப்புள்ளி அவர்கள் சில்வர்டன் சுதுக்கத்தை முற்றுகையிட்டதே.