முள்ளிவாய்க்கால் கருத்தரங்கிலிருந்து பாஜக வெளியேற்றப்பட வேண்டிய அவசியம்!

கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் தலைமையில் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வில் உரையாற்றும் பெயர் பட்டியலில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் 80-களில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து தமிழீழ விடுதலைக்காக தமிழ்நாட்டிலிருந்து போராடி வரும் ஐயா பழ. நெடுமாறன், தோழர் கொளத்தூர் மணி, தோழர் கோவை கு. இராமகிருஷ்ணன் உள்ளிட்ட பல ஆளுமைகளின் பெயர்களோடு, பாஜகவின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை அவர்களின் பெயரும் இடம்பெற்றிருப்பதே தமிழீழ ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.