பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழிகாட்டும் அனல் மேலே பனித்துளி

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள், அந்த குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை வாங்கிக்கொடுக்க முயற்சிப்பதில் வரும் சிக்கல்களை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்பதை தாண்டி, எப்படி இந்த கடினமான கட்டத்தை எதிர் கொண்டு கடந்து வர வேண்டும் என்பது தான் இப்படத்தின் முக்கிய கரு.