பெட்ரோல்-டீசல் விலையேற்றத்திற்கு காரணம் பாஜகவா பத்திரங்களா?

அனைத்து வரிகளிலும் கலால் வரி மிக அதிகமானது (கிட்டத்தட்ட 31%). ஒவ்வொரு முறையும் கலால் வரி உயர்த்தப்படுவதால் தான், மக்களின் எரிபொருள் வரிச்சுமை அதிகமாகிறது. குறிப்பாக அண்மைக் காலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி பல மடங்காக உயர்த்தப்பட்டு இருக்கிறது. மே 2020 வரை, லிட்டருக்கு ரூ.22.98 ஆக இருந்த கலால் வரி, 2021-இல் ரூ.32.98 ஆக உயர்த்தப்பட்டது. எனவே ஒன்றிய அரசிற்கு பெட்ரோலியப் பொருட்களால் கிடைக்கும் கலால் வரி எண்ணெய் பத்திரங்களின் மொத்த தொகையை விட மிக அதிகம்.