சுதந்திர காற்றை சுவாசிப்பத்தை ஒவ்வொரு மனிதனும் விரும்புவான். தமிழீழ தேசத்தின் ஒட்டுமொத்த மக்களும் சுதந்திர காற்றை சுவாசிக்க விரும்பியவர்கள் தான் தமிழீழ விடுதலைப் புலிகள். உலகின் எந்த ஒரு விடுதலைப் போராட்டமும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை போன்ற அர்ப்பணிப்போடு நடந்திடவில்லை. தமிழீழ மக்களே, குறிப்பாக பெண்களே விடுதலை போராளிகளாக மாறினார்கள். தான் காணாவிடினும் தனது அடுத்த தலைமுறையாவது சுதந்திர காற்றை சுவாசிக்கட்டும் என தன்னுயிரை கொடுக்க கரும்புலிகளாய் உருவானார்கள்.
உலகின் ஏகாதிபத்தியங்கள் எல்லாம் ஒன்றிணைந்து தமிழீழ விடுதலை போராட்டதை நசுக்கிய போது, துணிந்து போராடியவர்கள் தான் தமிழீழ விடுதலைப் புலிகள். தன் உயிர் போனாலும் தமிழீழ விடுதலையை மட்டும் ஒரு போதும் கைவிட்டதில்லை. ஆயுதங்களை மௌனித்த போதும், சுதந்திர தமிழீழம் அடைவதை கடைசிவரை உறுதியாய் கொண்டவர்கள். சுதந்திர தமிழீழம் அடைவதற்காக போராடி உயிர்நீத்த அனைவருமே ஒப்பற்ற மாவீரர்கள் ஆகிறார்கள். தமிழீழ விடுதலைப் போரில் உயிர்நீத்த அந்த ஒப்பற்ற மாவீரர்களை இந்நாளில் நினைவுகூர்வோம்!
தமிழீழம் வெல்லும்!
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
மே பதினேழு இயக்கம்
9884072010