ஈரோடு இடைத்தேர்தலில் ஆதரவு மற்றும் நிலைப்பாடு குறித்தான ஊடக சந்திப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் மே பதினேழு இயக்கத்தின் ஆதரவு மற்றும் நிலைப்பாடு குறித்து பத்திரிகையாளர் மன்றத்தில் சனவரி 25, 2025 அன்று நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி, தோழர். பிரவீன்குமார், விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் தோழர். குடந்தை அரசன், இடைதேர்தல் வேட்பாளரான தோழர். வெண்ணிலா மற்றும் பிற தோழர்களும் கலந்து கொண்டனர்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் பேசிய பதிவு:

ஊடக நண்பர்கள் அனைவருக்கும் தமிழ் தேசிய கூட்டணியின் சார்பாக வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். எங்களது கடந்த போராட்டத்தை மக்களிடத்திலே கொண்டு சேர்க்கக்கூடிய ஒரு பெரும் உதவியை செய்ததற்காக, எங்களது நன்றியும் நாங்கள் இந்த சமயத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நடக்க இருக்கக்கூடிய ஈரோடு இடைத்தேர்தல் குறித்தான தமிழ் தேசிய கூட்டணியினுடைய அரசியல் நிலைப்பாடுகளை தெரிவிப்பதற்காக இந்த ஊடகச் சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கின்றோம். தமிழ்நாட்டிலே மிக முக்கியமான ஒரு காலகட்டத்தில் இந்த இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த இடைத்தேர்தல் என்பது அடுத்த ஆண்டில் நடைபெற இருக்கக்கூடிய சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாகவும் இந்த இடைத்தேர்தல் அமைந்திருக்கிறது. பல்வேறு கோரிக்கைகள் சூழ இருக்கக்கூடிய இந்த சமயத்திலே, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட மிகப்பெரிய கட்சிகளாக தங்களை அறிவித்துக் கொள்ளக் கூடியவர்கள் பங்கேற்காத தேர்தலாக இந்த தேர்தல் இருக்கிறது. ஆளுங்கட்சி மட்டுமே பெரும்பான்மை பலத்துடன் இங்கே களத்தில் இறங்கக்கூடிய ஒரு சூழலை பார்க்கின்றோம். இப்படியான ஒரு கட்டத்தில் இதுவரை தமிழ்நாட்டில் இல்லாத ஒரு நெருக்கடியான சூழலை உருவாக்க வேண்டும் என்கின்ற முயற்சியிலே நாம் தமிழர் கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் அவர்கள், இந்த இடைத்தேர்தலை ஒரு கொள்கையை முரண்பாடு முன்வைக்கக்கூடிய ஒரு முயற்சியில் இறங்கி இருக்கிறார்.

தமிழ் தேசியமா? திராவிடமா? தந்தை பெரியாரா? பிரபாகரனா? என்று தமிழின தலைவர்களை ஒன்றோடு ஒன்று மோதுகின்ற வகையிலே தமிழினத்திற்கு துரோகம் செய்கின்ற வகையில் இரண்டு பெரும் ஆளுமைகளை எதிரெதிராக நிறுத்துகின்ற ஒரு மோசமான முயற்சியை இந்த தேர்தலின் ஊடாக முன்னெடுக்க இருக்கின்றார். அவர் அதை வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார். தமிழ்நாட்டிலே பல்வேறு கோரிக்கைகள் சூழ்ந்திருக்கக்கூடிய காலகட்டம் இது. அடுத்து வரக்கூடிய தேர்தலில் எந்த கோரிக்கை முன்னுக்கு வரவேண்டும், மக்களினுடைய கோரிக்கைகள் எது முக்கியத்துவம் பெற வேண்டும் என்கின்ற நிலையை பின்னுக்குத் தள்ளி, எதெல்லாம் தமிழர் எதிர்கொள்கின்ற சிக்கலாக இருக்கிறது என்பதை எல்லாம் விவாதிக்காமல், தமிழினத்திற்காக உழைத்த இரண்டு பெரும் தலைவர்களை எதிரெதிராக நிறுத்துகின்ற முயற்சியை ஏன் சீமான் முன்னெடுக்கிறார், என்கின்ற கேள்வியை நாங்கள் எழுப்ப விரும்புகின்றோம்.

தந்தை பெரியாரினுடைய காலகட்டம் வேறு, மேதகு பிரபாகரன் அவர்களுடைய காலகட்டம் வேறு, தந்தை பெரியார் இயங்கிய நாடு தமிழ்நாடு இந்தியாவிற்குள்ளாக தமிழர்களின் உரிமைகளைப் பற்றி தொடர்ச்சியாக பேசியும் போராடியும் அதற்காக சிறைபட்டும் தன் வாழ்நாள் முழுவதும் உழைத்திட்ட மாபெரும் தலைவர் தந்தை பெரியார் அவர்கள். அவர் மறைவிற்கு பிறகுதான் தமிழிழ விடுதலைப் புலிகள் அமைப்பு உருக்கொள்கிறது. அதற்குப் பிறகுதான் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் களத்திலே படை கட்டுகிறார். அந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயங்கிய களம் என்பது இலங்கைக்குள்ளாக சிங்கள பேரினவாதத்திலிருந்து தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும், தமிழீழ விடுதலை பெற வேண்டும் என்கின்ற விடுதலை நோக்கம் முன்வைத்து மேதகு பிரபாகரன் அவர்கள் தனது போராட்டத்தை நடத்தினார்.

ஆக இரண்டு பேரினுடைய இலக்குகளும் வேறு வேறாக இருந்தது, இரண்டு பேரினுடைய செயல் தளமும் வேறு வேறாக இருந்தது, இரண்டு பேரினுடைய காலகட்டமும் வேறாக இருந்தது. ”தந்தை பெரியார் சமூக சீர்கேடுகள் ஒழிய வேண்டும் என்பதற்காக போராடியவர். அவரது கருத்துக்களை தனது இயக்கத்தின் ஊடாக எடுத்துக்கொண்டு விடுதலை போராட்டத்திற்குள்ளாக தந்தை பெரியாரினுடைய முற்போக்கு கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு தேசிய இன விடுதலைப் போராட்டத்தை நடத்தியவர் மேதகு பிரபாகரன் அவர்கள்”. ஆக இரண்டு பேருமே தமிழினத்திற்கு மிக முக்கியமான பங்களிப்பையும் தமிழினம் முன்னேற வேண்டிய பாதையையும் காட்டியவர்கள்.

இந்த இரண்டு பேரையும் ஒருத்தரை ஒருத்தர் எதிராக நிறுத்துவதன் மூலமாக சீமான் சாதிக்க விரும்புவது என்ன என்றால்?, ”தமிழர்கள் தங்களுக்குள்ளாக அடித்துக் கொள்ள வேண்டும், தங்களுக்குள்ளாக முரண்பட்டுக் கொள்ள வேண்டும், தங்களுடைய அடையாளங்களை இழந்துவிட வேண்டும், தமிழர்களுக்காக போராடி இரண்டு பேரும் இயக்கங்களையும் எதிரியாக காட்டி தமிழர்களுக்குள்ளாக சண்டை வந்து, அதிலே பாரதிய ஜனதா கட்சி அல்லது ஆர்எஸ்எஸ் போன்ற தமிழர்களுக்கு எதிரான அமைப்புகள் நுழைவதற்கான ஒரு இடத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்” என்பதைத் தவிர சீமானின் நோக்கம் வேறு எதுவும் இல்லை என்பது பட்டவர்த்தனமாக அம்பலமாக இருக்கிறது.

தந்தை பெரியார் குறித்து திராவிடம் குறித்து, திராவிட இயக்கங்கள் குறித்து, திராவிட இயக்கத்தை தலைவர்கள் குறித்து, இழிவாக பேசி வந்தார். அதை எதிர்த்து பெரும் போராட்டத்தை நாங்கள் நடத்தினோம். பெரியார் குறித்து இழிவாக பேசிய அவதூறுகளுக்கு இதுவரை சீமான் மன்னிப்பும் கூறவில்லை, அவர் பேசியதற்கு ஆதாரமும் தரவில்லை, இந்த காலகட்டத்தில் மேதகு பிரபாகரன் அவர்களையும் விடுதலைப் புலிகளைப் பற்றியும் அவர் கொச்சைப்படுத்தும் விதமாக நீண்ட காலமாக பேசி வந்தார்.

தற்பொழுது வெளிப்படையாகவே மேதகு பிரபாகரன் அவர்களுடைய இரத்த உறவான அவரது அண்ணன் மகனை காதில் கேட்க முடியாத வார்த்தைகளால் இழிவாக திட்டுகிறார். மேதகு பிரபாகரன் அவருடைய இரத்த உறவு, அவர் அண்ணன் மகன் அந்த குடும்பம் இந்த ஈழ போராட்டத்தில் தன்னை ஒப்புவித்த குடும்பம். மேதகு பிரபாகரன் அவர்கள் தனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் இந்த போராட்டத்தில் களப்பலியாக கொடுத்தவர். விடுதலைப் போராட்டத்திற்காக அந்த குடும்பம் தனது ஒட்டுமொத்த எதிர்காலத்தையும் தங்களது வளத்தையும் வாழ்வையும் இழந்து, ஒரு மாபெரும் போர் நடத்தியவர்கள். மாபெரும் போராளி.

அப்பேற்பட்ட குடும்பத்தினுடைய ஒரு பிரதிநிதியை, அந்த இரத்த உறவை இவ்வளவு இழிவாக பேச வேண்டிய காரணம் என்ன? மேதகு பிரபாகரன் அவருடைய சகோதரனுடைய மகன் பேசுகின்ற கருத்தில் சீமான் அவருக்கு மாறுபாடு இருக்கிறது என்றால் மாறுபாடு சுட்டிக்காட்டலாம் அல்லது பிரபாகரன் அவருடைய சகோதரருடைய மகன் பேசுகின்ற கருத்தில் பிழை இருந்தால்  பிழையை சுட்டிக்காட்டலாம், தவறு இருந்தால் தவறை சுட்டிக்காட்டலாம், வரலாற்று விவரங்கள் இல்லை என்றால் வரலாற்று விவரத்தை சுட்டிக்காட்டலாம், அரசியல் இலக்கு இல்லை என்றால் அதை சுட்டிக்காட்டலாம். ஆனால் இவ்வளவு கொச்சையாக இழிவாக பேச வேண்டிய தேவை என்ன? அதை பேசுவதற்கான யோக்கியதை சீமானுக்கு இருக்கிறதா?

சீமான் யார் இந்த 16 ஆண்டு காலமாக ஈழ போராட்டம் என்ன செய்திருக்கிறார்? அவர் எப்படி மேதகு பிரபாகரன் அவருடைய குடும்பத்தினுடைய ஒரு இரத்த உறவை நேரடியான உறவை இவ்வளவு இழிவாக பேசுவதற்கான துணிச்சலை சீமானுக்கு யார் கொடுத்தது? அவர் தமிழ் தேசியத்தையும் தமிழிழ விடுதலைப் போராட்டத்தையும் விடுதலைப் புலிகளையும் இழிவுபடுத்துகிறார். இங்கே தமிழர்களுக்காக உழைத்த திராவிட இயக்கத்தையும் இழிவுப்படுத்துகிறார்.

இதற்கு முன்பாக விடுதலைப் புலிகளினுடைய மிக முக்கியமான தளபதியும் உலக அளவில் ராணுவ நிறுவனங்களில் பல்கலைக்கழகங்களில் விவாதிக்கப்படக்கூடிய அளவிற்கு புகழ்பெற்ற பொட்டம்மானை மிகக் கீழ்த்தரமாக பேசினார். பொட்டம்மான் கட்டி எழுப்பிய விடுதலைப் புலிகளினுடைய உளவுத்துறை என்பது, உலகத்தின் தலைசிறந்த உளவுத்துறை என்று சொல்லப்படுகின்ற இசுரேலினுடைய ’மொசாத்’ அமெரிக்காவினுடைய ’சிஐஏ’ இங்கிலாந்தினுடைய ’எம்16’ இந்தியாவினுடைய ‘RAW’ ஆகிய இந்த உளவுத் துறைகளை எல்லாம் விட சிறப்பாக அங்கு(ஈழ) களத்திலே இயங்கியது. இது குறித்தான அறிக்கைகள் வந்திருக்கின்றன. சிஐஏ யாருக்கும் தெரியாமல் ஈழத்திற்குள்ளாக அனுப்பிய உளவாளிகளை எல்லாம் கண்டறிந்து அங்கிருந்து வெளியேற்றியவர் அப்புறப்படுத்தியவர் பொட்டம்மான். மேதகு பிரபாகரன் அவர்களை பாதுகாத்தவர் பொட்டம்மான். மிக முக்கியமான தாக்குதல்களை கட்டுநாயக்க தாக்குதலாக இருந்தாலும் சரி, ஆணைய இரவு தாக்குதலாக இருந்தாலும் சரி, இந்த உலகப் புகழ் பெற்ற தாக்குதல்களுக்கு உளவு பார்த்து அதற்கான போர் தந்திரங்களை வகுப்பதற்காக செயல்பட்டவர் பொட்டம்மான் அவர்கள், அவரை மிக இழிவாக பேசக்கூடிய அளவிற்கு சீமானுக்கு என்ன தகுதி இருக்கிறது.

ஒரு காவல்துறையை பார்த்தால் அஞ்சி ஓடுகின்ற, ஒரு போராட்டத்தில் எடுப்பதற்கு துணிச்சல் இல்லாத, வெறும் வாய் சவால் பேசுகின்ற சீமான், விடுதலைப் புலிகளின் உடைய முக்கிய தளபதிகளை இழிவுபடுத்துவது ஆரம்பித்து இப்பொழுது மேதகு பிரபாகரனுடைய குடும்பத்தையும் அவர் இழிவு செய்திருக்கிறார். இதை நாங்கள் ஒருபொழுதும் மன்னிக்கவே மாட்டோம், இதை எந்த இடத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. போராடுகின்ற குடும்பங்களை எல்லாம் இழிவு செய்யக்கூடிய அளவுக்கான தகுதி படைத்த நபர் அல்ல சீமான்.

ஆக இப்படிப்பட்ட ஒரு மோசமான ஒரு நபர் அங்க தேர்தலை நிற்கிறார். அவருடைய வேட்பாளர் நிறுத்துகிறார். அவர் பேசாத, அவரால் இழிவுபடுத்தப்படாத சமூகம் என்று எதுவும் இல்லை, இழிவுபடுத்தப்படாத தலைவர் யாருமே இல்லை. அதிமுகவினுடைய தலைவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையாரும் இழிவுபடுத்தி இருக்கின்றார். திராவிட இயக்கத் தலைவர்களை இழிவுபடுத்தி இருக்கின்றார். அவர் இழிவுபடுத்தாத தலைவர் யாருன்னா பாரதிய ஜனதா கட்சியோட மோடியோ பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைவர்களோ அவரால் இழிவுபடுத்தப்பட்டதில்லை. ஆனால் மற்ற எல்லாருமே அவருடைய இழிச்சொல்லுக்கு பழிச்சொல்லுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

இசுலாமிய மக்கள் ஓட்டு போடவில்லையெனில் அவர்களை கொச்சையாக பேசுவது, கிருத்துவ சிறுபான்மை மக்களை கொச்சையாக பேசுவது, தலித் மக்களை புறக்கணிப்பது, இப்படி அவர் அனைவரையுமே எதிரியாக நிறுத்தக்கூடிய நபராக இருக்கிறார். ஆனால் பாரதிய ஜனதா கட்சிக்கும் அதனுடைய தலைவர்களையும் எந்த இடத்திலும் அவர் கேள்வி எழுப்பியதும் இல்லை, அவர்களை இழிவுபடுத்தியதும் இல்லை. இதிலிருந்தே அவர் யார் என அம்பலமாகிறது.

இதே சமயத்தில் நம்மவர்களுக்கு இருக்கக்கூடிய முக்கியமான சிக்கல் என்னவெனில் அடுத்த வருடம் தேர்தல் வரப்போகுகிறது. தமிழ்நாட்டுடைய கோரிக்கைகள் என்ன? தமிழர்களுடைய கோரிக்கைகள் என்ன? அடுத்த தேர்தலில் எது முதன்மையான சிக்கலாக பேசப்படணும்? அப்படியென்று எடுத்துக்கொண்டால் அது பல்வேறு கோரிக்கைகள் இருக்கிறது. நாங்கள் திமுகவை நோக்கி பல கோரிக்கைகளை வைத்து போராடிக் கொண்டிருக்கின்றோம்.

ஒப்பந்த ஊழியர்களை நீங்கள் நிரந்தரமான அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும், அது செவிலியராக இருந்தாலும் சரி, தூய பணியாளராக இருந்தாலும் சரி, ஆசிரியர்களாக இருந்தாலும் சரி, PW துறை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி, பேராசிரியர்களாக இருந்தாலும் சரி, மின்சாரத்துறை ஊழியர்கள் இருந்தாலும் சரி, இவர்களை எல்லாம் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று திமுகவோடு மல்லுக்கட்டி போராடிக் கொண்டிருக்கின்றோம். மாஞ்சோலை தொழிலாளர்களுக்கான நிவாரணம் கிடைக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கின்றோம். மீனவர்களுடைய பாதுகாப்பிற்காக வழக்குகளை இலங்கை ராணுவத்தின் மீது பதிவு செய்ய வேண்டும் என்று திமுகவை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கின்றோம். சாதிய வன்கொடுமைகள் தமிழ்நாடு முழுவதும் தலைவரித்து ஆடுகிறது, அதை நிறுத்த வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறோம். வேங்கைவைகளுக்கு தீர்வு வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கின்றோம்.

இப்படி எல்லா மட்டங்களிலும் இந்த கோரிக்கைகளை முன்னகர்த்த விரும்புறோம். நாங்கள் இந்த கோரிக்கைகள் முன்னுக்கு வரணும், ஆனால் இந்த கோரிக்கைகள் முன்னுக்கு வரவோ விவாதிக்கப்படவோ இல்லாமல் இன்றைக்கு பெரியாரை இழிவுபடுத்துவதும் பெரியார் பிரபாகரன் அவர்களை எதிரெதிராக நிறுத்துவதுமான அரசியலை சீமான் முன்வைப்பதும், பெரியாரை இழிவு செய்யக்கூடிய சீமானை கைது செய்யாமல் கைகட்டி வேடிக்கை பார்க்கக்கூடிய திமுக அரசையும் சேர்த்துத்தான், நாங்கள் இந்த தேர்தல் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்.

தமிழ்நாட்டில் எது முன்னிலை பெற வேண்டுமோ அந்த கோரிக்கைகள் முன்னிலை பெறவில்லை, திமுக அரசு இதற்கெல்லாம் பதில் சொல்லவில்லை, ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் ஏன் செய்யவில்லை என்று நாம் கேட்கின்றோம். தூய்மைப் பணியாளர்களுக்கு ஏன் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை என்று கேட்கின்றோம். பாரதிய ஜனதா கட்சியும் ஆர்எஸ்எஸ்னுடைய பரப்புரைகளும் அவர்கள் செய்கின்ற தமிழர் விரோத செயல்களையும் ஏன் தடுக்கவில்லை? ஏன் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை? என்ற கேள்வியை நாங்கள் திமுகவை நோக்கி வைக்கின்றோம். இப்போது திமுக பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியை தடுக்க தவறிவிட்டது என்று குற்றம் சாட்டுகின்றோம்.

இங்கே மாஞ்சோலை தொழிலாளர்கள் மிக முக்கியமான தமிழர்கள் எதிர்கொள்ளக்கூடிய மிக முக்கியமான சிக்கல். அது நடவடிக்கைகள் இல்லை. இது போன்ற கோரிக்கைகள் முன்னுக்கு வரணும் இந்த கோரிக்கைகளை முன்னுக்கு நகர்த்துவதற்கும் அடையாளப்படுத்துவதற்கும் தமிழினத்திற்கு இதுபோன்ற எண்ணற்ற கோரிக்கைகள் இருக்கின்றன.

இவற்றை கணக்கில் எடுங்கள் அதை முன்னிலைப்படுத்துங்கள் என்பதை மக்களிடத்திலே சொல்லித் தெளிவுபடுத்துவதற்கும், அதேபோல சீமானுடைய சீரழிவு அரசியல் மிக முக்கியமாக தமிழ்நாட்டினுடைய தமிழர்களினுடைய இரண்டு பெரும் ஆளுமைகளையும் நாம் கொண்டாடுகின்றோம். ஆக தமிழ் சமூகத்தில் இந்த இரண்டு பேரும் எதிரெதிராக சண்டை போட விடுறார், பேருக்கும் எதிராக பேசிட்டு இருக்கிறார். விடுதலைப் புலிக்கும் எதிராக பேசுகிறார், திராவிட இயக்கத்திற்கும் தந்தை பெரியாருக்கும் எதிர் எதிராக பேசுகிறார். இரண்டு பேரையும் எதிராக பேசக்கூடிய ஒரு அரசியல் தமிழ் தேசிய அரசியல் அல்ல. ஆக எது தமிழ் தேசிய அரசியல் மக்களுக்கு சொல்ல வேண்டியது இருக்கிறது.

இந்த 16 ஆண்டுகளாக தன்னுடைய சுயநலத்துக்காக வாய்க்கு வந்ததை எல்லாம் பேசக்கூடிய ஒரு நபர், தமிழ் தேசியம் என்று நம்பி இருக்கக்கூடிய இளைஞர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் எது உண்மை தமிழ் தேசியம் என்பதை சொல்ல வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறதாக நாங்க நினைக்கின்றோம். எது தமிழ் தேசியம் சொல்ல வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. அந்த போலிகளை அதாவது சீமான் போன்ற போலிகளை அடையாளப்படுத்தி மக்களிடத்தில் அம்பலப்படுத்த வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. ஆகவே இந்த அடிப்படையில் இந்த தேர்தலிலே அங்கே சுயாட்சையாக இறங்குகின்ற விடுதலைத் தமிழ் புலிகள் கட்சியைச் சார்ந்த வெண்ணிலா என்கின்ற வேட்பாளரை நாங்கள் ஆதரிக்கிறோம்.

சீமான் அவர்களுடைய அரசியலும் திமுக செய்யத் தவறிய அந்த வாக்குறுதிகளை அடையாளப்படுத்துகின்ற விதமாகவும் இந்த இரண்டு கட்சிகள் தான் பெரும்பான்மை கட்சிகளாக அந்த தேர்தல் களத்தில் இருக்கிறார்கள். ஆனால் இரண்டு கட்சிகளும் கவனத்தில் எடுக்க வேண்டியதும் குறிப்பாக சீமான் அவர்களை அம்பலப்படுத்த வேண்டிய கடமையோடும் சேர்த்து, எது தமிழ் தேசியம்? என்கின்ற அடிப்படையில் தமிழ் தேசிய வேட்பாளராக களம் இறங்குகின்ற இந்த சுயட்சை வேட்பாளர் வெண்ணிலா அவர்களை ஒரு பெண் வேட்பாளர். அவருடைய தாத்தா சாதியை ஒழிக்க வேண்டும் சாதியை ஒழிப்பதற்கு சாதியை பாதுகாக்கக்கூடிய சட்டப்பிரிவை எரிப்பேன் என்று தந்தை பெரியார் சொன்ன அந்த போராட்டத்தில் பங்கெடுத்து சிறை சென்றவர். அவருடைய பேத்தி தான் ஈரோட்டில் களம் இறங்குகிறார்.

ஈரோடு என்பது தந்தை பெரியார் பிறந்த மண். தந்தை பெரியாரினுடைய போராட்டக் களத்தில் நின்ற குடும்பத்தைச் சார்ந்த ஒரு வேட்பாளர் களமிறக்கப்படுகிறார். அவர் தமிழ் தேசியத்தை முன்வைக்கின்றார். எது தமிழ் தேசியம் என்பதை அடையாளப்படுத்துகிறார். இந்த வேட்பாளர் தமிழ் தேசிய அரசியலை அந்த களத்திலே அந்த மக்களிடத்திலே எடுத்துச் சொல்லியும், எது திராவிடம்? திராவிடம் தமிழுக்கு என்ன செய்தது?, தந்தை பெரியார் இந்த மண்ணுக்கு என்ன உழைத்தார்? என்பதை தந்தை பெரியார் உடைய மண்ணிலே ஈரோட்டிலே நின்று உறக்க மக்களிடத்திலே எடுத்துச் சொல்லி இந்த அரசியல் வெல்வதற்கு தமிழ் தேசியமும் திராவிடமும் இரண்டும் தமிழினத்தினுடைய இரண்டு பெரும் ஆற்றல்கள், இரண்டு பெரும் கருத்தியல்கள், இரண்டு பெரும் போராட்ட அமைப்புகள்.

இந்த இரண்டு போராட்ட அமைப்பு திராவிடம் நமக்கு இட ஒதுக்கீடு அரசியலை முன்னுக்கு நகர்த்தி அதை வெற்றி கண்டது. பார்ப்பனர்கள் உயர் சாதிகள் மட்டுமே ஆக்கிரமித்த இந்த தேர்தல் அரசியல் பதவி அரசியல் இவற்றை அவர்களை அப்புறப்படுத்தி, அதிகாரத்திலும் ஆட்சியிலும் பார்ப்பனர் அல்லாதோர் வரலாம், சாமானியர்கள் வரலாம், ஏன் சீமான் போன்றவர்கள் எல்லாம் அந்த பதவிக்கு வரலாம் என்கின்ற நிலையை உருவாக்கியது திராவிட இயக்கம்.

இன்றைக்கு மொழிப்போர் நினைவினால் இந்திய ஆதிக்கம் நிலைபெற்றிருக்கும் என்றால் இன்றைக்கு தமிழ்நாட்டினுடைய நிலை என்னவாக இருந்திருக்கும் பிற மாநிலங்களில் பார்க்கின்றோம். அவர்களது மொழி பின்னுக்குத் தள்ளப்பட்டு இந்தி முன்னுக்கு வருகிறது. இப்படிப்பட்ட சூழல் தமிழ்நாட்டில் இல்லாமல் போனதற்கு திராவிட இயக்கம் தொடர்ச்சியாக நடத்திய அந்த இந்திய எதிர்ப்பு போராட்டம் மொழிப்போர். அந்த மொழிப்போரிலே நூற்றுக்கணக்கானவரை பலி கொடுத்து நின்ற அந்த திராவிட இயக்கம் இதுபோல எண்ணற்ற போராட்டங்கள் இந்த திராவிட இயக்கம் தான்.

விடுதலைப் புலிகள் இங்கே களம் இறங்குவதற்கும் மிகக் குறிப்பாக சீமானை நம்புகின்றவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். இந்திய பேரரசு ஒரு லட்சம் படையினர் இந்திய படையை ராணுவப்படையை ஈழத்தில் இறக்கி நான் இரண்டு வாரங்களுக்குள்ளாக அல்லது ஒரு வாரத்திற்குள்ளாக அல்லது நான்கு மணி நேரத்திற்குள்ளாக விடுதலைப் புலிகளை அழிப்பேன் என்று சொன்னபொழுது, சொந்த நாட்டிற்கு எதிராக பெரியாரிய திராவிட இயக்கத் தோழர்கள்தான் விடுதலைப் புலிகளுக்கு தோள் கொடுத்தார்கள். சொந்த நாட்டிற்கு எதிராக இந்திய நாட்டிற்கு எதிராக விடுதலைப் புலிகளுக்கும் தமிழ் தேசியத்திற்கும் நாங்கள் தோள் கொடுக்கிறோம் என்று தோளிலே தூக்கி சுமந்தார்கள். தமிழ்நாட்டிலே அதற்காக சிறை சென்றார்கள், வழக்கு வாங்கினார்கள்.

திராவிட இயக்கத்தவர் தந்தை பெரியாரின் வழியிலே வந்தவர்கள். அதுபோன்ற போராளிகளை விடுதலைப் புலிக்கு எதிராக நிறுத்துகிறார். இந்த நபரை நாங்கள்(மே17) நேருக்கு நேர் எதிர்கொள்றோம். சீமான் அவர்களே நாங்கள் உங்களை நேராக களத்தில் எதிர்கொள்கின்றோம். எங்களுக்கு பெரிய வாக்குகளை வாங்கி குவித்து அதை பதவிக்கு போக வேண்டும் என்கின்ற விருப்பம் எல்லாம் கிடையாது, ஆனால் உங்கள் களத்தில் உங்களை எதிர்கொள்கின்றோம், நீங்க சொல்றீங்களே நான் முதலமைச்சர் ஆனால் நான் முதலமைச்சரானால் கதை விட்டீங்களே அந்த களத்தில் நேருக்கு நேராக நாங்கள் எதிர்கொள்கிறோம். நீங்கள் சொல்லுகின்ற பொய்களை, நீங்கள் பேசுகின்ற என்ற இந்த அவதூறுகளை, உங்களது பித்தலாட்டத்தை, தேர்தல் களத்தில் நேருக்கு நேராக நின்று நாங்கள் எதிர்கொள்கின்றோம், முடிந்தால் எங்களை எதிர்கொள்ளுங்கள் பார்ப்போம்.

சீமான் நீங்கள் இதுவரை எதிர்கொள்ளாத எதிரியை நீங்கள் இப்பொழுது சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நாங்கள் அன்றைக்கே அறிவித்தோம். அதற்குப் பிறகும் நீங்கள் மன்னிப்பு கோரவில்லை வருத்தத்தை தெரிவிக்கவில்லை, தொடர்ச்சியாக திராவிடத்திற்கும் தந்தை பெரியார் அவர்களுக்கும் எதிராக பேசி அவதூறுகளை பரப்பி, கடைசியாக விடுதலைப் புலிகளினுடைய மேதகு பிரபாகரன் அவர்கள் குடும்பத்தினரின் இழிவாக பேசி, களத்தில் நிற்கும் பொழுது பார்த்து நாங்க சும்மா இருக்க மாட்டோம். நேருக்கு நேராக வருகிறோம்.

எங்களுக்கு வெற்றி பெற்று நாங்க பதவிக்கு போகணும்ன்ற விருப்பத்தில் எல்லாம் வரவில்லை, எது தமிழர்களுடைய கோரிக்கை, எது தமிழ் தேச கோரிக்கை முன்னுக்கு நகர்த்துவோம். அதே சமயத்துல் சீமான் தமிழ் தேசியவாதி அல்ல, சீமான் ஒரு சீரழிவுவாதி தமிழின துரோகி என்பதை நாங்கள் நிரூபிப்போம். அந்த மக்களிடத்தில் உங்களை அம்பலப்படுத்துவது தான் எங்களது நோக்கம். அதான் எங்கள் இலக்கு. தமிழ் தேசிய கூட்டணி நாங்கள் களம் இறங்குகின்றோம்.

இந்த களத்திலே மேதகு பிரபாகரன் அவர்களையும் தந்தை பெரியார் அவர்களையும் இழிவுபடுத்துகின்ற சீமானை அப்புறப்படுத்துகின்ற வகையிலே, மக்களிடத்தில் அம்பலப்படுத்துகின்ற வகையில், நாங்கள் பரப்புரை மேற்கொள்வோம். அந்த வகையிலே தோழர் வெண்ணிலா அவர்கள் அங்கே சுயேச்சை வேட்பாளராக விடுதலை தமிழ் புலிகள் கட்சியினுடைய வேட்பாளராக நிற்கின்றார். அவருக்கு ஒதுக்கப்பட்டிருக்கக்கூடிய சின்னமாக ’கணக்கீட்டு பொறியை’ (கால்குலேட்டர்) ஒதுக்கி இருக்கிறார்கள். அந்த சின்னத்தை நீங்கள் அடையாளம் கண்டுகொண்டு அவரை நீங்கள் ஆதரிக்கலாம்.

அவரை ஆதரிப்பது என்பது இந்த போலி தமிழ் தேசியத்தை அம்பலப்படுத்துகின்ற ஒரு வாக்காக அமையும். அவரை நீங்கள் ஆதரிப்பதன் மூலமாக இந்த போலி தமிழ் தேசியத்தையும், தமிழ்நாட்டிற்குள்ளாக தமிழர்களின் தலைமைகளை எதிரெதிராக நிறுத்துகின்ற ஒரு துரோகத்தை (சீமானினுடைய துரோகத்தை) அம்பலப்படுத்துவதாக அமையும். அவர் ஏற்கனவே கவுன்சிலராக இருந்து மக்கள் பணி செய்து கொண்டிருக்கக்கூடிய ஒருவர். கவுன்சிலராகவே வெற்றி பெறாத நாம் தமிழர் கட்சிக்கு எதிராக நிற்கின்றார். ஒரு கவுன்சிலராக கூட தேர்ந்தெடுக்க முடியாத ஒரு கட்சியாக இருக்கக்கூடிய நாம் தமிழருக்கு எதிராக ஒரு கவுன்சிலராக நிற்கக்கூடிய இருக்கக்கூடிய அந்த தோழர் பெரியாரினுடைய அந்த போராட்டத்தில் பங்கெடுத்த அந்த குடும்பத்திலே வந்தவர். அவர் இந்த களத்தில் நிற்கின்றார்.

எங்களுடைய இலக்கு போலித் தமிழ் தேசியத்தை அம்பலப்படுத்துவதும் தமிழ்நாட்டினுடைய கோரிக்கைகளை எதை முதன்மைப்படுத்த வேண்டும் அடுத்து வரக்கூடிய தேர்தலில் எது விவாதமாக வேண்டும். திமுக அரசு செய்ய மிகத் தவறிய விடயங்களை நாங்கள் சுட்டிக்காட்டி, இந்த விடயங்களை இவர்கள் இன்னும் நிறைவேற்றவில்லை. ஏன்னெனில் இன்னும் ஒரு வருடம் தான் இருக்கிறது. இந்த ஒரு வருடத்திலாவது அவர்கள்(திமுக) நிறைவேற்ற வேண்டும். இல்லை என்றால் கடுமையான எதிர்ப்பை 2026 தேர்தலை எதிர்கொள்வார்கள்.

ஆக இந்த இரண்டு கட்சிகளுக்கும் எதிராக மாற்றாக தமிழ் தேசிய ஆற்றலாக புதிய ஆற்றலாக எது தமிழ் தேசியம் என்பதை அடையாளப்படுத்தும் விதமாக நாங்கள் பரப்புரையை மேற்கொள்கிறோம். அப்படியான எங்களது முயற்சிக்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டும். முற்போக்கு சக்திகள் எங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். இந்த போலி தமிழ் தேசியவாதியை சீரழிவு வாதியை தந்தை பெரியாரை இழிவு செய்யக்கூடிய நபரை அவதூறு செய்யக்கூடிய தமிழினத்தினுடைய வரலாறை அவதூறு செய்யக்கூடிய சீமானினுடைய அரசியலுக்கு முடிவு கட்டுவதற்காக நாங்கள் இங்கே களம் இறக்கி இருக்கின்றோம். இந்த போலியையும் இந்த அவதூறு செய்யக்கூடிய சீரழிவு நபரையும் நேருக்கு நேராக எதிர்கொள்வோம். அதற்கான அறிவிப்பு நாங்கள் இன்று வெளியிடுகின்றோம்.

வருகின்ற திங்கள்(27.01.2025) கிழமையிலிருந்து எங்களது தோழர்கள் சனநாயக ஆற்றல்கள் தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய சனநாயக சக்திகள் ஒன்றாக வாருங்கள். இந்த சீரழிவு சக்தியை நீங்க தமிழ்நாட்டிலிருந்து அரசியலை அப்புறப்படுத்தினால்தான் முற்போக்கு அரசியலுக்கு களம் கிடைக்கும். முற்போக்கு தமிழ் தேசியத்திற்கு இடம் கிடைக்கும் இந்த இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படாமல் இருப்பார்கள். இந்த இளைஞர்களை சரியான திசைக்கு கொண்டு செல்வதற்கும் சரியான கருத்துகளை புரிந்து கொள்வதற்குமான ஒரு வாய்ப்பை நாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

ஆகவே தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய முற்போக்கு சக்திகள் ஒன்றுபட்டு நின்று இந்த சீரழிவு அரசியலை அம்பலப்படுத்தி இனிவரை இருக்கக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலில் எது கோரிக்கை, எது மக்களின் கோரிக்கை, எதை திமுக நிறைவேற்றவில்லை, எது தவறி இருக்கிறது, என்பதை அடையாளப்படுத்துவதற்கும் இந்த தேர்தல் களத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் அறைகூவல் விடுக்கின்றோம். தந்தை பெரியாரையும் மேதகு பிரபாகரன் அவர்களையும் இழிவு செய்த சீமானை நாங்கள் களத்தில் எதிர்கொள்கின்றோம். நன்றி வணக்கம்!

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் உரையாடிய காணொளி யூடியூப் இணைப்பு:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »