முத்துராமலிங்க தேவருக்கு துரோகம் செய்த சாவக்கர்

”இந்திய விடுதலைக்கு எந்த பங்களிப்பும் செய்யாமல் நேதாஜிக்கு எதிராக படை திரட்டி முத்துராமலிங்க தேவருக்கு துரோகம் செய்தவர்தான் ஆர்.எஸ்.எஸ்- இன் சாவக்கர்” என மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கொண்டல்சாமி தனது சமூகவலைதளத்தில் அக்டோபர் 30, 2025 அன்று பதிவு செய்தது.

இந்திய விடுதலைக்கு மட்டுமில்லை முத்துராமலிங்க தேவருக்கும் துரோகம் செய்தவர்தான் ஆர்.எஸ்.எஸ் இன் சாவக்கர்.

சாவக்கரும் சரி, அவரது இயக்கமான இந்துமகா சபாவும் சரி, இந்தியாவின் விடுதலைக்கு எதிராக இருந்தார்கள் என்பதை மே17 இயக்கம் கடந்த 8 ஆண்டுகளாக ஆதாரத்துடன் சொல்லிவருகிறது. இதை இதுவரை ஆர்.எஸ்.எஸ் கும்பல் மறுத்ததில்லை. ஆனால் இந்த ஆர்.எஸ்.எஸ் கும்பல் முத்துராமலிங்க தேவருக்கு எதிராக செய்த வேலையை வரலாற்றிலிருந்து மறைக்க பார்க்கிறார்கள்.

1940ஆம் ஆண்டில் மதுரையில் நடந்த மாநாட்டில் பேசிய சாவக்கர் “பிரிட்டிஷ் அரசின் போர் விருப்பங்களை ஆதரிப்பது ஹிந்துக்களின் பாதுகாப்புக்கு அவசியம்” எனக்கூறியதோடு இந்துக்கள் எல்லோரும் பிரிட்டிஷின் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் சேரவேண்மென்று வெளிப்படையாக கூறினார். இதை எதிர்த்த ஒரே தலைவர் பெரியார் ஒருவரே.

அவர்தான் சொன்னார் “இன்று ஹிந்துக்களை பிரிட்டிஷ் படையில் சேர்கிறார்கள்; அவர்கள் இந்திய சுதந்திரத்திற்காக அல்ல, பிரிட்டிஷ்க்கு ஆதரவாக போராடுகிறார்கள்.” -விடுதலை, 1942 ஜூலை

மேலும் இந்துக்களை பிரிட்டிஷ் படையில் சேர்ப்பதற்காக Special Recruitment Committees போன்ற பல்வேறு குழுக்களை உருவாக்கியது சாவக்கர் தலைமையிலான இந்து மகாசபை. இவை “Hindu Militarization Boards”, “Military Volunteer Committees”, மற்றும் “Recruitment Drives under Hindu Mahasabha” இந்த குழுக்களின் நோக்கமென்பதே “Join the British Army to Protect Hindu Dharma” என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தார்கள்.

இதன் மூலம் நாக்பூர் பஞ்சாப் மத்திய பிரதேசம் மகாராஷ்டிரா போன்ற பகுதியிலிருந்து பல லட்சம் இளைஞர்களை பிரிட்டிஷ் படையில் சேர்த்தது சாவக்கர் தலைமையிலான இந்துமகாசபா. அதன்படி தமிழ்நாட்டில் மதுரை திருநெல்வேலி இராமநாதபுரம் தேனி போன்ற ஊர்களில் பெரும் எண்ணிக்கையில் ஆட்களை பிரிட்டிஷ் இரானுவத்தில் இந்துமகாசபா சேர்த்தது.

ஆனால் இதெல்லாம் ஏன் மதுரையை சுற்றியே நடந்ததென்றால் இந்த மதுரையை சுற்றித்தான் முத்துராமலிங்க தேவர் பிரிட்டிஷ் இராணுவத்திற்கு எதிராக போராடிய நேதாஜிக்கு படைதிரட்டிக் கொண்டிருந்தார். அந்த படையை வீழ்த்த ஏற்கனவே இந்தியாவின் வடபகுதியிலிருந்து பெரும் எண்ணிக்கையில் ஆட்களை திரட்டி அனுப்பிய சாவக்கர் கூட்டம். முத்துராமலிங்கதேவரின் முயற்சியை முறியடிக்கும் வேலையை அதே மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உட்கார்ந்து கொண்டு செய்தது.

இப்படி இந்த விடுதலைக்கு மட்டுமில்லாமல் முத்துராமலிங்கதேவருக்கும் துரோகம் செய்த கும்பல் தான் இன்று ஆர்.எஸ்.எஸ் இந்து முன்னனி பிஜேபி என்று வெவ்வெறு பெயர்களில் முத்துராமலிங்க தேவரை போற்றுகிறோமென்று பொய் பித்தலாட்டம் செய்துகொண்டு வரலாற்றை மறைக்க நினைக்கிறது.

தோழர் கொண்டல்சாமி
மே பதினேழு இயக்கம்
அக்டோபர் 30, 2025

https://www.facebook.com/share/v/1GMkRt8jxD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »