
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் ‘தமிழ்நாடு வெல்லட்டும், பாஜக கூட்டணி வீழட்டும் ‘ எனும் முழக்கத்தோடு, ஏப்ரல் 15, 2026 அன்று மதிமுக வெற்றி வேட்பாளரான தோழர். தி.மு.ராஜேந்திரன் அவர்களை ஆதரித்து மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய தேர்தல் பரப்புரை:
இதுவரைக்கும் தமிழ்நாடு எதிர்கொண்ட தேர்தலிலிருந்து இந்த 2026 தேர்தல் முற்றிலும் மாறுபட்டது. இவ்வளவு நாள் தமிழ்நாட்டு கட்சிகளினுடைய போட்டியாக இருந்தது. ஆனால் நம் வரலாற்றில் முதல் முறையாக டெல்லியில் இருந்து தமிழ்நாட்டை கைப்பற்றுவேன் என்று ஒரு படையெடுப்பு நடத்துவதை போல, ஒரு பகையாளியை தாக்குவதை போல, ஒரு பகைநாட்டை கைப்பற்றுவதைப் போல, ஒரு பாகிஸ்தான் மீதோ பங்களாதேசம் மீதோ, ஆப்கானிஸ்தான் மீதோ நான் படையெடுப்பேன் என்று சொல்லுவதைப் போல நரேந்திர மோடி சொல்கிறார்.
இது பாஜக கூட்டத்திற்கும் தமிழ்நாட்டிற்குமான ஒரு சண்டையாக, ஒரு போராக, ஒரு யுத்தமாக 2026 தேர்தல் வந்திருக்கிறது. இதுதான் தமிழ்நாட்டினுடைய எதிர்காலத்தை நிர்ணயம் செய்யக்கூடிய தேர்தல். தமிழ்நாடு வாழ்வா? சாவா? என்கின்ற நிலையை எதிர்கொண்டிருக்கக்கூடிய தேர்தல். இந்த தேர்தலிலே நாம் அரசியல் உணர்வோடு, கடமை உணர்வோடு, ”தமிழையும், தமிழ்நாட்டையும், தமிழனுடைய எதிர்காலத்தையும்” பாதுகாப்பதற்கு நாம் உறுதியேற்று இந்த தேர்தல் எதிர்கொள்ள வேண்டும். பாஜக நம்மை எதிரி என்று நினைத்து நம்மை அழிக்க வேண்டும் என்று வருகிறான் என்றால், நாம் அவனை எதிரியாகதான் எதிர்கொள்ள வேண்டும். அவனை போர்க்களத்தில்தான் எதிர்கொள்ள வேண்டும் என்றால், அது இந்த சட்டமன்ற தேர்தலிலே அந்த போர்க்களத்தை நாம் வெற்றிகரமாக நமக்கானதாக மாற்றி காட்ட வேண்டும். அதுதான் இன்றைக்கு நம் முன்னால் விடுக்கப்பட்ட சவால்.
இந்த தொகுதியிலே போட்டியிடுகின்ற அதிமுகவினுடைய வேட்பாளரைப் பார்த்து கேட்க விரும்புகின்றேன்: நீங்கள் அதிமுக கூட்டணியில் போட்டியிடுகிறீர்களா அல்லது பாஜக கூட்டணியில் போட்டியிடுகிறீர்களா என்கின்ற தெளிவாவது உங்களுக்கு இருக்கிறதா? 2021 தேர்தலிலே அதிமுக கூட்டணி என்று சொன்னீர்கள். ஆனால் இன்றைக்கு ஒரு கவுன்சிலர் சீட்டுக்கு வக்கு இல்லாத பிஜேபியோடு கூட்டணி வைத்து அந்த கூட்டணியில் நான் சேர்ந்திருக்கிறேன் என்று சொல்லி, தொகுதி பங்கீட்டுக்காக அவனுடைய தலைநகரமான டெல்லிக்கு சென்று கூட்டணி பேசுகிறீர்களே, இதைவிட ஒரு மானங்கெட்ட அரசியல் வேறு எங்கேனும் தமிழர்கள் கண்டதுண்டா? இல்லையே..
பாஜகாவோடு அதிமுகவிற்கு அப்படி என்ன நெருக்கம்? அப்படி என்ன தேவை வந்தது? அதிமுககாரன் போட்ட பிச்சையில்தான் நான்கு எம்எல்ஏ சீட்டு பிஜேபிக்காரன் ஜெயித்தான். அப்படி இல்லை என்றால் கோயம்புத்தூரில் வெல்ல முடியுமா? முடக்குறிச்சியில் வெல்ல முடியுமா? வாய்ப்பு இல்லையே…
தமிழ்நாட்டை நீண்ட காலம் ஆட்சி செய்த கட்சி, அதிக முதலமைச்சரை கொடுத்த கட்சி என்று பெருமை பேசுகிறீர்களே எடப்பாடியார் அவர்களே, உங்கள் கட்சியை உடைத்தது யார்? அதிமுகாவை உடைத்த கட்சியோடு கூட்டணி வைத்திருக்கிறீர்களே? நீங்கள் ஒருவேளை வெற்றி பெற்றால் உங்கள் கட்சியை காப்பாற்ற முடியுமா? எடப்பாடி காப்பாற்றுவாரா? இல்லையே…
இது அதிமுகவுக்கு செய்யும் துரோகம் இல்லையா? அதிமுகவின் தொண்டர்களுக்கு செய்யும் துரோகம் இல்லையா? அந்த கட்சியை வளர்த்த அதிமுகக்காரனுக்கு துரோகம் செய்கிற தலைமைதானே எடப்பாடியார் தலைமை. இந்த இடத்தில் இருந்து அவர்கள் எப்படி தமிழ்நாட்டை பாதுகாப்பார்கள்? தமிழ்நாட்டை ஒரு காலத்திலும் அவர்களால் பாதுகாக்க முடியாது. ஒரு கட்சியை ஐந்தாக, ஆறாக உடைக்கக்கூடிய பிஜேபி, நாளைக்கு தமிழ்நாட்டை உடைக்க மாட்டான் என்பதற்கு என்ன நிச்சயம்? என்ன இருக்கிறது?

அன்பானவர்களே, நேற்று ஒரு சட்டம் கொண்டு வந்திருக்கிறார் நரேந்திர மோடி. இதுவரைக்கும் எடப்பாடியார் வாய் திறந்து பேசவில்லை. நாங்கள் கிட்டத்தட்ட நான்கு வருடமாக மே 17 இயக்கம் இதை பேசி வருகிறோம். ஐயா வைகோ அவர்கள் இது குறித்து பேசியிருக்கிறார். இன்றைக்கு தமிழ்நாடு கொந்தளித்து நிற்கிறது.
என்ன பிரச்சனை அது? தமிழ்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் விகிதத்தை குறைத்துவிட்டார்கள். இன்றைக்கு உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பீகாரின் எம்பிக்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி ஆகிய ஆறு மாநிலங்களின் எம்பிக்களை சேர்த்தாலும் கூட, அதிகபட்சமாக 160 எம்பி-க்கள் வருவார்கள். ஆனால் உத்தர பிரதேசம், பீகார் என்ற இரண்டே இரண்டு இந்தி பேசும் மாநிலங்களின் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 225 உறுப்பினர்களை வைத்திருக்கிறார்கள். நான் இன்னும் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, சத்தீஸ்கரை சேர்க்கவில்லை. இதையெல்லாம் சேர்த்தால் 450 எம்பிக்கள். இது இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டுமே இருக்கிறார்கள் என்றால், வெறும் 49 எம்பிக்களை தமிழ்நாட்டுக்கு பிரித்து கொடுத்திருக்கிறார்கள். அதில் 10% தான் தமிழ்நாட்டு எம்பிக்களின் எண்ணிக்கை.
இதை வைத்து இந்தியாவின் பாராளுமன்றத்தில் தமிழ்நாடு எப்படி சட்டம் கொண்டு வர முடியும்? தமிழ்நாடு எம்பிக்கு அங்கே முதலில் சீட்டே இருக்காது, உட்கார இடம் இருக்காது. இதற்கு பிறகு தென்மாநிலங்கள் எல்லாரும் ஒன்றாக சேர்ந்தாலும் கூட ஒரு சட்டத்தைக் கூட கொண்டுவர முடியாது. அப்படியென்றால் தமிழ்நாட்டின் நிலைமை என்ன? தமிழ்நாட்டின் எதிர்காலம் என்ன என்று கேட்க விரும்புகிறேன்.
அன்பானவர்களே, வெள்ளைக்காரன் காலத்தில் கூட சோற்றுக்கு வரி போட்டது கிடையாது. ஆனால் சோற்றுக்கு வரி போட்ட முதல் ஆட்சி- மோடி ஆட்சி. இட்லிக்கு வரி போட்டிருக்கிறான், சட்னிக்கும் வரி போட்டிருக்கிறான். அதை பாக்கெட் பண்ணினால் அந்த பாக்கெட்டுக்கு ஒரு வரி போட்டிருக்கிறான். எல்லாத்துக்கும் வரி. பிறந்தால் வரி, இறந்தால் வரி, சோறு தின்றால் வரி, எல்லாத்துக்கும் வரி போட்டிருக்கிறான்.
இதில் பிஜேபிக்காரன் தேர்தல் வாக்குறுதி ஒன்று கொடுத்திருக்கிறான்: இறந்துப் போனால் ஈமக் காரியத்திற்கு பணம் தருகிறோம் என்கிறான். அப்போது அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏதேனும் நலத்திட்டம் அரசாங்கத்திலிருந்து கிடைக்க வேண்டும் என்றால், நாமெல்லாம் இறந்துதான் போகணும். பிஜேபி எங்கே போகப் போகிறது? ஈஷா யோகா மையம் சுடுகாட்டை எல்லாம் பராமரிக்கப் போகிறான். அவன் கையில்தான் கொடுக்கப் போகிறார்கள்.
அன்பானவர்களே, இது ரொம்ப மோசமான நிலைமை. தமிழ்நாட்டுக்கு நாம் என்ன கேட்கிறோம் என்றால், இந்த பிஜேபிக்காரன் நல்லது பண்ணுவான் என்று ஒரு விடயத்தை பிஜேபிக்காரன் சொல்லியிருக்கிறானா? அந்த கட்சி பிஜேபிக்காரன் ஒரு கேடுகெட்ட கட்சி, அந்த கட்சி ஏதாவது நான்கு நல்ல விடயத்தை சொல்லி மக்களுக்கு இதெல்லாம் செய்துள்ளோம் என்று ஓட்டுக்கேட்டுள்ளார்களா? இல்லையே!
தமிழ்நாட்டுக்குள் நமக்கான திட்டங்களுக்கான எல்லா நிதியும் நிறுத்தி வைத்துள்ளது. அதனால் பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடத்துக்கான நிதி இல்லை, பாடப் புத்தகம் அடிக்ப்பதற்கு நிதி கிடையாது, ஆசிரியருக்கு சம்பளம் கொடுக்க நிதி கிடையாது. தமிழ்நாட்டின் மொத்த கல்வியை அப்படியே நசுக்குகிறான், கசக்கிப் பிடிக்கிறான், கழுத்தை நெறிக்கிறான்.
நம்மை தமிழ்நாட்டுக்கு வெளியே போய் என்ன செய்கிறான் தெரியுமா நரேந்திர மோடியின் அரசு? சில மாதங்களுக்கு முன்பு ஒரிசாவில் தேர்தல் நடந்தது. ஒரிசா தேர்தலில் நரேந்திர மோடி பேசுகிறார்: “ஒரிசாவின் பூரி ஜெகநாதர் கோவிலின் சாவியை தமிழன் திருடிக் கொண்டு போய்விட்டான். தமிழர்கள் திருடுகிறார்கள், உங்கள் கோயிலை கொள்ளை அடிக்கிறார்கள்” என்று ஒரு பிரதமரே இன்னொரு மாநிலத்தில் போய் தமிழனைப் பற்றி இழிவாக பேசினார். இப்படி ஒரு கேடுகெட்ட பிரதமரை, ஒரு பிஜேபி போன்ற கட்சியை தமிழ்நாடு வரலாற்றில் நாம் பார்த்திருக்கிறோமா? இன்றைக்கு ஒரிசாவில் போய், அடுத்த மாநிலத்தில் போய் தமிழரைப் பற்றி இவ்வளவு கீழ்த்தரமாக பேசினால், அங்கே வாழும் தமிழர்களின் நிலைமை என்ன?
அதோடு விட்டார்களா? பீகாருக்கு போய் என்ன பேசினார் நரேந்திர மோடி? “பீகாரிகள் தமிழ்நாட்டில் வேலை செய்கிறார்கள், அவர்களை தமிழ்நாடு துன்புறுத்துகிறது, அடித்து கொலை செய்கிறது, சித்திரவதை செய்கிறது” என்று பேசினார்கள். இப்படிப்பட்ட ஒரு மோசமான பிரதமரை நாம் பார்த்திருக்கிறோமா? என்றைக்குமே நாம் பார்த்தது இல்லையே.
அப்போது ஒரு பிரதமர் என்ன செய்கிறார்? தமிழ்நாட்டுக்கு வெளியே தமிழனைப் பற்றி மோசமாக பேசுவது, தமிழ்நாட்டிற்குள் வந்து தமிழ்நாட்டுக்கான திட்டங்களை தடுத்து நிறுத்துவது. தமிழன் உள்ளூரிலும் வாழ முடியாது, வெளியூரிலும் வாழ முடியாது. இப்படியான ஒரு முற்றுகையை பிஜேபி போட்டிருக்கிறது.
இந்த கட்சியோடு அதிமுகவுக்கு என்ன கூட்டணி? அதிமுகவுக்கு என்ன கூட்டணி? அதிமுக வேட்பாளர் வந்தால் கேள்வி கேட்க வேண்டும்: “முதலில் பாஜகவோடு கூட்டணி வைத்தது ஏன்? நீங்க நல்லவராக இருந்தால் நல்லவர்களோடு கூட்டு வைத்திருக்க வேண்டும். ஒரு கேடுகெட்டவரோடு கூட்டு வைத்திருக்கிறீர்கள்.” நாம் நேராக கேட்க வேண்டும்.
இது தமிழ்நாட்டை காப்பாற்றக்கூடிய போராட்டம். வெறும் ஒரு தொகுதியாக மட்டும் பார்த்துவிட்டு இருக்க முடியாது. தொகுதியில் எனக்கு தெரிந்தவர், நல்லா அறிமுகமானவர் என்று பார்த்துவிட்டு இருக்க முடியாது. தமிழ்நாட்டை எப்படி காப்பாற்றுவீர்கள்? ஊருக்குள் நல்லவராக இருக்கலாம், அறிமுகமானவராக இருக்கலாம், ஆனால் தமிழ்நாட்டுக்கு எதிரான சட்டம் வரும்போதெல்லாம் முத்திரை குத்தி ’ரப்பர் ஸ்டாம்ப்’ வேலையைப் பார்த்த அதிமுகவை எப்படி மன்னிப்பது?
எடப்பாடியார் என்ன பேசுகிறார் என்றால், “மத்திய அரசாங்கத்தோடு எதற்கு சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறீர்கள்? அப்படி இணக்கமாக போய் உங்களுக்கு வேண்டிய திட்டத்தை கொண்டு வாருங்கள்” என்கிறார். அவர் நான்கு வருடம் பிஜேபிக்கு அடிமையாக இருந்தீர்கள், இணக்கமாக இருந்தீர்கள். என்ன திட்டத்தை கொண்டு வந்தீர்கள்? ஏதாவது ஒரு நல்ல திட்டத்தை சொல்ல முடியுமா?
’உதய் மின் திட்டம்’ என்று ஒன்று கொண்டு வந்தீர்கள், தமிழ்நாடு மின்சார வாரியம் ஒட்டுமொத்தமாக போய்விட்டது. நீட்டுக்கு ஒப்புதல் கொடுத்தீர்கள், எங்கள் பிள்ளைகள் படிக்க முடியாமல் போய்விட்டது. இதுபோல எத்தனை சட்டத்தை சொல்வது? டிஎன்பிஎஸ்சி தேர்வில், தமிழ்நாடு அரசாங்கத் துறையில் வேலை கேட்டு போட்டியிடும் தேர்வில் வெளி மாநிலத்தவர்கள், கேரளக்காரர்கள் எல்லாம் போட்டி போடலாம் என்று சட்டத்தை கொண்டு வந்தது எடப்பாடியார். மறந்துவிடாதீர்கள்.
நம் பிள்ளைகளுக்கு வேலை இல்லை. சென்னையில் வந்து பாருங்கள், சோற்று மூட்டையை தூக்கிக்கொண்டு ஸ்விக்கி ஓட்டுகிறான், சொமேட்டோ ஓட்டுகிறான். இல்லை காரை EMI-ல் வாங்கி வைத்து கார் ஓட்டுகிறான், ஒரு நாளைக்கு 14 மணி நேரம் டாக்ஸி ஓட்டுகிறான். “என்னய்யா படிச்சிருக்கே?” என்று கேட்டால், “பி.இ, எம்.இ, பி.எஸ்.சி, பி.டெக், எம்.காம் படித்துள்ளார்கள்” என்கிறான். நல்ல படிப்பு, ஆனால் வேலை கிடையாது. என்ன காரணம் என்றால், டிஎன்பிஎஸ்சியில் தமிழன் இல்லாதவர்களெல்லாம் இங்கே போட்டி போட்டு தேர்வு எழுதலாம் என்பதால்தான்.
இதனோடு விட்டார்களா? மத்திய அரசாங்க அலுவலகங்களில் இரண்டரை லட்சம் வேலை இருக்கிறது தெரியுமா? மத்திய அரசாங்கத்தின் வேலை: ரயில்வேயில் TTE வேலை, ஸ்டேஷன் மாஸ்டர் வேலை, RPF வேலை, வங்கியில் – மேலாளர், உயர் அதிகார், கணக்காளர் வேலை. எல்ஐசி, யுனைட்டட் இந்தியா, வருமான வரித்துறை, ஜிஎஸ்டி அலுவலகம், சுங்கவரி அலுவலகம், பெல் நிறுவனம், பொன்மலை ரயில்வே கட்டுமான நிறுவனம், துப்பாக்கி தொழிற்சாலை, சென்னையில் ஆவடி டேங்க் நிறுவனம், சேலத்தில் இருக்கும் இரும்பு உருக்காலை, நெய்வேலியில் இருக்கும் என்.எல்.சி, ONGC, IOCL, பாரத் பெட்ரோலியம் போன்று பட்டியல் போட்டால்; இத்தனை பட்டியலில் இரண்டரை லட்சம் வேலை இருக்கிறது. இதில் எந்த வேலையும் தமிழனுக்கு கிடைப்பதில்லை தெரியுமா?
தமிழ்நாட்டில் இரண்டரை லட்சம் வேலை இருக்கிறது. நீ வடமாநிலத்தில் எங்களுக்கு கொடுக்க வேண்டாம், விட்டுவிடு, நான் கேட்கவில்லை. தமிழ்நாட்டில் தமிழனோடு வேலை செய்யக்கூடிய இந்த இடத்தில், எங்கள் பிள்ளைகளுக்கு, எங்கள் குழந்தைகளுக்கு வேலை இல்லை என்று வைத்திருக்கிறாயே, இதை யார் கேட்பது?
இன்றைக்கு இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நாங்கள் மே 17 இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறோம். ஏன் நடத்துகிறோம்? 1965-ல் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது, பல பேர் பங்கெடுத்திருப்பீர்கள். அந்த போராட்டத்துக்கும் நாங்கள் நடத்தும் போராட்டத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது. அன்றைக்கு அலுவல் மொழியாக இந்தியை கொண்டு வந்தார்கள், எதிர்த்து சண்டை போட்டோம். இன்றைக்கு என்ன நடக்கிறது என்றால், எல்லா இடத்திலும் நீங்கள் பார்க்கிறீர்களே, இந்தி இருக்கிறதே, அங்கே எப்படி இந்தி வந்தது? இந்தி அலுவல் மொழிதான், அரசாங்க ஆவணத்துக்கு நீ இந்தியை பயன்படுத்து. பேருக்கு எதற்கு வைத்திருக்கிறாய் இந்தி?
பேங்க் ஆப் பரோடா போய் பாருங்கள், தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் கூட தமிழில் எழுதி இருக்க மாட்டான். இந்தியில் எழுதி இருப்பான், ஆங்கிலத்தில் எழுதியிருப்பான். இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் போன்ற வங்கிகளில் இந்தியில் எழுதி இருப்பான். படிவங்கள் அனைத்தும் இந்தியில் வைத்திருக்கிறான்.
இதெல்லாம் அலுவல் மொழிக்கான இடம் கிடையாது. அந்தந்த மாநிலத்தின் பயன்பாட்டு மொழியில்தான் இந்த பெயர்கள் இருக்க வேண்டும். ரயில்வே நிலையத்தில் இந்த மாநிலத்தின் பயன்பாட்டு மொழியிலே இருக்க வேண்டும். ஆனால் ஏன் இந்தியை வைத்தான் என்றால், எல்லா இடத்திலும் இந்திக்காரன் அதிகாரிகள் வேலையில் இருக்கிறார்கள்.
நாம் என்ன பார்க்கிறோம் என்றால், கூலிக்கு வேலை செய்யும் இந்திக்காரனைப் பார்த்து “வடக்கன் வந்துட்டான், வடக்கன் வந்துட்டான்” என்று அவனைப் போய் திட்டுகிறோம். அவனல்ல ஆபத்து.
இந்தி அதிகாரி கண்ணுக்கு தெரியாமல் உட்கார்ந்து வேலை செய்கிறான். ஒரு கடன் வாங்க முடியுமா? வருமானவரித் துறையிலோ, சுங்கத்துறையிலோ, குடியேற்றம் (Immigration) சென்று ஒரு கருத்துகள் குறித்தான கேள்விகள் கேட்க முடியுமா? எதுவுமே செய்ய முடியாத அளவுக்கு நிலைமை இருக்கிறது.
என்.எல்.சி-யை எடுத்துக்கொள்ளுங்கள். 12,000 பேர் நிரந்தரப் பணியாளர்கள், ஆனால் ஒருவர் கூட தமிழர் கிடையாது. கொடுத்த நிலம் நம்முடையது. இதே நிலைமைதான் இங்கே இருக்கின்ற எல்லா தென் மாவட்டங்களிலும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும் இருக்கிறது. இந்தியை அழிக்க வேண்டும் என்றால், வெறும் இந்தியை மட்டும் அழிப்பதல்ல. இவர்கள் நம் மேல் கழுத்தைப் பிடித்து திணிக்கிறார்கள். அவர்கள் ஆளைக் கொண்டு வந்து வேலைக்கு வைக்கிறார்கள். அதை எதிர்த்துத்தான் நாங்கள் போராட்டம் நடத்தினோம். இந்தி அழிப்புப் போராட்டத்தை நடத்தினோம்.
சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் இந்தியை அழித்தோம். எங்கள் அமைப்பில் எங்களோடு இருந்தவர், எனக்கு சகோதரராக இயங்கியவர், ஒரு பெரிய போராளி — 15 ஆண்டுகளுக்கு மேலாக போராட்டக் களத்தில் துணிந்து நின்ற ஒரு போராளி — சிவா திலீபன் என்கிற எங்கள் அமைப்பின் பொறுப்பாளர், அங்கே உள்ளே வந்துகொண்டிருந்த ரயில் முன்னால் “இந்தி ஒழிக, தமிழ் வாழ்க” என்று முழக்கமிட்டு உள்ளே குதித்து தன் உயிரைக் கொடுத்திருக்கிறார்.

கடந்த மாதம், எங்கள் மே 17 இயக்கத்தின் பொறுப்பாளர் உயிர் கொடுத்திருக்கிறார். தமிழ் மொழியைக் காப்பதற்காக, தமிழ்நாட்டைக் காப்பதற்காக, தமிழனைக் காப்பதற்காக உயிர் கொடுத்திருக்கிறார். இரண்டு பெண் குழந்தைகள் உள்ள குடும்பம் அது. ஒட்டுமொத்த குடும்பமே போராட்டத்திற்கு வரும். எங்கள் அமைப்பு எதற்காக எங்கள் தோழனை உயிரைக் கொடுக்க வைத்தது? ஏன் உயிரைக் கொடுத்து நாங்கள் போராடுகிறோம்? இந்த மண்ணை பாதுகாக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறோம்.
சென்னையிலிருந்து எல்லா இடத்திலும் நாங்கள் பரப்புரை மேற்கொண்டோம். எதற்காக? எங்களுக்கு எம்.எல்.ஏ சீட் வேண்டுமென்றா? இல்லை. இந்த மண் காப்பாற்றப்பட வேண்டும், தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும், தமிழ் மொழி காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் வருகிறோம்.
இந்த பிஜேபியை வேரோடு வேரடி மண்ணோடு பிடுங்கி எறிய வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது அன்பானவர்களே. பிஜேபி மட்டுமல்ல, பிஜேபியோடு கூட்டணி வைத்திருக்கும் அதிமுகவையும் வேரோடு பிடுங்கி எறிய வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. தமிழ்நாட்டின் நிலைமையை இவ்வளவு மோசமாக மாற்றுகிற ஒரு பிஜேபியோடு கூட்டணி வைத்திருக்கும் இந்த அதிமுகவின் வேட்பாளரை நிராகரியுங்கள். அவர் நல்லவராக இருந்துவிட்டுப் போகட்டும். அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை.
ஆனால் இங்கே போட்டியிடுகிற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் ராஜேந்திரன் அவர்கள். அவர் வெறும் வேட்பாளர் அல்ல, அவர் ஒரு போராளி. போராட்டக் களத்திலே எனக்கு அறிமுகமானவர். தமிழ்நாடு முழுவதும் நடக்கும் பல போராட்டங்களில் – அது முல்லைப் பெரியாறு போராட்டமாக இருந்தாலும் சரி, காவிரி போராட்டமாக இருந்தாலும் சரி, ஏழு தமிழர் விடுதலைப் போராட்டமாக இருந்தாலும் சரி, மீத்தேன் எதிர்ப்புப் போராட்டமாக இருந்தாலும் சரி, மீனவர் போராட்டமாக இருந்தாலும் சரி, அத்தனை போராட்டத்திலும் களத்தில் நின்ற தி.மு. ராஜேந்திரன் அவர்கள்தான் சட்டசபைக்குச் செல்ல வேண்டும்.
அவரை நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி வேட்பாளராக சட்டமன்றத்துக்கு அனுப்ப வேண்டும். ஒரு போராளியை அனுப்புங்கள். அதுதான் முக்கியம். மானமுள்ள தமிழர்கள் இங்கே சட்டசபைக்குள் சென்று நாம் கேள்வி எழுப்பக்கூடிய வகையில், தமிழ்நாடு கேள்வி எழுப்பக்கூடிய வகையில் ஒரு சட்டமன்றத்தை நாம் அமைத்தாக வேண்டும். அப்படிப்பட்ட ஒரு பெருமையை கடையநல்லூர் செய்ய வேண்டும். அப்படிப்பட்ட ஒரு கடமை கடையநல்லூர் சட்டமன்ற வாக்காளப் பெருமக்களுக்கு இருக்கிறது.
அன்பானவர்களே, இந்த சமயத்தில் இன்னும் இரண்டையும் நான் பேசியாக வேண்டிய தேவை இருக்கிறது. இங்கே நாம் தமிழர் என்று ஒரு கட்சி இருக்கிறது. எதற்கு கட்சி நடத்துகிறார்கள் என்று எவனுக்கும் தெரியாது. ஆனால் அந்த கட்சித் தலைவன் நல்லா சோறு தின்பதற்காக கட்சி நடத்திக் கொண்டிருக்கிற ஒரு கேடுகெட்ட கட்சி அது. ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கிறோம், ஈழத் தமிழர்களுக்காகப் போராடுகிறோம் என்று சொல்லி 17 வருடமாக ஒரு போராட்டத்தைக் கூட நடத்த துணிவில்லாத ஒரு கோழை, அந்தக் கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்.
அவனுடைய கட்சி காரர்கள் பெரியாரை ரொம்ப கீழ்த்தரமாக பேசின பேச்சைக் கேட்டேன். இஸ்லாமியர்களில் இருந்து ஒருத்தரைப் பிடித்துக் கொண்டு வந்து பெரியாருக்கு எதிராகப் பேச வைப்பதற்காக ஆர்.எஸ்.எஸ் காரன் புத்தகத்தைக் கையில் கொடுத்திருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் புத்தகம் என்ன செய்திருக்கிறது? பெரியார் பேசிய இரண்டு வரி, மூன்று வரியை மட்டும் பிரித்து எடுத்து வைத்து அதை ஒரு புத்தகமாகப் போட்டு, அதை சீமான் கையில் கொடுத்து, அதை இந்தப் பிள்ளை கையில் கொடுத்து இவனை விட்டுப் பேச வைத்திருக்கிறார்கள்.
அந்த தம்பிகளுக்கு நாங்கள்(மே 17) மேடை போடுகிறோம். நீயும் வா, உன் தலைவனையும் கூட்டிக்கொண்டு வா. நீங்கள் எல்லாம் எவ்வளவு பெரிய தற்குறி என்பதை நாங்கள் இரண்டு நிமிடத்தில் நிரூபிக்கிறோம். வரலாறு எப்படி இயங்குகிறது என்று ஒரு புரிதல் கூட இல்லாத உன் தலைவன்.
நீ ஒரு இஸ்லாமியராக இருக்கிறாய். நான் கேட்கிறேன் உன்னிடம்: உன் தலைவன் சி.ஏ.ஏ-வுக்கு எதிராக ஏதாவது போராட்டம் நடத்தியிருக்கிறானா? சீமான் என்றைக்காவது சி.ஏ.ஏ-வுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியிருக்கிறானா? நடத்தியது இல்லையே. இரண்டு போராட்டத்தில் நம் இஸ்லாமிய நண்பர்கள் கூப்பிட்டதற்காகப் போனான். வழக்கு வரும் என்று ஓடிவிட்டான். எந்தப் போராட்டத்தையும் நடத்தியது கிடையாது.
பாலஸ்தீனப் படுகொலையைக் கண்டித்து சீமான் ஏதாவது ஒரு போராட்டம் நடத்தியிருக்கிறாரா? ஒரே ஒரு போராட்டம், இந்தத் தொகுதியில் வேட்பாளர் நிற்கிறான், அந்தப் பையனைச் சொல்லச் சொல்லுங்கள். பாலஸ்தீன இனப்படுகொலையைக் கண்டித்து 2013-ல் நாங்கள் நடத்திய போராட்டத்திற்காக என் மீது உபா வழக்கு பாய்ந்தது. உபா வழக்கை வாங்கியவன் நான். எதற்காக? பாலஸ்தீன இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று போராடியதற்காக.
பாலஸ்தீனப் படுகொலைக்குப் பேச முடியவில்லை, ஆனால் சங்கர மடத்திற்கு போன வாரம் போய் கோமியத்தைக் குடித்துவிட்டு வந்திருக்கிறார் சீமான். நான் கேட்கிறேன் தம்பி, உனக்கு அந்தக் கட்சியில் இருப்பதற்கு வெட்கமாக இல்லையா? வீடியோ வெளியே வந்திருக்கிறது. காஞ்சி சங்கர மடத்தில் உன் தலைவன் சீமானுக்கு என்ன வேலை?
நாளை கழித்து (17.04.2026) சீமானுக்கு ஒரு பரிசுப் பொருள் அனுப்பலாம் என்று ஒரு திட்டம் வைத்திருக்கிறோம். நீங்கள் எல்லாம் வாருங்கள், சீமானுக்கு கோமியம் அனுப்பலாம் என்று இருக்கிறோம். அப்படியாவது புத்தி வருகிறதா என்று பார்ப்போம். அந்த சங்கர மடத்திற்கு திருப்பரங்குன்றத்தில் சிக்கந்தர் தர்காவை உடைப்பேன் என்று ஒற்றைக்காலில் நின்ற ராம ரவிக்குமார் என்கிற ஒரு இந்துத்துவ மதவெறியனான, அந்த ராம ரவிக்குமாரைக் கூட்டிக்கொண்டு சங்கர மடத்துக்குள் சீமான் போயிருக்கிறார்.
இந்த தம்பிக்கு, நாம் தமிழரில் நிற்கும் அந்த தம்பிக்கு உண்மையிலேயே மானம், சுயமரியாதை இருந்ததென்றால் இந்த வேட்பாளர் பதவியை விட்டு விலகி, இந்தத் தேர்தலை விட்டு வெளியே போயிருக்க வேண்டும். உனக்கெல்லாம் என்ன சுயமரியாதை இருக்கிறது? உன்னுடைய இந்த மக்களை, தமிழ்நாட்டு மக்களை பச்சையாக காட்டிக் கொடுக்கக்கூடிய சீமானின் கட்சியில் வேட்பாளராக நிற்கிறாயே.
தந்தை பெரியார் பேசினால் ஆர்.எஸ்.எஸ் காரன் புத்தகத்தைத் தூக்கிக்கொண்டு வந்துவிட்டாய். உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? சங்கர மடம் என்ன மடம்? ஆந்திராவின் தெலுங்கு மடம் அது. அங்கே தெலுங்கு பார்ப்பனர்கள் மட்டும்தான் சாமியாராக மாற முடியும். அவர்கள் தமிழைப் பேச மாட்டார்கள். தமிழை நீச பாஷை என்று சொல்வார்கள். தமிழ்த் தாய் வாழ்த்து பாடியபோது காஞ்சி சங்கராச்சாரியார் எழுந்து நிற்கவில்லை என்பதை நாம் பார்க்கவில்லையா? அவர்கள் தமிழை மதிக்க மாட்டார்கள். அந்த இடத்தில் சீமானுக்கு என்ன வேலை?
எல்லா பக்கமும் துண்டு போட்டு வைக்கிறது, எல்லாத்திலும் ஜால்ரா அடிக்கிறது, எல்லாத்தையும் காசு வாங்கிச் சாப்பிடுவது, ஆனால் பெரிய வீரன் மாதிரி பேசுவது. போலீசைக் கண்டு பயந்து ஓடக்கூடிய ஒரு கோழைதான் சீமான். எந்தப் போராட்டமும் செய்தது இல்லை.

இந்தியாவில் எத்தனை இஸ்லாமியர் படுகொலை செய்யப்பட்டார்கள். சீமான் என்றைக்காவது போராட்டம் நடத்தினாரா? ஆனால் தோழர் திருமாவளவன் அவர்கள் எத்தனை போராட்டம் நடத்தியிருக்கிறார் பார்த்திருப்பீர்கள் இல்லையா? கம்யூனிஸ்டுகள் போராடியிருக்கிறார்கள். மதிமுக போராடியிருக்கிறது. இங்கே திராவிட முன்னேற்றக் கழகம் போராடியிருக்கிறது. எல்லாரும் போராடியிருக்கிறார்கள். ஆனால் சீமான் என்றைக்காவது போராடியிருக்கிறாரா? இல்லையே.
இப்படிப்பட்ட ஒரு கட்சியிலிருந்து, சங்கர மடத்தில் போய் ஜால்ரா அடிக்கக்கூடிய கட்சியிலிருந்து ஒரு தம்பி நிற்கிறான். தயவு செய்து சொல்கிறேன்: நீ உண்மையிலேயே தமிழ் உணர்வு மிக்கவனாக இருந்தால், சுயமரியாதை மிக்கவனாக இருந்தால், இந்தத் தேர்தலில் நீ ராஜேந்திரன் பக்கம் வந்திருக்க வேண்டும். இவருக்குத்தான் வந்திருக்க வேண்டும்.
எத்தனை போராட்டத்தில், எதையாவது எதிர்பார்த்து இருக்கிறாரா? “எம்.எல்.ஏ ஆவோம்” என்ற கனவில் நின்று அவர் போராட்டத்தில் பங்கெடுத்திருக்கிறாரா? இல்லை. எந்த இடத்திலும் அப்படிப் பங்கெடுத்தது இல்லை. அவர் நல்லவர், எனக்குத் தெரியும். எல்லா போராட்டத்திலும் பங்கெடுக்கக்கூடியவர்.
இப்படிப்பட்ட மனிதர்களை நாம் தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டுமா? இல்லையா என்பதை நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். இன்றைக்கு தமிழ்நாடு மோசமான நிலைமையில் இருக்கிறது. இப்படியே விட்டால் நாசமாகப் போய்விடும். டெல்லிக்காரன் நம்முடைய மொத்தப் பணத்தையும் உறிஞ்சுகிறான்.
இந்தியாவிலேயே அதிக வரியைக் கொடுக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவில் அதிக வரி கொடுப்பது யார்? தமிழ்நாடுதான் அதிக வரி கொடுக்கிறது.
அறிஞர் அண்ணா பேசினார்: “வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” என்று. இன்றைக்கு இல்லை, 80 ஆண்டுகளுக்கு முன்னாடி சொன்னார். அன்றைக்கே எச்சரித்தார். வடக்கைச் சேர்ந்தவன் எல்லாம் அவனுடைய நல்லதுக்காக என்ன வேண்டுமோ அதைச் செய்துகொள்கிறான். தமிழனைப் பற்றிக் கவலைப்படுவதில்லை, தென்மாநிலங்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்று சொன்னார்.
நான் என்ன கேட்கிறேன் என்றால், இந்த பிஜேபிக்காரனுக்கும் சரி, அதிமுக காரனுக்கும் சரி: இந்தியாவுக்கு விடுதலை ஒரே நாளில்தானே கிடைத்தது? 1947 ஆகஸ்ட் 15-தான் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தது. அப்படியென்றால் பீகாருக்கும் அன்றைக்குத்தான் விடுதலை கிடைத்தது, தமிழ்நாட்டுக்கும் அன்றைக்குத்தான் விடுதலை கிடைத்தது. தமிழ்நாட்டுக்கு விடுதலை கிடைத்த அதே நாள்தான் அரியானாவுக்கும் விடுதலை கிடைத்தது.
அப்புறம் 70 வருடம் கழித்துப் பார்த்தால், நாம் மட்டும் எப்படி முன்னேறி இருக்கிறோம்? அவன் எப்படி முன்னேறாமல் இருக்கிறான்? என்ன காரணம்? வெறும் மதவெறி, மதவெறியைச் சுற்றி வந்ததினால் அந்த நாடு நாசமாகப் போய்விட்டது. மதத்தைப் பற்றிக் கவலைப்படாமல் மக்களைப் பற்றிக் கவலைப்பட்ட காரணத்தினால், திராவிட இயக்கத்தின் காரணத்தினால், தந்தை பெரியாரின் உழைப்பினால், அறிஞர் அண்ணாவின் சிந்தனையால் நாம் வளர்ந்து நின்றோமா இல்லையா?
இங்கே பல திராவிட இயக்கத் தோழர்கள் இருக்கிறீர்கள், உங்களுக்குத் தெரியும்: நான் சொல்கிறேன், 1942-ல் ஒரு புத்தகம் வெளிவருகிறது. அறிஞர் அண்ணா எழுதிய ‘பணத்தோட்டம்’ என்ற புத்தகம். வெறும் 40 பக்கங்கள்தான் இருக்கும். தயவுசெய்து எடுத்துப் படித்துப் பாருங்கள். 1942-ல் வடநாட்டுக்காரன் எப்படி தமிழ்நாட்டை வஞ்சிப்பான், தமிழ்நாட்டுக்கு நிதி தராமல் எப்படித் தடுப்பான் என்று அறிஞர் அண்ணா எழுதியது. இன்றைக்கு வரைக்கும் சரியாக இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு திராவிட இயக்கம் நம்மைக் கட்டிக் காத்து பாதுகாத்திருக்கிறது.
தந்தை பெரியார் அன்றைக்கே சொன்னார்: “இவர்களோடு சேர்ந்து நின்றோம் என்றால் நமக்கான உரிமை இருக்காது, சுயமரியாதை இருக்காது” என்று சொன்னார். பெரியார் ஏன் கருப்புச் சட்டை அணிந்தார்? இந்த சுதந்திர நாள் என்பது அவனுக்கு வேண்டுமானால் இனிப்பான நாளாக இருக்கலாம். ஆனால் என்னுடைய உரிமைகளை எல்லாம் அவனுக்கு அடகு வைக்கக்கூடிய துக்க நாள் என்று சொன்னார். இன்றைக்கு பெரியார் சொன்னதுதான் நடக்கிறது.
நீங்கள் ஒரு வாரம் முன்பு நினைக்கிறேன், மகாராஷ்டிராவின் முதலமைச்சர் வந்து மதுரைக்கு வந்தார். வந்துவிட்டு என்ன பேசுகிறார் என்றால், “மதுரைக்கு மெட்ரோ வேண்டுமென்றால் நீங்கள் பிஜேபிக்கு ஓட்டு போடுங்கள். அந்த வேட்பாளர் டெல்லிக்குப் போய் பிரதமரைப் பார்த்தார் என்றால் உங்களுக்கு உடனே அடுத்த நாள் மெட்ரோ ரயில் வந்துவிடும்” என்கிறார். இதைவிட மோசமாக மிரட்டல் பண்ணக்கூடிய ஒரு கூட்டத்தை நாம் பார்த்திருக்கிறோமா? “ஓட்டு போட்டால்தான் உனக்கு திட்டம் வரும்” என்று மிரட்டுகிறானே.
நாம் வேண்டுமானால் திருப்பிக் கேட்கலாம். “எனக்கு மெட்ரோ ரயில் வரவில்லை என்றால் உனக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது” என்று சொன்னால் இந்திய அரசாங்கம் எங்கே போய் நிற்கும்? வருடத்திற்கு இரண்டு லட்சம், மூன்று லட்சம் கோடியை நாம் தண்டமாக அழுகிறோம். எல்லாவற்றுக்கும் வரி கட்டுகிறோம்.
சாதாரணமாக இல்லைங்க. நீங்கள் ஒன்றிய அரசுக்கு 100 ரூபாய்க்கு 18 ரூபாய் வரி கட்டுகிறீர்கள். நீங்கள் 10,000 ரூபாய் மாதச் செலவு என்று கணக்கு போட்டுப் பார்த்தால், மாதச் செலவில் 1,200 ரூபாய்க்கு வரி கட்டுகிறோம். மறந்துவிடாதீர்கள்.
நமக்கு இங்கே தலைநிமிர்ந்து நிற்பதற்கான அனைத்துத் தகுதியும் இருக்கிறது. நாம் நேர்மையாக வரி கட்டுகிறோம், அதிக வரியைக் கட்டுகிறோம். இந்தியாவிலேயே அதிக வரியைக் கட்டக்கூடிய மாநிலம் எது? தமிழ்நாடு. தமிழ்நாடு போடும் பிச்சையில்தான் இந்திய அரசாங்கம் நடந்துகொண்டிருக்கிறது என்பதை அவன் மறந்துவிட்டான். “வரியைத் தடுத்து வைத்தால் என்ன செய்வான்? கட்ட முடியாது” என்று சொன்னால் என்ன செய்வான், சொல்லுங்கள் அன்பானவர்களே?
இது சாதாரண விளையாட்டு இல்லை. இவ்வளவு பணத்தைக் கொட்டிக் கொடுக்கிறோம். ஆனால் ஒரு மெட்ரோ ரயில், 2,000 கோடி, 3,000 கோடி தருவதற்கு அவனுக்கு பிரச்சனையாக இருக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு அவனுக்கு அவ்வளவு பிரச்சனை. 10 வருடமாக கட்ட முடியவில்லை. ஏன் என்றால் தமிழ்நாட்டைக் கண்டால் அவனுக்குப் பிடிக்கவில்லை. தமிழ் மொழியைக் கண்டால் அவனுக்குப் பிடிக்கவில்லை. தமிழர்களைக் கண்டால் கோபம் வருகிறது நரேந்திர மோடிக்கு. அதனால்தான் இவ்வளவு தூரம் நம்மை ஒடுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இது பெரிய போராட்டம். தமிழ்நாடு இப்படிப்பட்ட ஆபத்தைச் சந்தித்ததே கிடையாது. தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு வடநாட்டு மன்னன் கூட தமிழ்நாட்டை ஆண்டது கிடையாது. தமிழ் மண்ணின் மீது அவன் கால் வைக்க விட்டதில்லை. ஆனால் தமிழ் மன்னன் போயிருக்கிறான் வடநாட்டுக்கு. சேரன் செங்குட்டுவன் போயிருக்கிறான். கல் எடுத்து வந்திருக்கிறான் கோயில் கட்டுவதற்காக, கோட்டம் கட்டுவதற்காக. ராஜராஜ சோழன் போயிருக்கிறான். ராஜேந்திர சோழன் போயிருக்கிறான். பாண்டிய மன்னர்கள் போயிருக்கிறார்கள். சேர மன்னர்கள் வென்றிருக்கிறார்கள். சோழ மன்னர்கள் படை எடுத்திருக்கிறார்கள். அதுதான் நம் வரலாறு.
நாம் யாரையாவது படையெடுத்து அவர்களை நசுக்கினோமா? ஆக்கிரமித்தோமா? அவர்களை அழித்தோமா? இல்லையே. அப்படி ஒரு வரலாறு தமிழனுக்கு கிடையாது. அனைவரையும் அரவணைத்த வரலாறு தமிழனுடைய வரலாறு. மதுரையில் மெட்ரோ ரயில் கொடுத்தால் என்ன பிரச்சனை அவனுக்கு? கோபம் வருகிறது. மதுரையைக் கண்டாலே நரேந்திர மோடிக்குக் கோபம் வரும், பிஜேபிக்காரனுக்குக் கோபம் வரும். ஏன் தெரியுமா?
இவன் இந்தியாவிலேயே பழைய நகரம், நாகரிகம் எங்களுடையது, ஆரியர்களுடையது, இந்திக்காரனுடையது என்று அவன் அங்கே ஆராய்ச்சி பண்ணுகிறான். கடலுக்கு அடியில் எங்களுடைய நகரம் இருக்கிறது என்று சொல்லி கடலில் நோண்டிக்கொண்டிருக்கிறான். துவாரகை இருக்கிறது என்று நோண்டிக்கொண்டிருக்கிறான். சரஸ்வதி நகரம் இருக்கிறது என்று நோண்டிக்கொண்டிருக்கிறான். அயோத்தியில் போய் நோண்டினான். எங்கேயும் கல்லும் மண்ணும் கிடைத்ததே ஒழிய அங்கே மனிதன் வாழ்ந்ததற்கான எந்த வரலாறும் இல்லை.
ஆனால் இங்கே வைகை ஆற்றங்கரையில் நாம் 10 அடி தோண்டிப் பார்த்தோம். 3,000 வருடத்துக்கு முன்பான கீழடி வரலாறு, தமிழன் வரலாறு நமக்குக் கிடைத்தது. இந்தியாவிலேயே மூத்த நகரம் மதுரை. இந்தியாவின் மூத்த கொடி தமிழன். இந்தியாவின் மூத்த மொழி தமிழ். இதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏற்றுக்கொள்ள முடியாததால் அவனுக்கு அப்படியே கோபம் வருகிறது. தமிழனைக் கண்டால் எரிச்சல் ஆகிறான்.
“என்னடா, நாங்கள்தான் சொல்கிறோம் இங்கேதான் கிருஷ்ணன் பிறந்தான், இங்கேதான் ராமன் பிறந்தான்” என்று சொல்லி ஊரை ஏமாற்றுகிறோமே, ஆனால் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. ஆனால் வைகை ஆற்றங்கரையில் நான்கு ஏக்கர் தோண்டிப் பார்த்த உடனே 3,000 ஆண்டு கால வரலாறு தமிழனுக்குக் கிடைக்கிறது என்றால், தமிழ்நாடு முழுவதும் அகழ்வாராய்வு செய்தால் எத்தனை பெரிய வரலாறு வரும் நமக்கு? நாம் எவ்வளவு பெருமைக்குரியவர்கள், எப்படிப்பட்ட வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் என்பதை யோசித்துப் பாருங்கள் அன்பானவர்களே.
கீழடியில் இருப்பது வெறும் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் மட்டுமல்ல. ஏன் இவன் கோபப்படுகிறான் என்றால், அங்கே துணியை நெய்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யக்கூடிய தொழிற்சாலைகளை 3,000 வருடத்துக்கு முன்பே தமிழன் உருவாக்கியிருக்கிறான். துணியை நெய்து உலகம் முழுவதும், கிரேக்கத்திற்கும் ரோமுக்கும் அனுப்புவதற்காக அங்கே உருவாக்கிய நகரம்தான் கீழடி நகரம். அதுதான் மதுரை நகரம். அவ்வளவு பழமை வாய்ந்த நகரம் அது. அது சாதாரணம் இல்லை அது தமிழுடைய பெருமையை போய்ப் பாருங்கள்.
சிலப்பதிகாரத்தில் எழுதப்பட்டிருக்கிறது அல்லவா? மதுரையில் கண்ணகி நியாயம் கேட்ட வரலாறை நாம் படித்திருக்கிறோம். வெறும் இலக்கியத்தில் மட்டுமல்ல, நிகழ்காலத்தில் நடைமுறையிலே அந்த நகரம் இருக்கிறது. கண்ணகி கோவலன் திடல் இருக்கிறது கேள்விப்பட்டிருக்கிறீர்கள் இல்லையா? மதுரைக்குப் போனால் கோவலன் திடல் இருக்கிறது. இதெல்லாமே நம் கண் முன்னால் நடந்த இலக்கியம் மட்டுமல்ல, வரலாறாக இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு நாகரிகம் நமக்கு இருக்கிறது. இப்படிப்பட்ட பெருமை நமக்கு இருக்கிறது.
அவனுக்கு என்ன இருக்கிறது? பாபர் மசூதியை இடித்துவிட்டு அங்கே ராமர்தான் பிறந்தார் என்று சொன்னால் ஒரு ஆதாரம் கிடைக்கவில்லை அவனுக்கு. ஒரு ஆதாரமும் இல்லை. பிறந்தால்தானே ஆதாரம் வருவதற்கு. அப்படி எந்த வரலாறும் அவனுக்குக் கிடையாது. ஆனால் மதுரையில் எல்லா ஆதாரமும் இருக்கிறது. மதுரையில் ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. ஒவ்வொரு இடத்தை அகழ்வாராய்வு செய்தால் அவ்வளவு வரலாறு நமக்குக் கிடைக்கிறது.
தமிழர்கள் தமிழ் மொழியை எழுதியிருக்கிறார்கள் 3,000 வருடத்துக்கு முன்பே. சமஸ்கிருதத்துக்கு 3,000 வருடத்துக்கு முன்பு எழுதிய ஒரு கல்வெட்டு கிடையாது. ஒரு கல்வெட்டு கிடையாது. இன்றைக்கு எகிப்தில் பிரமிடில் தமிழனுடைய பெயர் தமிழ் மொழியில் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறோம்.
இவ்வளவு பெரிய பெருமைக்கு சொந்தக்காரன் நாம்தான். இந்தியாவை ஆள வேண்டியவன் எவனோ ஒரு குஜராத்தி கிடையாது. எவனோ ஒரு யு.பி-க்காரன் கிடையாது. தமிழன்தான் இந்த மண்ணுக்குச் சொந்தக்காரன். நாம் கட்டளையிட வேண்டும். அதன்படி ஆட்சி நடக்க வேண்டும் என்கிற நிலையைத்தான் நாம் உருவாக்க வேண்டும். அதுதான் இன்றைக்கு நமக்குத் தேவை தோழர்களே.
இப்படிப்பட்ட ஒரு மோசமான சூழ்நிலையில்தான் நாம் இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறோம். தமிழ்நாட்டின் தேவைக்காக பிஜேபிக்காரன் ஒரு போராட்டம் நடத்தியிருக்கிறானா? ஏதோ ஒரு போராட்டம் நடத்திப் பார்த்திருக்கிறீர்களா? இந்த ஐந்து வருடத்தில் சுற்றிச் சுற்றிப் பார்த்தான். திருப்பரங்குன்றத்தில் போய் சிக்கந்தர் தர்கா அங்கே இருக்கிறது, அங்கே போய் தீபத்தை ஏற்றி பிரச்சனை கிளப்பியிருக்கிறான்.

நான் பல இடத்தில் சொல்லியிருக்கிறேன்: எங்கள் வீட்டில் எல்லா நல்ல காரியத்துக்கும் திருப்பரங்குன்றம் முருகனிடம்தான் போய் கும்பிடுவார்கள். எனக்கு முதல் மொட்டை திருப்பரங்குன்றத்தில்தான் போட்டார்கள். இரண்டு வருடத்துக்கு முன்னாடி என் தந்தைக்குத் திருமணம் திருப்பரங்குன்றம் கோயிலில்தான் நடந்தது. இத்தனை ஆண்டு காலம் அந்த முருகன் கோயிலில் நாம் கும்பிட்டிருக்கிறோம். லட்சக்கணக்கான மக்கள் போகிறார்கள் வருகிறார்கள். யாராவது சிக்கந்தர் தர்காவைப் பற்றிக் குறை சொல்லியிருக்கிறார்களா? எவனாவது பிரச்சனை என்று இருந்தானா? இல்லை.
“தீபத்தை இங்கே ஏற்றாதே, அங்கே ஏற்று” என்று ஏதாவது ஒரு தமிழன் கேட்டிருக்கிறானா? இதை எதற்கு எடுத்துப் பிரச்சனை பண்ணுகிறான்? பல காரணம் இருக்கிறது. அதில் ஒரு காரணம் என்னவென்றால், மதுரைக்குள் கலவரத்தைக் கொண்டு வர வேண்டும் என்று விரும்புகிறான். மதுரை அமைதியாக இருக்கிறது. பாரம்பரியமான நகரம். அந்த நகரத்துக்குள் ஒரு கலவரத்தைக் கொண்டு வந்துவிட்டால், நாளைக்கு தமிழனுடைய பெருமையெல்லாம் பேச முடியாது. மதச்சண்டைதான் மட்டும்தான் நடக்கும்.
இன்றைக்குக் காலையில் மதுரை தெற்கு தொகுதியில் பிரச்சாரம் பண்ணிக்கொண்டிருந்தேன். அப்போது சொன்னேன்: நான் கோயம்புத்தூரில்தான் இருந்தேன், படித்தேன், வளர்ந்தேன். நான் படித்த காலத்தில் அங்கே பிஜேபி வளர்ந்தது, இந்து முன்னணி வளர்ந்தது, இந்து மக்கள் கட்சியெல்லாம் வளர்ந்தான். அவன் என்ன செய்தான் என்றால், “இந்தக் கடை முஸ்லிம் கடை, அந்தக் கடை இந்து கடை, இது கிறிஸ்தவன் கடை” என்று சொல்லி ஒவ்வொரு கடையாக வந்து அடையாளம் போட்டான். சண்டையை மூட்டிவிட்டான். கலவரமானது 1997-98-ல்.
இன்றைக்கு இப்போது பார்த்தால் அங்கே இந்துக்கள் கடையும் கிடையாது, முஸ்லிம்கள் கடையும் கிடையாது, கிறிஸ்தவ கடையும் கிடையாது. முஸ்லிம்களுடைய மிகப்பெரிய கடை, எல்லாரும் தீபாவளிக்குப் போய் வாங்குகிற கடை, சோபா டெக்ஸ்டைல்ஸ் அது இன்றைக்கு கிடையாது. ராஜேந்திரா டெக்ஸ்டைல் இருந்தது, அதுவும் கிடையாது. எல்லா கடையும் அழிந்து போய்விட்டது. இந்தக் கடைகளை எல்லாம் அப்புறப்படுத்திவிட்டு இன்றைக்கு யார் கடை அங்கே இருக்கிறது என்றால் சேட்டு, மார்வாடி கடை இருக்கிறது.
சேட்டு, மார்வாடி கடை வளர்வதற்காக இந்து முன்னணிக்கு, இந்து மக்கள் கட்சிக்கு, அர்ஜுன் சம்பத் போன்ற, ராம ரவிக்குமார் போன்றவர்களுக்கெல்லாம், அடிமைகளுக்கெல்லாம் காசு கொடுத்து கலவரத்தைப் பண்ணி, தமிழர்கள் ஜாதியாக மதமாகப் பிரிந்து கொண்டு அடித்துக்கொண்ட பிறகு, அந்த இடத்தில் மார்வாடிகளுடைய கடை முளைத்து நிற்கிறது. அதோடு நிற்கவில்லை.
நான் அதிமுகவைப் பற்றிச் சொல்கிறேன். அவர்கள் ஆட்சிக் காலத்தைச் சொல்கிறேன் கேளுங்கள். போன உள்ளாட்சித் தேர்தலில் அந்தப் பகுதி எல்லாம் மார்வாடிகளின் பகுதியாக மாறிய காரணத்தினால், ஒரு மார்வாடிப் பெண்ணை நீங்கள் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று அதிமுகவுக்குச் சொல்லி அதிமுக ஏற்றுக்கொண்டது. தமிழ்நாட்டில் ஒரு மார்வாடியை வேட்பாளராக கோயம்புத்தூரில் கொண்டுவந்து நிறுத்த வைத்த கட்சிதான் இந்த அதிமுக.
இந்த 20 வருடத்தில் கோயம்புத்தூர் போய்ப் பாருங்கள்: தமிழனுக்குக் கடை கிடையாது அங்கே. ரங்கே கவுண்டர் வீதி, ஒப்பனக்கார வீதி, வைசியாள் வீதி, ராஜா வீதி – இதெல்லாம் காலம் காலமாக இருக்கக்கூடிய தெருக்கள். அந்தத் தெருவெல்லாம் இன்றைக்கு என்னவாக ஆகிவிட்டது என்றால் மார்வாடிகளின் ஆக்கிரமிப்பில் போய்விட்டது. அது மட்டும் இல்லை, மார்வாடி கவுன்சிலரைக் கூட நிறுத்த வைத்தார்கள்.
இன்றைக்கு மார்வாடி என்ன கேட்கிறான் தெரியுமா? ரங்கே கவுண்டர் வீதி பெயரை மாற்றிவிட்டு ஒரு சேட்டு பெயர் வைக்க வேண்டும் என்கிறான், ஒரு ஜெயின் பெயர் வைக்க வேண்டும் என்கிறான். கோயம்புத்தூரில் இதுதான் நடந்தது.
மதுரையில் ராம சீனிவாசன் என்று ஒரு சங்கி நிற்கிறான். ஒரு குரங்கு கூட்டத்தில் இருந்து ஒரு பிரதிநிதி நிற்கிறான். அவர்களுக்கெல்லாம் ஓட்டு போட்டால் கோயம்புத்தூர் மாதிரி நாசமாகப் போவீர்கள் என்று சொன்னேன். சொன்ன உடனே அங்கே இருந்த மக்கள் சொன்னார்கள்: “அங்கே மட்டும் இல்லைங்க, மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி மார்வாடிதான் இருக்கிறான். அதனால்தான் ராம சீனிவாசன் தேர்தல் நிற்கிறான், பிஜேபி வந்து நிற்கிறான்.” அங்கே அதே நிலைமை. கோயிலைச் சுற்றி மூன்று திசையும் மார்வாடி கையில் போய்விட்டது. தமிழனுக்குத் தொழில் இல்லாமல் போய்விட்டது.
பிஜேபிக்காரன் மார்வாடியை வளர்ப்பான், மார்வாடியே பிஜேபிக்காரனை வளர்ப்பான். இந்த இரண்டு பேரையும் அதிமுகக்காரன் வளர்ப்பான், எடப்பாடி வளர்ப்பார். இதுதான் நிலைமை. இதுதான் இன்றைக்கு நிலைமை.
இது யாராவது கேட்க முடியுமா? என்ன சொல்கிறான் பாருங்கள்: “நீ இந்துவா, முஸ்லிமா?” என்று கேட்பான். நம்மை கொம்பு சீவிவிட்டிருக்கிறான். நாமெல்லாம் “இந்துடா, இந்துடா” என்கிறான். சரிடா, நீ எல்லாம் இந்து என்றால் குஜராத்துக்காரன் யார்? உத்தர பிரதேசக்காரன் யார்? அவனும் இந்துதானே. நாமெல்லாம் “பாரத் மாதா கி ஜெய்” என்கிறான். அப்படியென்றால் இங்கே இருக்கும் தமிழன் யார் என்றால் அதுதான் முஸ்லிம், இவன் கிறிஸ்தவன்.
ஒன்றாக நாம் ஒன்றாக வாழ்ந்த தமிழர்களை மதமாகப் பிரிக்கிறான். நமக்கு சம்பந்தமில்லாத குஜராத்துக்காரனை இந்து என்று சொல்லி நம்மை ஏற்றுக்கொள்ளச் சொல்கிறான். இந்த நிலைமையை எப்படி ஒத்துக்கொள்வது? அதிமுக வேட்பாளர்தான் பதில் சொல்ல வேண்டும்.
இதையெல்லாம் அதிமுக வேட்பாளரைக் கேட்கிறேன். பிஜேபி கட்சிக்காரன் இவ்வளவு வேலை பார்க்கிறானே, நான் இந்த மார்வாடிகளின் இந்த அரசியலுக்கு எதிராக நான் இரண்டு இடத்தில் பேசிவிட்டேன் என்றால் உடனே பிஜேபியிலிருந்து அறிக்கை வந்துவிடும். நான் வேண்டுமானால் இன்றைக்கு பேசிவிட்டுப் போகிறேன். நாளைக்கு பிஜேபியிலிருந்து அறிக்கை போடுவார்கள். அவன் பதறுவான். ஏன்? நான் அவனுக்குப் படி இளக்குகிறவன். அவன்தானே அவனுக்கான அதானி அம்பானியை வளர்த்து வைத்திருக்கிறார்கள். இந்த அதானி, அம்பானி யார்? இது சேட்டு, மார்வாடி கூட்டம்தானே? இவர்கள்தான் எல்லாவற்றையும் ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் தமிழ்நாடு சிக்கியிருக்கிறது. இந்த மாதிரி இடத்தில்தான் நாம் போராட வேண்டியிருக்கிறது. ஒன்று சாதாரண போராட்டம். அடுத்த ஐந்து வருடம், பத்து வருடம் இடைவிடாமல் போராடினால்தான் தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியும். அப்படிப் போராடுவதற்கான தெம்பு வேண்டுமென்றால், தி.மு. ராஜேந்திரன் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்று சட்டசபைக்குச் செல்ல வேண்டும்.

நமக்கெல்லாம் ஒரு பொறுப்பு இருக்கிறது. நீங்கள் உங்கள் நண்பர்களிடம் பேசுங்கள். அவர்களிடம் விளக்கப்படுத்துங்கள். நான் சொன்னதை எல்லாவற்றையும் எல்லா இடத்திலும் சொல்ல முடியுமா? என்று எனக்குத் தெரியவில்லை. நான் தமிழ்நாடு முழுக்க பிரச்சாரத்துக்குப் போகிறேன். இந்த உண்மையை நான் இதுவரைக்கும் பேசுகின்ற உண்மை எதையுமே இதுவரைக்கும் எந்த பிஜேபிக்காரனும் மறுத்தது கிடையாது. சொன்னால் தலையைக் குனிந்துகொண்டு போய்விடுவார்கள். ஏன் என்றால் அவர்களுக்குத் தெரியும் உண்மை என்னவென்று. மார்வாடிக்காகத்தான் வேலை பார்க்கிறான்.
அது மட்டும் இல்லை. இவர்களை எதிர்ப்பதற்கு நிறைய காரணம் இருக்கிறது, வரலாற்றுக் காரணமும் இருக்கிறது. அதனால் சொல்லிவிட்டுப் போகிறேன். மொத்தமாகக் கொட்டிவிட்டால் மனசு நிம்மதியாகிப் போகும். இப்போது நிம்மதியாகப் போய் தூங்கலாம்.
சுபாஷ் சந்திர போஸ் இருக்கிறார் இல்லையா? காந்தியைப் படுகொலை செய்தது யார்? கோட்சேவா? ஆர்.எஸ்.எஸ். ஆர்.எஸ்.எஸ் யார்? பிஜேபியின் தாய் கம்பெனி. நமக்குத் தெரிந்து வெறும் காந்தியைக் கொலை பண்ண கதைதான் தெரியும். ஆனால் சாவர்க்கர் பண்ணிய இன்னொரு சேட்டை இருக்கிறது. அது யாருக்கும் தெரியாது. நாங்கள்தான் எடுத்து வெளியே கொண்டு வந்தோம் அந்த வரலாறை.
சுபாஷ் சந்திர போஸ் மலேசியாவுக்குப் போய் படை கட்டுகிறார். இந்தியாவுக்குள் படையெடுத்து வெள்ளைக்காரனை வெளியே அனுப்புவதற்கு இதுதான் சரியான நேரம் என்று படை கட்டுகிறார். எப்போது என்றால், இங்கிலாந்தை ஹிட்லர் சுற்றி வளைத்துவிட்டான். இங்கிலாந்துக்குள் கோதுமை போக முடியவில்லை, படைத்துறை போக முடியவில்லை, உள்ளே யாரும் போக முடியவில்லை, வெளியே வர முடியவில்லை. இங்கிலாந்தில் சோற்றுக்கே வழி இல்லை. இங்கிலாந்து ராணுவம் கடல் கடந்து பிரான்சுக்குப் போனது. அங்கே முற்றுகை போட்டு ஹிட்லர் முடித்துவிட்டான். 5 லட்சம் படை ஹிட்லரிடம் மாட்டிக்கொண்டது.
இங்கிலாந்தைக் காப்பாற்றுவதற்கே வெள்ளைக்காரனுக்குப் படை கிடையாது. இந்தியாவை ஆள்வது முடிந்துவிட்டது. அப்படியென்றால் இந்தியாவைக் காப்பாற்றுவதற்குப் படை இருக்குமா? இப்போது இந்தியாவைக் காப்பாற்றப் படை இல்லை. அப்போதுதான் சுபாஷ் சந்திர போஸ் என்ன செய்கிறார் என்றால், “இந்த சமயம் பார்த்து உள்ளே போய் அடித்தால் செங்கோட்டையில் நாம் கொடி ஏற்றி இந்தியாவை விடுதலை அடைய வைக்க முடியும்” என்று படை திரட்டுகிறார்.
படை திரட்டும்போது மலேசியாவில் அந்த ரப்பர் தோட்டத்தில், தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்தவர்கள் எல்லாம் தமிழர்கள். எல்லாரும் படையில் போய் சேருகிறான். சுபாஷ் சந்திர போஸ் படையில் போய் சேருகிறான். இங்கே ஐயா முத்துராமலிங்க தேவர் இருக்கிறார். அவர் இந்திய தேசிய ராணுவத்துக்கு ஆட்களை அனுப்புகிறார். தமிழர்கள் பெருந்திரளாகப் போய் தொடர்ந்து சேருகிறார்கள். 3 லட்சம் பேர் கொண்ட படை திரள்கிறது.
இதில் மிக முக்கியம் என்ன தெரியுமா? படை திரண்டாலும் படைக்குத் துப்பாக்கி வேண்டும், சண்டை போடுவதற்கு ஆயுதம் வேண்டும், போட்டுக்கொள்வதற்கு சட்டை வேண்டும். இதற்கெல்லாம் காசு வேண்டும். சுபாஷ் சந்திர போஸிடம் காசு இல்லை. அவர் வேண்டுகோள் வைக்கிறார்: “இந்தியாவை விடுதலை செய்வதற்கு தேசபக்தர்களே எனக்கு நிதியைத் தாருங்கள். இதைக் கொண்டு இந்த ராணுவத்தை வைத்து இந்தியாவை நான் மீட்கிறேன்” என்றார்.
மலேசியாவில் இருந்த இஸ்லாமியர்கள், தமிழ் இஸ்லாமியர்கள் தங்கள் கழுத்தில் இருந்த நகைகளை எல்லாம் கொண்டுபோய் கொட்டிக் கொடுத்தார்கள். அந்த நகைகளை வைத்துத்தான், அந்த பணத்தை வைத்துத்தான் சுபாஷ் சந்திர போஸ் படை கட்டினார். சுபாஷ் சந்திர போஸ் படைக்குப் பொருள் கொடுத்தவர்கள் இஸ்லாமியர்கள், தமிழ் இஸ்லாமியர்கள். மறந்துவிடாதீர்கள். அதுமட்டுமல்ல, படைத் தளபதியாக இருந்தவர்களும் இஸ்லாமியர்கள்.
எல்லாரும் திரண்டு மூன்று லட்சம், நான்கு லட்சம் பேர் திரண்டு பர்மாவைக் கடந்து அப்படியே இந்தியாவின் நாகாலாந்து, மணிப்பூருக்குள் இந்தியாவுக்குள் படையெடுத்து வரக்கூடிய நிலைமை உருவாகிவிட்டது. அந்த சமயம் இங்கிலாந்துக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இங்கிலாந்தைக் காப்பாற்றுவதா, இந்தியாவைக் காப்பாற்றுவதா என்கிற நிலைமையில், “இந்தியாவைக் காப்பாற்ற முடியாது, இங்கிலாந்தைக் காப்பாற்றிக் கொள்ளலாம். இந்தியாவை சுபாஷ் சந்திர போஸ் கைப்பற்றினால் கைப்பற்றிக்கொள்ளட்டும். தடுத்து நிறுத்தி போர் புரிவதற்கு நம்மிடம் வீரர்கள் இல்லை” என்று சொல்கிறார்கள்.
அப்போது வெள்ளைக்காரனைப் போய் சாவர்க்கர் பார்க்கிறார். சாவர்க்கர் என்ன சொல்கிறார் என்றால், “இந்தியாவை வெள்ளைக்காரர்கள் பிடியில் வைத்துக்கொள்வதற்கு உங்களுக்குப் படை வேண்டுமென்றால் அந்தப் படையை நாங்கள் திரட்டித் தருகிறோம். ஆர்.எஸ்.எஸ்-உம் இந்து மகாசபையும் நாங்கள் திரட்டித் தருகிறோம்” என்று வாக்குறுதி கொடுக்கக்கூடியவர் யார் என்றால் வீர சாவர்க்கர் என்று சொல்கிறானே அந்த கோழை சாவர்க்கர்தான். அந்த வெள்ளைக்காரனிடம் சென்று “நான் படை திரட்டித் தருகிறேன்” என்று வாக்குறுதி கொடுக்கிறார்.
இதெல்லாம் ஆவணமாக இருக்கிறது. இந்தியாவை ஆளுகின்ற இங்கிலாந்தின் பிரதிநிதியாக இருக்கக்கூடிய வைசராய் கேட்கிறார்: “அப்படியென்றால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் உங்களுக்கு?” என்றார். “நீங்கள் போர் நடத்துகிறீர்கள் அல்லவா, அந்த அமைச்சர் குழுவில் இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ்-ஐச் சேர்ந்தவர்களை நீங்கள் நியமித்துக்கொள்ள வேண்டும்” என்று சொல்கிறார்.
போரை எப்படி நடத்துவது என்கிற அந்த வார் கவுன்சிலில் இந்து மகாசபை சேர்கிறது. மறந்துவிடாதீர்கள். அந்த வார் கவுன்சில் எதற்கானது? சுபாஷ் சந்திர போஸ் படையை வீழ்த்துவதற்கான யுத்த தந்திரத்தை உருவாக்குவது. அந்த வார் கவுன்சிலில் இருந்தது யார் என்றால் சாவர்க்கர் அனுப்பிய பிரதிநிதிகள்.
அதற்கப்புறம் சாவர்க்கர் எல்லா மாநிலத்துக்கும் போகிறார். போய்விட்டு, “தாய் மண்ணைக் காப்பாற்றுவதற்காக நீங்கள் திரண்டு வர வேண்டும். இந்துக்களே திரண்டு வாருங்கள்” என்கிறார். இந்தியர்களை திரண்டு வாருங்கள் என்று சொல்லவில்லை சாவர்க்கர். “இந்துக்களே திரண்டு வாருங்கள்” என்று எல்லா ஊரிலும் கூப்பாடு போடுகிறார்.
அப்படி சொன்னதைக் கேட்டு லட்சக்கணக்கான இளைஞர்கள் சாவர்க்கரின் அந்தப் படை சேர்ப்பு முகாமில் போய் சேருகிறார்கள். ஒருத்தர் இரண்டு பேர் இல்லை. வெள்ளைக்காரன் கூப்பிட்டால் யாரும் போவதற்குத் தயாராக இல்லை. “போடா நீயும் உன் ஆட்சியும், உனக்காக நான் சண்டை போடணுமா?” என்று சொல்லி எந்த இந்தியனும் வெள்ளைக்காரன் படையில் சேரவில்லை. ஆனால் அந்த சாவர்க்கர் போய்விட்டு “இந்துக்களே வாருங்கள்” என்று சொன்ன உடனே 10 லட்சம் பேர் போய் சேர்ந்தான். யாருக்கு? வெள்ளைக்காரன் படையில். யாரை எதிர்த்து? சுபாஷ் சந்திர போஸை எதிர்த்து போர் புரிவதற்காக.
சுபாஷ் சந்திர போஸ் படையில் இருக்கக்கூடிய தமிழர்களைக் கொன்றொழிப்பதற்காக சாவர்க்கர் படை திரட்டினார். இது வரலாறு.
அப்போது சுபாஷ் சந்திர போஸ் சிங்கப்பூரிலிருந்து ரேடியோ வழியாக ஒரு அறிக்கை விடுகிறார். என்ன சொல்கிறார் தெரியுமா? சுபாஷ் சந்திர போஸ் பேசுகின்ற அந்த வார்த்தை முக்கியமானது. அவர் சொல்கிறார்: “சாவர்க்கர் அவர்களே, நீங்கள் தாய் மண்ணுக்குத் துரோகம் செய்கிறீர்கள். தேசபக்தர்களாகப் படையெடுத்து வரக்கூடிய இந்திய தேசிய ராணுவத்தை நீங்கள் அழிப்பதற்காக வெள்ளைக்காரனோடு, அந்நியனோடு, இந்த நாட்டை அடிமைப்படுத்துபவனோடு கைகோர்த்து நிற்கிறீர்கள். இது வெட்கக்கேடானது” என்று சாவர்க்கருக்கு எச்சரிக்கை கொடுத்தவர் சுபாஷ் சந்திர போஸ். மறந்துவிடாதீர்கள்.
இது எழுதி வைக்கப்பட்ட வரலாறு. நான் பொய் சொல்லவில்லை. இந்த வரலாறை 10 ஆண்டுகளுக்கு முன்பு நான் வெளியிட்டேன். மே 17 இயக்கம் வெளியிட்டது. இதுவரை இந்த 10 ஆண்டுகளில் ஒரு பிஜேபி தலைவர் கூட, ஒரு ஆர்.எஸ்.எஸ் தலைவன் கூட, ஒரு இந்து முன்னணி தலைவன் கூட, ஒரு இந்து மக்கள் கட்சி தலைவன் கூட “நாங்கள் சொன்னது பொய்” என்று சொல்லவில்லை. நாங்கள் உண்மையைப் பேசுகிறோம், நாங்கள் வரலாறைப் பேசுகிறோம். மறந்துவிடாதீர்கள்.
இவர்கள் நாட்டைக் காட்டிக் கொடுத்தவர்கள். தேச துரோகிகள். சுபாஷ் சந்திர போஸைக் காட்டிக் கொடுத்தவர்கள். சாவர்க்கர் திரட்டிய 10 லட்சம் படை அங்கே சென்றது. அசாமில் சென்று மறித்தது சுபாஷ் சந்திர போஸ் படையை மறித்தது. அந்தத் தமிழர்களைக் கொன்றொழித்தார்கள், சிறைபிடித்தார்கள், செங்கோட்டையில் இழுத்து வந்து சித்திரவதை செய்து கொன்றொழித்தார்கள். கொன்றொழித்தது சாவர்க்கர் திரட்டிய படை என்பதை மறந்துவிடாதீர்கள். அதனால்தான் சுபாஷ் சந்திர போஸ் இல்லாமல் போனார். இந்தியாவின் மாபெரும் தலைவர் சுபாஷ் சந்திர போஸை அழித்தது சாவர்க்கர் என்கின்ற ஆர்.எஸ்.எஸ் தலைவன் என்பதை மறந்துவிடாதீர்கள்.
இதில் இன்னொரு முக்கியமான செய்தி இருக்கிறது. சுபாஷ் சந்திர போஸுக்கு உதவி செய்தவர் யார்? ஐயா முத்துராமலிங்க தேவர். அந்த முத்துராமலிங்க தேவருக்குத் துரோகம் செய்தது யார்? சாவர்க்கர். அந்த முத்துராமலிங்க தேவர் திரட்டிக் கொடுத்த படையை அழித்தது யார்? ஆர்.எஸ்.எஸ். யார் இந்த ஆர்.எஸ்.எஸ்? பாரதிய ஜனதா கட்சியின் தாய்க் கழகமான ஆர்.எஸ்.எஸ் தான், இந்து மகாசபைதான் முத்துராமலிங்க தேவர் அவர்களின் அந்தப் படையை அழிப்பதற்கான எல்லா வேலையும் செய்தது.
இந்த வரலாற்று நோக்கத்தை மறந்துவிடாதீர்கள். இப்படி ஐயா முத்துராமலிங்க தேவருக்குத் துரோகம் செய்த, இந்திய தேசிய ராணுவத்தில் போரிட்ட தமிழர்களுக்குத் துரோகம் செய்த அந்த ஆர்.எஸ்.எஸ்-இன் வழித்தோன்றலான பாரதிய ஜனதா கட்சியோடு அதிமுக கூட்டணி வைத்திருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.
யாரோடு கூட்டணி வைத்திருக்கிறீர்கள் என்பதை நான் சொல்லிவிட்டேன். இனி அதிமுகவுக்குப் போடுகின்ற ஓட்டு என்பது ஐயா முத்துராமலிங்க தேவருக்குச் செய்யக்கூடிய துரோகம் என்கிற உண்மையை நீங்கள் போய்ச் சொல்லுங்கள். சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்குச் செய்யக்கூடிய துரோகம் என்று சொல்லுங்கள். இந்திய தேசிய ராணுவத்திற்குச் செய்யக்கூடிய துரோகம் என்று சொல்லுங்கள்.
இது எழுதி வைக்கப்பட்ட வரலாறு. ஆக இவர்களைக் கொன்றொழித்த வேலையைச் செய்த இந்த ஆர்.எஸ்.எஸ் வழித்தோன்றலாக இருக்கக்கூடிய பிஜேபியோடு கூட்டணி வைத்திருக்கக்கூடிய அதிமுகவை நாம் ஆதரிக்க முடியுமா? இந்த உண்மையைப் போய் ஊர் முழுக்கச் சொல்லுங்கள். மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும்.
என்னால் எல்லா இடத்துக்கும் போய்ச் சொல்ல முடியுமா? தெரியவில்லை. ஆனால் நீங்கள் சொல்ல வேண்டும். இந்த உண்மை தெரிந்தாக வேண்டும். அன்றைக்கு காந்தியடிகளைப் படுகொலை செய்தான். அதற்கு முன்பாக சுபாஷ் சந்திர போஸை அழித்தான். அதன்பின் 1956, 57, 58-இல் நினைக்கிறேன், இந்த மூன்று வருடத்தில் ஏதோ ஒரு வருடம் காமராஜர் முதலமைச்சராக இருக்கிறார்.
ராஜாஜி அதற்கு முன்னாடி முதலமைச்சராக இருந்து தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பள்ளிக்கூடங்களை எல்லாம் இழுத்து மூடிவிட்டார். “தமிழனுக்கு எதுக்குடா படிப்பு, போடா” என்று போட்டார். காமராஜர் முதலமைச்சர் ஆன உடனே எல்லா பள்ளிக்கூடங்களையும் திறக்கிறார். 6,000 பள்ளிக்கூடங்களை காமராஜர் திறக்கிறார். அதைத் திறந்துவிட்டு அவர் டெல்லிக்குப் போகிறார். டெல்லியிலே அவருடைய இல்லத்திலே இருக்கிறார்.
காமராஜர் இருப்பதைத் தெரிந்துகொண்ட இந்த ஆர்.எஸ்.எஸ் சங்கிகள், சாமியார் கூட்டம், இந்த குரங்கு கூட்டம் காமராஜர் வீட்டை முற்றுகையிடுகிறார்கள். காமராஜரைக் கொலை செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். சொன்னதோடு நிற்கவில்லை, காமராஜர் வீட்டுக்குத் தீ வைக்கிறான். காமராஜர் வீடு தீப்பற்றி எரிகிறது. தமிழ்நாட்டின் முதல்வராக, கர்மவீரர், கல்விக் கண் கொடுத்த காமராஜர் இருக்கிறார்.
அந்தக் காமராஜர் இருக்கக்கூடிய அந்த வீட்டை ஆர்.எஸ்.எஸ்-காரன் கொளுத்துகிறான். இந்து மகாசபை கொளுத்துகிறது. காமராஜரை பின்வாசலிலே அவர்கள் பின்வாசல் வழியாகக் கதவை உடைத்துக்கொண்டு சுவரேறி காமராஜரைக் காப்பாற்றியதால் தமிழ்நாடு பிழைத்தது. தமிழ்நாடு பிழைத்தது. இது வரலாறு.
நாட்டுக்கு நல்லது செய்யும் எல்லா தலைவனையும் கொலை செய்யப் பார்ப்பான் பிஜேபிக்காரன். மறந்துவிடாதீர்கள். காந்தியைக் கொலை பண்ணான், அதுக்கு முன்னாடி சுபாஷ் சந்திர போஸைக் காட்டிக் கொடுத்து இல்லாமல் பண்ணான், இங்கே முத்துராமலிங்க தேவர் திரட்டிய படையை மொத்தமாக அழித்து முடித்தான், அதற்கப்புறம் காமராஜரைக் கொலை பண்ணுவதற்கான எல்லா வேலையும் பண்ணான்.
அந்தக் காலத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பு இவன். தடை செய்யப்பட்ட அமைப்பாக இருந்து இத்தனை செய்திருக்கிறான் எனக்கு. அந்தத் தொகுதிக்கு வருவதற்கு முன்னாடி சொன்னார்கள்: “இங்கே எல்லாம் இந்துத்துவம் அதிகமாக இருக்கும்” என்று. அங்கேதான் நான் பேச வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வரலாறு எங்கே தமிழர்கள் இருக்கிறார்களோ அங்கே நான் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தத் தமிழர்களுக்கு இந்த உண்மை தெரிய வேண்டும் என்று நினைக்கிறேன்.
தமிழ்நாட்டில் தமிழர்கள் சாதி, மதம் பார்க்கவில்லை. நீங்கள் மதுரைக்குப் போனீர்கள் என்றால், நமக்கு மதுரையின் சிறப்பாக என்ன சொல்கிறோம்? மீனாட்சி அம்மன் கோவில் இருக்கிறது, திருப்பரங்குன்றம் கோயில் இருக்கிறது, நாயக்கர் மகால் இருக்கிறது. அதேபோல மதுரையின் சிறப்பு காஜிமார் பள்ளிவாசல் இருக்கிறது. காஜிமார் பெரிய பள்ளிவாசல் பற்றி உங்களுக்குத் தெரியுமா? என்று தெரியவில்லை. நான் சொல்கிறேன் கேளுங்கள்.
காஜிமார் பள்ளிவாசல் 800 வருடத்துக்கு முன்னாடி கட்டப்பட்ட பள்ளிவாசல். பழைய பள்ளிவாசல்களில் ஒன்று. இந்தப் பள்ளிவாசல் எப்படி கட்டப்பட்டது? அன்றைக்கு பாண்டிய அரசனாக இருந்த மாறவர்மன் சுந்தரபாண்டியன், இந்தப் பெரிய பள்ளிவாசல், காஜிமார் பள்ளிவாசலுக்கு இடத்தைக் கொடுத்து , அந்த இடத்திலே அந்த மசூதியை, பள்ளிவாசலைக் கட்டுவதற்கு பொருளையும் கொடுத்து மாறவர்மன் சுந்தரபாண்டியனின் ஆதரவினால் கட்டி எழுப்பப்பட்டதுதான் நம் காஜி பள்ளிவாசல். இதுதான் வரலாறு.
இந்தப் பாண்டியர்கள் காலத்தில்தான் தேங்காய்ப்பட்டணத்தில் இந்தியாவிலேயே மிகப் பழமையான பள்ளிவாசல் இருக்கிறது. பாண்டியர்கள் ஆதரித்தார்கள். சோழர்கள் ஆதரித்தார்கள். சேரர்கள் ஆதரித்தார்கள். தமிழர்களுடைய மூன்று பெரும் அரசர்களும் ஆதரித்தார்கள். அதனால்தான் அது வளர்ந்தது.
கடந்த வாரம் நாகூர் தர்காவுக்குப் போயிருந்தேன். என் அம்மா சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குப் போவார்கள். பழனி முருகன் கோவிலுக்குப் போவார்கள். அப்படியே நாகூர் தர்காவுக்கும் வேளாங்கண்ணிக்கும் வருடா வருடம் கூட்டிப் போவார்கள். நாகூர் தர்காவில் போய்ப் பார்த்தால் இஸ்லாமியர்களை விட இந்துக்கள்தான் அதிகமாக இருப்பார்கள். ஆனால் நாகூர் தர்காவில் சந்தனக்கூடு வைப்பது யார்? இந்து சமூகத்தைச் சார்ந்தவர்கள்.
இங்கே திருப்பத்தூரில் ஒரு தர்கா இருக்கிறது. திருப்பத்தூர் தர்காவைக் கட்டி எழுப்பியவர் யார்? மருதுபாண்டியர்கள். ஏர்வாடியில் இருக்கக்கூடிய அந்த தர்காவிற்குச் சந்தனக்கூடு செய்யக்கூடியவர்கள் யார்? இந்தப் பகுதியைச் சார்ந்த இந்து சமூகத்தைச் சார்ந்தவர்கள். இப்படி இந்த இரண்டு சமூகமும், இப்படி எல்லா சமூகமும் ஒன்று பட்டு நிற்கக்கூடிய இடங்கள்தான் இந்த தர்காக்கள்.
இங்கே இருக்கக்கூடிய தர்காவில் கொடியேற்றக்கூடியவர்கள் யாதவர் சமூகத்தைச் சார்ந்த இடையர் சமூகத்தைச் சார்ந்தவர்கள், கோனார் சமூகத்தைச் சார்ந்தவர்கள். இடையர் என்பதுதான் உண்மையான தமிழ் வார்த்தை. யாதவர் என்பது இந்தி வார்த்தை. இடையர் என்பது பழைய வார்த்தை. இன்றைக்கு அல்ல, 3,000 வருடத்திற்கு முன்பு சொன்ன வார்த்தை அது. அந்த சமூகத்தினர்தான் கொடியேற்றுகிறார்கள்.
இப்படி எல்லாரும் ஒன்றாக முன்னின்று நிற்கிறோமே, இதில் வந்து “தர்காவை இடிப்பேன்” என்று ஒருத்தன் வந்து நிற்கிறான். ராம ரவிக்குமார் ஒருத்தன் வந்து வழக்குப் போடுகிறான். அவனோடு சீமான் சேர்ந்து சுற்றுகிறான் என்றால் இந்தக் கூட்டத்தை என்ன சொல்வது? இதில் ஒரு விஷயம் இருக்கிறது, சொல்ல வந்து, விட்டுவிட்டேன்.
முருகன் கோவிலுக்கு, திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குத் தீபம் எங்கே ஏற்றுகிறார்கள்? மேலே இருக்கிற பிள்ளையார் கோவிலில் ஏற்றுகிறார்கள். காலம் காலமாக, 100 வருடமாக எங்கே ஏற்றுகிறார்கள்? பிள்ளையார் கோவிலில்தானே ஏற்றுகிறார்கள். முருகனுக்குப் பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றுவதில் என்ன பிரச்சனை பிஜேபிக்காரனுக்கு? கோயில்தானே ஏற்றுகிறார்கள். அதுவும் நீ என்ன சொல்கிறாய்? பிள்ளையார் முருகனுக்கு அண்ணன் என்று சொல்கிறாய். சரி, தம்பி வீட்டு விசேஷத்துக்கு அண்ணன் வீட்டில் தீபம் ஏற்றினால் பிஜேபிக்காரனுக்கு என்ன பிரச்சனை?
அவன் எங்கே ஏற்றச் சொல்கிறான்? சிக்கந்தர் தர்காவில் போய் ஏற்றுங்கள் என்கிறான். எதற்கு? கலவரம் கொண்டுவருவதற்கு. இன்னொரு விடயம் இருக்கிறது. அதற்குள் தர்கா என்பது என்ன? இந்த மண்ணுக்காக உழைத்தவர்கள், பாடுபட்டவர்கள், மக்களை நேசித்தவர்கள் மறைந்துவிட்டால் அவர்களுடைய அடக்கத்தலத்தில் அவர்களுக்கு மரியாதை செலுத்தக்கூடிய சடங்குகள் நடக்கக்கூடிய இடமாக இருக்கிறது. அப்படியென்றால் என்ன அர்த்தம்? அது அடக்கத்தலம். தமிழ் மொழியில் சொன்னால் அது இடுகாடு.
நான் என்ன கேட்கிறேன் என்றால், முருகனுக்கு ஒரு இடுகாட்டின் அருகில் போய் தீபம் ஏற்று என்று எவனாவது சொல்வானா? ஒரு இந்து சொல்லுவானா? ஒரு பக்தன் சொல்லுவானா? அப்படி நான் கேட்கிறேன் பிஜேபிக்காரனைப் பார்த்து. ராமனுக்குப் போய் சுடுகாட்டில் போய் தீபம் ஏற்று என்றால் ஏற்றுவியாடா நீ? ஏற்ற மாட்டாய். ஆனால் முருகனுக்குப் போய் ஏற்று என்கிறான்.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஒன்று, மேலே கை வைத்து கலவரத்தைக் கொண்டுவருவது. இன்னொன்று என்ன? முருகனை அவமானப்படுத்துவது, முருகனை அசிங்கப்படுத்துவது. முருகனுக்குப் பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றும் தகுதி கிடையாது, அதனால் மேலே போய் அங்கே போய் ஏற்று, எங்கேயோ போய் ஏற்று என்கிறான்.
மக்கள் கேட்டால், இத்தனை பாரம்பரியம் இருந்தால் என்ன, அதெல்லாம் கவலை இல்லை. அங்கே போய் முருகனுக்கு அவ்வளவுதான் மரியாதை என்கிறான். இதுதான் முக்கியமான விஷயம். ஒருபுறத்தில் தமிழனை இழிவுபடுத்துவது, மறுபுறத்தில் சமூகத்தை உடைப்பது, இந்துக்களாக முஸ்லிம்களாக உடைப்பது. இந்த வேலையைச் செய்யக்கூடிய நுணுக்கமான வேலை இது.
அதனால்தான் பிரதமர் அங்கிருந்து கிளம்பி வந்து திருப்பரங்குன்றத்தில் வந்து தாசாங்கமாக விழுந்தார். இன்னொன்று சொல்கிறேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது இல்லை, அதை விட்டுவிடுங்கள். ஆனால் காலையில் மதுரை மக்கள் சொன்னார்கள் ஒன்று. சிக்கந்தர் தர்காவை இடிப்பேன் என்று சொன்ன எச். ராஜாவின் நிலைமை என்ன என்று கேட்டேன். “என்னங்க கை தட்டுறீங்க, விழுந்து போயிட்டாரு” என்று சொன்னார்கள்.
இடிக்கிறேன் என்று சொன்னது, அதோடு வாயைப் பொத்திக்கொண்டு அமைதியாக உட்கார்ந்துவிட்டார். முருகன் சரியா வேலையைக் காட்டிவிட்டான். எங்கே குத்த வேண்டுமோ அங்கே குத்திவிட்டான். வேலை வைத்தே குத்தியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
நான் கேட்கிறேன் எச். ராஜாவைப் பார்த்து: டேய், உனக்கும் முருகனுக்கும் என்னடா சம்பந்தம்? நீ ஒரு திராவிட எதிர்ப்பாளன். அவனுக்கெல்லாம் மரியாதை தருவதில்லை. நீங்கள் தப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள். மனுஷனுக்கு மரியாதை தரலாம், அடிமைக்கு மரியாதை தர வேண்டியதில்லை என்று தமிழ் சொல்லிவிட்டது.

உனக்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம்? ஆனால் அப்படியே கூடவே இருக்கிறாய். கூடவே இருக்கிற முருகன் வைத்த ஆப்பு உனக்கு வைத்தாரா? நீதான் நம்புவாய், நாங்கள் நம்புவதில்லை. உனக்கு நம்பிக்கை இருக்கிறது இல்லையா, சும்மா இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் வாயை வைத்துச் சும்மா இருக்க வேண்டும்.
இங்கே நாங்கள் எந்தப் பிரிவினையும் இல்லாமல் அமைதியாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். உத்தர பிரதேசத்தில் போய் பாபர் மசூதி இடித்தீர்களேடா, உத்தர பிரதேசம் வளர்ந்ததா? சொல். உத்தர பிரதேசக்காரன் வடை போட்டுக்கொண்டிருக்கிறான், வண்டி தள்ளிக்கொண்டிருக்கிறான், கூலிவேலை பார்த்துக்கொண்டிருக்கிறான், ரோடு போட்டுக்கொண்டிருக்கிறான், ஜல்லி அடித்துக்கொண்டிருக்கிறான். அந்த ஊர் ஏன் கஷ்டப்படுகிறது? மதவெறி கடினப்படுகிறது.
நீ ஏதோ அங்கே போய் பாபர் மசூதியை இடித்து பெருமையாக அப்படியே போய் “பாரத் மாதா கி ஜே” என்று சொல்லிவிட்டாய். இங்கே வந்து கல்லை உடைத்துக்கொண்டிருக்கிறான் பார். ஆனால் தமிழன் சாமி கும்பிடுவது தனிப்பட்ட விடயம். அதற்குள் நாங்களெல்லாம் வரமாட்டோம்.
தமிழ்நாட்டை வளர்ப்பதற்கு அறிவியல் முக்கியம், கல்வி முக்கியம், வேலைவாய்ப்பு முக்கியம், தொழிற்சாலை முக்கியம் என்று நாங்கள் வளர்ந்து நிற்கிறோம். நீ காட்டுமிராண்டியாக இருக்கிறாய். அந்தக் காட்டுமிராண்டி கட்சியோடு அதிமுக ஏன் கூட்டணி வைத்திருக்கிறது? எதற்குக் கூட்டணி வைத்திருக்கிறாய் என்று நான் எடப்பாடியைப் பார்த்துக் கேட்கிறேன்.
அவர் ஒரு நோட்டீஸ் போட்டிருக்கிறார். இங்கே அதிமுக போட்டிருக்கிறது எனக்குத் தெரியவில்லை. “தமிழகத்தை மீட்போம்” என்று போட்டிருக்கிறார். முதலில் பார்த்தால் ஒன்றும் தெரியாது. சாதாரணமாக வசனம் போட்டிருக்கிறார் என்று தெரியும். “தமிழகத்தை மீட்போம்” என்று ஏன் போட்டார்? ஏன் “தமிழ்நாட்டை மீட்போம்” என்று போடவில்லை? இது என்னப்பா விதண்டாவாதமாக இருக்கிறது என்று கேட்பீர்கள்.
பிஜேபிக்காரன் “தமிழ்நாடு” என்கிற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்கிறான். “தமிழகம்” என்று பயன்படுத்த வேண்டும் என்று சொல்கிறான். யாரெல்லாம் சொன்னான்? இதற்கு முன்னாடி இந்த ஆளுநர் ரவி சொல்கிறார். பிஜேபி தலைவர் சொல்கிறார். “தமிழகம் தமிழகம் என்று சொல்லு, தமிழ்நாடு என்று சொல்லாதே” என்கிறான்.
“தமிழ்நாடு” என்கிற பெயர் 3,000 வருடத்துக்கு முன்னாடி தமிழ் இலக்கியத்தில் எழுதி வைத்த பெயர். எங்கள் மண்ணின் பெயர், எங்கள் நாட்டின் பெயர், எங்கள் இனம் வாழ்கின்ற நிலத்தின் பெயர் அது. எங்கள் பெருமை. உனக்கு இல்லை என்றால் என்ன செய்வது? உனக்கு ஒரு பெருமையும் கிடையாது. தோண்டித் தோண்டிப் பார்த்தால் ஒன்றும் கிடைக்கவில்லை குஜராத்தில்.
எங்களுக்கு இருக்கிறது பெருமை. “தமிழ்நாடு” என்கின்ற பெயர் தொந்தரவாக இருக்கிறது. அதனால் “தமிழ்நாடு” என்கின்ற பெயரை வைக்கக்கூடாது, “தமிழகம்” என்றுதான் சொல்ல வேண்டும் என்று சொன்னார்கள். அதற்கு ஏற்ற மாதிரி எடப்பாடியார் “தமிழகத்தை மீட்போம்” என்று போட்டிருக்கிறார்.
இன்னும் ஆட்சிக்கே வரவில்லை. அதற்குள் பிஜேபியைப் பார்த்து அச்சப்படுகின்ற எடப்பாடியைப் பார்த்து நாம் என்ன சொல்வது? “தமிழ்நாடு” என்று கூப்பிடுவதற்குக் கூட துணிச்சல் இல்லாத எடப்பாடியையும் அதிமுகவையும் எப்படி நாம் ஏற்றுக்கொள்ள முடியும் சொல்லுங்கள்?
“தமிழ்நாடு” என்கின்ற பெயர் சாதாரணமாக வந்ததா? இந்திய அரசாங்கம் வைக்க மாட்டேன் என்று சொன்னது. சங்கரலிங்கனார் 60 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி உயிர் கொடுத்தார். “தமிழ்நாடு” பெயர் வைக்க வேண்டும் என்று. அறிஞர் அண்ணா ஆட்சிக்கு வருகிறார். ஆட்சிக்கு வந்த உடனே இந்த நிலத்தினுடைய பெயர் “தமிழ்நாடு” என்று அவர் அறிவிக்கிறார். அதிலிருந்து தமிழ்நாடாக மலர்கிறது.
அப்போது அவர் சொல்கிறார்: “தமிழ்நாடு என்கின்ற பெயர் இருக்கின்ற வரை இந்த மாநிலத்தை ஆளக்கூடியவன் இந்த அண்ணாதுரை” என்று சொன்னால் இன்றுவரை அவர்தான் இந்த மண்ணை ஆள்கிறார். அறிஞர் அண்ணாதான் ஆள்கிறார். திராவிடம்தான் ஆள்கிறது. சுயமரியாதைதான் ஆள்கிறது. தந்தை பெரியார்தான் ஆள்கிறார்.
மதவாதிகளுக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை நாம் உரக்கச் சொல்ல வேண்டிய காலம் இது. துணிந்து சொல்ல வேண்டிய காலம் இது தோழர்களே.
ஆக தமிழ்நாட்டைப் பாதுகாக்கக்கூடிய ஒரு பெரிய போராட்டத்தில், போர்க்களத்திலே நீங்களும் வீரர்களாய், படை வீரர்களாய் இங்கே திரண்டிருக்கிறீர்கள். ஆகவே இது வெறும் தேர்தல் அல்ல. இந்தத் தேர்தல் முடிந்த உடனே இந்தப் பாராளுமன்றத் தொகுதியைப் பாதுகாப்பதற்கான பெரிய போராட்டம் இருக்கிறது.
ஏழு கோடி தமிழனும் தெருவுக்கு வரவில்லை என்றால், பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றுகின்ற எந்த உரிமையும் இல்லாமல் வடநாட்டானுக்கு நாம் அடிமையாக மாறக்கூடிய காலம் வரப்போகிறது. அப்படிப்பட்ட ஒரு அடிமை வாழ்க்கை நமக்குத் தேவையா? ஆக தோழர்களே, ஒரு பெரிய போராட்டத்திற்குத் தமிழ்நாடு தயாராகிக் கொண்டிருக்கிறது.
அதில் முதல் கட்டம்தான் இந்தத் தேர்தல். இந்தத் தேர்தலிலே நீங்கள் அரசியல் உணர்வோடு, தமிழ் தமிழன் என்கின்ற உணர்வோடு, தமிழ்நாட்டைக் காக்க வேண்டும் என்கின்ற அந்த முனைப்போடு நீங்கள் களம் காண வேண்டும். நீங்களும் பரப்புரைக்கு வாங்க. இங்கே அதிமுக ஜெயித்தது என்றால் தமிழ்நாட்டுக்கு இழுக்கு. கடையநல்லூருக்கு இழுக்கு. இங்கே தேவை இல்லாதவர்களுக்கெல்லாம் வாக்களிக்காதீர்கள்.
சங்கர மடத்தில் சென்று கோமியம் குடிக்கக்கூடிய அந்த சீமான் கட்சியை எல்லாம் ஒரு காலத்திலும் அங்கீகரித்துவிடாதீர்கள், மதித்துவிடாதீர்கள். இதுபோல எந்தவித அக்கறையும் இல்லாமல் தமிழ்நாட்டைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் பேசுகின்ற தலைவரைப் பற்றியெல்லாம் நீங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளாதீர்கள்.
இது கட்சிப் பிரச்சனை அல்ல. இது இனப் பிரச்சனை. இது மானப் பிரச்சனை. மொழிப் பிரச்சனை. நம் மண்ணின், நம்முடைய தமிழர்களுடைய எதிர்காலப் பிரச்சனை. நம் தமிழுடைய எதிர்காலப் பிரச்சனை. ஆக அந்த இடத்தில் சரியான முடிவு எடுப்பதற்கு நீங்கள் ஒரு போராளியைத் தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும் என்று கேட்கிறேன்.
ஒரு சரியான போராளியை அனுப்ப வேண்டும். தி.மு. ராஜேந்திரன் அவர்களே 17 வருடமாக எனக்குத் தெரியும். போராட்ட காலத்தில் நான் இருந்த காலத்திலெல்லாம் அவரை அறிந்திருக்கிறேன். அனைத்துப் போராட்ட காலத்திலும் துணிச்சலாக நிற்கக்கூடியவரை நீங்கள் தேர்ந்தெடுங்கள். பெரு வெற்றி பெறச் செய்து அவரைச் சட்டமன்றத்திற்கு அனுப்புங்கள்.
அந்தப் பொறுப்பு நம் எல்லாருக்கும் இருக்கிறது. அதிமுகவிற்குக் கட்டுத்தொகை கிடைக்காமல் இருந்தால் பெரிய மகிழ்ச்சியாக இருக்கும். டெபாசிட் கிடைக்காமல் இருந்தால் அவர்களுக்கு ஒரு செய்தியாகப் போய்ச் சேரும். “பிஜேபியோடு கூட்டணி வைத்தால் டெபாசிட் கூட கிடைக்காது” என்கின்ற செய்தி எடப்பாடிக்கு எட்ட வேண்டும். அப்படிப்பட்ட ஒரு செய்தியை கடையநல்லூர் தர வேண்டும். தருவீர்களா? தமிழ்நாட்டைக் காக்க வருவீர்களா?
தமிழ்நாட்டைப் பாதுகாப்போம். தமிழ் மொழியைப் பாதுகாப்போம். தமிழினத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்போம். தி.மு. ராஜேந்திரன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலே வாக்களித்துப் பெரு வெற்றி பெறச் செய்யுங்கள். அந்த வெற்றி விழாவிலே, நன்றி தெரிவிக்கின்ற விழாவிலே நீங்கள் அழைத்தாலும் அழைக்காவிட்டாலும், நானும் பங்கெடுக்க வருவேன் என்பதைச் சொல்லி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.