வேலைசெய்யாத வெண்டிலேட்டருக்காக ரூ.2000 கோடி ஒதுக்கிய மோடி.
பெருந்தொற்றிலும் பனியாக்களுக்கு சேவகம் செய்யும் மோடி அரசு.
கொரோனாவின் இரண்டாம் அலை, இந்தியாவின் பெரிய நகரங்களை மட்டும் அல்ல, சிறிய நகரங்களையும், கிராமங்களையும் கூட பேரழிவில் தள்ளி உள்ளது. இந்தியாவில் இறப்புகளின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 4,000 வரை எட்டியது. இந்தியா முழுவதும் ஆக்சிஜன், மருந்துகள், தடுப்பூசிகள் பற்றாக்குறை என்ற செய்திகள் குவிந்து கொண்டே இருக்கின்றன.
இந்நிலையில், பிஎம் கேர்ஸ் (PM Cares ) நிதி மூலம் மருந்துகள் மருத்துவ உபகரணங்கள் பெற்றிட ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்து மற்றும் அது முறையாக செலவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் தொடர்ந்து மக்கள் கேள்வி எழுப்பி வந்தார்கள்.
ஏற்கனவே இருந்த “பிரதமர் பேரிடர் நிவாரண நிதி”யை ஓரம்கட்டிவிட்டு, அரசின் தணிக்கை துறைக்கு அப்பாற்பட்டு பிஎம் கேர்ஸ் எனப்படும் “தொண்டு அறக்கட்டளை”யை உருவாக்குவதை எதிர்த்து பல கேள்விகளும் விமர்சனங்களும் எழுந்தன. இந்திய ஒன்றிய அரசு தனது வருவாயில் வரி விலக்குகள் வழங்கியும், வெளிநாட்டு நிறுவனங்களிடம் திரட்டப்படும் இத்திட்டத்தில் முறைகேடுகள் மட்டுமே நடைபெறும் என்றும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. மோடி அரசின் இந்த “திரைமறைவு” நிதி திட்டத்தை குறித்து கடந்த 2020 மே17 குரலில் விரிவான கட்டுரை வெளியானது.
பிஎம் கேர்ஸ் நிதி வழியாக ஒன்றிய அரசு 2020ல் ரூ.3000 கோடிக்கு மேல் திரட்டியது. அதிலிருந்து அரசு மருத்துவமனைகளுக்கு 50,000 வென்டிலேட்டர்களை பெற்றிட ரூ.2000 கோடி ஒதுக்கப்படுவதாக கடந்த மே மாதமே அறிவித்தது.
கொரோனா முதல் அலையின் போது மோடி அரசு வழங்கிய வென்டிலேட்டர்கள் பெரும்பான்மை தரக்குறைவாக உள்ளதாகவும் பழுதடைந்து செயலற்று உள்ளதாகவும் மாநில அரசுகள் தொடர்ந்து தெரிவித்து வந்தன. இந்நிலையில், 2021 மார்ச் முதல் கொரோனா இரண்டாம் அலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கிட உயிர்காக்கும் வென்டிலேட்டர்கள் குறித்தான கேள்விகள் எழுப்பப்பட்டன. மோடி அரசால் வழங்கப்பட்ட வென்டிலேட்டர்கள் அனைத்தும் செயலற்று உள்ளதாகவும். அவற்றை நம்பி சிகிச்சையில் பயன்படுத்த மருத்துவர்கள் பயன்படுத்த மறுப்பதாகவும் மாநில அரசுகளும் மருத்துவமனைகளும் அறிவித்தன.
பிஎம் கேர்ஸ் நிதி மூலம், மறைவாக நிர்வகித்து, வழங்கப்பட்ட வென்டிலேட்டர்களின் தரம் மற்றும் இந்த நிதியின் கணக்கு வழக்குகள் பற்றியும் கேள்விகள் பரவலாக ஒலிக்க தொடங்கின.
பஞ்சாபின் மூன்று மருத்துவ கல்லூரிகளுக்கு பிஎம் கேர் திட்டம் வாயிலாக வழங்கப்பட்ட 320 வென்டிலேட்டர்களில் 237 பழுதாகி உள்ளதாக அம்மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது. அம்ரித்சர் மருத்துவ கல்லூரிக்கு வழங்கப்பட்ட 109 வென்டிலேட்டர் கருவிகளில் 97 பழுதடைந்துள்ளன; பரீத்க்கொட் குருகோபிந்த் சிங் மருத்துவ கல்லூரிக்கு வழங்கப்பட்ட 113 கருவிகளில் 90 வென்டிலேட்டர்கள் பழுதடைந்துள்ளன. பட்டியாலா மருத்துவ கல்லூரிக்கு வழங்கப்பட்ட 98 கருவிகளில் 50 பழுதடைந்த தாகவும், 48 பழுதை சீர் செய்த பிறகும் தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் அதன் மீது நம்பிக்கை இழந்த காரணத்தால் பயன்படுத்த மறுப்பதாகவும் தெரிவித்தது.
மகாராட்டிரவின் மாராத்வாடா மண்டலத்தின் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட 150 வென்டிலேட்டர்களில் 137 பழுதடைந்து இருப்பதாகவும், மீதி 13 வெண்டிலேட்டர்களை அதன் பெட்டிகளில் இருந்து வெளியே எடுக்கவும் இல்லை என அம்மாநில அரசு தெரிவித்தது. இச்செய்தி அடிப்படையில் பம்பாய் உயர்நீதி மன்றத்தின் அவுரங்காபாத் அமர்வு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
ராஜஸ்தானில், PM கேர்ஸ் நிதியின் கீழ் கிடைத்த 1138 வென்டிலேட்டர்களில் 1000 வென்டிலேட்டர்கள் பழுதடைந்து விட்டதாக அம்மாநிலம் குற்றம் சாட்டி உள்ளது.
மகாராட்டிர அவுரங்காபாத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்பட்ட அனைத்து 25 வென்டிலேட்டர்களும் பழுதடைந்தது.
மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட வென்டிலேட்டர் பழுதடைந்த விவரம்.
மாநிலம் | வழங்கப்பட்டவை | பழுதானவை | பழுதான % |
ராஜஸ்தான் | 1138 | 1000 | 87.87% |
பஞ்சாப் | 320 | 237 | 74.06% |
கர்நாடகா | 2025 | 1620 | 80.00% |
ஜார்க்கண்ட் | 100 | 45 | 45.00% |
மகாராட்டிரம் | 150 | 113 | 75.30% |
இது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள மும்பை உயர்நீதிமன்றம் அவுரங்காபாத் அமர்வு, மக்களின் பணத்தில் வாங்கிய வென்டிலேட்டர்கள் மருத்துவப் பயன்பாட்டிற்கு தகுதியில்லாமல் இருப்பதை ஏற்கமுடியாது. நோயாளிகளின் உயிர்களை பாதுகாப்பதைவிட இந்த தரமற்ற கருவிகளை தயாரித்த நிறுவனங்களை (குஜராத்தின் ஜோதி சிஎன்சி – Jyoti CNC ) பாதுகாப்பதில் தான் ஒன்றிய அரசு கவனம் செலுத்துவதாக மோடி அரசை கண்டித்தது. நோயாளிகளின் தேவையைப் பூர்த்தி செய்யாத வென்டிலேட்டர் வெறும் அட்டைப் பெட்டி தான். அவற்றை திருப்பி அனுப்பிட உத்தரவிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் மக்கள் கொரோனா பெருந்தொற்றில் சிக்கி பரிதவித்து வந்த சூழலிலும் அவர்கள் உயிர் காக்கும் கருவிகளை கொள்முதல் செய்வதிலும் துளியும் அக்கறையின்றி இந்துக்களின் பாதுகாவலனான மோடி செயல்பட்டுள்ளார்.
இதுநாள் வரை வென்டிலேட்டர் தயாரித்த அனுபவமே இல்லாத “ட்ரிவிட்ரான் ஹெல்த்கேர்” என்கிற நிறுவனத்திற்கு ஆந்திரா மெட்டெக் சோன் லிமிடெட் (AMTZ) நிறுவனம் 10,000 வென்டிலேட்டர்களுக்கான ஆணையை ஏப்ரல் 2020ல் மோடி அரசு ஆணை வழங்கியது. கிட்டத்தட்ட 8 மாதங்கள் கழித்து வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யத் தொடங்கிய ட்ரிவிட்ரான் 2,000 யூனிட்களில் 650 மட்டுமே இதுவரை வழங்கி உள்ளது.
குஜராத்தை சேர்ந்த முன் அனுபவம் இல்லாத ஜோதி சிஎன்சி எனப்படும் நிறுவனத்திற்கு 5000 கருவிகளை வழங்கிட ஆணை கிட்டியது.
அதுபோல, வென்டிலேட்டர் தயாரித்த அனுபவமே இல்லாத மற்றொரு நிறுவனமான அக்வா (AgVa) ஹெல்த்கேர் 10,000 வென்டிலேட்டர்களை தயாரிக்க ஆணையை பெற்றது. இந்நிறுவனத்திடம் இருந்து ஒன்றிய அரசு 5000 வென்டிலேட்டர்களை மட்டுமே பெற்றதால், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அந்நிறுவனம் உற்பத்தியை நிறுத்திக்கொண்டது.
முன் அனுபவம் இல்லாத நிறுவனங்கள் தயாரித்த வென்டிலேட்டர் கருவிகளை மோடி அரசு பெற்றது மட்டுமல்லாமல் அவற்றுக்கான தொகையும் பிஎம் கேர்ஸ் நிதியின் வாயிலாக செலுத்திவிட்டதாக தெரிவித்துள்ளது. ஆனால், அந்நிறுவனங்களோ தங்களுக்கு பாதி தொகை கூட வராத சூழலில் உற்பத்தியை நிறுத்தி கொண்டதாக கூறியுள்ளன. இந்த ஊழலை மறைக்கவே பிஎம் கேர்ஸ் நிதியின் கணக்கு வழக்கை பொதுவெளியில் மக்களிடம் தெரிவிக்க மோடி மறுக்கிறார்.
இதில் வேதனைக்குரிய விடயம் என்னவென்றால் 40 ஆண்டுக் காலம் வென்டிலேட்டர்களை தயாரித்து வந்த “ஏஎம்எல்” என்ற நிறுவனத்திற்கு வெறும் 350 கருவிகளை தயாரிக்கும் அரசாணை வழங்கப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய், எரிசக்தி, மின் உற்பத்தி, மரபுசாரா மின் உற்பத்தி, கனிம வள சுரங்கங்கள், துறைமுகம், விமான நிலையங்கள், உள்கட்டமைப்பு தொழில் என இந்தியாவின் 130 கோடி மக்களின் பொருளாதாரம் முழுவதையும் குஜராத்தி மார்வாரி பனியாக்கள் கட்டுப்பாட்டில் கொண்டு போய் குவிக்கும் பணியை செய்திடவே “இந்து பாதுகாவலன்” மோடி பனியாக்களால் உருவாக்கப்பட்டார்.
கொரோனவால் இந்தியாவின் 130 கோடி மக்கள் சுவாசிக்க ஆக்சிஜன் இல்லாமல் மருத்துவமனை வாயில்களில் சரிந்து மடிந்து கொண்டிருந்த வேளையிலும் மோடிக்கு பனியாக்களின் தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்பு தான் தென்பட்டுள்ளது. ஆகவே தான் உயிர் காக்கும் வென்டிலேட்டர் உற்பத்தி அரசாணைகளை முன் அனுபவம் இல்லாத மார்வாரி பனியா நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளார்.
மோடி அரசின் இந்த மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளால் ஒன்றியம் முழுவதும் மக்கள் கொந்தளிப்படைந்தனர்.
இதனை தொடர்ந்து, பாஜக அரசு தாங்கள் இந்தியா முழுவதும் 50,000 வென்டிலேட்டர்களை ஒதுக்கி உள்ளதாக அறிவித்தது. அதில், 42,776 வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.
“வென்டிலேட்டர்களை பயன்படுத்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள்களுக்கு போதுமான பயிற்சி இல்லாத காரணத்தால் அவை பயன்படுத்தாமல் கிடப்பதாக” மோடி அரசு அவுரங்காபாத் அமர்வு முன் தெரிவித்துள்ளது. அக்கருவிகளை செயல்படுத்த பயிற்சிகளை வழங்க மருத்துவ நிர்வாகங்களை அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளது.
தனது கையாலாகாத தனத்தை மறைத்திட, பெருந்தொற்று சூழலில் தங்கள் உயிர்களை துச்சமாக கருதி தொண்டாற்றிடும் மருத்துவ முன் களப்பணியாளர்களின் திறமையை சிறுமைப்படுத்தி பாஜக ஒன்றிய அரசின் பேச்சு கண்டனத்திற்குரியது.
இந்தியா முழுவதும் பெருந்தொற்றால் பாதிக்கப்படும் லட்சக்கணக்கான மக்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கி பாதுகாத்திடும் உயர் தொழில்நுட்ப கருவிகளை பெறுவதில் பாஜக மோடி அரசு செய்துள்ள ஊழல் அப்பட்டமாகியுள்ளது.
பிஎம் கேர்ஸ் என்கிற “இரகசிய” நிதியை கொண்டு அனுபவமே இல்லாத புது நிறுவனங்களை உயிர்காக்கும் கருவிகளை தயாரிக்க அரசாணை வழங்கியுள்ளது. இதில், அந்நிறுவங்களுக்கு ரூ.2000 கோடி பணம் பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து வழங்கியதாக கூறுகிறது. அதை, அந்நிறுவனங்கள் மறுக்கின்றன.
கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த நாட்களில் பெங்களூரில் மக்கள் தொடர்பு மையத்தில் இருந்த 17 இஸ்லாமிய முன்கள பணியாளர்கள் மீது பாஜக மதவெறியர்கள் வன்மத்தை கக்கினர். இது தான் பாஜக ஆட்சி.
இந்து மத அடிப்படைவாதம், சிறுபான்மை மதவெறுப்பு, பொய்யான தேசபக்தி, கற்பனை புராண பொய் மூட்டைகள் என்று மக்களை ஆட்டு மந்தைகளாக காணும் ஆர்.எஸ்.எஸ் பாஜக ஆட்சியாளர்களுக்கு இந்தியர்கள் மனிதர்களாக தெரிவதில்லை. அந்த மனிதர்கள் படும் பாடுகள் பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை.
பாசிஸ்ட்கள் ஒருநாளும் மக்கள் நலனில் அக்கறை கொள்ள மாட்டார்கள் என்பது ஹிட்லர், முசோலினி, டிரம்ப், பொல்சோனாரோ, மோடி வரை நிரூபணமாகியுள்ளது!