ஆர்.எஸ்.எஸ் ஆறு அம்ச திட்டத்தின் அடியாள் சீமான் – கொண்டல் சாமி உரை

த.பெ.தி.க சார்பில் ’பெரியாரை தூற்றும் தமிழின துரோகிகளும், பெரியாரை போற்றும் தமிழ்த்தேசியவாதிகளும்’ என்ற சிறப்பு கருந்தரங்கம் சென்னை ராயப்பேட்டையிலுள்ள விஜய் பார்ட்டி மகாலில் சனவரி 2, 2026 அன்று நடைப்பெற்றது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கொண்டல்சாமி கலந்துக்கொண்டு ஆற்றிய உரை

சீமான் என்று கட்சி ஆரம்பித்தாரோ அன்றிலிருந்து ஆர்எஸ்எஸ்-சுக்காக வேலை செய்யக்கூடிய ஒரு கூலி அடியாளாகத்தான் இருக்கிறார். இங்கிருக்கும் தோழர் ஜெகதீச பாண்டியன் வருத்தப்பட மாட்டார் என்று நினைக்கிறேன். அவருக்கு தாமதமாகத் தான் புரிந்திருக்கிறது. எங்களுக்கு முன்பே புரிந்து விட்டது. அவ்வளவுதான். என்றைக்கு அவர் வெளியில் வந்து சீமானையும், தினமலர் பாப்பான் குருமூர்த்தியையும் பற்றி வெளிப்படையாக சொன்னாரோ, அன்றிலிருந்து அவன் வெளிப்படையாக இயங்க ஆரம்பித்து விட்டான். என்றைக்கு அவர் அம்பலப்படுத்தினாரோ, அதற்குப் பிறகுதான், அதுதான் தெரிந்து விட்டதே என்று, நேரடியாக விஜில் அமைப்பு மேடையில் ஏறி விட்டான்.

ஆர்எஸ்எஸ் 1925 -ல் தொடங்கப்பட்டு இன்று நூற்றாண்டு விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. 2026 என்பது அவர்களுடைய நூற்றாண்டின் இறுதி. ஆனால் நூற்றாண்டு முடிகின்ற தருணம் அவர்களுடைய நோக்கம் இன்னும் நிறைவேறவில்லை. ஆனால் அதற்கான அனைத்து வேலைகளையும் அவர் செய்துவிட்டார்கள். அவர்கள் அகண்ட பாரதத்தை தனது இலக்காக கொண்டு வேலை செய்கிறார்கள். அதனால்தான் ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்றாலும் இன்றுவரை இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவுகிறார்கள். பங்களாதேசுக்கு ஆயிரம் நெருக்கடி வந்தாலும் பங்களாதேசோடு நிற்பார்கள். தீவிரவாதிகள் என்று காலமெல்லாம் சொன்ன ஆப்கானிஸ்தானோடு நட்பு பாராட்டுவார்கள். இதெல்லாம் RSS -ன் நோக்கம். ஆனால் அவர்களால் அகண்ட பாரதத்தை அடைய முடியவில்லை. குறைந்தபட்சம் இந்தியா முழுமையும், இந்த ஒன்றியத்தில் இருக்கக்கூடிய அனைத்து மாநிலங்களையுமாவது கைப்பற்றி விட வேண்டும் என்று அவர்கள் வேலை செய்கிறார்கள். அதுதான் அவர்களின் 2026க்கான இலக்கு.

அதன்படிதான் இந்த 2025, அவர்களுடைய நூற்றாண்டு தொடக்கத்தின் பொழுது ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினார்கள். பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி, இந்தியா முழுக்க நாங்கள் எவ்வளவு சாகாக்கள் நடத்துகிறோம், எப்படி எல்லாம் வேலை செய்கிறோம் என்று வெளிப்படையாக அறிவித்தார்கள். அதை ஒட்டி ஆர்எஸ்எஸ்-ன் ‘மோகன் பகவத்’ ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்திய பின்பு, இங்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமிழகத்தின் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். அதில் அவர்கள் கூறியது, “தமிழ்நாட்டில் கடந்த வருடத்தை விட அதாவது 2024-ம் ஆண்டை விட 1368 கிளைகள் புதிதாக ஆர்எஸ்எஸ்-யினால் தொடங்கப்பட்டிருக்கிறது, மொத்தம் 4000 ஆர்எஸ்எஸ் கிளைகள்” தமிழ்நாட்டில் இயங்குகிறது. அவர்கள் (ஆர்.எஸ்.எஸ்) ஒரு கிளை, மண்டல் என்று நிறைய வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நாங்கள் ஒரு பெரிய சக்தியாக உருவாவதற்காக ஆறு அம்ச வேலைத் திட்டங்களை வைத்திருக்கிறோம் என்று அறிவிக்கிறார்கள்.

அந்த ஆறு அம்ச வேலைத் திட்டத்தில் ஒன்று இரண்டு எல்லாம் விட்டுவிட்டு, நான்கு மற்றும் ஐந்தாவதை பார்த்தோம் என்றால் அது மிகவும் முக்கியமானது. அதில் நான்காவது என்னவென்றால், 10 ஆயிரம்  முதல் 50 ஆயிரம் வரை மக்கள் வசிக்கக்கூடிய பகுதியை ’மாநகர்’ என்று குறிப்பிட்டு, அந்தப் பகுதிகளில் அந்த சமுதாயத்தின் பெரியோர்கள், சாதி சங்கங்கள், துறவிகள், ஞானிகள் (மடாதிபதிகள்), மகான்கள் ஆகியோர்களைச் சந்தித்து அவர்களை எல்லாம் ஒன்றிணைத்து சமுதாய ஒத்திசைவு நிகழ்ச்சியாக ‘சமாஜிக் சத்பாவ் நிகழ்ச்சி’-யை அனைத்து மாநகரங்கள் மற்றும் நகரங்களில் நடத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளதாக அறிவிக்கிறார்கள். இவ்வாறு நடத்தக்கூடிய இந்த மாநாட்டிற்கு நேரடியாக ஆர்எஸ்எஸ் தலைவர்களோ, மறைமுகமாக ஆர்எஸ்எஸ்-க்கு ஆதரவளிக்கக்கூடிய தலைவர்களோ, சமூகத்தில் இருக்கக்கூடிய கருத்துருவாக்கவாதிகளோ என இவர்களையெல்லாம் அழைத்து இந்த கூட்டத்தை நடத்தி ஆர்எஸ்எஸ்-ன் செயல்பாடுகளை முன்னிலைப்படுத்த வேண்டும் என பேசியிருக்கிறார்கள். அவர்களுடைய இந்த ஆறு அம்ச வேலைத் திட்டத்தை நன்றாக கவனித்து பார்க்க வேண்டும்.

அதில் மூன்றாவது, நான்காவது வேலை திட்டத்தில் தான், சீமானுடைய நடவடிக்கைகள் உள்ளடங்கி இருக்கிறது. சம்பந்தமே இல்லாமல் காடுடன், மழையுடன், கடலுடன் அவர் எதற்கு பேசிக் கொண்டிருக்கிறார்?, இயற்கை உடன் அவருக்கு எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்?, இயற்கையோடு உரையாடுகிறாரே என்று நினைக்கத் தோன்றும். ஆனால் அவை எல்லாம் ஆர்எஸ்எஸ் வேலைத் திட்டத்தில் வருகிறது. ஆர்எஸ்எஸ்-யினுடைய அந்தப் பேச்சில் ஒவ்வொருவரையும் எப்படி அணுக வேண்டும் என்கிற ஒரு செயல் திட்டத்தை சொல்கிறார்கள். அதில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பைப் பொறுத்தவரை நம்மால் முடிந்தவரை பிளாஸ்டிக் நெகிழிகள் பயன்பாடற்ற சூழலை உருவாக்க வேண்டும். மேலும் மரங்கள், மலைகள், காடுகள், விலங்குகள், பறவைகள், கடல் உணவு, தண்ணீர் இவை குறித்து பொதுமக்களிடம், அவர்கள் விரும்பாவிட்டாலும் பரவாயில்லை, நாம் பேச வேண்டும். இல்லையேல் நமக்கு ஆதரவானவர்களைக் கொண்டு அந்த வேலையை செய்ய வேண்டும். இதன் மூலம் ஆர்எஸ்எஸ்-க்கு நாம் ஆட்களைத் திரட்ட முடியும் என்று பேசுகிறார்கள். இப்பொழுது புரிகிறதா?, சீமான் ஏன் இயற்கையுடன் பேசுகிறார்? என்று.

நாம் தமிழர் தம்பிகளுக்கு தெரியுமா? என்று தெரியவில்லை. அந்த தம்பிகள் இவர் என்ன சொல்கிறாரோ அதை செய்கிறார்கள். ஆனால் இவருக்குத் தெளிவாகத் தெரியும். அவர் கடைசியாக அவர் நடத்திய கூட்டம் என்னவென்று தெரியுமா? சௌராஷ்டிரா மக்களுடைய அரசியல் கூட்டங்களுக்குப் போய் பேசுகிறார். அதை யார் ஏற்பாடு செய்தது? நாம் சௌராஷ்டிரா மக்களுடைய அரசியல் கூட்டங்களுக்கு போவதைப் பற்றி எல்லாம் விமர்சிக்கவில்லை. நாம் சீமான் கிடையாது. அந்த மக்களுக்கும் அரசியல் உரிமை வேண்டுமா என்றால், வேண்டும்தான், அதிலும் மாற்றுக் கருத்து இல்ல. ஆனால் இத்தனை நாள் தமிழர்களின் மீது குடி அடையாளத்தை வைத்துக்கொண்டு மற்றவர்கள் எல்லாம் வந்தேறிகள், நீ வெளியில் போ, அங்கு போ, இங்க போ என்று பேசிக்கொண்டு இருந்த சீமான், இன்றைக்கு அதே சமூகத்தில் இருந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்தியது மட்டுமல்ல, அந்தச் கூட்டங்களுக்கு நேரடியாக கலந்து கொண்டிருக்கிறார். அந்த கூட்டத்தை  அந்த சமூகம் தான் ஏற்பாடு செய்ததாக சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் அதை ஏற்பாடு செய்தது பிஜேபி. ஆர்எஸ்எஸ், தமிழிசை, நயினார் நாகேந்திரன் தான். அந்த கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளர்கள் சீமான் அல்ல, இவர்கள் தான். சிறப்பு அழைப்பாளர்களாக இவர்கள் இருவரும் கலந்து பேசி சென்றதற்குப் பிறகு இவர் பேசியிருக்கிறார். அந்த சங்கத்துக்குள் எல்லா கட்சிகளை சேர்ந்தவர்களும் இருப்பார்கள். திமுக, அதிமுக, மற்றவைகள் என எல்லாரும் இருக்கலாம். சீமானின் இந்த முகமூடி வெளிவந்து விடக் கூடாது என்பதற்காக அதிமுகவில் இருந்து இரண்டு மூன்று பேர் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். மற்றபடி அந்த கூட்டம் ஏற்பாட்டின் அடிப்படை சீமான்.

ஆர்எஸ்எஸ்-னுடைய கொள்கை தென்தமிழகத்தை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்பதற்கு, இதற்கு முன்னரே சான்றுகள் இருக்கின்றன. தேவேந்திர குல வேளாளரை நீ தேவேந்திரன் – நான் நரேந்திரன் எனச் சொல்லி உசுப்பேற்றி பட்டியல் வெளியேற்றம் என்கிற அவர்களுக்கு ஒவ்வாத ஒரு கோரிக்கையை, அந்த மக்களுக்கு புரியாத வண்ணம் பேசி, அவர்களை வெளியேற்றி, அதன் மூலம் மிகப்பெரிய செல்வாக்கை அந்த சமூகத்திடம் பெற்றிட வேண்டும் என்பதற்காக நடத்திய நாடகங்கள் இருக்கின்றன. தேவேந்திர குல வேளாளர் மக்களை பட்டியல் வெளியேற்றம் என்று கிருஷ்ணசாமியை தூண்டி விட்டு பேச வைத்தது ஆர்எஸ்எஸ். என்றைக்கு அதே கிருஷ்ணசாமி, தனக்கு அரசியல் முக்கியத்துவம் இல்லை என்று அந்த கூட்டணியில் இருந்து வெளியில் வந்தாரோ, கிருஷ்ணசாமியைத் தாண்டி இன்றைக்கு தேவேந்திர குல வேளாளர் மக்களுக்குள் ஆர்எஸ்எஸ் போய் சேர்ந்து விட்டது. இன்று அந்த சமூக மக்களே கிருஷ்ணசாமி சொன்னால் கேட்பதில்லை. இதுதான் நிலை.

கிருஷ்ணசாமி என்றைக்கு பிஜேபி-க்கும், ஆர்எஸ்எஸ்-க்கும் தேவைப்பட்டாரோ, அன்றைக்கு இங்கிருந்து நாக்பூர் வரைக்கும் அப்பாவையும் பிள்ளையையும் அழைத்துக் கொண்டு போய் பேச வைத்தார்கள். தேவை இல்லை என்று முடிவான பிறகு, அவரை ஒதுக்கி வைத்து விட்டு இன்றைக்கு தேவேந்திர குல வேளாளருக்குள் இவர்களே ஊடுருவி விட்டார்கள். இதற்கு உதாரணம் வேண்டும் என்றால் அருப்புக்கோட்டைக்கு செல்லுங்கள். அங்கு இமானுவேல் சேகரன் ஆர்ச் ஒன்று இருக்கும். அதற்குள் போய் பாருங்கள். ஞாயிற்றுக்கிழமை சாகாக்கள் நடக்கும். இன்னும் எந்தெந்த ஊரில் என்னவெல்லாம் நடக்கிறதென்பதை துல்லியமாகச் சொல்ல முடியும். ஆனால் நேரமில்லை. அந்தப் பட்டியல் வெளியேற்றத்தைத்தான் சீமான் தீர்மானமாக போடுகிறார். தான் அதை ஆதரிப்பதாக அறிவிக்கிறார்.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டமான 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை எதிர்க்கிறார். ஏனென்றால் அதானிக்கும் அம்பானிக்கும் தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்கு ஆள் கிடைக்கவில்லை. 100 நாள் வேலைத் திட்டத்திற்கு போய் விடுகிறார்கள் என்பதற்காக, அந்த திட்டத்தை தூக்குவதற்கு 125 நாட்களுக்கு ஒரு திட்டத்தை கொண்டு வரப் போகிறோம் என்கிற பெயரில், இந்த திட்டத்தை காலி செய்யக்கூடிய வேலையை அவன் (பாஜக, ஆர்.எஸ்.எஸ்.) துவங்குகிறான்.  இவன் (சீமான்), ‘மகாத்மா காந்தி 100 நாள்’ வேலைத் திட்டத்தை வேண்டாம் என்று  முறுக்கிக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறான். எதையெல்லாம் ஆர்எஸ்எஸ்-சும், பிஜேபியும் திட்டங்களாக வழிமொழிகிறதோ, அதற்கெல்லாம் ஆதரவாக இவர் வேறு பெயரில் வீராவேசத்துடன் பேசுவார். இன்னும் சொல்லப்போனால் அவர் தமிழ்ப்படுத்தி சொல்லுவார். தொடர்ச்சியாக இதே வேலைதான் செய்கிறார். இது யாருடைய வேலைத் திட்டம் என்றால், இது ஆர்எஸ்எஸ் கொடுத்த அந்த ஆறு அம்ச வேலைத் திட்டம். அதைத்தான் இன்றைக்கு சீமான் செய்து கொண்டிருக்கிறார்.

இதைத் தாண்டி நீங்கள் ஏதாவது கேட்டால் அவரிடம் பதில் இருக்காது. நகைச்சுவையாக சிரித்துக் கொண்டு அல்லது கோபப்பட்டுக் கொண்டு பதிலளிப்பார். அவரிடம் யாராவது கொஞ்சம் மடக்கி கேள்வி கேட்டார்கள் என்றால், உடனே உடம்பை எல்லாம் அதிகமாக முறுக்கிக் கொண்டு பேசுவார். உடனே நம் பத்திரிக்கையாளர்கள் எல்லாம், அண்ணன் கோபப்பட்டு விட்டார் போல் இருக்கிறது என்று பயந்து திரும்பி வந்துவிடுவார்கள். அப்படி செய்யாமல் பத்திரிக்கையாளர்கள் இனி உறுதியாக நின்று ‘நீ கத்து, சிரி, எதையாவது செய், நான் கேட்ட கேள்விக்கு பதில் எங்கே’ என்று திரும்பக் கேட்டால் தான், தெரியாமல் சொல்லி விட்டேன் தம்பி என்று சொல்வார். அப்படிப்பட்ட ஆளுதான் சீமான். ஆனால் பத்திரிக்கையாளர்கள் என்ன செய்கிறார்கள் என்றால், இந்த ஆளு இப்படித்தான் கத்துவான், இவன் முன் ஏன் நிற்க வேண்டும் என்று வெளியேறி விடுகிறார்கள். அதுதான் பிரச்சனை. 

அவர் பேசக்கூடிய அரசியலில் ஏதாவது ஒரு இடத்தில் நேர்மை என்று ஒன்று இருந்தால் அதனைத் தம்பிகள் காட்ட வேண்டும். பெரியாரைப் பற்றி பேசுவதும் முழுக்க நேர்மையற்ற பேச்சைதான் பேசுகிறார். இன்று ஒன்று, நேற்று ஒன்று என்று பெரியாரைப் பற்றி பேசிய சீமான் ஒரே கொள்கையில் இல்லை என்று தம்பிகளுக்கு தெரிந்திருந்தாலும், பெரியாரைப் பற்றி மட்டும், மாற்றி மாற்றிப் பேசினார் என்று குற்றம் சாட்டுகிறார்கள். பெரியார் நேற்று ஒன்று, இன்று ஒன்று பேசியிருந்தார என்றால், அவரது செயல்பாட்டை மாற்றி இருப்பாரே தவிர, ஒரு நாளும் அவர் கொள்கையை விட்டதில்லை. காமராஜர் ஆதரித்திருந்தாலும், திமுகவைத் திட்டினாலும் திரும்ப திமுகவை ஆதரித்தாலும், தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்கு எது சரியோ அந்த கொள்கையில் கடைசி வரை உறுதியாக இருந்தார். செயல்பாட்டை மாற்றினாலும் கொள்கையை மாற்றவில்லை.

கொள்கை அடைவதற்கான வழி ஒன்று தானென்று எப்படி முடிவெடுக்க முடியும்? அது அந்தந்த கால சூழல் பொறுத்து, ஆட்களைப் பொறுத்து, பொருளாதாரத்தைப் பொறுத்து மாறக்கூடியது. பெரியார் அப்படித்தான் முடிவெடுத்தார். கொள்கையில் கடைசி வரை உறுதியாக இருந்தார். ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று 1938 -ல் முழங்கிய பெரியார் சாகும் வரை ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று முழங்கிக் கொண்டு தானேயிருந்தார். இதற்காக போராட்டம் நடத்தினார். உன்னை (சீமான்) மாதிரி வீரவசனம் பேசவில்லை.

சீமான் இப்படி என்றால், மணியரசன் ஐயா அதற்கும் மேல். அவர் நாங்கள் நடத்தாததா? என்று கேட்பார். ஒரே ஒரு தடவை தமிழ்நாடு தனிநாடு என்பதற்காக ஒரு மாநாடு நடத்தினார். அதுவும் இங்கு எவனும் அனுமதி தரவில்லை. ஐயா ஆசிரியர் வீரமணி அவர்கள் தான் அனுமதி கொடுத்தார். பெரியார் திடலில்தான் நடத்தினார். தமிழ்நாடு தனிநாடு வேண்டும் என்பதற்காக மணியரசன் பெரியார் திடலில் தான் நடத்தினார்.

இப்போது கூட சமீபத்தில் தமிழ்நாடு தனிநாடு எனக் கேட்டதற்கு நூற்றாண்டு விழா நடத்தி அதில் ஒரு அறிக்கை பெரிதாக போட்டிருக்கிறார்கள். அதில், தமிழ்நாடு தனி நாடு என்று நாங்கள் ஒரு மாநாடு போட்டோம் அந்த மாநாட்டை திராவிட கலைஞர், திராவிட சதியால் அதை செய்தார், இதை செய்தார் என்று அந்த அறிக்கையை போட்டிருக்கிறார். ஆனால் அதில் அய்யா மணியரசன் சொல்ல மறந்தது, சொல்லத் தவறியது, வேண்டுமென்றே விட்டது என்ன? அது என்னவென்றால், தமிழ்நாடு தனிநாடு என்று கூட்டம் போடுகிறார்கள் எனப் பேசி பிரச்சனையைக் கிளப்பியது தமிழ்நாட்டில் சோ. ராமசாமி. அவருக்கு, ‘நாங்கள் தமிழ்நாடு தனி நாடு மாநாடு நடத்தப் போகிறோம்’ என்று தபால் போட்டது இதே அய்யா மணியரசன் தான். இவரே தபாலும் போட்டு, இது பற்றி உங்களுடைய கருத்து என்னவென்றும் கேட்க, அவர் துக்ளக்கில், ‘தமிழ்நாடு தனிநாடு என பிரியப் போகிறதாமே, ஐயகோ! கலைஞர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று’ எழுதினார். கலைஞர் என்ன செய்தார் என்றால், ‘இந்த பார்ப்பான் கத்துகிறானே’ என்று, அவரை கைது செய்துவிட்டு திரும்ப விட்டுவிட்டார். இப்படி இவ்வளவு நடந்தும் திராவிட கலைஞர், திராவிட சதி என அந்த நூற்றாண்டு அறிக்கையில் பேசக்கூடிய மணியரசன் அவர்கள், இதே பார்ப்பனர்கள் ஒன்று கூடித்தானே எதிர்த்தார்கள் அதை சொல்ல வேண்டுமா? சொல்லக்கூடாதா?.. ஆனால் ஒரு நாளும் சீமான், ஐயா மணியரசன் என இந்த இரண்டு பேர் வாயிலிருந்தும் பார்ப்பனர்கள் என்ற வார்த்தையே வராது.

ஆனால் தேர்தல் நெருங்குவதால் இப்போது தம்பிகள் என்ன செய்கிறார்கள் என்றால், பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் இல்லை என்று தமிழ்நாடு ஸ்டிக்கரை எடுத்துக் கொண்டு போய் ஒட்டுகிறார்கள். நாம் தமிழ்நாட்டுக்குள் தான் இருக்கிறோம். தமிழ்நாடு அரசு பேருந்து என்று இருப்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு என்று இருக்கக் கூடாது என்று ஏதாவது சொல்லியதா? இல்லை.. கடந்த அதிமுக ஆட்சியில் அதை எடுத்து விட்டார்கள். அப்படியே இவர்களும் இருந்து விட்டார்கள். ஆனால் அதை ஒரு பிரச்சனையாக்கி ஒரு நான்கைந்து பேர் ஓடி ஓடி பேருந்துகளை பார்த்து அதில் தமிழ்நாடு என்று ஸ்டிக்கரை ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். மகிழ்ச்சி தான்.

ஆனால் இதை செய்யும் நீங்கள், இதைப் போல வேறு என்ன செய்திருக்க வேண்டும்? வந்தே பாரத் என்று ஒரு ரயில் விடுகிறான். வாயில் வராத அளவிற்கு என்னென்னமோ பெயர் வைத்து தமிழ்நாட்டிற்குள் விடுகிறான். நீங்கள் (தம்பிகள்) அதையெல்லாம் அழித்திருக்க வேண்டும் அல்லவா? அதை செய்தீர்களா?

தமிழ்நாடு அரசு பேருந்துதான். தமிழ்நாடு என எழுத வேண்டும் என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் உன் (தம்பிகள்) மொழியை, உன் அடையாளத்தை, டெல்லிக்காரன் உட்கார்ந்து மறுக்கிறானே? நீ வாயை மூடி மௌனமாக இருக்கிறாயே? அங்கு போய் மறிக்க வேண்டியது தானே? வந்தே பாரத் என்கிற பெயரை அழிக்கிறோம் என்று அங்கு போய் செய்திருக்க வேண்டியதுதானே? தம்பிகளுக்கு சீமான் அதை அல்லவா சொல்லி இருக்க வேண்டும். 

இன்றைக்கு காலை ஸ்ரீரங்கத்தில் 2000 பேரோடு ‘மோடி பொங்கல்’ கொண்டாடப் போகிறோம் என்று பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் அறிவித்திருப்பதாக தினத்தந்தியில் செய்தி போட்டு இருக்கிறார்கள். அது என்ன ‘மோடி பொங்கல்’? இதைப் பற்றி ஏதாவது மூச்சு விட்டார்களா? பெரியார் இயற்கை வழிபாட்டை ஏற்றுக்கொண்ட ஒரு பண்டிகை உண்டு என்றால் அது ‘தமிழர் திருநாள், பொங்கல் பண்டிகை’ என்றார். அதற்காக விழா நடத்தி இருக்கிறார் அதையே தன் மக்களுக்கும் தன் தொண்டர்களுக்கும் பயிற்றுவித்தார். இன்றைக்கு வரைக்கும் பெரியார் வழிகாட்டுதலின்படியே அவரது தொண்டர்கள் ‘தமிழர் திருநாள், பொங்கல்’ என்று கொண்டாடிக்  கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழர் திருநாளான நம்  பொங்கலை, நம்  அடையாளத்தை அவன் அழிப்பதற்கு  ஸ்ரீரங்கத்தில் ‘மோடி பொங்கல்’ எனக் கூட்டம் போடப் போகிறான். என்ன செய்யப் போகிறாய்? ஒரு அறிக்கை கூட வராது. ஒரு போராட்டம் கூட செய்ய மாட்டார்கள். இதனை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு அறிக்கை கூட வராது. ஒரு போராட்டம் பண்ண மாட்டான். ஸ்ரீரங்கத்தில் உன் (சீமான்) கட்சி ஆள் இல்லையா? தம்பிகள் இல்லையா? இருக்கிறார்கள். ஆனால் ஒருத்தன் கூட ஏன் என்று கேட்க மாட்டார்கள்.

சமீபத்தில் கீழடி ஆய்வறிக்கையில் உடன்பாடு இல்லை என்று திருப்பி அனுப்பியது ஒன்றிய பாஜக அரசு. பார்ப்பனத் திமிரோடு திருப்பி அனுப்பியது. அதற்கு அதற்கு நீ (சீமான்) என்ன செய்தாய்? நீ என்ன பண்ணி இருக்க வேண்டும்? 2009-ல்  நாங்கெல்லாம் காங்கிரஸ்-யை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும்போது, சீமான் என்ன பேசினார்? என்னோடு மட்டும் 100 பேர் இருந்தால் என்ன செய்திருப்பேன், தெரியுமா? என்று வீராவேசமாகப் பேசினார். இன்றுதான் லட்சம் பேர் இருக்கிறார்களே, இருப்பதாக சொல்லிக் கொள்கிறீர்களே, என்ன செய்தீர்கள் சீமான்?

உன் மொழியை அழிக்கிறான், உன்னுடைய பண்பாட்டை அழிக்கிறான், உன்னுடைய கலாச்சாரத்தை அழிக்கிறான், உன் பொருளாதாரத்தை அழைக்கிறான், ஒரு நாள் முன்புதான் ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஜவுளித்துறைக்காக 18000 கோடி மானியம் கொடுப்பதாக அறிவிக்கிறார்கள். 18000 கோடியை 32 நிறுவனங்களுக்கு பிரித்து கொடுப்பதாக சொல்கிறார்கள். அதில் ஒரு தமிழ்நாட்டு நிறுவனம் கூட கிடையாது. கோயம்புத்தூர் தமிழ்நாட்டின் ‘ஜவுளி மையம்’ (Textile Hub). திருப்பூரில் எவ்வளவு பேர் டெக்ஸ்டைல் தொழிலில் இருக்கிறார்கள். அதைப் போல செமி கண்டக்டர் துறையில் 64 நிறுவனங்களுக்கு மானியம் கொடுக்கறார்கள். அதிலும் ஒரு தமிழ்நாட்டு நிறுவனம் கூட கிடையாது. தமிழ்நாடு உருவானது தமிழ்நாடு பொருளாதாரத்தில் தன்னிறைவாக இருப்பது என்பது எல்லாம் தமிழ்நாட்டு மக்களின் உழைப்பால் வந்ததே தவிர, ஒன்றிய அரசால் இல்லை. இதையெல்லாம் தெரிந்துதான் அன்றைக்கே பெரியார் வடவர் எதிர்ப்பு போராட்டத்தை நடத்தினார். ஒரு நாள் இரு நாள் அல்ல 150 நாட்கள் போராட்டம் நடத்தினார். அவருக்குத் தெரியும், இந்தியா என்பது ஒரு பார்ப்பன பனியா நாடு என்று. இந்திய அரசு பார்ப்பானுக்கும் பனியாவுக்கும்தான் வேலை செய்வார்கள் என்று அன்றைக்கே முடிவெடுத்தார் அதன் தொடர்ச்சியாக தான் இன்றைக்கு வரை நாமும் போராடுகிறோம். ஆனால் நீ (சீமான், மணியரசன்) என்ன செய்கிறாய்? உன்னுடைய பொருளாதாரத்தை அழிப்பவனோடு சேர்ந்து நிற்கிறாய். உன்னுடைய மொழியை, உன்னுடைய இனத்தை, உன்னுடைய வரலாறை மாற்றி திரித்து எழுதக்கூடியவன் உடனும் கைகோர்த்துக் கொண்டு நிற்கிறாய்.

பிராமணக் கடப்பாரையைக் கொண்டு திராவிட கோட்டையை உடைப்பேன் என்றால் நாங்கள் சும்மா பார்த்துக் கொண்டா இருப்போம்? உன்னுடைய இலக்கு என்ன? பிஜேபி கால் நக்கினால் எப்படியும் இந்த தேர்தலில் வெல்லலாம், 8% ஓட்டுங்கறது 10 % ஓட்டு வந்து விடும், இதை வைத்து இன்னும் கொஞ்சம் பேரம் பேசலாம் என்று நீ நினைக்கிறாய். உன்னுடைய நினைப்பு ஒரு நாளும் நடைபெறாது. ஈரோட்டு இடைத்தேர்தலில் நின்றது இரண்டு பேர்தான். திமுக நின்றது, உன் கட்சி நின்றது. எதிர்க்கட்சியாக யாருமே நிற்கவில்லை. ஓடியது இரண்டே பேர் தான், அதில் கூட நீ ஈடு கொடுக்க முடியவில்லை.

நீ என்ன நினைக்கிறாய்? இந்த தேர்தலில் தேர்தல் ஆணயத்தின் மூலம் பிஜேபி நமக்கு ஏதாவது ஆதரவு தரும்.. 8% ஓட்டுக்கு மேல்  வாங்கி விடுவோம். விஜய் வந்தாலும் நமக்கு எந்த பாதிப்பு இல்லை என்று காட்டிவிடலாம் என்று நீ(சீமான்) நினைக்கிறாய். ஒரு நாளும் கருப்பு சட்டை இருக்கும் வரை, அது கண்டிப்பாக நடக்காது.. உன்னை ஓட ஓட விரட்டுகிறோமோ?, இல்லையா? என்று பார். உனக்கு ஏற்கனவே டெபாசிட் கிடைக்காது. இப்போது என்ன கிடைக்காது என்றே தெரியாது. சின்ன சின்ன பசங்களை (நாம் தமிழர்) விட்டு கண்டவற்றை பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறாய்.

தோழர் மைனர், ஏதோ சொன்னதற்கு ஜனநாயக ரீதியாக பேச வேண்டுமாம். அவர்கள் சொல்கிறார்கள். என்னவோ, அவர்கள் ஜனநாயகவாதிகள் மாதிரி. நாம் தமிழர் கட்சியில் இருந்து ஒருவர் வெளி வந்து விட்டார். அவர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார் என்பதற்காக அவரை அவ்வளவு கொச்சையாக எழுதுகிறார்கள். இவர்கள் ஜனநாயகத்தைப் பற்றி பாடம் எடுக்கிறார்கள். உனக்கு (சீமானுக்கு) மைனர் தான் சரி, உனக்கு மனோஜ் தான் சரி. அவர்கள் செய்வதுதான் சரி. என்ன செய்வாய்? நீ சொல்லாதத ஏதாவது சொல்லிட்டாங்களா? உன் தம்பிகள் என்ன சொல்கிறார்களோ அதற்கு பதில் சொல்கிறார்கள். உனக்குப் புரியும் மொழியில் பேசுகிறார்கள். நீ பெரியாரை திட்டுவாய், நாங்கள் ஐயோ, திட்டாதே திட்டாதே என்று கத்திவிட்டு போய்விடுவோம் என்று நினைத்தாயா? இப்போது  நாங்கள் பேசுகிறோம். நீ கத்து, சந்தோஷமாக இருக்கிறது, நாங்கள் சிரிப்போம். மட்டுமே நீ பெரியார திட்டுவாய் நாங்க மட்டுமே ஐயோ திட்டிட்டாங்களே திட்டான்னு கத்திட்டு இருப்போம். இப்ப நீ கத்து எங்களுக்கு சந்தோஷமா நாங்கள் சிரிக்கிறோம்.

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் விஜயன் ஒரு கேள்வியை கேட்கிறார். தமிழ்த் தேசியத்திற்கு முதன்மை எதிரி இந்திய தேசியமா? திராவிடமா? என்று கேட்கிறார். அதற்கு இந்திய தேசியம் தான் என்கிறார் இடும்பாவனம் கார்த்திக். அப்படி என்றால் நீங்கள் யாரை எதிர்த்து சண்டை போட வேண்டும் எனக் கேட்கிறார் விஜயன். உடனே இடும்பாவனம் கார்த்திக், இல்லையில்லை, திராவிடம் தான் என்கிறார். நேரலையாக நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது இப்படி சொல்கிறார். பயிற்றுவிக்கப்பட்டது அப்படி இருக்கிறது. இவர்களைத் திட்டி ஒரு உபயோகமும் இல்லை. இவர்களை அம்பலப்படுத்துவதுதான் நம் வேலை.

ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பெரியாரை ஆதரித்து ஓட்டு கேட்டவர்களுக்கு இருநூறு ஓட்டு தான் என்று நக்கலாக பேசியிருக்கிறார் சீமான். நாங்கள் ஓட்டு வாங்கி எம்எல்ஏ ஆக வேண்டும் என்பதற்கில்லை, உன்னை ஓட்டாண்டி ஆக்குவதற்காகத்தான். அங்கு நீயும் முடிந்தாய், எங்களுடைய வேலை முடிந்தது. இப்பொழுது தமிழ்நாடு முழுக்க நிற்கப் போகிறாய். தமிழ்நாடு முழுக்க நீ எங்கு எல்லாம் நிற்கிறாயோ அங்கு உன்னை டெபாசிட் மட்டுமில்ல, எதுவுமே வாங்க விடாமல் ஓடச் செய்வது தான் எங்களுடைய அடுத்த வேலை.

இன்னொன்றும் சொல்ல வேண்டும். சீமானை எதிர்த்து நாம் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போது, ஆர்எஸ்எஸ், பிஜேபியும் தங்களை எதிர்ப்பதில் இருந்து கவனத்தில் திருப்பி விட்டதாக நினைக்கிறார்கள். அவர்களின் எண்ணமே இதுதான். பெரியாரை இகழ்ந்து, பெரியார் சிலையை உடைப்பேன் என்று எச். ராஜா பேசும்போது தமிழ்நாடே கொந்தளித்தது தமிழ்நாடே கொந்தளித்தது. எச். ராஜாவுக்கு எதிராக நடிகர் சிம்பு கூட கொதித்து எழுந்தார். பாப்பான் ஒருவன் பெரியாரைத் திட்டினால் அது வேற மாதிரி ரியாக்ட் ஆகிறது என்பதனால் தான், இந்த எச்சை நாயை கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த அரசியல் எங்களுக்கு புரியாதா? இந்த அரசியல் எங்களுக்குப் புரிந்த அரசியல்தான். நாங்கள் பார்த்த அரசியல் தான். இந்த சதியை தெரிந்த அரசியல்தான்.

என்று நாங்கள் (பெரியாரியவாதிகள்) இந்தியை அழிக்கத் தார் கொண்டு போகும்போது, மண்ணெண்ணெய் தூக்கி அதை நீக்க ஒரு ஆளை தேர்ந்தெடுத்து அனுப்பினார்களோ (பார்ப்பனர்கள்) அதே சூத்திரம் தான். அவர்களும் மாறவில்லை, நாங்களும் மாறவில்லை. அன்றைக்கு நீங்கள் தேர்ந்தெடுத்த அதே மாபொசி தான் இன்றைய சீமானும். ஐயா மணியரசனும். அதனால் நீ எந்த பார்முலாவில் வந்தாலும் சரி.  தமிழ்நாடு தமிழ்நாடுதான். இதை எதிர்த்து நீங்கள் யார் வந்தாலும் சரி, எப்படி வந்தாலும் சரி, அவர்களையும் ஓட ஓட விரட்டுவோம்.

தமிழ்நாடு தமிழருக்கே!

தலைவர் தந்தை பெரியார் வாழ்க! வாழ்க!! வாழ்க!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »