
காந்தியைக் கொலை செய்த, காமராசரைக் கொல்ல முயன்ற, நேதாஜிக்கு எதிராகப் படை திரட்டிய, விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட, கர்நாடகாவில் தமிழர்களைத் தாக்கிய, சமஸ்கிருதத்தையே மேன்மையாக நிறுவ, தமிழ்நாட்டை உடைக்க, சிறுபான்மையினர் மீது வெறுப்புணர்வைப் பரப்ப திட்டம் தீட்டும் ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகளின் அடியாளாக நிற்கும் சீமான் குறித்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் திசம்பர் 12, 2025 அன்று சமூக வலைதளத்தில் பதிவு செய்தவை:
ஆர்.எஸ்.எஸ் அடிப்படையில் தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழீழம் ஆகியவற்றை நிராகரிக்கும் அமைப்பு. இந்த அடையாளங்கள் அழிக்கப்பட்டு, பார்ப்பனர்களை தலைவர்களாக ஏற்றுக்கொள்ளப்படும் அடிமைச் சமூகத்தை உருவாக்க உறுதிபூண்டுள்ள அமைப்பு.
காந்தி, நேதாஜி, காமராசர் ஆகியோரினை கொலை செய்த/செய்ய முயன்ற அமைப்பு. தனது அமைப்பின் எந்த பதவிக்கும் தமிழ்மொழியில் பெயர்வைக்காத அமைப்பு.
விடுதலைப்புலிகளை அழிக்க முழு ஆதரவை சோனியா காந்திக்கும், காங்கிரஸுக்கும் அளித்த அமைப்பு. ராஜீவ்காந்தி எனும் பார்ப்பனரின் மரணத்தின் காரணமாக விடுதலைபுலிகளை, ‘பயங்கரவாதிகள்’ என அழைக்கும் அமைப்பு.
தமிழர்களை இலங்கையைவிட்டு வெளியேற்ற வேண்டுமென்ற கொள்கையை அறிவித்த சிங்கள இனவெறி அமைப்பான பொதுபலசேனாவுடன் ஒப்பந்தம் செய்துள்ள அமைப்பு. 2014ல் இலங்கை அரசின் மீது சர்வதேச விசாரணை கொண்டுவரப்படுவதை கடுமையாக எதிர்த்து தடுத்த அமைப்பு. விடுதலை புலிகள் மீதான தடை மீது 2 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் வழக்கை 5 ஆண்டுகளாக மாற்றி, விடுதலை புலிகள் மீது நீண்டகால தடையை கொண்டுவந்த அமைப்பு.

பர்மாவில் 1930களில் ரங்கூன் உள்ளிட்ட நகரங்களில் தமிழர்களை படுகொலை செய்த பர்மிய பெளத்தவெறி மதகுருமார்களோடு ஒப்பந்தமும், பாராட்டு பத்திரமும் போட்டுக்கொண்ட அமைப்பு.
வெகுசமீபத்தில் 2016ல் கர்நாடகத்தில் காவிரி உரிமை போராட்டத்தின் பொழுது தமிழர்களை தாக்குவதற்கும், பொருட்களை சூறையாடவும் தனது தொண்டர்களை களப்பணி செய்யவைத்த அமைப்பு.
இந்தி, சமஸ்கிருதத்தை மேலாதிக்கமாக நிறுவி தமிழ்மொழியை அழிக்கச் செய்ய வழிவகை செய்யும் அமைப்பு. தமிழர் கோவில்களை சமஸ்கிருத மயமாகவும், பார்ப்பனர் வசமாகவும் கொண்டு செல்லும் அமைப்பு. அம்மன், அய்யனார் கோவில்களை கைப்பற்றி பார்ப்பனர் வசம் ஒப்படைக்கும் அமைப்பு.
தமிழ்நாட்டை பல மாநிலமாக உடைத்து, மாநில அதிகாரத்தை சிதைக்கும் திட்டத்தை 1956ல் முன்வைத்த அமைப்பு. இடஒதுக்கீடு பட்டியலில் இருந்து வெளியேறுமாறு பரப்புரை செய்து, இடஒதுக்கிட்டை ரத்து செய்ய வைக்கும் அமைப்பு இது.
இசுலாமியர்களை கொன்று அழிப்பதை லட்சியமாக கொண்ட அமைப்பு. கிருத்துவர்களை அடக்கி ஒடுக்கி மண்டியிட வைக்க வேண்டுமென்ற திட்டம் கொண்ட அமைப்பு.
இவ்வாறான நாசகார திட்டத்தை நடைமுறைப்படுத்த முனையும் RSSபயங்கரவாதிகளை தமிழர்களின் முதன்மை எதிரியாக மே17 இயக்கம் அறிவித்தது.
இந்த ஆர்.எஸ்.எஸ் கொள்கைக்கு நேரெதிரான கொள்கையுடைய பெரியாரை இழிவு செய்து ஆர்.எஸ்.எஸ் விசுவாசியாக காட்டிக்கொள்ளும் சீமான், நமக்கு பலரின் உண்மை முகத்தை அறியும் வாய்ப்பையும் கொடுத்துள்ளார்.

சீமானை கொண்டாடும் அய்யா மணியரசன், அறிஞர் குணா, அவரோடு கூட்டாளிகளாக வலம்வருபவர்கள், திராவிட எதிர்ப்பை மட்டும் பேசிவரும் செந்தமிழன், கார்ட்டூனிஸ்ட் பாலா, ஏகலைவன், களஞ்சியம், பாரிசாலன், மன்னர்மன்னன், ம.சோ.விக்டர், ஏர்மகராசன் மற்றும் இவர்களை வளர்க்கும் யூட்யூபர்கள் என விரியும் கூட்டாளிகளின் ஆர்.எஸ்.எஸ் பின்புலத்தையும், போலிதமிழ்தேசியத்தையும் நமக்கு சீமான் அடையாளம் காட்டியுள்ளார். அவ்வகையில் சீமானுக்கு நாம் நன்றி தெரிவிக்கலாம்.
இயற்கை விஞ்ஞானி அய்யா நம்மாழ்வார், கோவை ராமகிருட்டிணன், தொல்லியல் அறிஞர்கள், பொருளியல் அறிஞர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள் உள்ளிட்ட பலரை தமிழரல்ல, தெலுங்கர் என முத்திரை குத்திய சீமானின் அடியாட்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தமிழர் அமைப்பென கொண்டாடுகிறார். நயினார்நாகேந்திரன், அண்ணாமலை ஆகியோரை கொண்டாடும் சீமான் தனது கட்சியினரை வைத்து தோழர்.திருமாவை, தோழர் வேல்முருகனை இழிவு செய்வார்.
தமிழர்களின் எதிரியோடு தேர்தல் கூட்டணி அல்ல, கொள்கைக் கூட்டணி கொண்டவர் சீமான்.
2009 ஈழப்படுகொலை போரினை திட்டமிட்டது ஆர்.எஸ்.எஸ் வகைப்பட்ட பார்ப்பன அதிகாரிகள். இந்த திட்டத்தினை அங்கீகரித்தது ப.சிதம்பரம், பிரணாப்முகர்ஜி உள்ளிட்ட சோனியாவின் அமைச்சரவை. இதை எதிர்க்க துணிவின்றி சரணடைந்ததற்காகவே திமுகவை நாம் விமர்சிக்கின்றோம்.
2009 ஈழ அழிவிற்காக திமுகவை வசைபாடும் சீமான், இந்த அழிவை அரசின் கொள்கையாக 1980 முதலாக வடிவமைத்த ஆர்.எஸ்.எஸ் நபர்களை மறந்தும் சுட்டிக்காட்டியதில்லை. ‘இந்து தேசம்’ அமைப்போம் என ஊளையிடும் ஆர்.எஸ்.எஸ், ஒருபொழுதும் இலங்கை அரசால் இடிக்கப்படும் தமிழர் கோவில்களை குறித்து கண்டனம் தெரிவித்ததில்லை.
காரணம் ஈழத்தமிழர்கள் பார்ப்பனர்களை மதத் தலைமையாக, சமூகத்தலைமையாக ஏற்கவில்லை. சாதியை-சனாதனத்தை ஏற்றாலும், படிநிலையில் பார்ப்பனர் உயர்நிலையில் வைக்கப்படவில்லை. இதனாலேயே ஆர்.எஸ்.எஸ் ஈழத்தமிழர்களை அழிப்பதை கொள்கையாக முன்வைத்தது.
இப்படியான ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளின் அடியாளாக சீமான் நிற்பது ஒருவகையில் வரவேற்கலாம்.
ஏனெனில் ‘எதிரியை விட துரோகியை அடையாளம் காண்பது அவசியமானது’. ‘எதிரியைவிட முதலில் அழிக்கப்பட வேண்டியவர்கள் துரோகிகளே’ என மேதகு சொல்வார்.
‘மேதகு’வே நம் தலைவர். புலிகளை அழிக்கும் திட்டத்தை வகுத்த ஆர்.எஸ்.எஸ் கும்பலோடு கைகோர்ப்பவனெல்லாம் தமிழரல்ல, தலைவனுமல்ல.