பேராசிரியர் ராஜய்யன் பாளையக்காரர் போர்களை, ஈகத்தை, நிகழ்வுகளை ஆய்வு செய்தவர் ஆய்வு நடத்தியவருக்கு, ‘அருந்திரள் தமிழர்’ எனும் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி, தனது ‘தமிழ்த்தேசிய பெருவிழா’ மாநாட்டில் மரியாதை செய்தது மே17 இயக்கம். அதை பற்றி மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தனது சமூகவலைதளத்தில் நவம்பர் 2, 2024 அன்று பதிவு செய்தது.
தீரன் சின்னமலை ‘இந்த நிலத்தை ஆள தமிழினத்தில் ஒருவருமா இல்லையென’ வசனமெல்லாம் பேசவில்லை. திப்புசுல்தானை முதலில் எதிர்த்த தீரன்சின்னமலை, பொது எதிரியாக இருப்பவன் வெள்ளையன் என அறிந்த பின்னர், திப்புசுல்தானுக்காக வெள்ளையனை எதிர்த்து ஸ்ரீரங்கப்பட்டணம் போரில் பங்கேற்று வெள்ளையனை எதிர்த்து போர் புரிகிறார். ஒருமுறை அல்ல, வெள்ளையன் படையெடுப்பின் ஒவ்வொரு முறையும் தீரன் சின்னமலை-திப்புவோடு கைகோர்க்கிறார். யார் இந்நிலத்திற்கு ஆபத்தானவன் என்பதை அறிந்தவர் தீரன் சின்னமலை. அரசனாகி ஆட்சியை பிடிக்கவேண்டுமெனும் அதிகார ஆசை கொண்டவரல்ல, அவர் போராளி, புரட்சியாளன். தீரன் சின்னமலை ஆண்டபரம்பரையாகவோ, ஆட்சி பிடிக்கவோ வந்தவரல்ல மாறாக அன்னிய ஆதிக்கத்தை நீக்க போராடியவர் என்பதை மே17 இயக்கம் ஆய்வுப்பூர்வமாக மாநாட்டினை நடத்தி நிறுவியது.
தீரன் சின்னமலை சாதியாக அடையாளப்படுத்தி பேசித்திரிவது தமிழ்த்தேசியமாகாது. சாதி-கடந்த, மதம் கடந்த தீரன் சின்னமலை திப்புவின் மரணத்திற்கு பின், அவரது தளபதிகளுடன் கோவை புரட்சியை வழிநடத்திய மாவீரன். போராளிகளே அவருக்கு பேரன்களாக முடியும், பொய்யர்களால் ஆகமுடியாது.
‘பாளையப்போராளிகள் என்பவர்கள் சாதி-மதம் கடந்தவர்கள் , மேலும் அவர்கள் சாமானிய குடும்பங்களிலிருந்து தோன்றியவர்கள், ஆண்டபரம்பரை பெருமைக்கு எதிராக நின்றவர்கள், விவசாயிகளை அணிதிரட்டியவர்கள்’ என்பதை வரலாற்று தகவல்களோடு 8 மாநாடுகளை கடந்த 2 வருடத்தில் நடத்தியது மே17 இயக்கம்.
பேராசிரியர் ராஜய்யன் பாளையக்காரர் போர்களை, ஈகத்தை, நிகழ்வுகளை ஆய்வு செய்தவர். இந்த போர்களை இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் என வழக்காடி நிரூபித்தவர். இவரது வழக்கிற்கு பின்பு, வட இந்தியாவின் சிப்பாய் கலகத்தை , இந்தியாவின் முதல் சுதந்திரப்போர் என சொல்வதை நிறுத்தியது இந்திய வரலாற்று ஆய்வகங்கள். அவர் 97 வயதில் இன்றும் நம்மோடு வாழ்கிறார். உலகெங்கும் பயணித்து வரலாற்று ஆய்வு நடத்தியவருக்கு, ‘அருந்திரள் தமிழர்’ எனும் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி, தனது ‘தமிழ்த்தேசிய பெருவிழா’ மாநாட்டில் மரியாதை செய்தது மே17 இயக்கம். அவரது உழைப்பை அங்கீகரித்து தமிழ்நாடு அரசு போற்றிட வேண்டுமென முயன்று வருகிறது. வரலாறை வேர்களில் தேடுபவர்கள் மே17 இயக்கத்தவர்கள்.
புரோட்டக்கடை கதையாளர்கள் பாளையக்காரர்கள் வரலாறை பேசாமல் வாய்மூடி நிற்பது நல்லது. பாளையப் புரட்சியாளர்களை சாதியாக அடையாளம் காட்டுவது, சாதியாக பிரிப்பது என்பது தமிழின வரலாற்றுக்கு செய்யும் துரோகம். ஈழ புரட்சியாளர்களை, இழிவுபடுத்தி முணியாண்டிவிலாஸ் கதையாக பரப்பிய போலிகள், இனிமேலும் தமிழின வரலாற்றை தன் வசதிக்கு திரைக்கதையாக மாற்ற முயல்வதை மே17 இயக்கம் எதிர்த்து நிற்கும். தமிழினத்தின் விடுதலைப் போர் வரலாற்றின் பக்கங்களை வாசிக்காத தற்குரிகளை தமிழ்த்தேசியர்களாக இளைஞர்களே இனிமேலும் நம்பி ஏமாறாதீர்கள்.
வரலாறுகளை ஆய்வாளர்களிடம் தேடுங்கள். ஈழப்போராளிகள், பாளையப் புரட்சியாளர்களுக்கு ஒற்றுமையுண்டு. விடுதலையை நேசித்தவர்கள் இவர்கள். சாதி-மதம் கடந்து ஏகாதிபத்திய ஆதிக்கத்தை எதிர்த்து நின்று சமரசமில்லாமல் போராடி போர்க்களத்தில் உயிர்துறந்தவர்கள். தன் குடும்பத்தின் கடைசி குழந்தைகள் வரை போராட்டத்தில் இழந்தவர்கள். பாளையக்காரர்கள் காலனியத்தை தடுக்க போராடியவர்கள், புலிகள் காலனியம் செய்த அநீதியை தகர்க்க போராடியவர்கள். இருவரும் தமிழ்த்தேசிய போராளிகள். தமிழர்களே! போலிகள் இவர்களை சொந்தம் கொண்டாட அனுமதிக்காதீர்கள்.
தீரன் சின்னமலை 'இந்த நிலத்தை ஆள தமிழினத்தில் ஒருவருமா இல்லையென' வசனமெல்லாம் பேசவில்லை. திப்புசுல்தானை முதலில் எதிர்த்த தீரன்சின்னமலை, பொது எதிரியாக இருப்பவன் வெள்ளையன் என அறிந்த பின்னர், திப்புசுல்தானுக்காக வெள்ளையனை எதிர்த்து ஸ்ரீரங்கப்பட்டணம் போரில் பங்கேற்று வெள்ளையனை… pic.twitter.com/9lATQOFzxp
— thirumurugan gandhi (@thiruja2009) November 2, 2024