
திருப்பரங்குன்றம் கோவில் சர்ச்சைக்குப் பின்னணியில், கோவையைப் போல மதுரையின் பொருளாதாரத்தையும் சிதைக்கும் காரணிகளும் இருக்கலாம், எனவே மத-சாதி ரீதியான மோதல்களின் பின்னணியில் இயங்கும் பொருளாதார நோக்கங்களையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டும் என மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் தனது முகநூலில் பிப்ரவரி 6, 2025 அன்று பதிவு செய்தது.
முருகனா, முஸ்லீமான்னு சொல்லி தமிழனை துண்டாடி, மார்வாடிகள் மதுரையின் மொத்த வணிகத்தை கைப்பற்ற வேலை செய்கிறது சங்கி குரங்கு கூட்டம். கோவையில 1997ல் இதைத்தான் செய்தார்கள். ஒன்றாக இருந்து வணிகம் செய்த தமிழனை மதரீதியாக பிரித்த பின்னால், கோயமுத்தூருடைய வணிகம் மார்வாடி கைகளுக்கு மாறியது.
முதலில் மரக்கடை ஏரியாவில் கலவரத்தை 1988இல் ஆரம்பிக்க முயற்சித்தார்கள். பின்னர் மற்ற பகுதிகளிலும் பிரிவினையை பரப்பினார்கள். கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலத்தின் வணிக பரிமாற்ற பகுதியாக கோவை ஆயிரமாண்டுகளாக இருந்தது. நீலகிரி மலையின் உற்பத்தி பொருட்கள், வாசனை திரவியங்கள், காலங்காலமாக இருந்த நெசவு, மர வணிகம் பிரிட்டீஷ் காலத்தில் வந்த தேயிலை, தொழிற்சாலைக்கான உதிரி, வணிக மையமாக இருந்ததால் வாகனத்திற்கான உதிரி பொருட்கள் என விரிவான வணிக மையமாக கோவை இருந்தது. இந்த வணிக கட்டமைப்பிற்குள் மார்வாடிகளால் நீண்டகாலம் நுழைய இயலவில்லை. ராஜஸ்தான் சங்கம், குஜராத்தி சங்கம் எல்லாம் வெகு காலத்திற்கு முன்பே அங்கு வந்திருந்தாலும், வணிகத்தை கட்டுப்படுத்த மார்வாடிகளால் இயலவில்லை.
டவுன்ஹால், ஒப்பணக்காரத்தெரு, ராஜா தெரு, ரங்கேகவுடர் வீதி, பூ மார்க்கெட்டுன்னு ஒவ்வொரு பகுதியும், தமிழர்களோட ஒவ்வொரு வணிக பொருட்களுக்கான பகுதியாக இருந்தது. இந்த பகுதியில் தமிழர்களின் வணிகமாக இருந்த துணி, ஜவுளி, மளிகை மொத்தவணிகம், எலக்ட்ரிக்கல்ஸ், மர வியாபாரம், நூல் வணிகம் என எல்லாமும் இன்று மார்வாடி கையில். டவுன்ஹால்-ஒப்பணக்கார தெருவுக்குள்ள நுழைய முடியாம இருந்த மார்வாடிகள், இன்றைக்கு மொத்த மைய கோவை நகரத்தையும் கட்டுப்படுத்துகிறார்கள். இந்த ஆதிக்கம் டவுன்ஹாலில் இருந்து விரிந்து பூமார்க்கெட், ஆர்.எஸ்.புரம், காந்திபார்க், என்.எச்.ரோடு என விரிந்து இன்று காந்திபுரம், 100 அடி சாலை வரை வந்துள்ளது. இவையனைத்தும் 1987ல் இந்துமுன்னனி, அர்ஜூன் சம்பத் ஆகியோர் முன்னின்று நடத்திய கலவரத்தில் தொடங்கியது.
கோனியம்மன் கோவில் தேர் டவுன்ஹால் ரோட்டில் உள்ள அத்தர்ஜமாத்தில் நின்று செல்லுமளவு இருந்த ஒற்றுமை, அத்தர்ஜமாத்தின் எதிரே இருந்த சோபா டெக்ஸ்டைல் எனும் கோவையின் மிகப்பெரிய 4 மாடி ஜவுளிக்கடையை எரித்தது இந்துமுன்னனி. இது இசுலாமியரின் கடை. இவ்வாறாக முஸ்லீம்கள் கடைகளை அடித்து சிதைத்தால் வணிகம் தன் கைக்கு வருமென நம்பிய சில இந்துக்களை கையில் வைத்துக்கொண்டு ஆர்.எஸ்.எஸ்-சங்பரிவார் ஆட்டம் போட்டது. ஆனால் கலவரமெல்லாம் முடிந்த பின்னரான காலத்தில் மார்வாடிகளின் கைகளுக்கு இவை சென்றது. சங்கிகளுடன் சேர்ந்து ஆட்டம் போட்டவர்கள் தெருவில் நிற்கிறார்கள். ரங்கேகவுடர் வீதியை ஜெயின் வீதியாக மாற்ற வேண்டுமென்பதை கோரிக்கையாக போராடுகிறார்கள்.
2024 தேர்தலின் போது கோவையை குஜராத்தோடு இணைப்போம் என வெளிப்படையாக அறிவித்து வாக்கு கேட்டார்கள். அண்ணாமலையை அழைத்து வந்து மாபெரும் கூட்டங்களை நடத்தினார்கள். திமுக-அதிமுக ஆட்சிகள் மார்வாடிகளுக்கு எதிராக இல்லாத போதும், ஏன் பாஜகவை மட்டும் ஆதரிக்கிறார்கள் மார்வாடிகள் என யோசித்து பாருங்கள். இந்த கலவரத்தால் லாபம் அடைந்தது மார்வாடிகள் என்றாலும், ஒருவன் கூட இந்துத்துவ நடத்தும் கலவரத்திலோ, கூட்டத்திலோ நேரடியாக பங்கெடுப்பதில்லை. கோவையோ, மதுரையோ இதுதான் நிலை.
இதே நிலை நாளை மதுரைக்கும் வரக்கூடாது. ஏற்கனவே மதுரையின் முக்கிய வீதிகள், வணிகம் மார்வாடி கைகளில் சென்றுவிட்ட நிலையில் முருகன்-முஸ்லீம் என சண்டை மூட்டிவிட எச்.ராஜா வருவான். நாம் மதரீதியாக அடித்துக்கொண்ட பின்னர், மொத்த மதுரையையும் கொள்ளையடித்து சென்று விடுவார்கள்.
சங்கிகளுக்கு அன்றைய கோவை காவல்துறை உதவியது. இதை கைகட்டி வேடிக்கை பார்த்தது அன்றய திமுக அரசு. மதுரையிலும் காவல்துறை சங்கிகளுக்கு உதவுகிறது. திமுக அரசு சங்ககளை கட்டுப்படுத்தாமல் கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கிறது. மதுரையை திமுக காப்பாற்றுமா இல்லையா என தெரியாது. ஆனால் காப்பாற்ற நாம் ஒன்றுகூடியாக வேண்டும்.
மத-சாதி ரீதியான மோதல்களின் பின்னனியில் இயங்கும் பொருளாதார நோக்கங்களையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டும்.