
தமிழ்நாட்டிற்கு தொடர்ச்சியான துரோகங்களை செய்து கொண்டிருக்கும் பாஜக அரசின் கொள்கைகளை தொடர்ந்து தமிழ்நாடு எதிர்த்து வருகிறது. தமிழ்நாட்டின் தொன்மையைக் கூறும் கீழடி முதல், தமிழ்நாட்டின் கல்வி நிதியை மறுப்பது வரை மோடி அரசின் எண்ணற்ற தமிழின விரோதங்களை தமிழ்நாடு சந்தித்து வருகிறது.
தமிழர்களின் நலன்களுக்கும், உரிமைகளுக்கும் எதிராக செயல்பட்டுக் கொண்டே, போலித்தனமான பரப்புரைகளை இங்கு செய்து கொண்டிருக்கும் மோடி அரசை அம்பலப்படுத்துவதை மே 17 இயக்கம் தொடர்ந்து சமரசமின்றி செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஜூலை 26 தமிழ்நாட்டிற்கு வருகை புரியும் மோடியை எதிர்த்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை திட்டமிட்டிருக்கிறது. இதன் காரணத்தை மக்களுக்கு உணர்த்த வேண்டி மோடி அரசை அம்பலப்படுத்தும் கட்டுரைகளை தொகுத்துத் தருகிறோம்.
அவ்வகையில் முதலாவதாக, இந்தியாவின் வரலாற்றையே மாற்றி எழுதும் தன்மையில், காலக் கணக்கீடுகளில் தமிழி எழுத்தின், நாகரிகத்தின் தொன்மையை அறிவியல் பூர்வமாக பறைசாற்றும் வகையில் வெளிவந்த கீழடி ஆய்வறிக்கையை வெளியிட மறுத்து திருத்தம் செய்யக் கூறியது மோடி அரசு. தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள், உரிய அறிவியல் சான்றுகளுடன் அளிக்கப்பட்ட அந்த அறிக்கையில் எழுத்துப் பிழையை வேண்டுமானால் திருத்துவேன், உண்மையை திருத்த முடியாது என காட்டமாக பதிலளித்ததும் குறிப்பிடத்தக்கது.
அது குறித்து மே 17 இயக்கக்குரலில் வெளிவந்த கட்டுரை :
தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்பைப் பயன்படுத்திக் கொண்டு இந்தியைத் திணிக்கும் திட்டமாக கொண்டு வர நினைத்த பிஎம்ஸ்ரீ பள்ளியை தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளாததன் காரணமாக, தமிழ்நாட்டின் உரிமையாக வர வேண்டிய கல்வித் தொகையையும் மோடி அரசு தர மறுக்கிறது, நம்மிடம் கிட்டத்தட்ட 1 ரூபாய்க்கு 29 பைசா மட்டுமே திருப்பித் தரும் மோடி அரசு நம் கல்வி செயல்பாட்டிலும் கை வைத்திருக்கிறது. தமிழ்நாட்டின் மாணவர்களை வஞ்சிக்கும் மோடி அரசை அம்பலப்படுத்திய கட்டுரை :
மோடி அரசின் பணக்கார, உயர்சாதி கார்ப்பரேட் நலனுக்காக வடிவமைக்கப்பட்ட நீட் தேர்வு முறையால் மருத்துவம் படிக்கத் தகுதியான பல மாணவர்களை காவு வாங்கியிருக்கிறது மோடி அரசு. நீட் தேர்வு உருவாக்கிய மன உளைச்சலால் மாணவர்கள் மட்டுமல்ல பெற்றோர்களும் இறந்த சோக சம்பவங்களும் அரங்கேறியது. நீட் தேர்வின் கொடூரங்களை அம்பலப்படுத்திய கட்டுரை:
தமிழ்நாட்டின் பண்பாட்டுப் பெருமையை காக்கும் நகரமான மதுரையின் அரிட்டாபட்டியில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்து, தமிழர்களின் பண்பாட்டுச் சின்னங்களும், கல்வெட்டுகளும் பொதிந்து இருக்கும் மலையை உடைப்பதற்கு வழி செய்தது. மக்களின் போராட்டங்களால் அது தடுத்து நிறுத்தப்பட்டது. தமிழர்களின் பண்பாட்டு எச்சங்களை அழிக்க நினைத்த மோடி அரசு குறித்த கட்டுரை:
தமிழர்கள் வழிபட்டு வரும் தெய்வமான முருகனைக் கையிலெடுத்து, இஸ்லாமியர்களுடனான நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் வடநாட்டினைப் போல் இங்கேயும் மதக் கலவரம் ஏற்படுத்தி அமைதியை கெடுக்க முயலும் பாஜக சதி செயலின் பின்னணிக் காரணங்களை வெளிப்படுத்திய கட்டுரை :
தமிழ்நாட்டின் பாராளுமன்ற தொகுதிகளை குறைத்து உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற பாஜக வலிமையான இடங்களுக்கு தொகுதிகளை இருமடங்காக அதிகரிக்கும் தொகுதி மறு வரையறை திருத்தச் சட்டமும், அதன் ஊடாக தமிழ்நாட்டிற்கு மோடி அரசு விளைவிக்க இருக்கும் பேராபத்து குறித்ததுமான கட்டுரை :
கருப்புப் பணத்தை ஒழிக்கப் போவதாக, பணம் படைத்தவர்கள் பலனடையவும், நூற்றுக்கணக்கான சாமானிய மக்கள் இறப்பதற்கும் காரணமானது மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை. ஜி.எஸ்.டி வரி திணிப்பு, பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால சிறுகுறு நிறுவனங்களை தள்ளாட வைத்தது. குசராத்தி, பனியாக்களை லாபம் கொழிக்க வைத்தது. மக்களை கடும் அலைச்சலுக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாக்கிய இந்நடவடிக்கையின் இறுதியில் அச்சடித்த 99% பணமும் வங்கிக்கே திரும்ப வந்து விட்டது. கருப்புப் பணம் ஒழிக்கப் போவதாக அறிவித்து, குடிமக்களை அலைக்கழித்ததை விளக்கும் கட்டுரை :
தமிழ்நாட்டின் மீனவர்கள் இலங்கை இனவெறி கடற்படையால் தொடர்ச்சியாக படுகொலை செய்யப்பட்ட போதும், சிங்கள அரசுக்கு வலிமையான எதிர்ப்பை தெரிவிக்காமல் நட்பு பாராட்டுகிறது பாஜக அரசு. இதுவரை 800 க்கும் மேற்பட்ட மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட போதும், இலங்கையில் சுற்றுப்பயணம் செய்த மோடி தமிழ்நாட்டு மீனவர்களுக்கு இனவெறி சிங்களப்படை இழைக்கும் அநீதிகளைப் பற்றியும் பேசாமல், கச்சத்தீவு மீட்பதைக் குறித்தும் பேசாமல், தமிழீழத் தமிழர்களுக்காக குறைந்தபட்சத் தீர்வாக விளங்கும் 13வது சட்டத்திருத்தம் குறித்தும் பேசாமல், அதானியின் நலனுக்காக ஒப்பந்தம் செய்து விட்டு வந்தார் மோடி. அது குறித்தான கட்டுரை :
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசு கொண்டுவரும் திட்டங்களை முடக்குவதற்காகவே தங்களது கைப்பாவையாக செய்யப்படும் ஆர்.என். ரவியை ஆளுநராக நியமித்து தமிழர்களுக்கு சேர வேண்டிய நலத்திட்டங்களை முடக்கியது மோடி அரசு. அது மட்டுமின்றி ஆளுநர் ஆர்.என். ரவி திருவள்ளுவரை, திராவிடத்தை கொச்சைப்படுத்தி தமிழ்நாட்டின் வரலாற்றை திரிபுபடுத்தி சனாதனம் வளர்க்கும் நபராக தமிழ்நாட்டில் இருக்கிறார். சமீபத்தில் மருத்துவர்களுக்கு விருது வழங்கிய கேடயத்தில் திருவள்ளுவரே எழுதாத திருக்குறளை பொறித்து கொடுத்து திருவள்ளுவரையும், தமிழர்களையும் இழிவுபடுத்தினார். அவரின் தொடர்ச்சியான தமிழ்நாட்டுக்கு எதிரான மோசமான செயல்பாட்டை கண்டித்து உச்ச நீதிமன்றம் அவருக்கு போட்ட கடிவாளமும் குறித்த கட்டுரை :
உலக செம்மொழியான தமிழின் வளர்ச்சிக்கு சமஸ்கிருதத்தை விட பல மடங்கு குறைவான நிதி ஒதுக்கப்படுகிறது. மோடி ஆட்சிக்கு வந்த பிறந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருதத்திற்கு ரூ 2869 கோடியும், தமிழுக்கு வெறும் 100 கோடியும் ஒதுக்கீடு செய்ததை RTI மூலம் தெரிய வந்தது. இதே வஞ்சகத்துடன் மேலும், செம்மொழி ஆய்வு மையத்தை பார்ப்பனிய மயமாக்கி, அகத்தியர் முதலான புனைவுப் பாத்திரங்களை நிறுவி தமிழர் வரலாறுகளை, பண்பாடுகளை சமஸ்கிருதத்துடன் இணைக்கும் திரிபுகளை ஒன்றிய பாஜக அரசு மேற்கொள்வதை விளக்கும் கட்டுரை :
ஜம்பு தீபகற்பப் பிரகடனம் மூலமாக, சாதி மதம் கடந்து வெள்ளையர்களை விரட்ட மக்களுக்கு அழைப்பு விடுத்து, தமிழின ஓர்மையை முன்னெடுத்தவர்கள் மருது சகோதரர்கள். தென்னிந்திய புரட்சிக் கூட்டணியை உருவாக்கி இந்தியாவிலேயே முதல் முறையாக வெள்ளையர்கள் எதிர்ப்பணியை உருவாக்கிய பாளையக்கார எழுச்சியை ஆண்டுதோறும் மே 17 இயக்கம் அதே உணர்வுடன் கொண்டாடி வருகிறது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் மருது பாண்டியர்களின் ஐம்பு தீவு பிரகடனத்தை அகண்ட பாரதத்திற்கானது எனத் திரித்து ஆர்.எஸ்.எஸ். இந்துத்துத்து அமைப்புகள் பரப்புரை மேற்கொள்கின்றனர். தமிழினத்தின் வரலாற்று நாயகர்கள் மீது நம் கண் முன்னாலேயே, பொய்யையும், புரட்டையும் கலக்கும் ஆர்.எஸ்.எஸ் பாஜகவை அம்பலப்படுத்திய கட்டுரை :
இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக்க குடியுரிமை திருத்தச் சட்டம், அவர்களின் சொத்தை அபகரிக்க வக்பு வாரிய திருத்தச் சட்டம், அவர்கள் மீது வெறுப்புணர்வைக் கட்டமைக்கும் தொடர் செயல்பாடுகள் எனப் பல முனைகளில் இருந்தும் தாக்குதல்களை நாள் தோறும் பாஜக அரசும், ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ அமைப்புகளும் நடத்திக் கொண்டிருக்கின்றன. அவை குறித்து:
இஸ்லாமிய வெறுப்பை திட்டமிட்டு பரப்பும் பாஜக :
வக்பு வாரிய திருத்தச் சட்டம் :
காஷ்மீர் பகல்காம் தீவிரவாதிகள் தாக்குதலை ஒட்டி, மக்களைக் காப்பாற்றிய அங்குள்ள இஸ்லாமிய மக்கள் மீதே வெறுப்புணர்வைக் கட்டமைக்க இஸ்லாமிய தீவிரவாதிகள் என சமூக வலைதளம் முழுக்க ஆர்.எஸ்.எஸ், பாஜக, இந்துத்துவா அமைப்பினர் செய்திகளைக் கட்டமைத்தனர். அவர்களின் பொய்ப் பிரச்சாரத்தை அம்பலப்படுத்திய கட்டுரை :
தமிழ்நாட்டின் மண் வளத்தை சுரண்டும் வகையில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களைக் கொண்டு வந்த ஒன்றிய அரசு தற்போது நம் கடல்வளத்தையும் பாழ்படுத்தும் வகையில் சென்னை மற்றும் கன்னியாகுமரியில் ஆழ்கடலில் எண்ணெய் / எரிவாயு எடுக்க ONGC எண்ணெய் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியதை அம்பலப்படுத்தும் கட்டுரை :
பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின்னர் ஒட்டு மொத்த இந்தியாவும் கூறு போட்டு விற்கப்பட்டுக் கொண்டிருகிறது. இந்திய சந்தை முழுதும் மார்வாடி பனியா முதலாளிகளுக்கு தாரை வார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் வளங்களை தனியாருக்கு குறிப்பாக அதானி, அதானி போன்ற குஜராத்தி நபர்களுக்கு தாரை வார்த்துக்கொடுத்தவர் மோடி. அதானியின் காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்கத்திற்காக தமிழர் நிலம் கையகப்படுத்தப்படுவதோடு கன்னியாக்குமரியின் கீழமணக்குடி-கோவளம் துறைமுகத்தை அதானிக்கான ஆஸ்திரேலிய நிலக்கரி இறக்குமதிக்கான இடமாகவும், கண்டெயினர் தளமாகவும் திட்டமிட்டது பாஜக.
NLC போன்ற ஒன்றிய நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளில் தமிழர் புறக்கணிக்கப்படுவதும் தொடர்கதையாகிறது.
அதேவேளையில் என்.எல்.சி தனது இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்காக விவசாய நிலத்தைக் கையகப்படுத்தும் வேலையில் இறங்கியது. விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி 30க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு அறுவடைக்குக் காத்திருந்த நெற்பயிர்களை அழித்த சம்பவம் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நிலத்திற்கான முறையான இழப்பீடு இல்லை, தமிழர்களுக்குப் பணி நிரந்தரம் இல்லை, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தி அப்பகுதி வாழ் மக்களின் ஆரோக்கியத்தை பாதிப்பது, தமிழர் நிலக்கரி தமிழருக்கு பயன்படாமல் போவது என்று எந்த வகையிலும் தமிழர்களுக்குப் பலனில்லாத ஒன்றிய நிறுவனங்களை நம்மீது சுமத்தப்பார்க்கிறது மோடி அரசு.
மேலும், தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய தொழிற்சாலைகளை திட்டமிட்டு பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மாற்றி தமிழர்களின் வேலை வாய்ப்பையும், வளர்ச்சியையும் முடக்குகிறது. ஊரக வேலை வாய்ப்புத் திட்டமான 100 நாள் வேலையில் நிதியைக் குறைத்து விட்டது. கடற்கரையோர ஒழுங்கு மண்டல வரைபடத்தில் இருந்து திட்டமிட்டு கடற்கரைக் கிராமங்களை நீக்கி, பெரு நிறுவனங்களுக்கு கடற்கரையோர நிலங்களை ஒப்படைக்கும் ஏற்பாடுகளை செய்கிறது. ஒன்றிய அரசுப் பணிகளில் தமிழர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கிறது. இவ்வாறு இன்னும் பட்டியலிட முடியாத வகையில் தொடர்ந்து தமிழ்நாட்டின் நலன்களைப் பறித்து, தமிழர்களின் உரிமைகளை சிதைக்கும் மோடி அரசை அம்பலப்படுத்தும் நோக்கத்திலே கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை மே 17 இயக்கம் முன்னெடுக்கிறது. தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் இழைக்கும் மோடிக்கு எதிராக கருப்புக் கொடியுடன் திரள தமிழர்கள் ஆயத்தமாவோம்.
எதிர்ப்பில்லாமல் தமிழின விரோதிகள் தமிழ்நாட்டிற்குள் வந்து சென்றதாக வரலாறு இருந்துவிடக்கூடாது.
சங்கிகள் செய்த துரோகங்களை பட்டியலிடுவோம், செய்ய இருப்பவற்றிற்கு எச்சரிக்கை விடுப்போம். அனைத்தையும் மக்கள் முன் நிகழ்த்திடுவோம். தமிழரை அரசியல் படுத்திடுவோம்.
நேரம்: 27-07-2025 காலை 10.30 மணிக்கு
இடம்: சென்னை, தி.நகர் பெரியார் சிலைக்கு எதிரே, பேருந்து நிலையம்