வட இந்திய முதலாளிகள் – தொழிலாளிகள் குறித்தான தமிழ்த்தேசியப் பார்வை: திருமுருகன் காந்தி நேர்காணல்

திருத்தணியில் வட மாநில தொழிலாளர் ஒருவரை கஞ்சா போதையில் நான்கு இளைஞர்கள் தாக்கிய சம்பவம் குறித்தும், ஒன்றிய அரசின் அதிகாரிகளும் & மாநில அரசின் காவல்துறையின் மெத்தனப்போக்கு பற்றியும், தமிழ்நாட்டில் வட மாநிலத்தொழிலாளர்கள் பிரச்சனைகள் பற்றியும், வட மாநில மார்வாடிகளின் வணிக ஆதிக்கமும் & சுரண்டல் பின்னணி குறித்தும், மிக விரிவாக விகடன் சேனல் நடத்திய நேர்காணலில் சனவரி 2, 2026 அன்று வெளிவந்தது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் உரையின் தொகுப்பு

விகடன் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய சிறப்பு நேர்காணலில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களை சந்திக்கிறோம். வணக்கம்.

பத்திரிக்கையாளர் கேள்வி: ஒடிசா மாநில இளைஞருக்கு திருத்தணியில் நடந்த சம்பவத்தை பற்றி கேள்விப்பட்டி இருப்பீர்கள். எல்லாரும் அதைப் பற்றி கடந்த இரண்டு நாட்களாக பேசி வருகிறார்கள். அது ஏற்றுக்கொள்ளாத முடியாத ஒரு சம்பவமாக இருக்கிறது. குறிப்பாக சட்டம் ஒழுங்கு, சினிமா, இங்குள்ள தமிழ் தேசிய அரசியல், புலம்பெயர் தொழிலாளர்களுடைய பிரச்சனை என்று இந்த ஒரு சம்பவத்தை வைத்து பல்வேறு விதமான விவாதங்கள் எழுந்துள்ளது. இதை நீங்கள் எப்படி பார்க்கறீர்கள்?

தோழர் திருமுருகன் காந்தியின் பதில்: வணக்கம், இது மிக கொடூரமான சம்பவம். அவர் மீது நடத்தப்பட்ட வன்முறை, நம் மனம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அவர்கள் இளைஞர்களா / சிறுவர்களா என்கிற இரண்டாம் கட்ட வயது (17) இருக்கக்கூடியவர்கள் செய்வது நமக்கு பெரிய கவலை வந்திருக்கிறது. இது பல கோணங்களில் இந்த சிக்கலை பார்க்க வேண்டி உள்ளது. ஒன்று இந்த இளைஞர்கள் அல்லது சிறுவர்கள் மிகப்பெரிய அளவுக்கு இந்த வன்முறையை நிகழ்த்தக்கூடிய தளத்துக்குள் தள்ளப்படுவதை நாம் பார்க்கிறோம். பல இடங்களில் 20/ 25 வயதுக்குள் கலாச்சாரம் என்ற பெயரில் கத்தி வைத்து மிரட்டுவதும், சாகசம் பண்ணுவதும், மேலும் போதை பழக்கம் போன்ற செயல்களை செய்வது நடக்கிறது.

போதைப்பொருட்கள் இல்லை என்று நிராகரித்துவிட முடியாது. சில சில தவறுகளை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் போதுதான் திருத்த முடியும். நாமும் இதே ஊரில் தான் வாழ்கிறோம், நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்றும் தெரிகிறது. போதை என்பதை  நாம் தனித்த ஒரு விசயமாக பார்க்க முடியாது. இது விருப்பப்பட்டு கடைக்கு போய் போதை பொருளை வாங்குவது போன்ற செயல் அல்ல, போதை எப்பொழுதுமே அரசாங்கத்தினுடைய ஆயுதமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

1980கள் இறுதியிலே நான் பள்ளி/ கல்லூரி காலகட்டங்களில் பார்க்கும் பொழுது, அன்றைய கல்லூரிகளுக்குள்ளாக மிகப்பெரிய மாணவர் எழுச்சி வந்த காலகட்டத்தில் போதை பொருள் மிகப்பெரிய அளவுக்கு புழக்கம் அடைந்தது. நான் கல்லூரில் படித்த போதுதான் போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களை கேள்விப்பட்டிருக்கிறோம்/ பார்த்திருக்கிறோம். ஒரு போதை பொருள் மாநிலத்துக்குள் கொண்டு வருவது/ பரப்புவது என்பது காவல் துறைக்கு தெரியாமல் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை.

ஏன்னெனில் ஒரு பொருளை வெளி மாநிலத்திலிருந்தோ/ வெளி மாவட்டத்திலிருந்தோ உள்ளே கொண்டு செல்லும் போது எல்லாமே கண்காணிப்புக்கு உட்பட்டதுதான். அதாவது ஒரு பொருளை ஜிஎஸ்டி இல்லாமல் கொண்டு வர முடியுமா? சென்னைக்குள் ஒரு ரசீது இல்லாமல் ஒரு பொருளை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல முடியுமா? செய்ய முடியாது. சிறு வீதத்தில் பொருட்களை கடத்தலாம். அப்போது மிகப்பெரிய அளவுக்கு(டன் கணக்கில்) இத்தனை லட்சம் பேருக்கு கஞ்சா பொருட்கள் / போதை பொருட்கள் கையில் கிடைக்கிறது என்றால், இதில் எத்தனை பேர் சம்மந்த பட்டிருப்பார்கள்.

கேள்வி: ஆனால் அரசாங்க தரப்பில் தொடர்ந்து மறுத்துக்கொண்டே இருக்கிறார்களே?

பதில்: போதை பொருளை பற்றி கொஞ்சம் விளக்கமாகவே பேச வேண்டியிருக்கிறது. இத்தனை பேர் சம்பந்தப்பட்டது என்றால் பெரிய வலைபின்னல் (Network) இருக்கிறது. அதுவும் கடத்தல் குற்றம் தெரியாமல் நடக்காது. போதை பொருள் தடுப்பதற்கான என்ஜிஓக்களுக்கு நான் ஒரு சமயத்தில் ஆலோசகராக இருந்திருக்கிறேன். அந்த சமயங்களில் இதை அனைத்தையுமே கவனிக்க கூடிய வாய்ப்புகள் இருந்தது. இது காவல் துறைக்கு தெரியாமல் நடக்காது.

இரண்டாவது மிக பெரிய அளவில் போதை பயன்படுத்தினால் அந்த அளவுக்கு எங்கே உற்பத்தி பண்ண முடியும்? ஒரு சிறு விகிதத்தில் பண்ணலாம். 1000 ஏக்கர் போட்டெல்லாம் பண்ணக்கூடிய எளிமையான விசயங்கள் அல்ல.

கேள்வி: அப்போது அது எங்கிருந்து வருகிறது?

பதில்: போதை பொருள் இந்தியாவிற்குள்ளேயும் இந்தியாவுக்கு வெளியிலும் இருந்து வருவதை பார்க்கிறோம். இந்தியாவில் கடந்த 30/ 40 ஆண்டுகள் எங்கெல்லாம் போதை பழக்கங்கள் அதிகமாக இருந்தது எனில், பஞ்சாப்பில் வந்து மிக மோசமான போதை பழக்கங்கள் இருக்கிறது. ராஜஸ்தானில் (15 வருஷத்துக்கு முன்) போதை பொருள்களை வியாபாரம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டவர்களே 18000 /19000 பேர் இருந்தார்கள்.

பஞ்சாப்பில் நடந்த உரிமை போராட்டத்தை நசுக்குவதற்காக அல்லது அதை தடம் புரட்டுவதற்காக போதை பொருள் பயன்படுத்தப்பட்டது. அதேபோல வடகிழக்கு மாகாணங்களில் மிகப்பெரிய அளவுக்கு பயன்படுத்தப்பட்டது. அந்த போதை பொருள் பழக்கம் என்பது: இந்த ஊசி போடுவது என்பதில் ஆரம்பித்து, ஒரே ஊசியை பல பேர் பயன்படுத்தி, அதில் ’எய்ட்ஸ்’ பரவ ஆரம்பித்து, அது மிகப்பெரிய பிரச்சினையாக (2000 ஆண்டு ஆரம்பங்களில்) நடந்தது. நாகாலாந்து  மணிப்பூர் போன்ற மிகப்பெரிய மாணவர் / இளைஞர் போராட்டம் நடந்த காலகட்டம் அது.

தமிழ்நாட்டில் 2009க்கு பின்னான காலகட்டத்தில் தொடர்ச்சியான போராட்டங்கள் எழுகின்றன. 2016 /17க்கு ஆண்டில் இருபது/ முப்பதாயிரம் போராட்டங்கள் நடந்த சமயத்தில், அடுத்த தலைமுறையை மட்டுப்படுத்துவதற்கு இந்த போதை பொருள் இறக்கப்படுகிறது. நான் வெளிப்படையாக குற்றம் சாட்டுறேன். இது இந்திய அரசினுடைய வேலை. தமிழ்நாடு அரசு இது பற்றி அக்கரை கொள்ளவில்லை. தமிழ்நாடு அரசினுடைய காவல் துறை இதை பற்றி எந்தவித பொறுப்பு எடுக்கவும் இல்லை.

கேள்வி: இந்திய அரசின் வேலை என்கிறீர்கள், தமிழக அரசு அக்கரை எடுத்து கொள்ளவில்லை, அத்ற்கு துணை போகுகிறது என சொல்றீர்களா? என்ன சொல்ல வரீங்க?

பதில்: இது என்னவென்று புரிந்துக்கொள்ளாமல் செயலற்றுதான் நிற்கிறது. ஒரு கட்சிக்கு இது மாதிரியான கொள்கை எல்லாம் ஒன்றும் கிடையாது. ஆனால் இந்துத்துவ அமைப்பில் இருக்கிறவன் போதை பொருள் விற்கிறான், நாங்கள் களத்தில் இறங்கி வேலை செய்யும் போது அதை நேரடியாக தகவலை கேள்விப்படுகிறோம். காவல் துறையிடம் சொன்னால், சொன்னவன்தான் அடி வாங்குகிறான். கொங்கு மண்டலத்தில் சென்று பாருங்கள், போதை பொருள் பழக்கத்தினால் பிஜேபி, இந்து முன்னணி சார்ந்தவர்கள் கைதாவதை பார்கிறோம். வேறு எந்த கட்சியிலாவது நடந்திருக்கா? வேறு எந்த கட்சி சார்ந்த பொறுப்பாளர்களாவது கைதாகுகிறார்களா?

கேள்வி: நீங்கள் பிஜேபி, இந்து முன்னணி இப்படிதான் சொல்றீங்க, அவங்களிடம் கேட்டால் இசுலாம் அமைப்பு சொல்றாங்களே?

பதில்: இசுலாமிய அமைப்புகள் எங்கிருந்து இதை செய்கிறார்கள்? எல்லையை தாண்டியா இங்கே வந்து இயங்கிட முடியும். அப்படிமீறி செய்தால், இதற்கு உள்துறை அமைச்சர்தான் பதில் பேச வேண்டிய இருக்கும். அப்படியான தகவல் இதுவரைக்கும் இந்திய அரசு சொல்லப்படவில்லை.

ஒரு காலத்தில் மேற்காசியாவிலிருந்து கிழக்காசியாவை நோக்கி போகக்கூடியதும், கிழக்காசியாவிலிருந்து மேற்காசியா பக்கம் போவதும், ஆப்பிரிக்கா போகக்கூடியதுக்கான மைய பகுதியாக, இலங்கையும் தென் இந்தியாவும் வந்தது. அது பயணப் புள்ளியாக (transit point). இப்போது தமிழ்நாடே ஒரு நுகர்வோர் சந்தை (consumer market) மாற்றி இருக்கிறார்கள்.  அப்போது போதைப்பொரு எப்படி ஒன்றியரசுக்கு தெரியாமல் வந்திருக்கும்?

அதானியுடைய துறைமுகத்தில் 2000/3000 டன் போதைப்பொருள் பிடிப்பட்டது என செய்தியை பார்க்கிறோம். அது எப்படி ஒரு தனியார் துறைமுகத்துக்கு வருகிறது? அரசு துறைமுகத்தில் ஏன் வரவில்லை? அரசு துறைமுகங்களில் இப்படி எல்லாம் நடக்கவில்லை, தனியார் துறைமுகங்கள் நடக்கிறது. அப்போது தனியார் துறைமுகங்கள் இந்தியாவில் யார் அதிகமாக வைத்திருக்கிறார்கள்? குஜராத்காரன்தான் வைத்து இருக்கிறான். இந்த போதை பொருள் எல்லாம் கொண்டு வரப்படுவதும், விரிவு செய்யப்படுவதும் பற்றி எந்த அக்கரையும் எடுத்துக்கொள்ளவில்லை தமிழ்நாடு காவல்துறை. தமிழ்நாடு காவல் நிர்வாகம் பண்ணக்கூடிய திமுக அரசு இதை பற்றி எந்த கவலையும் பொறுப்பும் எடுத்துக்கொள்ளவில்லை

கேள்வி: திமுகதான் இந்துத்துவாவை எதிர்க்கிறார்கள், பிஜேபி அரசை எதிர்க்கிறார்கள், மாநில உரிமைகள் பேசுகிறார்கள், ஏன் அக்கரை எடுத்துக் கொள்ளவில்லை என்று சொல்கிறீர்கள்?

பதில்: காவல் துறையின் மீதான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறுகிறேன். காவல்துறையின் அத்துமீறலை நீங்கள் எடப்பாடியார் ஆட்சி காலத்தில் நடந்த ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு நடந்தது, அருணா ஜெகதீஷன் அவர்கள் கொடுத்த அறிக்கையியிலிருந்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஜல்லிக்கட்டு போராட்டத்திற்காக உருவாக்கப்பட்ட ஆணைய அறிக்கை இதுவரைக்கும் வெளியில் வரவே இல்லை. தமிழ்நாட்டில் பல்வேறு போராட்ட வழக்குகள் பொய் வழக்குகளாக புனையப்பட்டது. அந்த பொய் வழக்குகள் நீக்கப்படவே இல்லை. என்(திரு) மீது 47 வழக்குகள் இருந்தது. நாங்கள் நேரடியாக நீதிமன்றத்தில் போராடிகிறோம். திமுக அரசு காவல்துறை சொல்வதை அப்படியே நடைமுறைப்படுத்துவதும், அப்படியே ஒப்பிக்கிறது. காவல் துறையிடம் மொத்தமா ஒப்படைத்துவிட்டு உட்கார்ந்து விட்டது. காவல் துறை என்ன செய்கிறது? ஒரு பக்கம் இந்துத்துவ அமைப்புக்கு(சமூக விரோதிகளுக்கு) ஆதரவாக இருக்கிறது.

கேள்வி: அப்போது நேரடியாக திமுக வேறு, காவல்துறை வேறா?

பதில்: நிர்வாக ரீதியாக ஒரு துறையை கையாளும் முறை வேறு, கொள்கை ரீதியாக பேசுவது வேறு. போதைப் பொருளை பரப்ப வேண்டும் என்ற கொள்கை திமுகவிடம் கிடையாது. அதிமுகவுக்கும் கிடையாது. தமிழ்நாட்டில் எந்த மாநில கட்சிக்கும் அப்படிப்பட்ட கொள்கை கிடையாது. ஆனால் பாரதிய ஜனதா கட்சிக்கு இப்படிப்பட்ட கொள்கை இருக்கிறது என்பதை நான் உறுதியாக குற்றம் சாற்றுகிறேன். ஏன்னெனில் அவர்கள் இதற்கான பணிகளை கட்டுப்படுத்திருக்க முடியும், ஆனால் செய்யவில்லை. இந்துத்துவ அமைப்புகள் இந்த போதை பொருள் வினியோகத்தில் ஈடுபட்டுள்ளனர், கைதுகள் நடக்கிறது. அதன்பின் விசாரணை மேற்கொள்ளவில்லை.

கேள்வி: தவெக தலைவர் விஜய் அவர்கள் திமுகவும் பாஜகவும் மறைமுக கூட்டணியில் இருக்கிறார்கள் என சொல்கின்ற மாதிரி, நீங்கள் சொல்வதையும் பொருத்தி பார்க்க முடியுமா?

பதில்: அவர்(விஜய்) ஒரு வரியில் எல்லாத்தையும் சொல்விட்டு போகிறார். ஒரு பிரச்சனையை விளக்க வேண்டும். பொத்தாம் பொதுவாக பேச கூடாது.

நான் வேறு முறையில் பேசுகிறேன். தற்போது ஒன்றிய அரசினுடைய ஒரு நடவடிக்கை தமிழ்நாட்டுக்கு எதிராக நடக்கிறது, இதில் சட்டம் ஒழுங்கு ரீதியாக காவல் துறை இயங்குகிறதா? இயங்கவில்லையா? என்பது குறித்தான, ஏதேனும் ஒரு நடவடிக்கை கூட திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை, அல்லது தேர்தலுக்கு முன்பு இங்கு இருக்கக்கூடிய சமூக செயல்பாட்டாளர்களிடம் திமுக நெருக்கம் காட்டியது, எல்லாத்தையும் பேசினார்கள், கோரிக்கைகள் வாங்கினார்கள். ஆனால் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தபின் யாரிடமாவது பேசினார்களா?

கேள்வி: திமுக குழு அமைத்து, அதில் சமூக செயல்பாட்டாளர்கள் எல்லாரையும் போட்டார்களே!

பதில்: எல்லாருமே கிடையாது. அவர்கள் உள்ளுக்குள் அதற்கான கொள்கை திட்டங்களை வடிவமைக்கிறார்கள், வெளியில் சில கொள்கைகள் மக்களுக்கு பயன்பாட்டுக்கு வருகிறது. களத்தில் வேலை செய்யக்கூடியவர்கள் வெளியே நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் யாரையாவது ஊடகத்திலாவது பார்த்துள்ளீர்களா? கடந்த நான்கு ஆண்டுகளில் திமுக ஆட்சியில் அதிக போராட்ட வழக்குகளை வாங்கி இருக்கிறோம். ஆனால் என்றைக்காவது திமுக அரசை எதிர்த்து நடத்த போராட்டமும் விவாதத்துக்கு வந்ததில்லை. பொதுவான போராட்டங்களோ  விவாதத்துக்கு வந்ததில்லை. ஆனால் நாங்கள் எதை எதிர்கொள்கிறோம் எனில், திமுக ஆட்சி காலத்தில் அமைதியாக இருக்கறீர்கள் என்று.

எங்களை(மே 17) தாண்டி அதிமுகவோ, நாதகவோ, பாஜகவோ ஒரு வழக்கும் வாங்கவில்லை. மே 17 இயக்கம் எட்டு/ பத்து வழக்குகள் வாங்கி இருக்கிறது. நான் ஜாமினில் வரமுடியாத வழக்குகளை வாங்கி இருக்கறேன். என் மீது அதிமுக போட்ட 47 வழக்குகள் திமுக அப்படியே பத்திரமாக வைத்து நடத்திக்கொண்டு இருக்கிறது. வாரத்துக்கு இரண்டு நாள் நீதிமன்றத்துக்கு போய் நிற்க வேண்டிய இருக்கிறது. இத்தனை நெருக்கடிகளும் சந்தித்துக் கொண்டு இருக்கிறோம்.

சிவில் சமூகத்தின் மீதான எந்த அக்கரையும் திமுக கொடுக்கவில்லை. நான்கு ஆண்டுகளாக திமுக, அவர்களுடைய மாவட்ட செயலாளர் என்ன வேலை திட்டம் கொடுக்கிறார்களோ அந்த அளவில்தான் அந்த கட்சி இயங்கி கொண்டு இருக்கிறது. அவர்களுக்கு(திமுக) யார் நெருக்கமாக இருக்கிறார்களோ /ஜால்ரா அடிக்கிறார்களோ, அவர்கள் பேச்சைதான் கேட்கிறார்கள். அவர்களைதான் ஊடகத்தில் பேச்சாளராக இருக்கிறார்கள்.

கடந்த காலத்தில் பாரதி ஜனதா கட்சியினுடைய கொள்கை சம்பந்தமான தவறுகளை சிக்கல்களை சமூக செயல்பாட்டாளர்கள்தான் எதிர்கொண்டு ஊடகத்தில் அம்பலப்படுத்தினார்கள். அப்படி ஒருத்தர் கூட சமூக செயல்பாட்டாளர் ஊடகங்களில் அனுமதிக்கப்படவே இல்லை. திமுக ஊடகங்களிலும் சரி, திமுக அல்லாத ஊடகங்களிலும் சரி அனுமதிக்கப்படவே இல்லை. இது என்ன ஆகும் எனில், திமுக அரசின் மேல் வைக்கக்கூடிய குற்றச்சாட்டுக்கு பதில் சொல்வதற்கு தான் திமுகவிலிருந்து ஆள் வந்தார்களே ஒழிய, பாரதிய ஜனதா கட்சியினுடைய மக்கள் விரோத திட்டங்கள் சம்பந்தமாக சமூக செயல்பாட்டாளர்கள் குரல் வரவே கிடையாது. நான்கு ஆண்டுகளில் திமுக ஒழித்து கட்டினார்கள்.

கேள்வி: பாஜாகவுக்கு எதிரான விமர்சனங்களை கூடவா?

பதில்: திமுக தரப்பு பாஜக எதிர்க்கிறோம் மட்டும்தான் என்ற பிம்பத்தை காப்பாற்றிக் கொண்டார்களே ஒழிய, தமிழ் சமூகம் எப்படி பாரதி ஜனதா கட்சியை நிராகரிக்கிறது என்கிற குரல் வரவிடாமல் தடுத்து விட்டார்கள். அதாவது பாரதி ஜனதா கட்சிக்கு எதிரான அரசியல் என்பது தமிழர்களுடைய அரசியல். அது வராமல் திமுக கட்சிக்காரர்களா நின்று பேசிக்கொள்வார்கள்.

கேள்வி: திமுக அரசியல், போதைப் பொருள் பெருக்கம், அதனால் தற்போது நடந்த சம்பவம், இது எல்லாவற்றையும் எப்படி நீங்கள் இணைத்து பார்க்கிறீர்கள்?

பதில்: இது எல்லாமே ஒரு தொடர் சங்கிலியின் இறுதி வெளிப்பாடாகதான் நான் பார்க்கிறேன். ஒரு தொடர் சங்கிலி என்பது: போதை பழக்கம் தமிழ்நாட்டில் பரப்பப்படுகிறது. போலீஸுக்கு தெரியாமல் எந்த பொட்டலும் (போதைப் பொருள்) வெளியே போகாது. விற்பனை ஆகாது. இது காவல்துறைக்கு தெரிந்துதான் நடக்கிறது. காவல்துறை கட்டுப்படுத்தவில்லை. இந்த போதை பழக்கம் ஆளான பின், அவன் வடமாநில இளைஞனா? அல்லது சொந்த குடும்பத்துக்காரனா? அப்பா அம்மாவா? எதுவுமே பார்ப்பது இல்லை. சொந்த பாட்டியை கொல்வதும், அடிப்பதும் செய்தியாக தினமும் பார்க்கிறோம்.

கேள்வி: இந்த சிறார்கள் பொதுவெளியில் ரீல்ஸ்(reels) போட்டு, ஒரு பயங்கரமான விசயத்தை செய்கிறார்கள். அது பொதுமக்களுடைய பார்வைக்கும், போலீஸ் உடைய பார்வைக்கும் போயிருக்கும். எந்த நடவடிக்கையும் அவர்கள் மேல் இல்லை என்பதை எப்படி புரிந்து கொள்வது? குறிப்பாக தமிழ் தேசிய அரசியலோடு ஒப்பிட்டு பேசுகிறார்கள். இங்கு இருக்கக்கூடிய வட இந்தியர்களுக்கு எதிரான பரப்பப்பட்ட பிரச்சாரங்கள் தான், இது மாதிரியான வன்முறையை ஏற்பட அடிப்படையாக இருக்கிறதா?

பதில்: தமிழ் தேசியம் என்ற பெயரில் வட மாநில தொழிலாளர்களுக்கு எதிராக பேசக்கூடியதை நாங்கள் (மே 17 இயக்கம்) ஏற்றுக்கொண்டதில்லை. வட மாநில தொழிலாளர்களை ‘தொழிலாளர்களாக’ பார்க்க வேண்டும். தேர்தல் சம்பந்தமான அரசியல் உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் நாம் அதை எப்படி கையாள வேண்டும் என்பதற்கான வழிமுறையில் எங்களுக்கு தனிப்பட்ட கருத்து இருக்கிறது.

தொழிலாளர்கள் தொழிலாளர்களாகதான் பார்க்கனும். அவர்கள் ஏழைகள் இங்கே வேலை பார்க்க வந்திருக்கிறார்கள். அவர்களை இழிவுபடுத்துவது கொச்சைப்படுத்தல் எந்த உடன்பாடுமே கிடையாது.

இந்த குறிப்பிட்ட சம்பவம் அதனால்தான்(வட மாநிலத்தவர்) வந்தது என்று சொல்வதற்கு போதுமான ஆதாரம் இருக்கிறதா? என எனக்கு தெரியவில்லை. வட மாநிலத்துக்கு எதிரான உணர்வு நிலை அது பரப்பப்படுவதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். அதில் மாற்று கருத்து கிடையாது.

கேள்வி: வடக்கன்ஸ் /வடக்கர்கள் என்ற ஒரு பிம்பம் கட்டமைக்கப்படுகிறதே, அதற்கு இந்த சம்பவங்களுக்கு அது ஒரு ஆதாரமா இருக்கிறதா?

பதில்: வடக்கன்ஸ் என சொல்லி, அந்த தொழிலாளர்களுக்கு எதிராக மனநிலைக்கு உடன்பாடு கிடையாது. வட மாநில தொழிலாளர் உரிமை சம்பந்தமாக நடக்கின்ற போராட்டங்களை பார்க்கிறோம். சரியாக சம்பளம் கொடுக்கவில்லை, ஓய்வு கொடுக்கவில்லை, அவர்களுக்கான பணி பாதுகாப்பு இல்லை என்று நடக்கின்ற போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து தொழிலாளர் உரிமைக்கு நாங்கள் நிற்கிறோம்.

இந்த குறிப்பிட்ட சம்பவ விசாரணைக்கான தகவல் எனக்கு தெரியவில்லை. இது வடநாட்டு சேர்ந்தவன் என்கின்ற காரணத்தினால் அந்த மாதிரி தாக்குதல் நடந்ததா? அல்லது போதையினால் யாராவது ஒரு பையனிடம் செய்த ஒரு சம்பவமாக நடந்ததா? என்பது விசாரணை அடிப்படையில் தான் தெரியும். ஆனால் ஒரு வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி என்பதற்காக தாக்குதலோ, உரிமையை மறுப்பதோ, அவனுக்கான அடிப்படை பாதுகாப்பு இல்லாத நிலை என்பதை, ஒரு காலத்திலும் நம்ம ஏற்றுக்கொள்ள முடியாது.

கேள்வி: தமிழராக இல்லாத அவர், தப்பிக்க கூட முயற்சி பண்ண முடியாத ஒரு சூழலில் இருக்கும் போது, ஒரு தனியான ஒரு இடத்தில் வைத்து அடிக்கிறார்கள். அவர் எந்த இடத்திலும் பதிலடி கொடுக்கவில்லை, தப்பித்து ஓட முயற்சி பண்ணவில்லை என்று இருக்கும் போது, அந்த காரணம் (வடக்கர்கள்) இருக்கலாம் என்று பொதுவெளியில் பேசப்படுகிறதே?

பதில்: 17 வயது பசங்க… எவ்வித அரசியல் புரிதல் அற்றவர்கள். அவர்கள் மனதில் இழிவுபடுத்தும் நோக்கம் தோன்றுதலே.. உதாரணத்திற்கு திருநங்கைகளிடம் தவறாக நடந்துக் கொள்வது என்பது: சமூகத்துக்குள் அவர்கள் மேல் வைக்கப்படுகின்ற ஒரு அவதூறுகள் அல்லது அவர்களை இழிவுபடுத்துவதனுடைய வெளிப்பாடாக வருவது போல, வடமாநில தொழிலாளர் மேல் இழிவுபடுத்த மிக தாழ்வாக பார்ப்பதும், அதற்கு எப்படி வேண்டுமானாலும் கையாளாலாம், யாரும் கேட்க மாட்டார்கள் என்கிற இடத்துக்கு உருவாகும். இதை ஒரு காலத்துக்கும் அனுமதிக்க கூடாது. அதில் எங்களுக்கு எந்த விதமான மாற்று கருத்தும் கிடையாது.

வட மாநிலத் தொழிலாளர்களால் பெரிய உரிமை பிரச்சனை வருதுகிறது என பேசக்கூடிய போலி தமிழ்த்தேசியவாதிகளை இங்கு பார்க்கிறோம். நாங்கள் என்ன கேள்விக்கிறோம் எனில்: வட மாநிலத்திலிருந்து வரக்கூடிய முதலீடுகளுக்கு என்ன செய்ய போறீங்க? வடமாநிலத்தி வரக்கூடிய முதலாளிகளுக்கு எதிர்த்து என்ன செய்றீங்க? முதலாளிகள்/ முதலீடுகள் வருவதால்தான் தொழிலாளி வருகிறான். அப்போது முதலீடுக்கு என்ன பதில் பேச போறீங்க? முதலாளிகளுக்கு என்ன பதில் பேச போறீங்க? அவன் இங்கே வீடு வாங்குகிறான், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் வாங்குகிறான், அதனால் பாதிப்பு இல்லையா? அது குறித்து யாருமே பேசுவது இல்லை.

கேள்வி: இங்கு வட மாநிலத்திலிருந்து தொழிலாளர்கள் வரலாம், ஆனால் முதலாளிகள் வரக்கூடாது ஏதேனும் இருக்கிறதா? உலகமயமாக்களுக்கு பிறகு எல்லாருக்கும் எங்கே வேண்டுமானாலும் போகலாம் என்றாகிவிட்டது. நீங்கள் தொடர்ந்து முதலாளிகளுக்கு எதிராகவும், நாம் தமிழர் கட்சியினர் மாதிரியான சில பேர் தொழிலாளர்களுக்கு எதிராகவும் பேசுகிறார்கள். இது தமிழக அரசியலில் ஒரு குழப்பமான ஒரு சூழலை ஏற்படுத்ததா? புலம்பெயர் தொழிலாளர்களாக இருக்கட்டும் அல்லது முதலாளிகளாக கூட இருக்கட்டும். இதை எப்படி வகைப்படுத்துவது/புரிந்து கொள்வது?

பதில்: தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக வருகின்றார். அவன் ஒட்டுமொத்த குடும்பத்துடன் வரவில்லை. இங்கு சொத்து சேர்க்க கூடிய இடத்தில் இல்லை. குறைந்த பட்சம் அந்த தொழிலாளியை நாம் பெட்டி கடையில் பொருள் வாங்குவதை பார்க்க முடியும். அவர்களை நாம் புழங்கும் துணிக்கடையில், மளிகை கடையில், உணவகத்தில் பார்க்க முடியும். அவன் சம்பாதிக்கக்கூடிய பணத்தினுடைய விகிதத்தை, இதே சமூகத்தில் செலவு செய்கிறான்.

அவனுடைய உழைப்பும் இந்த மண்ணினுடைய வளர்ச்சி நிறுவன கட்டமைப்புகளுக்காக பயன்படுத்துகிறான். இங்கு சாலை போடுகிறான், பாலம் கட்டுவதற்கான வேலை பார்கிறான், மெட்ரோவுக்கு வேலை பார்க்கிறான், பெரிய நிறுவனங்கள வேலை பார்க்கிறான், ஒரு கடை வணிக கடைகள் இயங்குவதற்கான வேலை பார்க்கிறான். அவங்களுடைய உழைப்புகள் எல்லாமே இந்த சமூகத்தினுடைய பொருளாதார வளர்ச்சியில் ஏதோ ஒரு பங்கு பொருளாதார வளர்ச்சியாக மாற்றப்படுகிறது. அவர்கள் சம்பாதிக்கின்ற ஒரு பணத்தை இங்கே மறுபடியும் செலவு செய்து, இந்த பொருளாதாரத்தோடுதான் நகர்கிறது.

முதலாளிகளாக வரக்கூடியவர்கள் இங்கு ஒரு தொழில் ஆதிக்கத்தை செய்கிறார்கள். உதாரணத்திற்கு ’ரியல் எஸ்டேட்’ எடுத்துக்கொண்டால், அதில் இருக்கக்கூடிய பட்டியோ, பெயிண்ட்டோ, எலக்ட்ரிக்கல் பொருளோ, ஃபால் சீலிங் பொருளோ அல்லது பர்னிச்சர் பொருளோ, மரப் பொருளோ, வினியர்ஸோ, கேபிள் பொருளோ, கண்ணாடியோ என செங்கள் & மணலை தவிர அனைத்துமே மார்வாடிகளினுடைய மொத்த ஆதிக்கத்தின் கீழ் தான் இருக்கிறது.

என்னசெய்கிறார்கள் என்றால், அவர்களை நாம் தொழில் செய்ய வேண்டாம் என சொல்லவில்லை. அவர்களை தவிர யாரும் தொழில் செய்ய முடியாத நிலையை உருவாக்குகிறார்கள். இதை நிறுவனங்களாக நடத்திய அனுபவத்தில் நான் அது குறித்து பேசுகிறேன். ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் எடுத்துக்கொண்டாலும், அதில் அவர்களை தாண்டி வேறு யாரும் இயங்கவே முடியாது. இது என்ன ஆகுமெனில், அவர்களை(மார்வாடி) தாண்டி வேறு யாரும் பொருட்களை விற்க முடியாது. அவருடைய விலைக்குறைப்பு தாண்டி நீங்க வந்து மத்த மற்றவர்களால் விற்க முடியாது. சென்னையில் ’ரிச்சி ஸ்ட்ரீட்’ (riche street) போனால் கணினி உதிரி பாகங்கள் அவர்களை தாண்டி யாரும் வியாபாரம் பண்ண முடியாது.

என்னவெனில் அவர்களுக்குள் ஒரு ஒருங்கிணைப்பு இருக்கிறது. அது கார்டல் என்று சொல்லாம். அந்த ஒருங்கிணைப்புக்குள் சந்தை கையாடள் (Market manipulate) செய்கிறார்கள். அது ஒரு ஆதிக்க அரசியல். இதுதான் மாஃபியா.

(கார்டல் என்பது: போட்டி நிறுவனங்களை ஒன்றிணைத்து விலைகளை உயர்த்துவதும், சந்தையைப் பிடிப்பதற்கும், உற்பத்தியைக் கட்டுபடுத்துவதற்கும், வாடிக்கையாளர்களை பிரித்துக்கொள்வதற்கும் ஏற்படுத்துக்கொள்ளும் ஒரு ரகசிய ஒப்பந்தமாகும். இதன் நோக்கமே லாபத்தை அதிகரிப்பதே.)

இதை தவிர பஞ்சாப், ஆந்திரா, கேரளா, கர்நாடகாவிலிருந்து கூட வணிகம்/தொழில் செய்ய வருகிறார்கள்.  ஆனால் இவர்கள் எல்லாம் இப்படிப்பட்ட ஒரு கார்டல் செய்வதில்லை.

கேள்வி: இதே மாதிரி தமிழர்கள் வெளி மாநிலங்களில் போய் தொழில் பண்ண முடியுமா?

பதில்: இப்படி பண்ண முடியாது. இந்தியாவில் வேறு எந்த சமூகமும் வெளியே போய் கார்ட்டல் அமைத்தெல்லாம் வேலை செய்வதில்லை, செய்யவும் முடியாது.

கேள்வி: அம்மாநில கட்டமைப்பு அப்படி இருக்கிறதா? நம் மாநிலத்தில் மட்டும் அப்படி இல்லை என எடுத்துக் கொள்ளலாமா?

பதில்: கட்டமைப்பு முடியாது என்கிற விசயம் எல்லாம் இல்லை. அரசு ஆதரவு நிலை அவர்களுக்கு இருக்கிறது. இதுக்கு அடுத்து பேசினால் நிறைய பேசிக்கொண்டே போகலாம். ஒரு தமிழ் வணிகர் தமிழ்நாடு அளவில் பெரிய தனித்துவமான பொருள் (Brand) உருவாக்கிட்டால் கூட, அவர் தமிழ்நாடு கடந்தெல்லாம் போவது எவ்வளவு சிரமம் இருக்கிறது. அவர் அந்த பொருளை எப்படி கொண்டு போய்விட முடியும்?

உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் சிவகாசி பட்டாசு தொழில் இருக்கிறது. இந்தியாவுக்குள் பட்டாசு பயன்படுத்த முடியாது என்ற போது, கிட்டத்தட்ட 4500/ 5000 கோடி ரூபாய் வணிகம் முடங்குகிறது. இன்றைக்கு சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா பட்டாசு உற்பத்தியாக இருக்கிறது. குறிப்பாக சிவகாசி பட்டாசு உற்பத்தி இருக்கிறது. இந்த பட்டாசு என்பது வெடிக்கும் பொருள். அந்த வெடிபொருளை ஏற்றுமதி பண்ணுவதற்கான கப்பல் துறைமுகத்திலும் தள்ளிதான் நிற்க முடியும். அதற்கான அனுமதி அந்த கப்பலுக்கு இருக்கனும். அந்த அனுமதி கொண்ட கப்பல் நிற்கக்கூடிய ஒரே துறைமுகம் மும்பை.

சிவகாசியில் உற்பத்தி பண்ணக்கூடிய பட்டாசை மூன்று/ நான்கு மாநிலம் கடந்து மும்பைக்கு கொண்டு போய் ஏற்றுமதி செய்யனும். ஆனால் சிவகாசியிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய தூத்துக்குடி துறைமுகத்துக்கு அனுமதி இருக்காது. சிவகாசியிலிருந்து தூத்துக்குடி எவ்வளவு தூரம்? 100 கிலோமீட்டக்குள்ள இருக்கும். அப்போது தூத்துக்குடியிலே ஏற்றுமதி செய்ய முடிந்தால், இன்னொரு 4000/ 5000 கோடி ரூபாய் அந்த நகரம் உற்பத்தி செய்து தமிழ்நாட்டுக்கும் கொடுக்கும், இந்தியாவுக்கும் கொடுக்கும். அந்த அனுமதிகள் கிடையாது. இது மாதிரி ஏகப்பட்ட பட்டியலை சொல்லாம்.

இந்த வடக்கர்கள் ஆதிக்க அரசியல் வேறு, தொழிலாளர்களுடைய வடக்கர்கள் என சொல்வது வேறு. அவன் இங்கே வேலை செய்கிறான் என்பது வேறு, அவனுக்கான வாக்குரிமை சம்பந்தமாக வரும்பொழுது நாங்கள் மாறுபடுகிறோம். அரசியல் அதிகாரம் என்பது: நமக்கு ஏற்கனவே இங்கே எந்த அதிகாரமும் கிடையாது. மாவட்ட அதிகார அளவில்தான் மாநில அதிகாரத்தின் நிலைமையை கொண்டு வந்து நிறுத்தி விட்டார்கள்.

கேள்வி: இப்போது முதலாளிகள் வரக்கூடாது தொழிலாளர்கள் வாழ்வாதாரத்துக்காக வரலாம். ஆனால் அவர்களுக்கு வாக்குரிமை கொடுக்க கூடாது. இது ஒரு குழப்பமான சூழலை தரதா?

பதில்: அவர்கள் ஊரில் அரசியல் முடிவு செய்யக்கூடிய வாக்குறுதி அவர்களுக்கு இருக்கட்டும். அதில் தவறு ஒன்றும் கிடையாது. தமிழ்நாட்டு அரசியல் உரிமைகளை முடிவு செய்வதற்கு தமிழ்நாட்டு மக்களுக்குதான் அதற்கான அதிகாரம் இருக்கிறது. அவர்களுக்கான உரிமை இருக்கிறது. அந்த அடிப்படையில்தான் பாப்போம்.

இங்கிலாந்து, கனடா அல்லது பிற வெளிநாட்டுகளில் ஒரு இந்தியர்கூட பிரதமராக ஆக முடியும். ஏன்னெனில் அரசியல் சாசனம்தான் ஆட்சி செய்யும், தனி நபர் அல்ல. அந்த மக்களுடைய பண்பாடு, பொருளாதார உரிமை, மொழியை பாதுகாக்கும். அவனுடைய கல்வி திட்டத்தை பாதுகாக்கும். அந்த அரசியல் சாசனத்தை மீறி யாராலும் மாற்றிவிட முடியாது. ஆனால் தமிழ்நாட்டுக்கு அப்படிப்பட்ட இறையாண்மை கிடையாது. தமிழ்நாட்டுக்கு என அரசியல் சாசனம் கிடையாது. இந்திய அரசியல் சாசனம் தான் நாம் இருக்கிறோம். அதற்குள் குறிப்பிட்ட வீதத்துக்கு மட்டும்தான் சட்டத்தை இயற்ற முடியும். மற்றவைகளுக்கு தீர்மானம் தான் போட முடியும். (நீட் தேர்வே வேண்டாம் என சொல்வதற்கு கதறி கொண்டு இருக்கோமே தவிர) அந்த அதிகாரம் கூடிய இடத்தில், தமிழ்நாடு சம்பந்தம் இல்லாத ஒருத்தர் (வேறு மாநிலத்து) இங்கே அதிகாரத்தில் வரும்பொழுது, குறைந்தபட்ச இறையாண்மை இழக்கின்ற நிலைமை வந்து நிற்கும்.

அரசியல் சாசனம் தான் சனநாயகத்தில் ஆளுகிறதே ஒழிய, தனி ஒருவர் அல்ல. அரசியல் சாசனம் இல்லாத இறையாண்மை இல்லாத ஒரு நிலப்பரப்பு ஒரு மக்களுக்கு ஒரு சமுதாயத்திற்கு வேறு யாரையாவது வந்து ஆட்சியாளராக மாற்றிட முடியாது.

இன்றைக்கு சீமான் சொல்லக்கூடிய ’தமிழர் ஆளுவதா தெலுங்கர் ஆளுவதா’ என்பதில் நாங்கள் மாறுபட்டு பேசுகிறோம். அதில் அவர் சொல்லக்கூடியது இந்த மண்ணில் இருக்கக்கூடிய மக்கள் நிராகரிக்கக்கூடிய ஒரு போலியான அரசியல். அவர் தமிழ் தேச விரோத அரசியலை பேசிக்கொண்டு இருக்கிறார்.

நாங்கள் பேசுவது அப்படி அல்ல. இந்த பண்பாட்டோடு இயங்கியவர்கள்/ கலந்தவர்கள், மொழி மொழியோடு இணைந்தவர்/ இயந்தவர்கள், இந்த சமூக பொருளாதார வளர்ச்சியோடு சேர்ந்தவர்கள்.

வடமாநில தொழிலாளர்களை நாம் எல்லா பெட்டி கடையிலும், ஓட்டல் கடையில், துணிக்கடையில் பார்த்துள்ளோம். ஆனால் எந்த மார்வாடியாவது இங்குள்ள போத்தீஸ், சென்னை சில்க்ஸ், சரவணா, விகேக், வசந்த அண்ட் கோ கடைகளில் பொருட்களை பார்த்துள்ளீர்களா?

பொருளாதார நடவடிக்கை நடக்கின்ற செயல்பாடுகளில் வட மாநில தொழிலாளர்களை எல்லா இடங்களிலும் பார்க்க முடியும். இந்த முதலாளிகளை எங்கயுமே பார்க்க முடியாது.

கேள்வி: அதை எப்படி நீங்கள் ஆதாரபூர்வமாக சொல்றீங்க?

பதில்: ஆதாரம் நீங்களே போய் பாருங்கள். இந்த தொழிலில் இருக்கிறவர்களே என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.

கேள்வி: சரி தோழர், நாம் இந்த சம்பவத்துக்கு வரலாம். திருத்தணி தாக்குதல் சம்பவம் ஒரு குளறுப்படியான சூழலாக உருவாகிறதா? அல்லது போதையினால் உருவாகிறதா? அல்லது சோசியல் மீடியா தாக்கத்தால் உருவாகிறதா? 

பதில்: ஒன்று போதை, அடுத்து காவல் துறையினுடைய செயலற்ற தன்மை. இது குறித்து ஒரு கொள்கை ரீதியாக ஆய்வு செய்து எடுக்காத முடிவினுடைய பிரச்சனை. இந்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பதற்கான வேலை திட்டத்தினுடைய நீட்சி, அதற்கு பிறகு சமூகத்தில் சக மனிதனுக்கு எதிராக பரப்பப்படுகின்ற நஞ்சு கருத்துக்கள்.  

நாம் மார்வாடிகளை எதிர்க்கிறோம் என்றால், வெளியே போன்ற அர்த்தமல்ல. தொழிலில் ஆதிக்கம் செய்தாதீர்கள் என்கிறோம். நான் நேரடியாக நிறுவனம் நடத்தி அதனால் பாதிக்கப்பட்டவன். இதை நான் எங்கயோ நடந்த்தையெல்லாம் சொல்லவில்லை. எங்களை போன்று நிறைய பேரை பார்த்திருக்கிறோம்.  

தமிழர்கள் நிராகரிக்கப்பட்ட /அப்புறப்படுத்தப்பட்ட துறைகள் பட்டியல் போட்டு காண்பிக்க முடியும். ஈரோடு மஞ்சளுக்கான சந்தை. இந்தியாவில் மிகப்பெரிய மஞ்சள் உற்பத்தி ஈரோட்டில் நடக்கிறது. சாதி சங்கங்கள் எல்லாம் மஞ்சள் பெருமையாக பேசுகிறதே!, மஞ்சள் மார்க்கெட்டை கட்டுப்படுத்துவது யார்? கேட்டு சொல்லுங்கள், தமிழர்கள் கிடையாது. கோயம்புத்தூர் தமிழ்நாட்டில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார தொழில் நகரம். அது உதகையில உற்பத்தியாகக்கூடிய விலை பொருட்களில் இருந்து, அங்கு இருக்கக்கூடிய பொறியியல் உற்பத்தியிலிருந்து, எல்லாத்துக்குமான மையமான நகரம். அது கேரளா வரை தொடும் மிகப்பெரிய சந்தை. அதனுடைய பொருளாதாரம் தமிழர் கையில் கிடையாது. ஆனால் 30 வருடத்திற்கு முன் இருந்தது. இன்றைக்கு கிடையாது.

கேள்வி: இப்படியான பிரச்சனைகள் ஒரு பக்கம். முதலாளிகளுடைய ஆதிக்கம்,  தொழிலாளிகளுடைய பிரச்சனை மறுபக்கம் இருக்கிறது. மேலும் போதை கலாச்சாரம் அதிகமான புழக்கம், இதற்கு நாம் எப்படி தீர்வை முன்வைக்க போறோம்?

பதில்: ஒன்று: தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும், தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் பொருளாதாரத்தில் முன்னுரிமையும், அவர்களுக்கான தொழில் பாதுகாப்பு இருக்க வேண்டும். இரண்டாவது: வட மாநில தொழிலாளர்களுக்கான ஊதியம் என்பது, தமிழ்நாட்டு தொழிலாளர்கள் ஊதியமும் சம அளவில் இருக்கும் பொழுது, தமிழ்நாட்டு தொழிலாளர்களை எடுத்துக்கொள்வார்கள். ஊதியம் குறைவாக இருப்பதால்தான் இந்த பிரச்சனை வருகிறது. எல்லாருக்கும் ஒரு நாளைக்கான ஒரே ஊதியம் தான் தர வேண்டும். அவர்கள் உடல் உழைப்பை செலுத்த கூடியவர்கள்.

கேள்வி: இப்படியும் பார்க்கலாமே. வட மாநில முதலாளிகள் குறைவான விலைக்கு பொருள் தருவது மாதிரி தொழிலாளிகளும் குறைவான விலைக்கு இங்கே வருகிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?

பதில்: மார்வாடிகள் மொத்தமாக வாங்க கூடியதில் பணம் வேறு விகிதம். அதை எடுத்துவிட்டு, முதலில் பொருளுடைய விலையே 10%-15% குறைத்து கொடுப்பார்கள். நீங்கள் கடைய மூடிட்டு போற வரைக்கும் செய்வார்கள். இப்போது தமிழர் கிட்டத்தட்ட வெளியே போயிவிட்டார்கள்.  எந்த டயர் கடை இருக்கிறது? எந்த டியூப் கடை இருக்கிறது? எந்த எலக்ட்ரிக்கல் கடை இருக்கிறது? போய் பாருங்கள். 100 மின்விசிறி (fan) வாங்கினால் கூட ஒரே விலைதான். அது பத்து கடையில் போய் கேட்டு பாருங்கள் அதே வேலைதான். மாற்ற மாட்டார்கள். தமிழர்களை இந்த வணிகத்திலிருந்து அப்புறப்படுத்தியாச்சு.

இந்த மாதிரியான தமிழ் வணிகர்களுக்கு பாதுகாப்பு குறித்து முடிவெடுக்க வேண்டும். இது குறித்தும் முடிவெடுத்தாலும், இங்கு அரசியல் அமைப்புகளோடு சேர்ந்து தமிழ் வணிகர்கள் வேலை செய்ய தயாங்குகிறார்கள்.

இந்துத்துவ அமைப்பு வீடு வீடாக போய் ’முஸ்லிம் கடைகள் எல்லாம் வாங்காதீர்கள்’ என்று பிரச்சாரம் செய்கிறார்கள். கம்பம், தேனி நகரத்தில் தீபாவளிக்கு முன்பு ”இந்துக்கள் கடையில் போய் பொருள் வாங்குங்கள்” என சுவரொட்டி விளம்பரத்தை நான் பார்த்தேன். இதையே நாம் “தமிழர்கள், தமிழக கடையில் வாங்குங்கள்” சொன்னால், உடனே அது வெறுப்பு பிரச்சாரமாக பார்க்கப்படும். ஆக நாம் சொல்வது ”ஆதிக்க அரசியலுக்கு இருந்து அப்புறப்படுத்தப்பட்டு, தமிழர்களுக்கு பாதுகாப்பு தேவை” என்று பேசுகிறோம்.

கேள்வி: நீங்கள் தீர்வை நோக்கிதான் பேசுகிறீர்கள் என எடுத்துகொள்ளலாம் அல்லவா?

பதில்: தமிழ்நாட்டில் பொருளாதார ரீதியான கட்டமைப்புக்கு பாதுகாப்பு வேண்டும். தமிழ் வணிகர்களுக்கு நேரடியாக அரசு கூப்பிட்டு பேச வேண்டும். அந்த மாதிரியான ஒரு முறை நமக்கு இருக்க வேண்டும். இரண்டாவது வடமாநில தொழிலாளர்களை பொறுத்தவரைக்கும், ஒரு நிறுவனத்திற்குள் குறைந்தபட்சம் 60- 70% தமிழ் தொழிலாளர்களுக்கு வேலையை உறுதி செய்யப்பட வேண்டும். வெளிமாநில தொழிலாளர்கள் & தமிழக தொழிளார்களுக்கும் சம்பளம் ஒரே அளவில் வையுங்கள். தொழிலாளருக்குள் பாகுபாடு செய்து ஒரு தொழிலாளர் வஞ்சிக்கின்ற வேலையை செய்கிறார்கள்.

வடமாநிலத்திருந்து வரக்கூடிய ஒரு தொழிலாளி குறைந்த கூலிக்கு செய்கிறான். ஏன்னெனில் குடும்பத்தோடு வருவதில்லை. வாடகை பெரிதாக இருக்காது. ஆனால் இங்கு இருக்கம் தொழிலாளி குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும், அதற்கான செலவுகள் இருக்கும், வாடகை கொடுக்க வேண்டும், விலைவாசி 10 முதல் 15 மடங்கு அதிகமாகி விட்டது. அப்படிப்பட்ட நிலைமையில் ஒரு தமிழ் தொழிலாளி கடுமை உழைக்க வேண்டி இருக்கிறது. அப்போதுஅவரை பாதுகாக்க வேண்டியது இருக்கிறது.

தமிழ் தொழிலாளர்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கான ”தொழிலாளர் கொள்கையை” கொண்டு வர வேண்டும். இதெல்லாம் செய்யும் பொழுதுதான் தமிழர்களுக்கான அடிப்படை பாதுகாப்பு இருக்கும்.

வாக்குரிமை என்பதை பொறுத்தவரைக்கும் யார் எந்த மாநிலத்திலிருந்து வருகிறார்களோ, அந்த மாநிலத்தில் அவர்கள் வாக்குரிமை இருக்க முடியும். தமிழ்நாட்டுக்குள் வாக்குரிமை அனுமதிக்க முடியாது. அமெரிக்காவில் இருப்பதுபோல எச்1பி விசா எல்லாம் போடுவதற்கு ஒரு காலகட்டத்தை வைத்துள்ளான். அதற்கு அவனுக்கு அரசியல் சாசனம் இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு என்ன அரசியல் சாசனம் இருக்கிறது?

கேள்வி: கடந்த தேர்தலுக்கு திமுகவுக்கு ஆதரவாக (திமுகா வரனும்) பேசிக்கொண்டு இருந்தீர்களே!

பதில்: நான் அப்படி பேசவே இல்லை. நாங்கள் திமுகவை ஆதரிக்கவில்லை என்று வெளிப்படையாக ஊடக சந்திப்பில் அறிவித்துவிட்டுதான் நாங்கள் பிரச்சாரத்திற்கே சென்றோம். பாரதிய ஜனதா கட்சி எதிர்த்துதான் நாங்கள் பிரச்சாரம் செய்துக்கொண்டு இருக்கிறோம். நாங்கள் திமுகவும் ஆதரித்தது இல்லை, அதிமுகவும் ஆதரித்தது இல்லை. ஏன்னெனில் அவர்கள் அதிகாரத்தில் இருக்கூடிய கட்சிகள். அவர்களை நாங்கள் ஆதரிக்க வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு கிடையாது.

கேள்வி: இது மறைமுக ஆதரவு தானே, பாஜகவை எதிர்த்தால் அடுத்து திமுகவுக்கு ஆதரவு என அர்த்தம் தானே?

பதில்: அப்படியா? காங்கிரஸ் எதிர்த்தால் யாருக்கு ஆதரவு? நாங்கள் 2011-இல் காங்கிரஸ் எதிர்த்து பிரச்சாரம் செய்தோம். அது யாருக்கு ஆதரவு? ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன், பாரதிய ஜனதா கட்சி எதிர்க்க வேண்டும் என திமுக என்றைக்கு முடிவெடுத்தது? 2014-இல் மோடி பிரதமர் வேட்பாளர் அறிவித்த பொழுது மே 17 இயக்கம் கருப்புக்கொடி காட்டிய முதல் அமைப்பு. அதன்பின் தமிழ்நாடு வரும்பொழுதெல்லாம் கருப்புக்கொடி காட்டுவோம். இன்றைக்கு வரைக்கும் காட்டுகிறோம். ஒரு தடவை கூட விடவில்லை.

என்றைக்கு திமுக பாஜக எதிர்ப்பு அரசியல்/ மோடி எதிர்ப்பு அரசியல் கையில் எடுத்தது? என சொல்லுங்கள் பார்ப்போம். 2019 அரசியலுக்கு பின்பு. நாங்கள் அதற்கு முன்பே செய்து விட்டோம்.

கேள்வி: அவங்களும்(திமுக) கருப்பு கொடி எல்லாம் காட்டினார்கள். இப்போது காட்டுவதில்லையே!

பதில்: நாங்கள் 2014-லிருந்து இந்துத்துவ எதிர்ப்பு அரசியல் பேசிக்கொண்டு இருக்கின்றோம். ஒரு மதவாத அரசியலை அனுமதிக்க முடியாது. தமிழ்நாட்டுக்குள் மதவாத அரசியல் ரீதியான கொள்கையை எதிர்த்த அரசியலைதான் நாங்கள் பேசுகின்றோம்.

பதில்: இது எதற்காக கேட்கிறேன் எனில், அடுத்து வருகின்ற தேர்தலில் திமுகவை நீங்கள் நம்புகிறீர்களா? இப்போது திமுக சட்டம் ஒழுங்கு சரியில்லை, போதை பொருள் என கட்டவிழ்த்து விடுகிறார்கள் என எதிர்கட்சிகளும் குற்றம் சாட்டுகிறார்கள், புதுதாக வந்த விஜய்யும் அதைதான் சொல்கிறார். இன்னொரு பக்கம் கல்வியில் சிறந்த தமிழ்நாடு சொல்வதும், விளையாட்டில் கண்ணகி நகர் கார்த்திகா பெருமை பேசுவதும், ஆனால் அந்த ஏரியாவில் கஞ்சா பெருக்கெடுத்து இருக்கிறது என்ற குற்றச்சாட்டும் வருகிறது. இதை மக்கள் இதை எப்படி புரிந்துக்கொள்வது? திமுக முன்னிறுத்தும் பிம்பமா? நீங்கள் திமுகவை ஆதரிக்கிறீர்கள் அல்லது ஆதரிக்கவில்லை, ஆனால் நீங்கள் திமுகவை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: நாங்கள் என்ன சொல்கிறோம் எனில், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது. அதிமுக மேல் வெறுப்பு வந்தால் நிராகரிக்கிறோம் என சொல்லி திமுகவுக்கு ஓட்டு போட்டுவிட்டு, கடந்த நான்கு வருடத்தில் எந்தவிதமான போராட்ட அரசியலிலும் பங்கெடுக்காமல் இருந்ததனால்தான் இத்தனை பிரச்சனைகள் வருகிறது.

யார் ஆட்சியில் வந்தாலுமே ஆட்சியில் இந்த திட்டங்கள்/ இந்த வாக்குறுதிகள் எல்லாம் நடைமுறைப்படுத்தப்படும் போராட்டத்தை எந்த காலகட்டத்திலும் பின்வாங்க கூடாது. நாங்கள் எந்த இடத்திலும் போராட்ட களத்தை விட்டு வெளியே போகவே இல்லை. திமுக இருக்கிறதோ அதிமுக இருக்கிறதோ உங்கள் கோரிக்கை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். உங்களுக்கான பாதுகாப்பு நீங்கள் வீதியில் இறங்கி போராடி கொண்டேதான் இருக்க வேண்டும். அந்த போராட்டத்தை கைவிட்டோம் எனில், இந்த கட்சியே வந்து எல்லாத்தையும் செய்யும் என எதிர்பார்த்தால், அவர்களும் இதே தவறைதான் செய்வார்கள்.

கேள்வி: கட்சிகளுக்குள்ள வேறுபாடு இல்லாமல் எல்லாமே அப்படிதான் இருக்குமா?

பதில்: அதிகார வர்க்கம் என்ற ஒன்று இருக்கிறது. அவர்கள் கொள்கை திட்டம் எடுக்கிறார்கள். வீடு இடிக்க வேண்டும் என்ற திட்டத்தை யார் எடுக்கிறார்கள்? எம்எல்ஏ-வா எடுக்கிறார்? இல்லை. அதிகாரிகள் தான் எடுக்கிறார்கள்.

அதிகார வர்க்கம் என்பது எதேச்சதிகாரமாக/ பாசிஸ்டாக மாறி இருக்கிறார்கள். அதிகாரிகள் மனித தன்மையற்றவர்களாக இருக்கிறார்கள். இத்தனை லட்சம் பேர் வீட்டை இடிக்கனும் என்பதை, உலக வங்கியில் பணம் வாங்கி ஆற்றை தூய்மைப் படுத்துகிறோம் என்று வீடுகளை இடிக்கிறார்கள். வீடுகளை இடிப்பதற்கு பணம் வருகிறது, இடித்ததை அள்ளி கொண்டு போய் கொட்டுவதற்கு ஒரு பணம் வருகிறது. பிறகு உருவாக்குவதற்கு பணம் வருகிறது. இந்த வேலையை செய்துக்கொண்டே இருக்கிறார்கள்.  

அடையாறு ஆற்றங்கரையை சுத்தப்படுத்துவதற்கு ஒரு அமைப்பு (River Reservation Trust) வைத்துள்ளார்களே, அது தனியார் அமைப்பு. அந்த தனியார் அமைப்புக்கு தலைவர் யார்? பொறுப்பாளர் யார்? தலைமை செயலாளர் & ஐஏஎஸ் அதிகாரிகள் தான் பொறுப்பாளர்கள். அந்த நிறுவனத்தை மக்கள் தேர்ந்தெடுத்த எந்த உறுப்பினரும் கேள்வி கேட்க முடியாது. இது குறித்து யார் முடிவு எடுக்கிறார்கள்? அனகாபுத்தூர் வீடு இடிப்புக்கு திமுக அரசிடம் தானே சண்டை போட்டோம். அவர்களுக்கு எல்லாம் எங்கே வாக்குரிமை உள்ளது?

கேள்வி: அவர்களுக்கே இப்போது தெரியதா?

பதில்: தெரியாது. இது எல்லாம் நிர்வாக முடிவு (executive decision). மின்சாரத் துறையில் இருக்கக்கூடிய அதிகாரி ஜெயலலிதா அம்மையார் காலத்தில் இருந்து, எடப்பாடியார் காலத்தில் இருந்து, திமுக காலத்தில் இருந்து, எல்லா காலத்திலயும் ஒருவரே உட்கார்ந்து கொண்டு தவறு தவறாக ஒப்பந்தங்களை போட்டுவிட்டு போகிறார்கள். இது ஒரு அமைச்சருக்கு புரியுமா? அமைச்சர் இரண்டு/ மூன்று வருடம் இருப்பார், அப்புறம் போயிடுவார். ஆனால் 30/ 35 வருடமாக வேலை செய்வது அதிகாரிகள் தான் செய்கிறார்கள்.

கேள்வி: கடந்த 2/3 ஆண்டுகளுக்கு முன்பு சூலூரிலுள்ள ஒரு கல்லூரி விடுதியில் தமிழக மாணவர்களுக்கும் வட மாநில தொழிலாளர்களுக்கும் நடந்த பிரச்சனையில், வட மாநில தொழிலாளர்கள் தன் சார்ந்த ஆட்களை கூட்டிட்டு வந்து பிரச்சனை ஆனதும் விவாதமானது. தற்போது இங்குள்ள இளைஞர்கள் வட மாநில தொழிலாளரை தாக்குவதும் எப்படி பார்ப்பது?

பதில்: வட மாநில தொழிலாளர் எடுத்தால், பீகார், ஒரிசா, மேற்கு வங்கம், உத்திரப்பிரேதசம் என இருக்கிறார்கள். இவர்களெல்லாம் ஒன்றாகவோ, ஒரே ஆளாகவோ மாற மாட்டார்கள். வட மாநில தொழிலாளர் எல்லாம் ஒரே தொழிலாளி வர்கமாக எழுந்து நிற்பதில்லை. ஏன் தமிழ்நாட்டு ஆட்களே மற்ற  ஊர்களில் வேலை பார்த்தால் எல்லாரும் ஒரே ஊர்காரர்களாக இருந்தால் மட்டும் தான் ஒன்றாக நிற்கிறார்கள்.

இந்த தாக்குதலை சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக பார்க்கலாமே ஒழிய, இது கொள்கை ரீதியாக பார்க்க வேண்டும். தற்போது கூட வடகிழக்கு மாகாணத்தை சேர்ந்தவரை ”நீ சீனாவை சார்ந்தவன்” எனசொல்லி அடித்தார்கள். அப்படியெல்லாம் இங்கு நடக்கவில்லை. இங்கு நாம் “நீ கருப்பா இருக்கற, நீ சீன மாதிரி இருக்கற, சப்ப மூக்கு வச்சிருக்கற, நீ காஷ்மீரியா இருக்கற, நீ முஸ்லிமா இருக்கற” எனசொல்லி எல்லாம் அடித்து துன்புறுத்துவதில்லை. தமிழர்கள் அவ்வளவு தூரம் மோசமானர்வகள் அல்ல, அப்படியான தமிழ் மக்கள் மீது இப்படியான வெறுப்புகளாக ஒரு விசயம் வருவதை நாம் நிறுத்த வேண்டும்.

இந்த வட மாநில பையனை அடித்ததற்கு தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதே இரண்டு நாட்களுக்கு முன்பு கூட வட மாநிலத்தில் (நாகாலாந்து பையனை) தாக்குதல் சம்பவத்திற்கு யாராவது எதிர்ப்பு தெரிவித்தார்களா? பேசினார்களா? அந்த வெறுப்புணர்வு தமிழர்களிடம் இல்லை, அப்படியெல்லாம் மொத்தமாக தமிழ்நாட்டு மேல் முத்திரை குத்துவதை நான் நிராகரிக்கிறேன்.

எத்தனை இடத்தில் வடமாநில தொழிலாளர் அன்பாக நடத்துகிறார்கள். கொரோனா காலத்தில் பாதுகாத்துள்ளனர், ஊருக்கு அனுப்பி இருக்கிறார்கள்.

கேள்வி: அப்போது அந்த வெறுப்புணர்வு பரவலாக்கப்படவில்லை என்கிறீர்களா?

பதில்: வெறுப்புணர்வு பேச்சு நாம் தவிர்க்கப்பட வேண்டும். வடமாநில முதலாளிகள் பற்றி இவ்வளவு நேரம் பேசுகிறேனே, இது சம்பந்தமாக தமிழ்த்தேசியவாதிகள் பேசியிருக்கிறார்களா? பேசுவது கிடையாது. சென்னையின் ”நிலம், மனை, சொத்து, வணிகம்” (Real estate business) முழுவதும் வடமாநில கம்பெனியிடம் தானுள்ளது. 25 வருடத்துக்கு முன் வடமாநில கம்பெனியிடம் கிடையாது. ஒரு கம்பெனி /ரெண்டு கம்பெனி இருந்தது. நான் பேரை இங்கே சொல்ல முடியாது என்பதால் பேரை சொல்லவில்லை. வாய்ப்பு இருந்தால் எங்கள் மேடையில் சொல்கிறேன். ஆனால் எந்தெந்த கம்பெனி எப்போதெல்லாம் வந்தது? அதற்கு எப்படி எல்லாம் முதலீடு வந்தது என என்னால் பட்டியல் போட்டு சொல்ல முடியும். ஏன்னெனில் அந்த துறை சார்ந்து ஆலோசராக இருந்தவன்.

கேள்வி: உலக மயமாக்களுடைய ஒரு அங்கம் தானே இதெல்லாம்? இதிலிருந்து நாம் தப்பிக்க முடியாது இல்லையா?

பதில்: இந்த உலகமயமாக்களில் தமிழ்நாட்டு முதலாளிகள் ஏன் வட மாநிலத்திற்கு சென்று வேலை பாக்க முடியவில்லை? அதுவும் சமமாக நடக்க வேண்டும் அல்லவா? இந்தியாவில் ஒற்றுமை ஆகா ஓஹோ என வியாக்கியானம் பேசிகிட்டு இருக்காங்களே, ஜிஎஸ்டி வந்தால் சமப்படுத்துவோம், எல்லாவற்றையும் பண்ணுவோம், ஒரே பாரத் என்றெல்லாம் பேசுகிறானே, தமிழ்நாட்டிலிருந்து இந்தியா முழுக்க போன முதலாளி யார்? கேரளாவிலிருந்து இந்தியா முழுக்க போன முதலாளி யார்? கர்நாடகாவிலிருந்து போன முதலாளி யார்? அப்படியே பட்டியல் சொல்ல சொல்லுங்க பார்ப்போம்.

மேற்குவங்க முதலாளிகள் மிகப்பெரிய அளவுக்கு சுபாஷ் சந்திர போஸ்க்கு பின்னணியில் இருந்தவர்கள். அங்கிருந்து வந்த முதலாளிகள் யார்? அதன் என்ன எப்போது பார்த்தாலும் குஜராத் முதலாளி மட்டுமே எல்லா இடத்திலும் இருக்கிறான். அவன் மட்டும் எப்படி வளருகிறான்? அதானி அம்பானி இப்போது வளர்ந்து கொண்டிருக்கிறான். ஆனால் சோயத்ராம் லால்பாய் குரூப், பஜாஜ் குரூப்ஸ் இவர்களெல்லாம் பிரிட்டிஷ் காலத்துக்கு முன்பிலிருந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லா வசதிகளும் இன்றைக்கும் வரைக்கும் கொடுக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அதான் இந்தியாவில் நடந்திருக்கிறது.

தமிழ்நாட்டுக்குள் இருந்து முக்கிய தயாரிப்புகள் மார்வாடிகளிடம் தான் கொடுக்கப்படுகிறது. ஏன் தமிழ்நாட்டு முதலாளிகளால் பண்ண முடியாதா? இங்கே இவ்வளவு பொறியியல் தொழில்நுட்ப மேம்பாடு இருக்கிறது, மனித வளங்கள் இருக்கிறது. தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் செய்வதற்கு தமிழர்களுக்கு அவ்வளவு வாய்ப்புகள் இருக்கிறது.

கேள்வி: மாநில உரிமை பேசக்கூடிய திமுக இது குறித்து பேசுகிறதா?

பதில்: திமுகவின் தொழில் கொள்கை ஜிடிபி பற்றி பேசுகிறார்களே, அவர்களின் தொழில் கொள்கை என்ன? எந்த தொழிற்சாலைகளை வளர்க்க  போகிறார்கள்?

இப்போது உதாரணத்திற்கு ஒரு நாற்காலி அல்லது கடிகாரம் போன்றவை உற்பத்தி செய்வது ஒரு நிறுவனமாக இருக்கலாம். இந்த வடிவமைப்பு செய்வது ஒருவன் இருப்பான். இந்த வடிவமைப்பு செய்வதற்கு படைப்பு செயல்முறை (creative process) திறன் ஒன்று இருக்கிறதா? இதற்கு வடிவமைப்பு படிப்பதற்கான பயிற்சி நிறுவனம் வட மாநிலங்கள் தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரி நிறுவனங்கள் உள்ளது. ஆனால் என்ன பயிற்சி நிறுவனம் இருக்கிறது? பொறியியல் கண்டுபிடிப்புகள் நிகழ்வதற்கும், அவை அழகியல் ரீதியாகக் கட்டமைக்கப்படுவதற்கும் தேவையான படைப்பாற்றல் துறைக்கும், புதுமையான வடிவமைப்புத் துறைக்கும் திமுகவிடம் என்னென்ன கல்லூரிகள் உள்ளன? வெள்ளைக்காரன் இருந்த அதே கலை மற்றும் அறிவியல் கல்லூரி வைத்துள்ளனர். அதன்பின் தமிழ்நாடு அரசு முதலீடு செய்துள்ளது?

கேள்வி: கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்கிறார்கள், நான் முதல்வர் திட்டங்கள் முன்னிறுத்தி தமிழ்நாடு கல்வியில் முன்னேறி விட்டது என்கிறார்களே?

பதில்: வட மாநிலத்தை பொறுத்தவரைக்கும், இங்கு கல்வி கட்டமைப்பு உருவாகி இருக்கிறது. கல்வி கட்டமைப்புக்குள் கல்வி பாடத்திட்ட கட்டமைப்புகள் ஒன்று இருக்கிறது. நீங்க பொருளாதாரத்திற்கான சிறப்புப் பள்ளி (School of Excellence for Economics) ஏதாவது இருக்கிறதா? நமக்கு எத்தனை கல்வி நிறுவனங்கள் இருக்கிறதே, பொருளாதாரத்தில் வளர வேண்டுமானால் பொருளாதார அறிஞர்களை உருவாக்குவதற்கான எத்தனை நிறுவனங்கள் இங்கே உருவாக்கி இருக்கிறோம்? எத்தனை மேலாண்மை ஆலோசனை நிறுவனங்கள் (Management consulting firms) உருவாக்கி இருக்கிறோம்? எத்தனை தொழில்நுட்ப கண்டுபிடிப்பு நிறுவனங்கள் (Technological Innovation Institutes) இருக்கிறது?

கேள்வி: நீங்கள் பேசுவதில் சில முரண்பாடுகள் இருக்கிறது. வட மாநிலத்தில் இருந்து இங்கே பணியாளர்கள் வருவதற்கு காரணம்: அங்கு படிப்பறிவு இல்லை, ஒரு பக்கம் தமிழ்நாட்டில் நாம் வளர்ந்துவிட்டோம் என பேசுகிறீர்கள், இன்னொரு பக்கம் போதுமான விசயங்கள் இல்லை என சொல்கிறீர்களே?

பதில்: நான் அடுத்த கட்ட வளர்ச்சி திட்டத்துக்கு எதுவுமே இல்லை என்கிறேன். இதே நீடித்தால் தேங்கி போகும். இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பொருளாதார வளர்ச்சி எடுத்து கொண்டால், பன்னாட்டு நிறுவனங்கள் இங்கே வந்து நிறுவனங்களை ஆரம்பித்து இருக்கிறார்கள். இங்கு இருக்கின்ற வாகனத் துறை (Automobile sector) பெரியது. எல்லால் உலகத்தினுடைய சிறந்த நிறுவனங்கள் இங்கே வந்துள்ளது. எல்லா தொழில்நுட்பமும் வெளியில் இருந்து வந்துள்ளது. அதற்கான மூலக்கூறு தயாரிப்பு (Component Making) இங்கே செய்கிறீர்கள். நாளைக்கு இந்த பொருட்களோடு காலி செய்துவிட்டு வெளிய போய்விட்டால் இந்த நிறுவனம் மூடிவிடும். அப்போது அரசு என்ன அறிவு வளர்ச்சியை கொண்டு வந்தீர்கள்?

தமிழ்நாட்டிலிருந்து ஒரு நல்ல மோட்டார் சைக்கிள் அமைப்புகள் (Motorcycle Systems ) ‘டிவிஎஸ்-TVS’ ஒன்று இருக்கிறது. அதன்பின் எதுவுமே உருவாக்க முடியாதா? நம்மால் ஒரு கார் வடிவமைப்பு பண்ண முடியாதா? வாகன நிறுவனங்கள் வருகிறது. ஏன் அந்த திட்டங்களுக்கு உட்பட்டதை நம்மால் பண்ண முடியவில்லை? ஒரு மின்சார பொருட்களோ அல்லது தானியங்கி மோட்டார் வாகன பொருட்களோ அல்லது வேறு பொருட்களோ ஏன் புதுமையாக நடக்கவில்லை? அதற்கான தொழிற்பயிற்சி மையங்கள் என்ன இருக்கிறது? ஒரு பக்கம் பொறியியல் வைத்தாலும், இன்னொரு பக்கம் இங்கு எத்தனை அடிப்படை ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளன? பொருளாதாரம், சமூக அறிவியம், சட்டம் தொடர்பாக நம்மிடம் எத்தனை சிறப்புப் பள்ளிகளை நிறுவியுள்ளோம்?

கேள்வி: அடுத்த கட்ட வளர்ச்சிக்கான எந்த திட்டங்களும் இல்லை என்கிறீர்களா?

பதில்: எதுவுமே கிடையாது. எல்லாம் மாவட்ட செயலாளர் பெரிது பெரிதாக கல்லூரி கட்டி மாணவனை பிடித்துப் போட்டு படிக்க வைத்து வெளியே அனுப்புகிறார்களே, என்ன தரம் இருக்கிறது? என்ன எதிர்காலத் தன்மையுடன் இருக்கிறது? எதுவுமே நமக்கு இல்லை. எம்பிஏ இல்லாமல் தொழில்முனைவு (Entrepreneurship) எப்படி வளர்ப்பீர்கள்? எம்பிஏ படிப்பு இருக்கிறதே தவிர அதற்கான சிறப்பு மையங்கள் இல்லை.

வட நாட்டில் உள்ள பெரிய பெருநிறுவனங்களை உருவாக்கிய எம்.பி.ஏ மாதிரிபோல அல்லது ஐஐஏஎம்(IIAM) போன்ற நிறுவனங்களை உருவாக்கப்பட்டதைப் போன்ற நிறுவன்ங்களை தமிழ்நாட்டில் உருவாக்க முடியாதா? ஐஐடியில் நவீன தொழில்நுட்பம் சம்பந்தமான புதிய தொழில் முனைவோருக்கான தேவையான மையத்தை வைத்துள்ளார்கள். அதுபோன்று ஏன் தமிழ்நாட்டில் உருவாக்கவில்லை.  

கேள்வி: மாநில அரசை சொல்கிறீர்களா?

பதில்: மாநில ஏன் செய்ய முடியாதா? என நான் கேட்கிறேன். இங்கு கட்டிடக்கலைத் துறையில் ஏராளமான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்போது இந்தியாவின் சிறந்த கட்டிடக்கலைக் கல்லூரி இங்கு இருந்திருக்க வேண்டும். இந்தியாவின் சிறந்த மின்னணு சாதன அமைப்பு இங்கு நிறுவப்பட்டிருக்க வேண்டும். சிப் தயாரிப்புக்கான மைக்ரோசாஃப்ட்டின் ஆராய்ச்சி ஆய்வகங்களை நாம் இங்கு கொண்டு வர முடியும். இதெல்லாம் செய்ய முடியும். ஆனால் செய்யவில்லை.

இங்கு குறிப்பிட்ட அடிப்படை வடிவமைப்பு உள்ளது. நீங்கள் கலை மற்றும் கைவினைப் பொருட்களைச் செய்கிறீர்கள். அதில் என்ன வகையான வடிவமைப்பு இருக்கிறது? தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் ஜவுளி வடிவமைப்பிற்காக தேசிய நிறுவனங்கள் நிஃப்ட் (NIFT) இருக்கிறது, அல்லது காலணி வடிவமைப்பு நிறுவனம் இருக்கிறது. மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் போன்ற நிறுவனங்கள் உள்ளன. இவையெல்லாம் இருக்கும்போது, ​​தமிழ்நாடு அரசு ஏன் இதைச் செய்யவில்லை?

கேள்வி: இதன் பின்னணி குறித்து பேச வேண்டியது அவசியம் இருக்கிறது என்கிறீர்களா?

பதில்: திமுகவுக்கு அடுத்த கட்ட வளர்ச்சி பற்றியான ஒரு சமூக பொருளாதாரத்தோடு இணைந்த கல்வி கட்டமைப்பை யோசிப்பதற்கான அமைப்பை உருவாக்கவில்லை.

கேள்வி: சிந்தனை இல்லை என்கிறீர்களா?

தில்: இன்னும் உருவாக்கவில்லை. இந்தியாவில் மற்ற மாநிலங்களோடு நன்றாக இருக்கிறோம். நாம் சொல்வது அடுத்த கட்டம் என்னவாக இருக்கிறதோ அதைதான் பார்க்க வேண்டும். வெறும் 1 ட்ரிலியன் பொருளாதாரம் பற்றி பேசுகிறார்கள். ஜிடிபி மட்டுமே படமாக கொடுப்பதை நான் நிராகரிக்கிறேன். ஜிடிபி உற்பத்தி எத்தனையோ காரணங்களை வைத்து செய்யலாம். மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) எப்படி உருவானது? அது எப்படித் தோன்றியது என்று உங்களுக்குத் தெரியாதா? அது சமூகத்தின் வளர்ச்சியையோ அல்லது சமூகத்தின் பொருளாதார ஆரோக்கியத்தையோ பிரதிபலிக்கும் ஒரு குறியீடு அல்ல. அந்த மாதிரியான அளவீடுகளை நம்மால் எடுக்க முடியாது.

ஒப்பந்த ஊழியர் எடுத்துக்கொண்டால் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் இருக்கிறார்கள். இவர்களை ஒழுங்குபடுத்தாமல் ஓபிசி, எஸ்.சி சமூக இளைஞர்களை அல்லது குடும்பத்து மக்களை எப்படி வளப்படுத்துவீர்கள்? இவர்கள் பட்டயப்படிப்பு படித்தவர்களாக இருப்பார்கள்.

கேள்வி: அடுத்த கட்டத்திற்கு போக இவ்வளவு விசயங்கள் தேவைப்படுகிறது என்கிற அடிப்படையில் சொல்றீங்க, ஆனால் திமுக அரசு சிறந்து விளங்குகின்ற நோக்கத்தில் விளம்பரப்படுத்தப்படுகிறதா? என்று அரசின் செயல்பாட்டை பார்க்கிறீர்களா? இதைதான் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகிறார்களா?

பதில்: எதிர்கட்சி குற்றம் சாட்டுகின்ற கட்சிகளின் யோக்கியதை என்ன? மற்ற மாநிலத்தில் என்ன செய்கிறது? தமிழ்நாட்டில் எதிர்கட்சி ஒன்று கடந்த நான்கு வருடங்களாக தூங்கிவிட்டது. அரசு மாஞ்சோலை பிரச்சனை தீர்க்க முடியும். திமுக அரசு செய்யவில்லை.

நாங்க என்ன சொல்றோம்? மாஞ்சோலை ஒரு தனியார் கம்பெனி சுமார் 15000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறான். அவனிடம் 50/ 100 கோடி ரூபாய் வாங்கி, அந்த மக்களுக்கு மீள்குடியேற்றம் செய்ய திமுக அரசுக்கு வக்கில்லை. நான்கு தலைமுறையாக அந்த மக்கள் அங்கு உழைத்துள்ளார்கள். வெறும் இரண்டு லட்ச ரூபாயை கொடுத்து அனுப்பியுள்ளனர். இது திமுக அரசுக்கு வெக்க கேடு. இந்த விசயத்தில் தொழில் அமைச்சர் என்ன செய்கிறார்? அந்த பாம்பே பர்மா ட்ரேடிங் கார்ப்பரேஷன் (பிரிட்டானியா பிஸ்கட் கம்பெனிக்காரன்)  வருடத்திற்கு 15000 கோடி ரூபாய் ஈட்டுகிறாயே, அந்த நிறுவனத்திடம் தட்டி கேட்டு மாஞ்சோலையிலுள்ள 2000 குடும்பங்களுக்கு 50/100 நட்டயீடு கொடுத்து குடியேற்றுவதில் செய்வதில் என்ன சிக்கல்? ஏன் செய்யவில்லை?

கேள்வி: பீகார் தேர்தல் போது தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை, அவர்களை வந்து தாக்கப்படுகிறார்கள் என பிரச்சாரம் கட்டமைக்கப்பட்டது. அது உண்மை இல்லை எனவிவாதங்கள் வந்தது. அங்கு அதை  நிரூபித்தார்களா? என தெரியவில்லை. இப்படியான சூழலில் திருத்தணி சம்பவம் இருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்? இதை அரசியல் ரீதியாக எப்படி எடுத்துக்கொள்வார்கள்? வடநாட்டு  மக்கள் பாதுகாப்பாக உணர்வார்களா? நாளைக்கு நம் தமிழக மக்களே ரயில் பொது போக்குவரத்தில் நிம்மதியாக போக முடியுமா? சட்டம் ஒழுங்கு அரசு கையாள தவறியதா? இந்த விவகாரத்தில் தமிழக அரசினுடைய ரோல் என்னவாக இருக்கிறது?  

பதில்: நீங்கள் இப்படி கேட்டால் ’ரயில்வே போலீஸ் காவல்துறை’ என்ன செய்கிறது என்ற கேள்வி கேட்கனும்? நாங்கள் ரயில்வே நிலையத்தில் துண்டறிக்கை எடுத்து கொடுத்தால் வழக்கு போடுகிறது, அங்கே சுவரொட்டி ஓட்டினால் வழக்கு போடுகிறது. ஆனால் கத்தியை வைத்து சுற்றிக்கொண்டு இருக்கான் ரயில்வே காவல்துறை என்ன செய்கிறது? இது ஒன்றிய அரசாங்கத்தினுடையது தானே, அது என்ன செய்கிறது? அப்போது அந்த கேள்விக்கு தான் போகனும். இது ஒரு தனிப்பட்ட குற்றம்.

ஒரு வெறுப்பு அரசியலாக தமிழ்நாட்டில் ஆரம்பிக்கிறது என்று பொதுமைப்படுத்தி பேசுவதை நாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அப்படியெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் யாரையும் வெறுக்கக்கூடியவர்கள் அல்ல. அப்படி இருந்தால் ஏகப்பட்ட நடந்திருக்கும்.

கேள்வி: அந்த சம்பவத்தில் மத்திய ரயில்வே போலீஸ் என்ன செய்கிறது எனகேட்குறீர்கள், அந்த சிறார்கள் தொடர்ச்சியாக துன்புறுத்தி கொண்டே இன்ஸ்டாகிராமில் போட்டுகிறார்களே?அதற்கு தமிழ்நாடு காவல்துறை என்ன சொல்கிறது?

பதில்: அதுதான், ஏற்கனவே தமிழ்நாடு காவல் துறையை பற்றி சொல்லி விட்டேனே, கஞ்சா புழக்கத்தை நிறுத்த முடியாது என்பதை.

கேள்வி: ஏன் அரசியிலிருந்து காவல் துறை மட்டும் தனியா பிரித்து சொல்றீங்க? தமிழ்நாடு அரசு மீது ஏன் குற்றம் சாட்டு வைக்கவில்லையே நீங்கள்?

பதில்: நான் தான் திமுக அரசு கட்டுப்படுத்தியிருக்க வேண்டும் என பேசிவிட்டேனே, எனக்கு யாரையும் காப்பாற்ற வேண்டிய தேவை கிடையாது. திமுக அரசு காவல் துறையை கட்டுப்படுத்தவில்லை. காவல் துறையினுடைய மனித உரிமை மீறல் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அதை எடுத்திருந்தால் காவல் துறை கட்டுப்பட்டு இருக்கனும். காவல் துறை பிஜேபிக்கு சார்பாக, இந்த சமூக விரோதிகளுக்கு சார்பாக, பல இடங்களில் வேலை செய்கிறது.

தமிழ்நாட்டில் நகை திருட்டு& செயின் பறிப்பு நடக்கிறது. அந்த ஆட்களை எல்லாம் கைது பண்றாங்க, ஆனால் அவன் கொண்டு போய்  விற்ற அந்த முதலாளி என்றாவது கைது செய்து பார்த்து இருக்கீர்களா? ஒரு நாளைக்கு 100 செயின் அறுப்பு நடக்கிறது. ஒரு செயின் ஐந்து பவுன் என்றால் 500 பவுன்.  

கேள்வி: முதலாளிக்கு எப்படி தெரியும் அது வந்து செயின் பறிப்பு என்று?

பதில்: தெரியாமலா கடை நடத்துகிறான், ஆளை பார்த்தாலே தெரியாதா? அவனுக்கு ஒரே வாடிக்கையாளர் தானிருப்பான். அது போலீஸ் அதிகாரியிடமே கேட்டுருக்கிறேன். திருடுபவனை கண்டுபிடித்துவிடலாம் ஆனால் அந்த முதலாளி மேலல்லாம் கை வைக்க முடியாது என்கிறார்கள். காவல் துறை நினைத்தால் சரி பண்ண முடியும். காவல்துறை மீறி எல்லாம் ஒன்னும் கிடையாது.

உண்மையை சொல்லப்போனால் காவல்துறை இல்லாமல் நன்றாகவே இருப்போம். நாம் ஹெல்மெட் எடு, லைசன்ஸ் எடு, அதை எடு, இதை எடு என 1000 கேள்விகளை கேட்கிறார்களே, இந்த கஞ்சா பொருள் எங்கு போகுகிறது வருகிறது என கண்டுபிடிக்க முடியாதா? 10 மணிக்கு மேல் கடை திறக்க கூடாது, 10 மணிக்கு மேல் சோறு சாப்பிடக் கூடாது, 10 மணிக்கு மேல டீ குடிக்க கூடாது, டீ குடித்தால் தேச குற்றம்/ ராஜதுரோகம் அளவுக்கு நம்மிடம் போலீஸ் நடத்துகிறது. அந்த கஞ்சாவில் கவனம் இல்லையே!

சாமானிய மக்களிடம் வீராப்பு காட்டக்கூடிய காவல்துறை, சமூக விரோதிகள்/ சாதி சம்பந்தமான வழக்குகள் எதுவும் விரைவாக நடப்பது கிடையாது. அங்கு நடக்கக்கூடிய கொலைகள் சம்பந்தமாக போவது கிடையாது. உதாரணத்திற்கு கவின் கொலையில் அந்த காவல்துறையை சேர்ந்த அம்மா கைது செய்யவில்லை. இது எல்லா நெட்வொர்க் சேர்ந்துதான் இயங்கிகொண்டு இருக்கிறது. குற்றமயமாக்கலின் அமைப்பாக மாறி நிற்கிறது. அது நடைமுறைப்படுத்துவதற்கு நாம் எல்லாரும் சேர்ந்து நின்று சண்டை போட்டால்தான் முடியும்.

நாம் ஒட்டுமொத்த காவல்துறைக்கு அத்தனை பேரையும் குற்றவாளியாக பேசவில்லை. காவல் துறை அடிமட்டத்தில் வேலை செய்யக்கூடியவர்கள் நெறுக்கப்படுகிறார்கள். கசக்கி பிளியப்படுகிறார்கள். அவர்களுக்கு போதுமான விடுமுறையோ/ ஓய்வுகளோ கிடையாது. அவர்கள் ஓய்வு எடுக்கக்கூடிய அறையே ஒழுங்காக இருக்காது. அவர்களும் மனுதர்கள் தானே. வெள்ளைக்காரன் கொண்டு வந்த காக்கி சட்டையும், பூட்சையும், தொப்பியும் போட்டு 40 டிகிரி வெயிலில் பணியில் நிற்பது கூடவா யோசிக்க மாட்டார்கள். ஏன் பருத்தி துணியில் தைத்து மாற்று ஏற்பாடு செய்ய முடியாத ஒரு அமைப்பு. இந்த அமைப்புதான் ஐபிஎஸ் அதிகாரிகளால் நடத்தப்படுகிறது. அந்த ஐபிஎஸ் அதிகாரிகள் பயிற்சி இந்திய அரசாங்கத்தினுடையது.  

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மனித மக்கள் விரோதமாக பெரும்பாலான அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் செய்யக்கூடிய ஊழல்கள் வெளியில் வருதில்லை. அவர்கள் மேல் அமலாக்கத்துறையும் போவதில்லை. அவர்கள் விருப்பத்திற்கு முடிவெடுக்கிறார்கள். வீட்டை இடி என்றால் இடிக்கிறார்கள், தெருவில் இயங்கும் சின்ன சின்ன கடைகள் எல்லாம் தேவையில்லை என்றால் தூக்கிவிடுகிறார்கள்.

கேள்வி: அமைச்சர்களின் அதிகாரத்தை விட அதிகாரிகள் செயல்படுகிறார்களா?

பதில்: அன்றாடம் நிர்வாகம் தானே, இதை அமைச்சர்கள் கேள்வி கேட்டு தடுத்து நிறுத்த வேண்டும். அந்த அளவுக்கா அமைச்சர் இருக்கப் போகிறார். இன்றைக்கு இருக்கக்கூடிய திமுக அதிமுக கட்சிக்கும் சாதாரண மக்களுக்கும் எந்த தொடர்புமே கிடையாது. ஒரு காலத்தில் டீ கடையிலோ சலூன் கடையிலோ, மளிகை கடையிலோ போன்ற எல்லா இடத்திலும் கரைவேட்டிய பார்க்க முடியும்.

கேள்வி: அப்போது நீங்கள் வாக்களித்த அமைச்சர்களையோ, எம்எல்ஏக்களையோ கேள்வி கேட்காமல் அதிகாரிகளை குற்றம் குற்றம் சொல்கிறீர்களா?

பதில்: இரண்டு பேரையும் தான் கேட்க சொல்றேன். ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டபின் வீட்டில் படுத்து தூங்கினால், அந்த கட்சி உங்களுக்கு சேவை செய்யும் என நினைக்குறீர்களா? கேள்வி கேட்டால்தான் பதில் கிடைக்கும். 5 வருடத்திற்கு ஒரு தடவை ஒரு மணி நேரம் வரிசையில் நின்று முத்திரை குத்திவிட்டு வந்தால் நாடு நன்றாக ஆகிவிடுமா? ஆட்சி செய்யக்கூடிய ஆட்சியாளர் ஒழுங்காக இருக்கிறாரா கவனிக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கு இருக்கிறது.

கேள்வி: தமிழகத்தில் வடமாநில தொழிலாளருக்கு எதிரான வெறுப்பு பெரிய அளவில் இல்லை என சொல்கிறீர்கள். ஆனால் தினம் தோறும் சமூக வலைதளத்தில் வடமாநிலத்தாரை கேலி பண்ணுவதை பார்க்கிறோம். அப்படி எதிரான வீடியோக்கள் வரும்போது கொண்டாடுவது எல்லாம் வெறுப்புணர்வு  மனநிலை தானே வெளிப்படுத்துகிறது?

பதில்: அந்த மனநிலை ஊக்குவிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. அது வந்து தவறான விசயம். அவர்களை தொழிலாளர்களாக பாருங்கள். அவர்களுக்கு குடும்பம் இருக்கிறது. அந்த குடும்பத்தை விட்டு வந்து இங்கே வேலை செய்கிறார்கள். அவர்களும் மனிதர்கள்தான். நடைமுறையில் வட மாநிலத்தவரை வெறுப்பாக யாரும் நடத்துவதில்லை. ஏன்னெனில் அந்த தொழிலாளர்களே சொல்லியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வேலை செய்வது என்பது மற்ற இடத்தோடு பாதுகாப்பாக இருக்கிறோம் என்று இன்றைக்கும் சொல்கிறார்கள். ஒருவேளை பாதுகாப்பு இல்லை என்றால் அவர்களே வர மாட்டார்கள். அப்படி வெறுப்புணர்வு ஒன்றும் நடக்கவில்லை.

கேள்வி: அப்படி ஒட்டுமொத்தமாக பாதிப்பு என்று இல்லை, ஒரு ஆரம்பம் நிலையில் இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது?

பதில்: முரண்பாடுகள் எப்பவுமே வரதான் செய்யும். முரண்பாடுகளின் கூர்மை அடையாமல் பாதுக்காப்பது நல்லது. நம் தொழிலாளர்கள் துபாயில், அபுதாபி, சிங்கப்பூர், மலேசியா வேலைக்கு போகிறார்கள். அங்கும் சில முரண்பாடுகள் வரதானே செய்கிறது. அது ஒரு சமயத்தில் வெடித்து பெரிதாகிறது, பின் மறுபடியும் சரி செய்யப்படுகிறது அல்லது அடக்கி ஒடுக்கப்படுகிறது. இதே போலதான் இங்கேயும் நடக்கிறது. முரண்பாடுகள் கூர்மை அடையாம பார்த்துக்க வேண்டிய பொறுப்பு எல்லோரிடமும் இருக்கிறது. அதே சமயத்தில் வட மாநிலத்தவருக்கு வாக்களிக்கும் உரிமை கொடுத்து, இங்கு யார் எம்எல்ஏ முடிவு செய்யும் அரசியல் அதிகார  உரிமையை கொடுக்கும் அளவுக்கு தமிழ்நாடு இழிந்தவர்களாக இருக்க முடியாது.

மாஞ்சோலை பிரச்சனையில் அந்த தொழிலாளர்களை முதலமைச்சர் சந்திப்பதற்காக மனித உரிமை செயல்பாட்டாளர்கள் அழைத்து போயிருக்கிறார்கள். அந்த மனித உரிமை செயல்பாட்டாளர் யார் என பார்த்து முன்னாடியே அதிகாரிகள் தடுத்து நிறுத்தி  வெளியேற்றி விட்டார்கள். மாஞ்சோலை தொழிலாளர்கள் உள்ள சந்திக்க கூடாது என கவனமாக பார்த்து அப்புறப்படுத்தி இருக்கிறார்கள். முதலமைச்சர் சந்திப்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லாமல் தடுக்கின்ற வேலையை அதிகாரிகள் முடிவு செய்கிறார்கள். அதிகாரிகள் தான் யார் யாரை சந்திக்க வேண்டும் என முடிவு செய்கிறார்கள். தமிழ்நாட்டினுடைய பிரச்சனையில் ஒன்றான மாஞ்சோலையில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து இருக்க வெண்டும். இதை மீறிதான் திமுக அரசு வேலை செய்திருக்கனும்.

கேள்வி: அப்போது மாஞ்சோலை பிரச்சனையில் அரசு தலையிடவில்லை அல்லவா?

பதில்: திமுக அரசு தலையிட்டு தீர்த்து இருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. அம்மக்களுக்கு எதிராகதான் இருக்கிறார்கள். அந்த கம்பெனிக்கு சாதகமாகதான் திமுக அரசு செயல்பட்டு இருக்கிறது. நான் பகிங்கரமாக குற்றம் சாட்டுகிறேன். அதில் எனக்கு எந்த தயக்கமும் கிடையாது.

கேள்வி: எட்டு வழி சாலைக்கு எதிராக போராடிய அதே திமுக அரசுதான் இன்றைக்கு பரந்தூருக்கு ஆதரவாக நிற்கிறது.

பதில்: எட்டு வழி சாலை போராடிய அதே அருள் ஆறுமுகத்தை தான் குண்டர் சட்டத்தில் போட்டுள்ளனர். அதே அருள் ஆறுமுகம் முன்பு அவருக்கு (திமுகவுக்கு) ஆதரவாகதான் இருந்தார். ஆனால் அவர்களையே கைது பண்ணக்கூடிய இடத்தில்ல நிற்கிறார்கள்.

வளர்ச்சி திட்டங்கள் சம்பந்தமாக சிக்கல் ஒரு பக்கம் இருக்கலாம். தொழிலாளர்கள் சம்பந்தமான எடுக்கின்ற முடிவில், குறிப்பாக மாஞ்சோலை தொழிலாளர்கள் நான்கு தலைமுறையாக உழைத்தவர்களை ”இந்தியாவில் வரலாற்றில் ஒட்டுமொத்த தொழிலாளர்களையும் விருப்ப ஓய்வு கொடுத்து, மூடப்பட்ட கம்பெனியாக அறிவிக்கப்பட்டது தான் மாஞ்சோலை கம்பெனி”.  இதைவிட கொடுமை என்ன இருக்கும்?

பத்திரிக்கையாளர்: நிறைய தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி தோழர்.

தோழர் திருமுருகன் காந்தி: நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »