பார்ப்பன திமிர் தலைக்கேறிய தினமலர்!

 “மதம் மனிதனை மிருகமாக்கும்; சாதி மனிதனை சாக்கடையாக்கும்!” என்ற தந்தை பெரியாரின் கூற்றுக்கு ஏற்ப சாதிவெறி பிடித்து சாக்கடையாய் மாறிப்போன தினமலர் என்கிற பார்ப்பன ஆதிக்க நாளேடு 31.8.23 அன்று அதன் சேலம் மற்றும் ஈரோடு பதிப்பின் முதல் பக்கத்தில் “காலை உணவுத் திட்டம், மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு, ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது” என்ற தலைப்பில் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் சமூகநீதி கண்ணோட்டத்தில் தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள காலை உணவு திட்டத்தை, சமூகநீதிக்கு எதிரான பார்ப்பனிய வன்மத்தோடு இழிவுபடுத்தி, அருவருக்கத்தக்க வகையில் செய்தியை வெளியிட்டது.

நாட்டின் முதல் குடிமகன் எனக் குறிப்பிடப்படும் குடியரசு தலைவரே ஆனாலும் அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதற்காக அவரை கோயிலுக்குள் அனுமதிக்காது இன்றும் வர்ணாசிரம முறையை மிகத் தீவிரமாகக் கடைபிடித்து வரும் ஆதிக்க உயர்சாதி வெறிப் பிடித்ததுதான் பார்ப்பன-சனாதன இந்துத்துவ பாசிச பாஜக கும்பல். கல்வியும், அறிவியலும் வளர்ந்து நிற்கும் இந்த காலத்திலேயே பார்ப்பனர்கள் இத்தகையில் கோலோச்சி வருகின்றார்கள் என்றால் இவர்களின் முன்னோர்கள் எத்தகைய அடக்கு முறைகளை ஏவி இருப்பார்கள்?

இதுபோன்றே பன்மடங்கு வன்மத்தோடு சமூக நீதிக்கு எதிராக குலக்கல்வி திட்டத்தைக் கொண்டு வர முயற்சித்த ஆதிக்கவாதியான பார்ப்பன ராஜாஜியின் சூழ்ச்சியை தந்தை பெரியாரின் அதிரடி அதிர்ச்சி வைத்தியங்கள் வீழ்த்தியது. பின்பு காமராஜர் முதலான திராவிட ஆட்சியாளர்களால் தற்போது இந்தியாவிலே கல்வியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. அன்று முதல் இன்று வரை கல்வியின் மகத்துவத்தை அறிந்த தமிழ்நாட்டில் பிள்ளைகளை பள்ளிக்கு வர வைப்பதற்காக வழங்கப்பட்ட மதிய உணவு இன்றளவும் திராவிட கட்சிகளால் பல பயனுள்ள வகையில் மாறுதல்கள் செய்யப்பட்டு, வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

எப்படியாகினும் பார்ப்பனர் அல்லாதோர் பிள்ளைகளும் பார்ப்பனர்களுக்கு நிகராக கல்வி கற்று நாட்டின் அனைத்து உயர் பதவிகளிலும் அமர்த்தப்பட வேண்டும் என்ற உயரிய திராவிட சமூகநீதி சித்தாந்தத்தை, இந்துத்துவ சனாதன வழிவந்த பாஜக நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை என பல வழிகளில் சிதைத்து கல்வியை நம் பிள்ளைகளிடமிருந்து பறித்து மீண்டும் பார்ப்பனர்கள் மற்றும் பணக்காரர்கள் வசம் ஒப்படைத்து வருகிறது.

ஆனால் தமிழ்நாட்டில் கொரோனாவிற்கு பிறகு மீண்டெழுந்து வரும் ஏழை எளிய மக்களின் பிள்ளைகளின் கல்வி எந்த விதத்திலும் தடைபட கூடாது என்று கொண்டுவந்துள்ள காலை உணவு திட்டத்தைக் கொச்சைப் படுத்தி கீழ்த்தரமாக செய்தியை வெளியிட்டுதான் அம்பலப்பட்டு நிற்கிறது பார்ப்பன தினமனு!

பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து அது கொண்டுவரும் மக்கள் விரோத சட்டங்களை முதல் ஆளாக விழுந்தடித்துக் கொண்டு ஆதரிப்பதும், அதில் உள்ள தீமைகளைக் கூட நன்மையென பக்கம் பக்கமாக எழுதுவதும் என சனாதன ஊதுகுழலாக மாறியது தினமலர். அதோடு, திராவிட ஆட்சியாளர்கள் எந்தவொரு நல்லத் திட்டத்தைக் கொண்டு வந்தாலும், அதை இழிவாக சித்தரித்து, கேவலமாக எழுதுவது இந்த தினமலர் பார்ப்பனர்களின் வாடிக்கையாக உள்ளது.

பெரும்பான்மை இந்து மக்களை முன்னேறச் செய்த இடஒதுக்கீடு கொள்கையை, ஆர்எஸ்எஸ் பாஜகவின் ஊதுகுழலான பார்ப்பன தினமலர் வெறுத்து ஒதுக்குகிறது. இதற்கு சான்றாக “இடஒதுக்கீடு கொள்கையை தீவிரமாக அமல்படுத்தியதால், முற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்த பாவப்பட்ட ஜென்மங்கள், தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும், கோவில் பூசாரிகளாக பொழப்பு நடத்த வேண்டியுள்ளது. ‘ஜஸ்ட் பாஸ் வெங்காயம்’ எல்லாம், மருத்துவராகி நமக்கு சிகிச்சை அளிக்கிறது!” என வைகை வளவன் என்ற பெயரில் அதன் மனதிலுள்ள வன்மத்தை கக்கியுள்ளது. அதோடு அதில் இட ஒதுக்கீட்டை வழங்கிய திராவிட ஆட்சியாளர்களையும் கொச்சை படுத்தி எழுதியுள்ளது தினமனு!

இதுதான் ஆர்எஸ்எஸ் பாஜகவின் உண்மை முகம்.

காசுக்காக பார்ப்பன-இந்துத்துவ (RSS) சித்தாந்தங்களை பரப்ப ஒப்புக்கொண்ட ஊடகங்களில் தினமலரும் ஒன்று என்று 2018ல் Cobrapost நடத்திய Sting Operation (சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களைப் பிடிக்க அல்லது தவறுக்கான ஆதாரங்களை வெளிக்கொண்டு வர மேற்கொள்ளபடும் இரகசிய நடவடிக்கை) 136ன் இரண்டாம் பகுதி காணொளி அம்பலப்படுத்தியது. பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்துத்துவ கருத்துக்களை பரப்பும் விதமாக சனாதன திரிபு மூடநம்பிக்கைக் கதைகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

அன்றாடம் இவர்கள் வெளியிடும் செய்திகளிலும் கார்டூன்களிலும் பார்ப்பன சனாதனப் பார்வை மேலோங்கியே காணப்படும். அதற்கு ஒரு சிறந்த உதாரணம், பார்ப்பன நிர்மலா சீதாராமன் குறித்த கார்டூனில் அவரை மிகவும் நேர்த்தியாக காட்டிய தினமலர், சூத்திர தமிழிசை செளந்திரராஜன் அவர்களை உருவக்கேலி செய்து மிகவும்  மோசமாக சித்தரித்து காட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலே அன்றிலிருந்து இன்று வரை பார்ப்பனர்களுக்கு எதிராக முதன்மையாக களம் கண்டு அவர்களின் சூழ்ச்சிகளை எல்லாம் முறியடித்து முன்னேறி வரும் தமிழர்களையும், தமிழ்நாட்டையும் இவர்கள் சாதி, மதத்தை வைத்து பிளவுபடுத்தும் தீய நோக்குடன் அவ்வபோது பொய் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். அப்படியான ஒரு செய்தி தான் “தமிழகம் 2 ஆக பிரிகிறது; உருவாகுது கொங்கு நாடு” என்ற செய்தி. நம் காசிலே நம்மை (தமிழ்நாட்டை) பிளக்க நினைக்கும் இவர்களின் இத்தீய நோக்கத்தை நம்மிடையே விதைப்பதற்கு, எத்தகைய கொடிய வன்மம் அவர்கள் மனதில் குடி கொண்டிருக்க வேண்டும்? அதோடு தமிழ்நாட்டில் பிழைப்பு நடத்திக்கொண்டு தமிழ்நாட்டையே “டமில்நாடு” என கேவலப்படுத்தும் கொடூர மனம் படைத்தவர்கள் தான் தினமலர் பார்பனர்கள்.

தினமலர், துக்ளக் போன்ற பார்பன நாளேடுகள் காவிரி போராட்டம், ஈழப் போராட்டம், ஸ்டெர்லைட், கூடன்குளம், நீட் என தமிழர்கள் உரிமைக்காக போராடும் போதெல்லாம் பொய்யான அவதூறுகளை வீசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளன. மேலும் இந்த சனாதன பார்ப்பன கும்பலுக்கு சூத்திரனை கண்டால் எப்படி எரியுமோ, அதேபோல மத சிறுபான்மையினரான கிறுத்துவர்களையும், இஸ்லாமியர்களையும் அறவே பிடிக்காது. அதன் வெளிப்பாடாக

இலங்கையில் 2019ல் ஈஸ்டர் பண்டிகையின் போது நடந்த குண்டு வெடிப்புக்கு, ‘ஓ..சேசப்பா.’ எனத் தலைப்பிட்டு ஏசுவை கேலி செய்யும் விதமாக செய்தி வெளியிட்டு, ஒட்டு மொத்த கிறித்தவர்களையும் கொதித்து எழ செய்து பிறகு மன்னிப்பு கேட்டது சாவர்கர் வழிவந்த பார்ப்பன தினமலர். அதேபோல முஸ்லீம்களையும் தீவிரவாதிகள் என சித்தரித்து எழுதியுள்ளது.

மேலும் மோடியின் புகழ்பாடி, அவரை பிரம்மாண்டபடுத்தி பொய் செய்திகளை வெளியிடும் வட இந்திய மோடி ஊடகங்களை போன்றே தமிழ்நாட்டிலும் பல உள்ளன. அதில் குறிப்பிடத்தக்க ஒன்று தினமலர்.உதாரணத்திற்கு

2023 பிப்ரவரி 13 அன்று “மோடி நினைத்தால் உக்ரைன்–ரஷ்யா போரினை முடிவுக்குக் கொண்டு வர முடியும்” என அமெரிக்கா கெஞ்சியதாக பொய் செய்தியை வெளியிட்டு மோடி புகழ் பாடியது தினமலர். இந்த செய்தியை பார்க்கும் போது “கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர், வானம் ஏறி வைகுண்டம் போனாராம்” என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது!

மேலும் மோடியின் புகழ் பாடி பரிசு பெறுவதற்காக தாய்லாந்து நாட்டிலுள்ள ஒரு பாலத்தை “மும்பை டு-நாக்பூர் எக்ஸ்பிரஸ்-வே ₹55,000 கோடியில் பிரமாண்ட சாலை” என்று கடந்த 7.12.2022 அன்று வீடியோ ஒன்றை வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.

இப்படியாக, இந்த சமூகநீதி மண்ணில் இருந்து கொண்டே கல்விக்கு எதிராக, இட ஒதுக்கீடுக்கு எதிராக, தமிழர்களின் உரிமைக்கு எதிராக, தமிழ்நாட்டிற்கு எதிராக, திமிராக கொக்கரிக்கும் இந்த பார்ப்பன கும்பலை தற்போது முதல்வர் ஸ்டாலினும் கூட சட்ட நடவடிக்கைகளை தவிர்த்து, கண்டனம் தெரிவித்து கடந்து போவதை ஏற்க முடியவில்லை. (ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தினமலருக்கு அரசு விளம்பரங்களை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது) மாறாக இந்த பார்ப்பன திமிருக்கு எதிராக போராடிய பெரியாரிய இயக்க தோழர்களை காவல்துறை மிகவும் கேவலமாக கையாண்டு உள்ளது. ராஜாஜி காலத்தில் எவ்வாறு பெரியாரும், பெரியாரிய தோழர்களும் கையாளப்பட்டார்களோ அவ்வாறே திராவிட மாடல்களின் 50 ஆண்டுகால ஆட்சியிலும் கையாளப்படுகிறார்கள் என்பது கசப்பான உண்மை.

தினமலரின் எழுத்தின் வன்மம் மிகக் கொடூரமானது, சமூக சீர்கேடானது. தினமலர் விதைக்கும் வன்மம் நிறைந்த எண்ணங்களே வன்முறையான பாசிச கயவர்களை உருவாக்கும். ஆகவே இப்படியான பாசிச மலர் பூக்கும் தினமலர் எனும் நச்சு மரத்தை வேரோடு பிடுங்கி எறிய வேண்டியது காலத்தின் கட்டாயம்.

ஒரு இந்திய ஆங்கில நாளிதழ் வங்காளிகளைக் கொச்சைப் படுத்தி தலைப்புச் செய்தி போட்ட அடுத்த நாளே, அந்நிறுவனம் அங்கு முழுமையாக மூடப்பட்டு வெளியேற்றப்பட்டது. அதுபோல மலையாளிகள், கன்னடர்கள், மராத்தியர்கள் என எவராயினும் தங்கள் இனத்தை இழிவுப் படுத்துபவரை மன்னிப்பதில்லை. ஆனால் தமிழர்களை இழிவுப் படுத்தும் எந்த நிறுவனமும் இங்கு தமிழ்நாட்டில் மூடப்பட்டதும் இல்லை, மன்னிப்பு கேட்டதும் இல்லை. இதற்கு காரணம் நமது தயக்கமும், சோம்பலும், போராட்டகுணமும் இல்லாத நிலையே ஆகும். இதனால் தான் தினமலர், இந்து, துக்ளக் உள்ளிட்ட பார்ப்பன நாளேடுகள் தொடர்ந்து தமிழர்களை இழிவுபடுத்தி வருகின்றன. இந்த இழிவை தவிர்க்க, அதை பெரியாரிய வழியில் துணிச்சலாக எதிர்த்து இந்த பார்ப்பன கயவர்களுக்கு தக்க பாடம் புகட்ட ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »