வங்காளிகளுக்காக போராடும் பாஜகவினர் ஈழத்தமிழர்களுக்காக போராடவில்லை ஏன்? – திருமுருகன் காந்தி

வங்காளிக்காக போராடும் பாஜகவினர், ஈழத்தமிழனுக்காக போராடவில்லை ஏன் என்ற விளக்கத்தை தனது முகநூலில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் டிசம்பர் 5, 2024 அன்று பதிவு செய்தது.

வங்கதேசத்தில் இந்துக்களுக்காக அழுகும் பாஜக தலைவர்கள், ஈழத்தில் தமிழர்களுக்காக குரல் கொடுக்கவில்லையே ஏன்? என தமிழர்கள் கேட்டால்,

‘…ஈழத்தமிழர் பிரச்சனையை இந்து பிரச்சனையாக ஏன் ஈழத்தமிழர்கள் அணுகவில்லை? அப்படி அணுகி இருந்தால் உதவி செய்வோம்..’, என சங்கிகள் ஒப்பாறி வைக்கிறார்கள்.

ஆனால், உண்மை என்னவென்றால், வங்கத்தில் பாதிக்கப்படுபவனில் பெரும்பான்மை ‘இந்து வங்காள-பார்ப்பனர்கள்’. இவர்கள் வேதம் ஓதும் ஆரிய பார்ப்பனர்கள். ஈழத்தில் ஆரிய பார்ப்பனர்கள் எவரும் கிடையாது. வேதம் ஓதுபவரும் கிடையாது. ஈழத்தில் செத்தவரெல்லாம் சூத்திர சைவ தமிழர்கள். தமிழ் சைவத்தை, இந்து மதமாக RSS சனாதனவாதிகள் ஏற்கமாட்டார்கள். (அர்ஜூன் சம்பத் ஈழத்திற்காக பேசுவது போல நடிப்பார். அவர் சூத்திர தமிழ் இந்து. ஆனால் நடிப்பிற்காக கூட எச்.ராஜா ஈழத்தமிழனுக்காக பேசமாட்டார். அவர் ஆரிய இந்து சனாதன பார்ப்பனர்)

வங்கத்தில் நெருக்கடிக்குள்ளாகிறவன் ஆரிய பார்ப்பனர்கள். இதனால் தான் ஈழத்து பிரச்சனை ‘இந்து பிரச்சனையாகவில்லை’ என்கிறான் பாஜக சங்கி. அதாவது சைவர்களானாலும், அவர்கள் (இருபிறப்பாளர்களான) ஆரிய பார்ப்பனர்களாக இல்லாத காரணத்தினால் தமிழர்களை காப்பது எங்கள் வேலையில்லை என்கிறான் சங்கி. ஆனால், வங்கத்து இந்துக்கள் வேதம் ஓதும் ஆரிய இந்து பார்ப்பனர்கள். ஈழத்தமிழர்கள் சைவ தமிழர்கள். சமஸ்கிருத வேதத்திற்கு பதிலாக தேவாரம்-திருவாசகம் பாடும் தமிழ் சைவர்கள். சமஸ்கிருத-வேத இந்துக்களை மட்டுமே அக்மார்க் இந்துக்களாக RSS-BJP கருதுவதால் வங்கதேச இந்துக்களுக்காக ஒப்பாரிவைத்து போராட்டம் நடத்துகிறது பாஜக.

ஆனால் தமிழ்-தமிழர்-சைவம்-தேவாரம்-திருவாசக எதிர்ப்பினாலேயே ஈழத்தமிழர்களின் படுகொலையை பாஜக தடுக்க முன்வரவில்லை. இதனால் தான் சோனியா (காங்கிரஸ் கட்சியோடு) கைகோர்த்து தமிழர்களை படுகொலை செய்ய ராஜபக்சேவை ஆதரித்தது.

இதற்கு காரணம் என்ன?

பாஜக-ஆர்.எஸ்.எஸ் சங்கிகள் தமிழ் பாடல்களை, தமிழர் வழிபாடுகளை சூத்திர இந்துவாக ஒதுக்குவார்கள். தமிழர் கோவில்களில் தமிழில் மந்திரம் சொல்ல இதனாலேயே எதிர்ப்பு தெரிவிப்பார்கள். தமிழர்கள் அர்ச்சகர்களாக மாறுவதை இதற்காகத்தான் தடுக்கிறார்கள். இந்த பின்னனியே ஈழத்தை பாஜக ஆதரிக்காது. ஆனால் வங்கத்து இந்துவிற்காக போராட்டம் நடத்தும்.

வங்கத்தின் ஆரிய பார்ப்பானுக்கு, தமிழ்நாட்டின் சூத்திர சங்கிகள், தங்களின் அடிமை விசுவாசத்தினால் போராட்டம் நடத்துகிறார்கள். அடிமைகளை பற்றி நமக்கு கவலையில்லை. ஆனால் சங்கிகளின் தமிழின வெறுப்பு வரலாறை இளைஞர்கள் அறிய சில தகவல்களை பகிர்கிறேன்.

சங்கிகளின் தமிழின துரோக வரலாறு’. ஈழத்தமிழர் இரத்தத்தில் கைகழுவும் சங்கிகளின் அரசியல்.

தனது தமிழின வெறுப்பு அம்பலமாகிறதென்பதால் பாஜக பதட்டமடைகிறது. இலங்கையில் தமிழர்களை கொலை செய்தது ‘சிங்கள பெளத்த இனவெறி’. இது இனவெறி மட்டுமல்ல, மதவெறியும் உள்ளடக்கியது. தமிழர் கோவில்களை ஆயிரக்கணக்கில் இடித்தது இலங்கை அரசு. இச்சமயத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இலங்கையின் பெளத்த இனவெறி அமைப்புகளோடு கைகோர்த்து ஆதரித்தது. கடந்த 10 ஆண்டுகளில் கிட்டதட்ட ஆயிரக்கணக்கான தமிழர் கோவில்கள் இடிக்கப்பட்டதற்கு பாஜக-மோடி அரசு எதிர்ப்பு எதையும் தெரிவிக்கவில்லை.

பொதுபலசேனா எனும் பெளத்த இனவெறி அமைப்பும், ஆர்.எஸ்.எஸ்சும் புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொண்டது. RSS, இந்துமகா சபையின் தமிழின எதிர்ப்பு வெறி, சிங்கள இனவெறிக்கு நிகரானது. 1930ல் பர்மாவில் பெளத்த பிக்குவான சாயா-சென் தலைமையில் நடத்திய எழுச்சியின் போது பெளத்த-மதவெறியர்கள் ரங்கூனில் தமிழர்களை படுகொலை செய்தார்கள். இக்கலவரம் பர்மாவின் உள்நாட்டில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையாக விரிந்தது. இதை செய்த புத்தமதவெறியர்களுக்கு ஆதரவான கடிதத்தை இந்துமகாசபை-ஆர்.எஸ்.எஸ் வெளியிட்டது. பெளத்தவெறியர்களுக்கும்-ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கும் நீண்டநாள் தொடர்புண்டு.

2009 ஈழ இனப்படுகொலை போர் நடந்த போது காங்கிரஸ் சிங்களத்திற்கு ஆதரவாக இருந்ததால், ஈழத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அன்றைய இந்தியாவின் எதிர்க்கட்சி தலைவர்களான பாஜகவின் அத்வானி, வாஜ்பாயை அணுகி தமிழர்கள் மீதான படுகொலையை தடுத்து நிறுத்த கோரிக்கை வைத்தார்கள். ஆர்.எஸ்.எஸ் தலைவர்களையும் சந்தித்து கோரினர். நாக்பூரில் நடக்கும் ஆர்.எஸ்.எஸ் மாநாட்டில் போரை நிறுத்தும் கோரிக்கைக்கான ஆதரவை வழங்க வேண்டுமென்றும் சில ஈழ தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவாரங்கள் இலங்கைக்கு ஆதரவாக காங்கிரஸின் பக்கம் நின்றார்கள். 2009க்கு பின்னர் ராஜபக்சேவோடும், ரணில் விக்கிரமசிங்கேயுடன், மைத்ரிபாலாவுடன் பாஜக கைகோர்த்து குஜராத்தி மார்வாடிகளுக்கு பல வணிக ஒப்பதங்களை பெற்றார்கள். இந்த ஒப்பந்தங்களை பெறுவதற்காக, ஐ.நா மனித உரிமை அவையில் இலங்கை மீது விசாரணை வருவதை 2014-15ல் தடுத்தது மோடி அரசு. இன்றுவரை தமிழர்களுக்கான நீதியை சர்வதேசத்தில் தடுத்து வைத்திருக்கிறது பாஜக.

இப்படியாக பாஜகவின் தமிழின விரோதம் நீண்ட வரலாறு கொண்டது.

வங்காளிக்காக போராடும் பாஜகவினர், ஈழத்தமிழனுக்காக போராட முன்வரமாட்டார்கள். ஏனெனில்.’தமிழர்கள் இந்துக்கள் அல்ல‘ என்பது சங்கிகளுக்கு நன்கு தெரியும். தமிழர்கள் தனித்த சமய-மத பழக்க வழக்கங்களை கொண்டவர்கள். நம் சாமி வேறு, சங்கிகளின் சாமி வேறு. அவனுக்கு ராமன் என்றால், நமக்கு அய்யனார். அவனுக்கு நெருப்பு புனிதமானது, நமக்கு தண்ணீர் தூய்மையானது. அவனுக்கு வெள்ளை என்பது ஒவ்வாமையின் அடையாளம். நமக்கு தூய்மையின் அடையாளம். அவனுக்கு பெண் என்பது தீட்டு, நமக்கு பெண் என்பது தாய்மை, தாய் தெய்வம், கொற்றவை, அம்மன். அவனுக்கு சமஸ்கிருதம், நமக்கு தன்னிகரில்லா தமிழ். அவன் உணவை அபிசேகம் செய்து வீணாக்குவான், நாம் படையிலிட்டு விருந்தளிப்போம். அவன் அனைத்திற்கும் ஆசைப்படு எனும் சன்னியாசி ஆவான், நாம் அனைத்தையும் துறக்கும் துறவியாவோம். தாய்மாமன்-மகள் உறவுகள் நமக்கு நெருங்கிய உறவு. அவனுக்கு இது கிடையாது. குலதெய்வங்கள் நம் முன்னோர் வழிபாடு. அவன் முன்னோர் வழிபாடு கொண்டவனல்ல. அவனுக்கு சொர்க்கம்-நரகம்-அடுத்தபிறப்பு உண்டு என்பான். நமக்கு மறுபிறப்பு நம்பிக்கைக்கு பதிலாக சந்ததிகள் மீது மட்டும் நம்பிக்கை உண்டு. நமக்கு ஐந்திணை நில வாழ்க்கை உண்டு. அவனுக்கு திணை வாழ்வு கிடையாது. இந்த பட்டியல் நீளமானது. இதனாலேயே அவன் வங்காள பார்ப்பானுக்காக குரல் கொடுப்பான், ஈழத்தமிழனை கொன்றழிப்பான். இதை புரியாதவன் சங்கியாவான் அல்லது சீமானின் தம்பியாவான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »