தொல். திருமா அவர்களின் மீது சாதிய தாக்குதலுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி உரை

விசிக தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களின் மீது சாதிய-மதவாத ஆற்றல்கள் தொடுத்துவரும் தாக்குதல்கள், உச்சநீதிமன்ற நீதிபதி கவாய் மீது ஆர்.எஸ்.எஸ் நடத்திய செறுப்புவீச்சு ஆகியவற்றைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அக்டோபர் 17, 2025 அன்று சென்னை ஆட்சியாளர் அலுவலகம் அருகே நடத்தது. இதில் மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துக்கொண்டு உரையாற்றிய தொகுப்பு.

இன்றைக்கு இந்திய பாராளுமன்ற அளவில் இந்தியா கூட்டணியில் சனாதன எதிர்ப்பு அரசியலை துணிச்சலாக பேசக்கூடிய ஒற்றை தலைவராக தோழர் திருமாவளவன் அவர்கள் நகர்த்துகின்ற அரசியல்தான், நாம் அனைவருக்குமான தலைமையாக இருக்கிறது. தேர்தலுக்கு அப்பாற்பட்டு பாரதிய ஜனதா கட்சியை சமூக தளத்திலும், அரசியல் தளத்திலும் எதிர்கொண்டு இருக்கக்கூடிய இயக்கங்களின் உடைய குரலாக, பாராளுமன்றத்தில் ஒழிக்கக்கூடிய எங்களது தலைவராகத்தான் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

இசுலாமியர்களை & தலித்துகளை வீதிகளிலே அடித்து கொலை செய்யக்கூடிய பாரதிய ஜனதா கட்சி கும்பல் உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் மீதும் தாக்குதல் நடத்துவோம், எங்களை கேட்பதற்கு ஆளில்லை என்பதை பட்டவர்த்தனமாக எடுத்துரைத்திருக்கிறார்கள். அண்ணல் அம்பேத்கர் அவர்களை கொண்டாடுவதாக சொல்லுகின்ற பாரதிய ஜனதா கட்சி தலித்துகளை பாதுகாக்கிறோம், அவர்களுக்கு அரசியல் அதிகாரத்தை பெற்று தருகிறோம் என்று சொல்லுகின்ற பாரதிய ஜனதா கட்சி, ஒரு தலைமை நீதியரசர் மீது நடத்தப்படுகின்ற இந்த வன்மையான தாக்குதலை கண்டித்து இதுவரை எந்த எழுச்சியான போராட்டத்தையும் நடத்தவில்லை, இந்த தாக்குதலுக்கு பின்னே பாரதிய ஜனதா கட்சியும் நரேந்திர மோடி அரசும் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த வகையிலே வன்முறை அரசியலை தமிழ்நாட்டிற்குள்ளும் கொண்டு வருவதற்கு பாஜக முனைகிறது.

தமிழ்நாட்டிலே உருவாகி இருக்கக்கூடிய பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்பு கூட்டணி என்பது இந்தியாவில் வேறு எங்கும் நாம் காண முடியாத ஒன்று. தமிழ்நாட்டில் தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டும் ஒரு பெரிய பறந்துபட்ட வலிமையான கூட்டணியை நாம் உருவாக்கி இருக்கின்றோம். தேர்தலுக்கு அப்பாற்பட்டு பாரதி ஜனதா கட்சியை சமூக தளத்திலும் அரசியல் தளத்திலும் எதிர்கொள்ளக்கூடிய, இயக்கங்களின் உடைய குரலாக, பாராளுமன்றத்தில் ஒலிக்கக்கூடிய எங்களது தலைவராகத்தான் தோழர் திருமா அவர்களை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். நாங்கள் வீதிகளிலே முழங்கக்கூடிய இந்த முழக்கங்களை பாராளுமன்றத்திற்குள் கொண்டு செல்லக்கூடிய ஒரு மாபெரும் தலைவர் அவர். எங்களுடைய பிரதிநிதியாகத்தான் நாங்கள் அவரை பார்க்கின்றோம்.

இந்தியாவிற்குள்ளாக பாரத ஜனதா கட்சி எப்படி ஆட்சியை பிடித்தது? இந்தியாவிற்குள்ளாக இருக்கக்கூடிய தலித்திய தலைவர்களை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வருவது ஒருவேளை. அந்த தலித்திய தலைவர்கள் தங்கள் கூட்டணிக்குள் வரவில்லை என்றால், பாரதிய ஜனதா கட்சியினுடைய எதிரணிக்கு சென்று விடாமல் தடுத்து விடுவது தனிமைப்படுத்தும். அந்த யுக்தியை இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கக்கூடிய பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டிலே முறியடித்த ஒற்றை தலைவர் தோழர் திருமா அவர்கள்தான். இந்தியா முழுவதும் பார்க்கின்றோம், பல்வேறு தலித்திய தலைவர்கள்/ அம்பேத்கரிய தலைவர்கள் பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணை வைத்திருக்கிறார்கள். மராட்டியம், பீகார் போன்ற எண்ணற்ற பகுதிகளில் அம்பேத்கரிய கொள்கை கொண்ட தலித்திய தோழர்கள்/ தலைவர்கள் பாரதிய ஜனதா கட்சியோடு எதிரணியை பலவீனப்படுத்துகின்ற அரசியலை செய்கிறார்கள். அல்லது, நாங்கள் பாரதிய ஜனதா கட்சியோடும் இல்லை பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரணியோடும் இல்லை என்று, தனியே நின்று பாரதி ஜனதா கட்சியினுடைய வெற்றிக்கு ஏதோ ஒரு வகையிலே துணை செய்து விடுகிறார்கள் என பாரதி ஜனதா கட்சிக்கு மிக நன்றாக தெரியும். ஆர்எஸ்எக்கு நன்றாக தெரியும்.

தலித்துகளை அரவணைத்து கொள்ளவில்லை என்றால், அல்லது தலித்துகளினுடைய அரசியலை தனிமைப்படுத்தவில்லை என்றால், தலித்துகள் அரசியல் எதிரணியோடு கூட்டு சேர விடாமல் தடுத்து விட்டோம் என்றால், தங்கள் வெற்றியை உறுதி செய்து விட முடியும் என்பதை பாரதிய ஜனதா கட்சி நம்பிக் கொண்டிருக்கிறது. ஆக பாரதி ஜனதா கட்சியினுடைய வெற்றியை உறுதி செய்யக்கூடிய வலிமை தலித்துகளுக்கு மட்டுமே இருக்கிறது என்பதை பாரதிய ஜனதா கட்சி நன்கு உணர்ந்துதான் தலித்திய தலைவர்களை குறி வைத்துக் கொண்டிருக்கிறது.

அந்த வகையிலே கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான ஒரு வலிமையான கூட்டணி உருவாகிவிட வாய்ப்பு ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில கவனமாக இருந்துதான், அவர்கள் விடுதலை சிறுத்தைகளை நோக்கி குறிவைத்து தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் என யோசித்து பாருங்கள்? இங்கே பாரதிய ஜனதா கட்சியை ஆர்எஸ்எஸ்சை இந்த சங்கித்தனமான அரசியல் எதிர்க்கக்கூடிய பல சனநாயக அமைப்புகள் இருக்கின்றார்கள். பெரியாரிய அமைப்புகள், திராவிட கட்சிகள், கம்யூனிஸ்டுகள், இஸ்லாமிய அமைப்புகள், என அனைத்து இருந்தாலும் கூட, எச் ராஜாவோ அண்ணாமலையோ விடுதலை சிறுத்தைகளையும் தோழர் தொல். திருமாவளவன் அவர்களை மட்டுமேதான் குறிவைத்து தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் கேட்கிறார்கள்? நீங்கள் ஏன் திமுகவுடன் இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான கூட்டணியில் அல்லது பாரதி ஜனதா கட்சி எதிர்க்கக்கூடிய கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இருக்க கூடாது என்பதிலே கவனமாக இருக்கிறார்கள். அவர் மேலதிகமாக சொல்கிறார்கள். நீங்கள் எங்களோடு வரவில்லை என்றாலும் பரவாயில்லை, நீங்கள் எங்களுக்கு எதிர்கூட்டணியில் இருக்கக்கூடாது என்று வெளிப்படையாக பேசுகிறார்கள். காரணம்: பாரதிய ஜனதா கட்சியின் வெற்றியின் தோல்வியை முடிவு செய்வதிலே அதனுடைய வலிமை பாரதிய ஜனதா கட்சிக்கு ஒருபொழுதும் கிடையாது. அதை நிர்ணயம் செய்யக்கூடியவர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் மட்டும்தான் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

இதேபோல பிற கட்சி தலைவர்களை பற்றி எச் ராஜா பேசிவிடுவாரா? அண்ணாமலை இவ்வாறு கொச்சையாக பேசிவிட முடியுமா? இன்றல்ல நேற்றல்ல 10 ஆண்டுகளாக தோழர் திருமாவளன் அவர்களை தனிப்பட்ட முறையில் தாக்குவதும், தனது ஐடிவிங்கை வைத்துக்கொண்டு திருமாவளவன் அவர்கள் மீது கடுமையான வசை சொற்களை வீசுவதை பார்த்து வருகிறோம். இதுபோல வேறு எந்த தலைவனை நோக்கியும் எந்த கட்சியை நோக்கியும் இந்த சங்கி கும்பல் செய்ததில்லை. காரணம் ஒன்றுதான். பாரதி ஜனதா கட்சிக்கு எதிரான வலுவான கூட்டணியை வீழ்த்துவதற்கு முதல் கட்டமாக விடுதலை சிறுத்தைகளை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியினுடைய திட்டமாக இருக்கிறது. அதை நடைமுறைப்படுத்துவதற்கு பல்வேறு வேலைகள் செய்கிறார். அதான் ஒரே நோக்கம்.

எச் ராஜாக்கு வேறு அரசியல் பேச தெரியாதா? ’அந்த ஆள் ஏன் திரும்ப திரும்ப விடுதலை சிறுத்தைகளை’ நோக்கி குறிவைத்து தாக்கி கொண்டிருக்கிறார். நீங்கள் எல்லாம்(விசிக) சிறிய கட்சிகள் என்று சொல்லலாம். ஆனால் சிறிய கட்சிகள் தான் தமிழ்நாட்டின் அரசியலை முடிவு செய்திருக்கிறது என்பதை நமது எதிரிகள் அறிவார்கள். நீங்கள் சிறிய கட்சி அல்ல. தமிழ்நாட்டில் சனநாயக ஆற்றல்கள் எல்லாம் தோழர். திருமாவளவன் அவர்கள் பின்னால் நிற்கின்றோம். அவரது குரலை நாங்கள் வழுபடுத்துகின்றோம். அவர் வெற்றி பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம். காரணம் அவர் பேசுகின்ற அரசியல் அவர் முன்வைக்கக்கூடிய உறுதியான சமரசமற்ற ஒரு போராட்ட அரசியலை நாங்கள் மனமுவந்து வரவேற்கிறோம், பாராட்டுகிறோம், துணை நிற்போம், தோலோடு தோலாக போராடுவோம். இந்த இடத்தில்தான் சல்லித்தனமான அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

எனக்கு முன்பு பேசிய தோழர் மரியாதைக்குரிய ’பிரின்ஸ் கஜேந்திர பாபு’ அவர்கள் சுட்டிக்காட்டினார். திருமா அவர்கள வண்டிக்கு குறுக்கே ஒருவன் வருகிறான். அவர் ஒரு வழக்கறிஞர் என்று சொல்லுகிறார்கள். ஒரு வழக்கறிஞராக இருந்தால் அங்கே தவறு நடந்துவிட்டது என்றால், வழக்கு பதிவு செய், வழக்கை பதிவு செய்யாமல் சல்லித்தனம் செய்வதும் சச்சரவு இழுப்பதும் வம்பு இழுப்பதும் ஒருவன் செய்கிறான் என்றால், அவனது நோக்கம் என்ன என்றுதான் நாங்கள் கேட்கின்றோம்.

இதுபோல வண்டியில் உரசுவதோ அல்ல உரசாமல் போவதோ நெருக்கமாக வருவதோ சென்னை சாலையில் புதிதல்ல, தினந்தோறும் நூறு/ஆயிரம் சம்பவங்கள் சென்னையில் நடக்கிறது. இந்த நெருக்கமான சாலை. நாம் கேட்க வேண்டிய கேள்வி ஒன்று இருக்கிறது. ’நீதிமன்றத்துக்கு எதிராக நான்கு/ ஐந்து அடுக்கடுக்கான வேகத்தடைகளை எதற்கு வைத்துள்ளீர்கள்? வேகத்தடை என்று ஒன்று வைத்தால்  போதாதா? நான்கு ஐந்து எதற்கு வைத்துள்ளீர்கள்?’ முதுகெழும்பை முறிப்பதற்கா? அந்த இடத்தில் ஒரு வண்டி நிதானமாக வருகிறது. நிதானமாக வருகின்ற வண்டி எப்படி இந்த வண்டியின் மீது மோத முடியும்? அப்படி வருகின்ற வண்டியின் குறுக்கே ஒருவன் வருகின்றான். பிறகு வம்பு இழுக்கிறான்.

நானே நேரடியாக இரண்டு சம்பவத்தை பார்த்து பார்த்திருக்கின்றேன் சாதாரண இடத்தில் கூட விடுதலை சிறுத்தைகள் கட்சியினுடைய கொடியை பார்த்துவிட்டால், சாதியவாதிகள் திட்டமிட்டு வம்பு இழுக்கின்றான். அப்படி வம்பிழுக்கக்கூடிய சம்பவங்களில் நாம் பார்ப்பது என்னவென்றால், விடுதலை சிறுத்தைகள் சண்டைக்கு வரவேண்டும் அதை வைத்துக்கொண்டு மிகப்பெரிய அளவில் பிரச்சினையை ஊதி பெருக்க வேண்டும் என்கிற நோக்கம் அவர்களுக்கு இருக்கிறது. அதான் இங்கே நடந்திருக்கிறது.

நாம் என்ன கேட்க வேண்டியது, இது போன்ற ஒரு சல்லித்தனத்தை வேற எந்த கட்சி தலைவரிடமாவது எந்த வண்டியிடமாவது இவர்கள் செய்துவிட முடியுமா? தமிழ்நாட்டில் அண்ணாமலை வண்டியில் குறுக்க போக முடியுமா? எப்படி விடுவார்களா? மரியாதைக்குரிய வழக்கறிஞர் பாலு அவர்கள் இருக்கிறார். அவர் கட்சியினுடைய தலைவர் வாகனத்தின் குறிக்கே இப்படி ஒருவன் சென்றுவிட்டால் என்ன செய்வார்? சொல்லுங்க, இது திட்டமிட்டு உருவாக்கும் வம்புதான்.

இந்த பிரச்சனை நமக்கு சில பாடங்களை கற்றுக் கொடுத்திருக்கிறது என்னவென்றால் அவர்கள் அடுத்து வரக்கூடிய தேர்தல் காலத்திற்குள்ளாக ஒரு மிகப்பெரிய கலவரத்தை தூண்டுவதற்கு தயாராக இருக்கிறார்கள். இந்த ஒரு சம்பவம் மிகப்பெரிய அநீதியா நடந்துவிட்டதா இங்கே?, தோழர் திருமா அவர்களை பிற்படுத்தப்பட்ட சாதி தலைவர்களை எல்லாம் அழைத்து சாதியவாதி தலைவர்களை எல்லாம் அழைத்து வீடியோ போட விடுவதும், அவருக்கு எதிராக பேச வைப்பது பிஜேபிக்காரன். இதற்கு இங்கே கூலிவேலை பார்க்கக்கூடிய இரு தலைவர்களை பார்த்து நெஞ்சம் பதறுகிறது.

ஒரு வடநாட்டான் கட்சிக்காரனுக்கு கூலிவேலை பார்க்குறீர்களே? வெட்கமா இல்லையா? ஒரு சக தமிழனை எதிர்த்து நிற்பதற்கு வடநாட்டானோடு கைகோர்க்கக்கூடிய நீங்கள் எப்படி தமிழினத்தினுடைய சொந்தமாக இருக்க முடியும் என்ற கேள்வி எழுப்ப விரும்புகின்றேன். பலவேறு சாதிகளிலிருந்து பேச வைக்கிறார்கள். மரியாதைக்குரிய வழக்கறிஞர் பாலு அவரிடத்தில் நான் கேட்க விரும்புகின்றேன், இவ்வளவு தூரம் நியாயம் கேட்க கூடியவராக இருந்தால், உங்கள் கூட்டணி கட்சியாக இருக்கக்கூடிய பாரதிய ஜனதா கட்சி பிற்படுத்தப்பட்ட சாதிக்கு (உங்களது சாதிக்கு உட்பட ஓபிசி சாதிக்கு) ஆன இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வரக்கூடிய பல்லாயிரக்கணக்கான இடங்களை ஒன்றிய அரசினுடைய இடங்களை நிரப்பாமல் வஞ்சகம் செய்து கொண்டிருக்கிறதே, அதை எதிர்த்து நீங்கள் கேள்வி கேட்பீர்களா? சொல்லுங்கள். அப்போது நீங்கள் உங்க சாதிக்கு யோக்கியமானவராக இருப்பதாக நாங்கள் ஏற்று கொள்கிறோம். இதர சாதிக்கு கூட நியாயமாக இருப்பதை கூட விடுங்கள், தமிழினத்திற்கு நியாயமாக இருக்க வேண்டும், தமிழினம் ஒற்றுமைக்காக வரவேண்டும் என்பதை கூட தள்ளி வைத்து விடுவோம்.

நாங்கள் கேட்கின்றோம் உங்கள் சாதிக்கான வரவேண்டிய இடங்களை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்திருக்கக்கூடிய மோடி அரசை எதிர்த்து பேசுவதற்கு நீங்கள் தயாரா? எத்தனை பேராசிரியர் பதவிகள் ஓபிசிக்கு (உங்கள் சமூகத்திற்காக நான் வன்னியர் சமூகத்தை மட்டும் சொல்லவில்லை இதனை பிற்படுத்த த்தப்பட்ட சாதிகளில் இருக்கக்கூடிய அனைவருக்குமான இடத்தை) மோடி சர்க்கார் லட்சக்கணக்கான இடங்களை நிறுத்தி வைத்திருக்கிறதே இந்த அநீதியை கேட்பதற்கு உங்களில் யார் தயார்? யாருக்கு துணிச்சல் இருக்கிறது? அவர்கள் வாருங்கள் நாங்கள் பேசுகின்றோம். அப்போது நீங்கள் சமூக நீதிக்காக பேசக்கூடிய நாங்கள் ஒற்றுக்கொள்கிறோம். மோடி அரசு ஓபிசிக்கு நியாயம் செய்திருக்கிறது என்று சொல்வார்களா? கிரீமிலேயர் கொண்டு வந்து அநியாயம் செய்தார்களே, அதை கேட்பதற்கு உங்களுக்கு துணிச்சலும் நேர்மையும் இருக்கிறதா? உங்கள் சாதிக்கு அநியாயம் செய்திருக்கிறார்கள். 

ஓபிசி இட ஒதுக்கீட்டை திருபாலு அவர்களினுடைய சாதிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக குரல் கொடுத்த ஒற்றை தலைவர் தோழர் திருமாவளவன் அவர்கள் மட்டும்தான். நீங்கள் எதிர்த்து வழக்கு போடுறீங்களே இது என்ன சார் சாதிக்கிறீங்க? ஒரு வடநாட்டான் வந்தால் அந்த கட்சிக்காரனோட கைகோர்த்து கொண்டு அவன் செய்யக்கூடிய சதியை ஏற்றுக்கொண்டு அவனுக்காக கூலி வேலை செய்து சக தமிழனை இழிவுபடுத்துகின்ற வேலையை செய்கிறீர்களே வெட்கமாக இல்லையா? ஒரு அந்நியனுக்காக ஒரு அந்நிய கட்சிக்காக ஆர்எஸ்எஸ் என்ற சங்பரிவார கும்பலுக்காக நமக்குள்ளாக சண்டை சண்டை மூட்டுகிறானே இதுபோன்ற சண்டை மூட்டுகின்ற விஷயத்தை குஜராத்தில் நீங்கள் செய்ய முடியுமா? உத்தர பிரதேசத்தில் செய்ய முடியுமா?

இதே ஓபிசிக்கு எதிராக வேலை செய்து கொண்டிருக்கிற மோடி சர்க்கார். அதற்கு எதிராக நீங்கள் செய்துவிட முடியுமா? இது மோடி சர்க்காரின் பெரும்பாலன் இடத்தை ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்களே அந்த பார்ப்பனர்களுக்கு எதிராக உங்களால் செய்துவிட முடியுமா? பேசிவிட முடியுமா? அல்லது சுண்டுவிரலை உயர்த்தி விட முடியுமா? சொல்லுங்கள் நியாயம் பேசுவோம். அதையெல்லாம் செய்துவிட்டு வாங்க. தமிழ்நாட்டினுடைய உரிமைக்காக நீங்கள் எந்த சாதியை பிரதிநிதித்துவப் படுத்துகிறீர்களோ எந்த சாதிக்கு வீரம் இருக்கிறது நாங்கள் தனித்துவமானவர்கள் நாங்கள் தனித்து நிற்போம் என்று சொல்லுகிறீர்களோ அந்த சாதிக்கு அநீதி இழைத்திருக்கக்கூடிய பாரதி ஜனதா கட்சியை எதிர்த்து ஆர்எஸ்எஸ்சை எதிர்த்து போராட முடியாதவர்களை நாங்கள் என்னவென்று அழைப்பது?

இன்றைக்கு உங்கள் சாதியை சார்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். இங்கே ஸ்விக்கி ஓட்டுகிறான், சுமாட்டா ஓட்டுகிறான், ஓலா கார் ஓட்டுகிறான், அன்றாட பிழைப்பு பிழைத்துக் கொண்டிருக்கிறானே, அவனுக்குடைய வேலையை யார் தடுத்து வைத்திருக்கிறார்கள்? பி.இ, பிஹச்டி படித்தவன் எல்லாம் அன்றாட கூலிகளாக வேலை செய்து கொண்டிருக்கிறார்களே, அவர்களது ஒன்றிய அரசினுடைய லட்சக்கணக்கான வேலையை மோடி சர்க்கார் தடுத்து வைத்திருக்கிறதே, ஐஏஎஸ்சில் உங்களுக்கான இட ஒதுக்கீடு பிரதிநிதித்துவம் கிடைத்துவிட்டதா? ஐபிஎஸ் பதவியில் கிடைத்துவிட்டதா? பேராசிரியர் பதவியில் கிடைத்துவிட்டதா? ஐஐடியில் கிடைத்துவிட்டதா? சென்னையில் இருக்கக்கூடிய ஐஐடியில் உங்கள் சாதியை சார்ந்த பேராசிரியர்கள் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பில் இடம் இருக்கிறது என்று திருபாலு அவர்கள் சொல்வார்களா? சொல்லுங்க. இதையெல்லாம் பேசுங்க சார். இது பேசினால் சமூக நீதி. இதை நிறைவேற்றாத அந்த பாஜகவை ஆர்எஸ்எஸ்சை மோடியை, சங்பரிவார கும்பலை எதிர்த்து நின்றிருந்தீர்கள் என்றால் நாங்கள் எல்லாம் உங்கள் பின்னால் நின்றிருப்போம். அதை நீங்கள் செய்யவில்லையே! உங்கள் சாதிக்கு துரோகம் அளிக்க கூடியவருடைய கட்சியோடு தான் கூட்டணி வைத்துள்ளீர்கள் என்று நாங்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறோம்.

மாநில கட்சி உருவாக்கக்கூடிய வேலைவாய்ப்பை விட மிக அதிகமான வேலைவாய்ப்பை மிக அதிகாரத்துவமான வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய ஒன்றிய அரசினுடைய வேலைகளிலே, உங்கள் சாதி இளைஞர்களுக்கு வேலை இல்லை வேலை கொடுக்க மறுக்கிறது மோடி சர்க்கார். அதை கேட்க வாருங்கள். அந்த இடத்தில் எல்லாம் முக்கலத்தோருக்கு இருக்கிறதா? கவுண்டர்களுக்கு இருக்கிறதா? வன்னியர்களுக்கு இருக்கிறதா? செட்டியார்களுக்கு இருக்கிறதா? அல்லது நாடார்களுக்கு இருக்கிறதா? யாருக்கு இருக்கிறது? எந்த சாதிக்கு இருக்கிறது? எந்த சாதிக்கு கொடுத்திருக்கிறது மோடி சர்க்கார். எந்த சாதிக்காரன் என சொல்ல முடியுமா? எங்கள் சாதிக்கு மோடி சர்க்காரில் அதிக வேலை கிடைத்திருக்கிறது அதிக இடங்களை கொடுத்திருக்கிறார்கள் அதிக பேராசிரியர்களை உருவாக்கி கொடுத்திருக்கிறார்கள், அதிக ஐஏஎஸ் அதிகாரிகளை கொடுத்திருக்கிறார்கள், அதிக நீதிபதிகளை கொடுத்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? சொல்லுங்கள்.

இல்லைதானே, அவன்(பாஜக) எல்லாத்தையும் தமிழனாகதான் பார்க்கிறான். ஆனால் நீங்கள்தான் சாதியாக பார்க்குறீர்கள். அவன் ஒட்டுமொத்தமாக தமிழனாக அடித்து நொறுக்குகின்றான். எல்லாத்துக்கும் சேற்றை வாரி போட்டு கொல்லுகிறான். எவனுக்கும் இடம் கொடுக்க கூடாது நசுக்குகிறான். ஆனால் நீங்கள் சாதி பாத்து உட்கார்ந்து இருக்குறீர்களே வெட்கமாக இல்லையா? தோழர் திருமாவளன் அவர்கள், உங்கள் சாதிக்கு எதிராக நின்று இருக்கிறாரா? அவர் உங்களது இட ஒதுக்கீடை தடுத்திருக்கிறாரா? உங்களுக்கு ஐஏஎஸ் பதவி கொடுக்க கூடாது என்று சொல்லி இருக்கிறாரா? ஐபிஎஸ் பதவி கொடுக்க கூடாது என்று சொல்லி இருக்கிறாரா? அல்லது உங்கள் சாதிகளுக்கு பேராசிரியர் பதவி கொடுக்க கூடாது என்று சொல்லி இருக்கிறாரா? கிரேனைட் ஆபீசர்கள் பதவியாக கொடுக்க கூடாது என்று என்றைக்காவது சொல்லிருக்கிறாரா? அல்லது என்றைக்காவது பாராளுமன்றத்தில் எதிராக பேசி இருக்கிறாரா? இல்லையே… உங்களுக்கும் சேர்த்துதான் அவர்(திருமா) பேசி இருக்கிறார். பாராளுமன்றத்தில் உங்கள் கட்சி எம்பி பேசவில்லை. ஆனால் திருமா பேசி இருக்கிறார்.

தமிழ்நாட்டிலே நாம் எல்லா தமிழ் சாதிக்கும் சேர்த்துதான் போராடிக் கொண்டிருக்கிறோம். எல்லா சாதியும் ஒன்று சேர்ந்தால் தான் உரிமை பெற முடியும் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் தமிழ் தேசியமும் திராவிடமும் முற்போக்கு அரசியலும் கட்டி எழுப்பப்பட்டு கொண்டிருக்கிறது. அந்த இடத்தில் தான் தோழர் திருமா அவர்கள் இந்த அரசியலை முன்னகர்த்துகிறார். எந்த இடத்திலும் அவர் உங்களுக்கு எதிராக இல்லை. சின்ன சின்ன சச்சரவை வைத்துக்கொண்டு இவ்வளவு பெரிய வேலையை சக தமிழனுக்கு எதிராக ஒரு வடநாட்டான் கட்சியோடு கைகோர்த்திருக்கக்கூடிய நிலையை பார்த்தால் தமிழினம் எவ்வளவு தாழ்ந்த நிலை அடைந்திருக்கிறது என்றுதான் பார்க்க முடிகிறது. ஒரு நாக்பூர் கட்சிக்காரன்ட்ட ஒரு குஜராத் கட்சிக்காரனுக்காக கூடிவேலை பார்க்கக்கூடிய நீங்கள் எவ்வளவு இழிவானவர்கள் என்பதை நாங்கள் சொல்ல வேண்டியதில்லை வரலாறு எழுதி வைக்கும். அன்பான தோழர்களே நமக்கும் சில பொறுப்பு இருக்கிறது. இனிவரும் காலத்தில் தேர்தலுக்கு முன்பாக விடுதலை சிறுத்தைகளுக்கு கடுமையான நெருக்கடி கொடுப்பார்கள்.

வழக்கம் போல மே 17 இயக்கம் சொந்த கருத்தை நாங்கள் பதிவு செய்கிறோம். உங்களை(விசிக) வழக்கம் போல திமுக அதை பற்றி கண்டுகொள்ள போவதில்லை. அவர்களுக்கு அதெல்லாம் தேவையில்லை. அவர்களுக்கு அவர்களது பதவி அதிகாரம் மட்டும்தான். நான் உங்கள்(விசிக) மேடையில் சொல்கிறேன் என்றால் நீங்கள் வருத்தப்படக்கூடாது. விடுதலை சிறுத்தைகள் எல்லாம் இல்லை என்றால், உங்களது(திமுக) கூட்டணி வெற்றி பெறுமா சார் சொல்லுங்க? உங்கள் கட்சியில் சனாதானத்தை எதிர்த்து பேசுவதற்கு எத்தனை பேர் இருக்கிறார்கள்? ஆனால் விடுதலை சிறுத்தை ஒவ்வொரு மாவட்ட செயலாளரும் சனாதானத்துக்கு எதிரான பாடத்தை உங்கள் கட்சிக்கும் சேர்த்து எடுக்க கூடியவர்கள். இங்க வெறுமன கட்சியில் எத்தனை பேர் பூத் கமிட்டி வைத்துள்ளீர்கள் என்பதாக வைத்து தமிழ்நாட்டின் அரசியல் முடிவு செய்து கொள்ள முடியாது. அப்படி செய்தால் தொடர்ச்சியாக நீங்கள் தான் வெற்றி பெற்று கொண்டிருப்பீர்கள். ஆனால் தமிழக மக்கள் நீங்கள் கொடுக்கக்கூடிய காசுக்கோ பூத் ஏஜெண்டுக்கோ வாக்களிப்பதில்லை, கொள்கை அரசியலுக்கு தான் வாக்களித்துக் கொண்டிருக்கிறார். அந்த கொள்கை அரசியலை இத்தனை ஆண்டு காலம் பேசக்கூடிய ஒற்றை கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியாக உங்கள் கூட்டணியில் இருந்து தோழர் திருமாவளவன் அவர்கள் தொடர்ச்சியாக பேசி வருகிறார். அவர் உங்கள் கூட்டணிதான வழி சேர்த்துக் கொண்டிருக்கிறார்.

உங்களுடைய ஆட்சியில் எழுப்பக்கூடிய அனைத்து கேள்விகளுக்கும் உங்கள் அமைச்சர்களை விட மிக திறமையாக பதில் சொல்லக்கூடிய ஒரே தலைவர் திருமா அவர்கள் மட்டும்தான். உங்கள் அமைச்சர்களில் பாதி பேர் கேள்வி கேட்டால் அடுத்து பஞ்சாயத்தும் பிரச்சனை தான் வருகிறது. அது தூய்மை பணியாளர் பிரச்சனையில் நாங்கள்(மே 17) பார்த்துவிட்டோம். முதலமைச்சர் அவரே பயப்படுகிறார். ’தினம் தினம் காலை எந்திரிக்கும் போது பயமாக இருக்கிறது, யார் என்னத்தை பேசிருவார்களோ என’, அப்படி ஒரு சிறு பிசிறு கூட இல்லாமல் கொள்கை அளவில் பேசக்கூடியவர்கள் விடுதலை சிறுத்த கட்சியினுடைய தோழர்கள். உங்கள் கட்சிக்காரர்களை விட தொலைக்காட்சியில் மிக தெளிவாக அரசியலை பேசக்கூடிய ’ஆளூர் ஷாவாஸ்’. அவரும் எங்களது தோழர்தான்.  

இவரை போல எத்தனை பேர் கொண்டு வர முடியும் உங்களால்? நீங்கள் பெரிய கட்சி, பணக்கார கட்சி, முதலாளிகளின் கட்சி, பண்ணையார்களின் கட்சி. ஆனால் தமிழ்நாட்டில் சாதிய பிரச்சனை குறித்து நீங்கள் முடிவெடுப்பதில்லை தீர்வு கொடுப்பது இல்லை. ஆனால் இந்த இடத்தில் விட்டு கொடுக்காமல் விடுதலை சிறுத்தைகள் போராடி கொண்டிருக்கிறார்கள். எல்லா இடத்திலும் போராடுகிறார்கள். மல்லு கட்டுகிறார்கள். நீங்க தலித்துகளை ஒதுக்கி வைத்துவிட்டால் அவர்களிருந்து வாக்குகளை காசு கொடுத்து வாங்கி விடலாம் என்று நீங்கள் நினைத்தீர்கள். பாரதிய ஜனதா கட்சியினுடைய யுக்தியை புரிந்து கொள்ளாத சாமர்த்தியம் இல்லாதவர்கள் கட்சி மாறிவிடுவீர்கள். விடுதலை சிறுத்தைகளை இந்த கூட்டணியில் இருந்து வெளியேற்றிவிட்டால் தாங்கள் வெற்றி பெற முடியும் என்று நம்புகிறது அல்லவா பாரதிய ஜனதா கட்சி, அந்த சாமர்த்தியம் உங்களுக்கு ஏன் இல்லாம போனது?

இந்திய அளவில் பாருங்கள். பிஜேபிய உடைய அந்த சோசியல் இன்ஜினியரிங் படித்து இருப்பீர்கள், சோசியல் வெறுமன பிரசாந்த் கிஷோர் வைத்தெல்லாம் அவன்(பாஜக) வெல்லவில்லை. அது ஆர்எஸ்எஸ்னுடைய சோசியல் இன்ஜினியரிங். அதையெல்லாம் பிரசாந்த் கிஷோர் திமுகவுக்கு கற்றுக்கொடுத்திருக்க மாட்டார். 2021 தேர்தலில் கற்றுக் கொடுத்திருக்க வேண்டிய தேவை அவருக்கு கிடையாது. ஆனால் ஆர்எஸ்எஸ்னுடைய சோசியல் இன்ஜினியரிங் தமிழ்நாட்டில் ஏன் செல்லுபடியாகவில்லை என்றால், விடுதலை சிறுத்தைகளும் சனநாயக சக்திகளும் இந்த பிஜேபி அரசியலுக்கு எதிராக போராடி கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் காரணம்.

ஆர்எஸ்எஸ்ஸின் சோசியல் இன்ஜினியரிங் எந்த கட்சியாலும் இந்தியாவில் வெற்றி வெற்றிகரமாக உடைக்க முடியவில்லை தமிழ்நாடுதான் உடைத்தது. அதில் முன்னணியில் நிற்க கூடியவர் தோழர் திருமா அவர்கள். ஏதாவது பொதுவாக நாம் அக்கறையோடு பேசினால் நீங்கள் ’திமுக எதிர்’ என முத்திரை குத்துவார்கள். திமுக வெற்றி பெறுகிறதா இல்லையா என்பதுல்ல, பாரதிய ஜனதா கட்சி விரட்டப்பட வேண்டும் ஒழிக்கப்பட வேண்டும். இந்த மண்ணிலிருந்து பூண்டோடு வேரோடு அகற்றப்பட வேண்டும். அதுதான் எங்களுக்கு தேவை. அந்த வேலையை சரியாக செய்யவில்லை என்றால், கேள்வி கேட்போம், சுட்டி காட்டுவோம். அதற்கான கடமை இருக்கிறது.

ஏனென்றால், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இஸ்லாமிய அமைப்புகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், பெரியாரியவாதிகள், அம்பேத்கரிய தோழர்கள், மார்க்சிய தோழர்கள், தமிழ் தேசிய தோழர்கள் எல்லாரும் சேர்ந்துதான் சார் கடந்த 10 ஆண்டுகளில் மோடி எதிர்ப்பு அரசியலை தமிழ்நாட்டிலே கட்டி எழுப்பினோம்.

உங்க(திமுக) கட்சி ஒரு போராட்டத்தை நடத்தவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியினுடைய சங்கபரிவார கும்பலுடைய அரசியலுக்கு எதிராக, இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு எதிராக, தலித்துகள் மீது நடத்தப்படுகின்ற படுகொலைகளுக்கு எதிராக, உங்கள் கட்சி நடத்திய போராட்டங்களின் பட்டியல் என்ன எங்களுக்கு தெரியாதா?

ஆக இங்கே பொதுநலனை முன்னிறுத்திதான் தோழர் திருமா அவர்கள் போராடி கொண்டிருக்கிறார். இதில் சிக்கல் என்னவெனில், தலித்துகளுக்குள் இருக்கக்கூடிய ஒரு சிலரை தோழர் திருமா அவர்களுக்கு எதிராக தூண்டிவிடுகின்ற அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். காவல் துறை தலித்துகளுக்கு எதிராக இயங்கி கொண்டிருக்கிறது. அதை திமுக கட்டுப்படுத்தவில்லை. இத்தனை நெருக்கடிகளுக்கு நடுவே விடுதலை சிறுத்தைகள் களமாடி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்களை நாங்கள் தெரிவித்து கொள்கிறோம். அதனால்தான் நாங்கள் மே 17 இயக்கம் உங்களோடு நிற்கிறோம்.

இங்கே மிகப்பெரிய நெருக்கடி சனாதன அரசியல். சற்று யோசித்து பார்த்தால் அதிமுக காலத்தில் செய்த கூத்துகள் எத்தனை! சங்பரிவார கும்பலுக்கு கிடைத்த இடங்கள் எத்தனை? அந்த அரசியல் வந்துவிடக்கூடாது அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்து விடக்கூடாது என்கின்ற நோக்கம் தானே தவிர, வேறு எந்த நோக்கத்திற்காகவும் விடுதலை சிறுத்தைகள் களத்திலே போராடவில்லை. அப்படிப்பட்ட சமயத்தில் இன்றைக்கு தோழர் திருமா அவர்கள் வாகனத்துக்கு குறுக்கே ஒருத்தன் மல்லு கட்டுறான், மறிக்கிறான், தகராறு பண்கிறான், திமிராக பேசுகிறான், அதை கண்டித்து திமுக கட்சியில் இருந்து யாராவது ஒருத்தராவது பேசிருக்க வேண்டும்.

உங்களுக்கு(திமுக கட்சிக்கு) என்ன பிரச்சனை? பேசினால் என்ன ஆகும்? பிற்படுத்தப்பட்ட சாதியில் உங்களுக்கு எதிராக போயிருவானா? இங்கே திருமா அவர்களுக்கு எதிராக வீடியோ போடுகிறார்களே அவர்கள்(பாஜக சங்கி கும்பல்) பிற்படுத்தப்பட்ட சாதி ஏகபோக தலைவர்களா? அவருக்கு பின்னால் லட்சக்கணக்கான பேர் நிற்கிறானா? இல்லை அந்த பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவன் எல்லாம் தனியாக நின்று தேர்தலில் வெல்ல முடியுமா? தமிழ்நாட்டில் அது நடந்திருக்கிறதா? ஆனால் அவர்களுக்கெல்லாம் இடம் கொடுத்து கொண்டு வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருப்பது என்பது சனநாயக விரோதமானதாக நாங்கள் கண்டிக்கின்றோம். திமுக இந்த விசியம் குறித்து பேசியிருக்க வேண்டும். என்ன தடுக்கிறது? இன்றைக்கு இத்தனை சாதிக்காரன் வைத்து  பேசிக்கொண்டு இருக்கிறான். இத்தனை வீடியோக்கள் வெளிவருகிறது. காரணம் என்ன? ஒரு திட்டமிட்ட நோக்கம். நாளைக்கு மறுபடியும் இது போன்ற ஏதோ ஒரு சம்பவத்தை திரும்ப செய்வார்கள். அப்ப என்ன செய்ய போறீங்க?

அன்பான தோழர்களே இந்த நெருக்கடி என்பது மிக மோசமான நெருக்கடி. நீங்கள் காவல் துறையை மட்டும் நம்பி தலைவரினுடைய பாதுகாப்பை விட்டு விடாதீர்கள். இச்சம்பவத்தில் இரண்டு பேர் மேல் வழக்கு போடுகிறது. ’குத்துனவனும் குற்றவாளி செத்தவனும் குற்றவாளியா?’ தமிழ்நாட்டில் எங்க போனாலும் எந்த பிரச்சனைகள் சாதிய ரீதியாக வன்கொடுமை. சம்பந்தமான பிரச்சனைக்கு எந்த ஊருக்கு போய் பேசினாலும் ”பாதிக்கப்பட்டவர் மேல் ஒரு வழக்கு தாக்குதல் நடத்துவர் மீது வழக்கு”. ஆனால் தாக்குதல் நடத்தியவனை கைது செய்வதில்லை. இது தமிழ்நாட்டின் காவல் துறையினுடைய வழக்கமாக இருக்கிறது. இது திமுக எந்த இடத்தில் மாற்றவில்லை.

மே 17 இயக்கத்தின் சார்பாக இங்கே திமுகவிற்கு நாங்கள் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். நான்”சனாதன எதிர்ப்பு அரசியல்தான் மைய அரசியல் ஒழிய, திமுக ஆதரவு அரசியல் மைய அரசியல் அல்ல”. தமிழ்நாடு சனாதன எதிர்ப்பு அரசியலில் 2000 ஆண்டுகளாக நின்று கொண்டிருக்கக்கூடிய மண். அந்த அரசியலை ஆதரித்து நீங்கள் நின்றீர்கள் என்றால் தான் இந்த மக்கள் உங்களோடு நிற்பார்கள். உங்கள் மீது அவநம்பிக்கை வந்துவிட்டால் இந்த மக்கள் உங்களை கைகளை விட்டு சென்று விடுவார். தமிழ்நாட்டில் பேசப்படுகின்ற கெட்ட வார்த்தைகளில் மிக மோசமான கெட்ட வார்த்தையாக பாஜகவும் மோடியும் சங்கியும் என்கின்ற வார்த்தை தான் இருந்தது. அதை சொன்னாலே திட்டுகிற மாதிரி ஆகும். அப்படிப்பட்ட நிலைமை இருந்தது. மோடி இந்த மண்ணில் வர முடியவில்லை. இங்கே ஒரு நிகழ்ச்சிக்கும் பங்கு பெற முடியவில்லை. ஐஐடிக்குள்ள சுவரை உடைத்துக்கொண்டு பதுங்கிகொண்டு வெளியே போகக்கூடிய அளவிலே தமிழ்நாடு போர்குணத்தோடு எதிர்த்து நின்றது. அந்த இடத்துக்கெல்லாம் உங்க கட்சிக்காரன் வரவில்லை. இன்றைக்கு உங்கள் கட்சி சார்பாக தொலைக்காட்சியில் முழங்கி கொண்டிருக்கிறார்களே, சமூகநீதி போராளிகள் பெரியாரிய அமைப்புகள் என்று அவர்கள் எவரும் வரவில்லை, நாங்கள்(மே 17) தான் நின்றோம், விடுதலை சிறுத்தைகள்தான் நின்றது.

இன்றைக்கு தொலைக்காட்சியில் பேச யாராவது நின்றார்களா? எவனாவது களத்துக்கு வந்து வழக்கு வாங்குவதற்கு துணிச்சல் இருக்கிறதா? யாருடைய உழைப்பை யார் அறுவடை செய்கிறார்கள்? தமிழ்நாட்டில் நீங்கள் நினைப்பதெல்லாம் உங்களுக்கு சொல்லப்படுகின்ற செய்திகள் எல்லாம் உண்மையல்ல முதலமைச்சர் அவர்களே, எங்கள் குரல் உங்களை எட்டாமல் போகலாம். ஆனால் இந்த மண்ணின் அரசியல் எங்களுக்கு நன்றாக தெரியும். நாங்கள் தினந்தோறும் இந்த மக்களோடு உறவாடக்கூடியவர்கள், மக்களுக்காக குரல் எழுப்ப கூடியவர்கள், மக்களுக்காக போராடக்கூடியவர்கள், மக்களோடு மக்களாக வாழக்கூடியவர்கள், இந்த மண்ணின் அரசியல் என்ன நடக்கிறது எனதெரியும். கடந்த நான்கு/ ஐந்து ஆண்டுகளாக சமூக நீதிக்காக போராடுகின்ற எந்த போராளியும் இந்த ஊடக வெளிச்சத்தில் வரக்கூடாது என்று பாரதிய ஜனதா கட்சி எவ்வளவு கவனமாக இருந்ததோ, அதே அளவு திமுகவும் கவனமாக இருக்கிறது.

 தோழர் பிரின்ஸ் கஜேந்திர அவர்கள் வந்திருக்கிறார். கல்வி பிரச்சனை என்றால் அவரை கூப்பிடுங்கள். ஏன் மற்ற பிரச்சனை பற்றி கருத்து சொல்லவே தெரியாதா? எல்லா பிரச்சனைக்கும்ம் கருத்து சொல்வதற்கு சங்கி பயல் ஒருவரை உட்கார வைப்பீர்கள். திமுக தரப்பு பேசுவதற்கு ஆள் வைத்திருப்பீர்கள். ஆனால் சிவில் சமூக செயல்பாட்டாளர்கள் அம்பேத்கரியவாதிகள் பெரியாரியவாதிகள் இஸ்லாமியர்கள் என்று எவரையும் ஊடகத்திலே பாஜக அனுமதிக்காததை போல திமுகவும் அனுமதித்தது இல்லை. அதான் இன்றைக்கு பிரச்சனை. அதனால்தான் அண்ணாமலை இன்னைக்கு பெரிய ஆளாக வந்திருக்கிறார். அண்ணாமலை பேசுவது அரசியலாக மாறி கொண்டிருக்கிறார்.

இந்த அண்ணாமலை எப்படி தலைவராக முடிந்தது? 2021க்கு முன்பு அண்ணாமலை போன்ற நபர்கள் எல்லாம் இந்த மண்ணில் அரசியல் செய்திருக்க முடியாது. பாரதிய ஜனதா கட்சியினுடைய அரசியல் வளர்வதற்கான சூழலை திமுக உருவாக்கி கொடுத்தது என்று நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். எப்படியானால் இன்றைக்கு நடந்த இந்த சம்பவத்தில் ஒழுங்கா நடவடிக்கை எடுத்திருந்தால், இது போன்ற ஒரு சமூக விரோதிகள் இன்றைக்கு பெரிய ஆளாக பார்க்கப்படுவாங்களா? இன்றைக்கு ஸ்கூட்டர் ஓட்டிட்டு வந்த அந்த சங்கி பையன் ஒரு ஹீரோ ஆயிட்டான். இவனை ஹீரோவா மாற்றியது யார்? அன்றைக்கே உங்கள் காவல்துறை தடுத்திருந்தால் இவனெல்லாம் ஹீரோவா! இவரை வைத்து பாஜக அரசியல் செய்கிறது. அன்பானவர்களே இது ரொம்ப மோசமான அரசியல் யாருக்கு நிகராக யாரை நிறுத்துவது, எதற்கு நிகராக யாரை நிறுத்துவது, இந்த அரசியலை ஒருபொழுதும் அனுமதிக்க கூடாது.

மரியாதைக்குரிய தோழர் பாலு(பாமக) அவர்களுடைய தலைவருடைய வண்டிக்கு முன் வந்து நின்று வம்பு இழுத்தால் அவர்கள் என்ன பேசுவார்கள்? காந்திய மொழியில் பேசுவீர்களா? அறவழியில் பேசுவீர்களா? கைகட்டி வேடிக்கை பார்ப்பீர்களா? அல்லது நிதானமாக நாங்கள் வழக்கை சென்று பதிவு செய்துவிட்டு வருகிறோம் என்று சொல்லிவிட்டு செல்வீர்களா? 10 சதவீத இட ஒதுக்கீடு தேவை என்று நீங்கள் நடத்திய போராட்டத்தினை நாங்கள் பார்த்திருக்கின்றோம். திடீர் என்று நாங்கள் வன்முறைக்கு எதிரானவர்கள் என்று கதை விடாதீர்கள். உங்கள் தலைவருக்கும் பாதுகாப்பு வேண்டும் என்றுதான் எங்கள் தலைவரும் (திருமா அவர்கள்) பேசி கொண்டிருக்கிறார். உங்கள் மக்களுக்கும் வேலைவாய்ப்பில் இடம் வேண்டும் என்றுதான் எங்கள் தலைவர் பேசி கொண்டிருக்கிறார்.

நாமெல்லாம் தமிழர்கள்தான். எந்த காலத்திலும் பாரதிய ஜனதா கட்சியினுடைய சதிக்கு கூலிக்கு விலை போய்விடக்கூடாது என்பதிலே தான் அந்த அக்கரையோடுதான் நாங்கள் பேசி கொண்டிருக்கிறோம். எல்லாரும் ஒன்றாய் சேர்ந்து நின்றோம் என்றால், தமிழ்நாட்டின் உரிமையை எவனாவது மறுத்துவிட முடியுமா? யாராவது தடுத்து விட முடியுமா? ஆனால் நம்மை பிரிக்கக்கூடிய அரசியல் இங்க திட்டமிட்டு நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. ஆகவே தோழர்களே உங்கள் தலைவர் திருமா அவர்கள் எங்களுக்கும் தலைவர்.

அரசியலிலே இன்றைக்கு இந்திய அளவில் பாராளுமன்ற அளவில் இந்திய கூட்டணி என்கின்ற அளவில் சனாதன எதிர்ப்பு அரசியலை தொடர்ச்சியாக பேசக்கூடிய ஒற்றை தலைவராக தோழர் திருமா அவர்கள் நகர்த்துகின்ற இந்த அரசியல்தான். நாம் அனைவருக்குமான தலைமையாக இருக்கிறது. அதில் நமக்கு எந்தவிதமான சந்தேகமும் மாறுபட்ட கருத்தும் கிடையாது. அப்படிப்பட்ட ஒரு தலைவரை பாதுகாக்க வேண்டும். நீங்கள் எத்தனையோ லட்சக்கணக்கான தோழர்கள் அவர் மீது அதிக அன்போடு இருக்கறீர்கள். அவருக்கு பாதுகாப்பு வாகனத்தை நீங்கள் ஏற்பாடு செய்யுங்கள். அவர் வாகனம் இனிமேல் தனியே போகக்கூடாது என்பதைதான் இந்த சம்பவம் நமக்கு பாடமாக கொடுத்திருக்கிறது.

ஒன்னுமில்லாத சீமானுக்கு அவர் கட்சிக் கூட்டத்துக்கே காப்பாற்றுவதற்காக 10 பாடிகார்டு(body guards) போட்டு (இத்தனைக்கும் யாரும் அவரை கண்டு கொள்ளாத போதே) பத்து கருப்பு பூனைகள் முன்னாடி பின்னாடி போட்டு வைத்திருக்கிறார்கள். அவர்கள் மாநாட்டுக்குள் போகும்போதே அப்படிதான் போவார். அவருக்கே அந்த மாதிரி போட்டுருக்கும் பொழுது, சநாதன எதிர்ப்பரசியலை சமரசம் இல்லாமல் துணிந்து போராடிக் கொண்டிருக்கக்கூடிய தோழர் திருமா அவர்களுக்கு எதிராக, எந்த சிரமம் நடந்துவிடாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சிறுத்தைகளுக்கு இருக்கிறது. அவர் வண்டி இனிமேல் தனியாக போகக்கூடாது. இனிமேல் 10 வண்டி முன் பின் போக வேண்டும். இனி எவனாவது வம்புழுத்தால் என்ன மொழியில் பதில் சொல்லனுமோ அப்படிதான் சொல்ல வேண்டும். இனி கை கட்டி வேடிக்கை பாத்துக் கொண்டிருக்க முடியுமா?

உச்ச நீதிமன்ற நீதிபதி மேலயே ஒருத்தன் செருப்பு எடுத்து போட்டுருக்கான். கேட்க நாதி இல்லாத நாடு இது. அப்போது எங்க தலைவர் நாங்கள்தான் பாதுகாக்க வேண்டும் வேறு யார் பாதுகாப்பது? நீங்கள் சிறுத்தைகளாக இருங்கள். தயவுசெய்து சைவ சிறுத்தைகளாக வேண்டாம். இது நம் வன்முறையை நோக்கி போகக்கூடியவர்கள் அல்ல, மிகப்பெரிய தலித் எதிர்ப்பு கூட்டணை உருவாக்கிய பொழுது கூட, விடுதலை சிறுத்தைகள் அரசியலாகத்தான் எதிர்கொண்டார்கள் ஒழியே, வன்முறையில் எதிர்கொள்ளவில்லை. நமக்கு வன்முறையின் மீது நம்பிக்கை கிடையாது. யார் கோழையோ அவனுக்குதான் வன்முறையின் மீது நம்பிக்கை இருக்கும்.

ஆனால் நம் தலைவருக்கான பாதுகாப்பை நாம் உறுதி செய்ய வேண்டும். எந்த இடத்திலும் அரசாங்கம் கொடுக்கக்கூடிய பாதுகாப்பை மட்டும் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. இனிமேல் அவர் வாகனம் தனித்து போகக்கூடாது அவருக்கான பாதுகாப்பை சிறுத்தைகளாக நீங்கள் ஏற்பாடு செய்யுங்கள். திமுக கூட்டணியில் இருந்து இன்னும் ஒரு அறிக்கை கூட வில்லை. இவருக்கு ஒழுங்கான பாதுகாப்பு கொடுப்பார்களா என திமுக மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. நீங்கள்(விசிக) கூட்டணியில் இருக்கறீர்கள். இதைப்பற்றி உங்களால் பேச முடியாது, ஆனால் நாங்கள் பேசுவோம். எங்களுக்கு எந்த பயமும் கிடையாது. உங்களுக்கு பொறுப்பு இருக்கிறது. நீங்கள் ஒரு நீண்ட எதிர்காலத்தினுடைய தேவை கருதி பல்வேறு சமயங்களில் அமைதி காக்கிறீர்கள். அந்த பொறுமை வரலாற்றில் போற்றப்படும்.

ஆக தோழர்களே இப்படிப்பட்ட சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் தடுக்கின்ற வேலையை நாம் செய்ய வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் இதை கவனத்தில் எடுத்துக்கொண்டு இந்த குற்றவாளிக்கு தகுந்த தண்டனையை தர வேண்டும். அதுதான் நீதி. இல்லை என்றால், அது தீர்ப்பாகத்தான் நாங்கள் பார்க்க முடியும். தீர்ப்பாக இருப்பதெல்லாம் நீதிக்கானது என்று அர்த்தமல்ல என்கின்ற முறையில் தோழருடைய பாதுகாப்பு மிக முக்கியமானது. இந்துத்துவ அரசியல் இங்கே மையம் கொண்டு விடக்கூடாது. அதற்கு எதிரான போராட்ட களத்தில் உங்களோடு தோலோடு தோல் நிற்கும் மே 17 இயக்கம் என்பதை சொல்லி வணங்கி விடைபெறுகிறேன். நன்றி! வணக்கம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »