
அமெரிக்கா, இசுரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் ஒப்பந்தங்கள், சமதான பேச்சுவார்த்தை குறித்தான விடயங்கள் மற்றும் பல கேள்விகளுக்கு மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள், சவுத்பீட் சேனலுக்கு பேட்டியளித்தார். ஏபரல் 9, 2026 அன்று வெளிவந்த காணொளியின் தொகுப்பு:
சவுத் பீட் அன்பு உறவுகளுக்கு வணக்கம். நான் பெலிக்ஸ் இன்பவொளி. இந்த நேர்காணலில் நாம் சந்திக்க இருப்பவர் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள்.
ஊடகலாவியளர்களின் கேள்வி: வணக்கம் தோழர்! நேற்று இரவு வந்து உலகமெங்கும் ஒரு பதட்டமான ஒரு சூழ்நிலை. பலபேர் உறக்கத்தை தொலைத்தார்கள் என்று கூட சொல்லலாம். அதற்கு முன்பாக ட்ரம்ப் வந்து ஒரு அறிவிப்பை வெளியிட்டார். ஈரான் மீது ஒரு மிகப்பெரிய தாக்குதல் நடத்தப் போகிறோம். ஒரு கலாச்சாரப் பேரழிவை செய்ய போகிறோம். ஒரே இரவில் கூட அது நடக்கும். அது இன்று கூட இருக்கலாம் என எச்சரிக்கை விடுத்தார். அதன் பிறகு ஈரான் அமெரிக்கா இடையே ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் நடப்பதற்கு பாகிஸ்தான் உதவியாக இருந்துள்ளது. இசுரேலும் கூட இரண்டு வாரம் பின்வாங்கி இருக்கிறது. அந்த ஹார்மோஸ் வழித்தடம் திறந்து விட்டு, எந்த பாதிப்பும் இல்லாமல் போக்குவரத்து சரியா இருக்க வேண்டும் என டிரம்ப் சொல்லியிருப்பதும், அதற்கு ஈரானும் ஒத்துக்கொண்டுள்ளது. எனவே இது ஒரு நிரந்தர அமைதிக்கு கூட இது வழிவகுக்கலாம் என டிரம்ப் சொல்லி இருப்பதை எப்படி பார்க்கறீர்கள்?
தோழர் திருமுருகன் காந்தி பதில்: வணக்கம்! இந்த போரில் அமெரிக்கா தோல்வி அடைந்திருக்கிறது. இசுரேலுக்கு ஒரு பெரிய பின்னடைவு வந்திருக்கிறது. மேற்காசியாவில் ஈரான் ஒரு முக்கியமான ஆற்றலாக, அடையாளமாக ஆகி இருக்கிறது. உலக அளவில் அமெரிக்காவிற்கு எதிரான ஒரு கட்டமைப்புகளாக/ கூட்டமைப்புகளாக அல்லது ஒரு எதிர்ப்பு நிலையோடு இயங்கிய ’சீனா, ரஷ்யா, ஈரான்’ இந்த கூட்டமைப்பு என்பது தற்போது ஒரு முன்னேற்றத்தை கண்டுள்ளதை பார்க்கலாம். உலக அளவில் போர் சூழலுக்குள் நிறைய மாற்றங்களை கொண்டு வந்து நிறுத்தும். இந்த போர் நிறுத்தம் வந்ததில் ஈரானுக்கு நிறைய லாபங்கள் இருக்கிறது. அந்த சலசந்தின்னு சொல்லக்கூடிய ஹார்மூஸ் நீர் அணை பகுதியில் வரக்கூடிய கப்பல்களுக்கு இரண்டு மில்லியன் டாலர் கட்டணம் வசூலிப்பதாக ஈரான் அறிவித்து இருக்கிறது. கிட்டத்தட்ட இவ்வளவு நாள் அது இலவசமாகதான் இருந்தது. இனிமேல் கட்டணத்தோடு அனுமதிக்க கூடிய இடத்துக்கு நகரலாம். அப்படி நடந்தால் ஒரு 100 பில்லியன் வருமானம் வருவதாக எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வளவு கப்பல்கள் அந்த பக்கம் போவதினால் ஈரானுக்கு ஒரு பெரிய பொருளாதாரம் வருகிறது.
ஈரானின் மீதான பொருளாதார தடை பலவீனம் அடைந்து போகும். அது இல்லாமல் போய்விடும். அமெரிக்காவினுடைய பொருளாதார தடை ஈரான் மீது கடுமையான நெருக்கடியை இருந்தது, அந்த தடைகள் தகர்ப்பதற்கான ஒரு காலகட்டம் வரலாம். இந்த பகுதிகளில் இசுரேல் எதிர்கொள்ளுகின்ற இந்த மிக முக்கியமான ஒரு எதிராளியாக ஈரானைதான் சுட்டிக்காட்டிக் கொண்டே இருந்தது. ஈரான் மிக வலிமையாக மாறியது என்பது இசுரேலினுடைய அந்த ஆதிக்க அரசியலுக்கு ஒரு பெரிய அடியாக மாறும். ஏன்னெனில் இசுரேலுக்கு மூன்று பக்க போர் சூழல் உருவாகியுள்ளது. லெபனானில் இருக்கக்கூடிய ’இசுபுல்லா’(Hezbollah) அமைப்பு பலவீனம் அடைந்துவிட்டது. தலைவர்கள் முற்றிலுமாக எல்லா தலைமையும் கொலை செய்துவிட்டதனால் இசுபுல்லா என்பது பலவீனம் அடைந்துள்ளது.

கேள்வி: போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் வராது என இசுரேல் சொல்லியுள்ளதே?
பதில்: இசுரேல் சொல்லியிருக்கிறது. இந்த இசுபுல்லாவினுடைய வலிமை குறைத்து மதிப்பிட்டுதான் போரை ஆரம்பித்தார்கள். அந்த போரில் கடுமையான தாக்குதலை இசுபுல்லா நடத்தி வருகிறது. இதுவரைக்கும் இவ்வளவு பெரிய ஒரு ஒரு வேகமான ஒரு அழுத்தமான தாக்குதல் இசுபுல்லாவிடமிருந்து வரும் என எதிர்பார்க்கவே இல்லை. ஒரு பெரிய நெருக்கடியை உடனே போரிலிருந்து வெளியில் வருவதை இசுரேல் அவமானகரமானதாக மாறும்.
இன்னொரு பக்கம் ஹீவுத்திஸ்க்கள்(Houthis) ஏமனில் இருந்து தாக்குதல் ஆரம்பிப்பதாக அறிவித்தார்கள். ஈரான் மீதான தாக்குதல் எனமூன்று தாக்குதல் நடந்தது எனில் இசுரேலால் தாக்கு பிடிக்க முடியாது. இசுரேல் படைப்பிரிவு லெபனானில் சண்டை போடுகிறது, காசாவில் ஒரு படைப்பிரிவு சண்டை போடுகிறது, இதற்கு நடுவில் இசுரேலுக்குள்ளாக இருந்து அவுத்தியிலிருந்து தாக்குதல் நடக்கிறது. இதில் ஈரானிலிருந்தும் தாக்குதல் நடந்தால் (நான்கு நிலை) முற்றிலும் நிலைகுலைந்து போகும். இதை தான் இசுரேல் ராணுவ அதிகாரி ஒருத்தர் பேசி இருந்தார்- ”இதற்கு மேலும் போர் தொடரும் பட்சத்தில் இசுரேல் ராணுவம் முற்றிலுமாக சிதைந்து போகும்” என்று. ஆக இதுவும் போர் நிறுத்தத்திற்கு ஒரு காரணமாகும். இப்படி எதையாவது செய்து போரிலிருந்து வெளியே வரனும் என்கின்ற நிலைமை அமெரிக்காவுக்கு வந்துவிட்டது.
அதனால்தான் டிரம்ப் பதிவு ஒன்றை போடுகிறார். அது என்னவெனில் ஒட்டுமொத்த ஈரானினுடைய நாகரிகத்தையே (அதனுடைய வரலாற்று சின்னங்கள், வரலாற்று பின்புலங்கள், சிறப்பம்சங்கள்) அழிக்கும் என மோசமான ஒரு செய்தியை பதிவு போட்டு இருந்தார். உடனேதான் எல்லாருக்கும் என்ன நடக்குமோ! என்று பயம் இருந்தது. ஏன்னெனில் ராணுவ நிலையத்தின் மேல தாக்குதல் இரண்டு/மூன்று நாட்கள் ஈரானினுடைய அணுவுலையின் அருகில் தொடர்ச்சியாக நடந்துக்கொண்டே இருந்தது. அது ஒரு மோசமான ஒரு விளைவை நோக்கி வரும். எப்படி வெனிசுவேலாவில் போய் ஒரு அதிபரை கடத்திவிட்டு வந்த மாதிரி, ஒரு தாக்குதல் நடத்தி அந்த அணு மின்நிலையத்தில் இருக்கக்கூடிய செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை திருடி எடுத்திவிட்டு போகனும் என்ற முயற்சி செய்தது. அந்த செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்து கொண்டு நாளைக்கு அணுகுண்டு தயாரிக்கும் என்ற பயம் இருந்தது. அதுதான் ஒட்டுமொத்த போரினுடைய அடித்தளம்.

ஈரான் வந்து ஒரு அணுகுண்டை தயாரித்திவிட்டது என வைத்துக்கொண்டால் இசுரேலால் ஆட முடியாது. அணுகுண்டு (Atomic Nuclear Weapon) என்பது ஒரு தடுப்பு (Deterrence) என சொல்லலாம். அது போர் தடுப்பு கருவியாவும் இருக்கும், பாதுகாப்பு கருவியாவும் இருக்கும். தற்போது வடகொரியா மீது தாக்குதலை நடத்துவதற்கு ஜப்பானோ, தென்கொரியாவோ, அமெரிக்காவோ பயப்படும். ஏன்னெனில் வடகொரியாவில் அணுகுண்டு இருக்கிறது. போட்டால் பிரச்சனையாகிவிடும் என்று எதுவும் பண்ணாமல் ஒதுங்கி நிற்கிறார்கள். இதே மாதிரி நாளைக்கு ஈரான் ஒரு முடிவு எடுத்துவிட்டால் என்ற பயம் இருக்கும்.
கேள்வி: ஈரான் யுரேனியத்தை பயன்படுத்துவதில்லை என சொல்லியதே?
பதில்: இவ்வளவு நாள் சொல்லிகொண்டு இருந்தார்கள். கமேனி அதைதான் சொன்னார். அவர் பல்வேறு நம்பிக்கைகளின் அடிப்படையில் நம் மனித குலத்தை அழிக்கக்கூடிய கருவியை உருவாக்க கூடாது என்கிற ஒரு இடத்தில், அதற்கு தடையாக இருந்தார்.
கேள்வி: இதெல்லாம் சர்வதேச ஒப்பந்தத்தின் படியே, அவர்கள் அணுகுண்டு செய்யக்கூடாது தானே?
பதில்: சர்வதேச ஒப்பந்தமாக ஒன்னும் சொல்லவில்லை. அந்த ஒப்பந்தத்தைதான் கடைபிடித்து கொண்டுதான் இருந்தார்கள். அந்த கடைபிடித்தலை மீறிதான் தாக்குதல் நடத்தி கமேனியை கொலை செய்தது அமெரிக்கா. இந்த மாதிரி கொலைகள் எல்லாமே நடக்கும் பொழுது ஈரான் ஒரு முடிவுக்கு வருகிறது. அமெரிக்காவிடம் பேச்சு வார்த்தை நடத்த ஒப்பந்தம் வரும்போது, அந்த ஒப்பந்ததை மீறி கொலை செய்தால், இதன்பின் அணு குண்டுதான் பாதுகாக்கும் என்றும், ஒப்பந்தம் பாதுகாக்காது என்றும், அந்த காகித்ததை தூக்கி குப்பையில் போட்டு, அணுகுண்டுதான் என்ன பாதுகாக்கும் என்கின்ற இடத்துக்கு ஈரான் நகந்துவிடும்.
நேற்றைக்கு டிரம்ப் போட்ட அந்த பதிவு மிக மோசமான செய்தி. அது வெளிப்படையான ஒரு இனப்படுகொலை செய்யக்கூடிய வகையில் பேசக்கூடிய துணிச்சல் வந்திருக்கிறது. அப்போது ஈரான் மேற்கு ஆசியாவில் இருக்கக்கூடிய அனைத்து நாடுகளின் மீதும் (யாரெல்லாம் அமெரிக்காவிற்கு தளம் கொடுத்துள்ளார்களோ) ஈரான் தாக்குதல் நடத்துவோம் என்கின்ற இடத்துக்கு வந்துவிட்டது. அப்படி தாக்குதல் நடத்தினால் எல்லா நாடுகளும் நெருக்கடிக்குள்ளாகும்.
இதற்கு பின்தான் உடனடியாக பாகிஸ்தானை தொடர்பு கொண்டு பாகிஸ்தான் வழியாக ஈரானுக்கும் அமெரிக்காவுக்குமான பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கிறது. ஆனால் பாகிஸ்தான் ஒரு அணுகுண்டு வைத்திருக்கக்கூடிய ஒரு நாடுதானே, அது மட்டுமில்லாமல் இது இரண்டுக்குமான ஒரு பேச்சு வார்த்தைக்கு வெகு காலமாக இருந்தது. ஏன்னெனில் ஈரானிடைய வெளியுறவு துறை செயலாளரை கொலை செய்வதற்கு இசுரேல் முயற்சி செய்ததை அமெரிக்காவுக்கு சொன்னது பாகிஸ்தான். அதனால்தான் உடனடியாக இசுரேலை தடுத்து நிறுத்தினார்கள். எனவே இந்த போர் மோசமான நிலைக்கு போகாமல் தடுப்பதற்கான முயற்சிகளை செய்திருக்கின்ற காரணத்தினால் பாகிஸ்தானிடம் பேச்சு வார்த்தைக்கு பங்கேற்பதற்கான இடைவெளி கிடைத்தது. அதில் இவர்கள் இரண்டு பக்கமும் பேச்சுவார்த்தை நேற்று இரவு முழுக்க நடந்துள்ளது. அதில் முதலில் போர் நிறுத்தம் வந்திருக்கிறது. இனி என்னென்ன ஒப்பந்தங்கள் வரப்போகுதும் என்று தெரியவில்லை. மேற்குலகத்தினுடைய போர் நிறுத்ததை என்றைக்கும் நம்பவே முடியாது.

கேள்வி: பாகிஸ்தான் ஏப்ரல் 10ஆம் தேதி ஒரு சமாதான பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்துள்ளார்களே?
பதில்: ஆமாம், இதை அமெரிக்கா தரப்பு சொல்லியிருக்கிறது. ஆனால் இசுரேல் இன்னும் எதுவுமே பேசவில்லை. இந்த 10ஆம் தேதிக்கு முன் இசுரேல் ஒரு குண்டை தூக்கி போட்டான் என வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் அமெரிக்க வழியில் இசுரேல் செய்யக்கூடிய ஆட்கள்தான். அதுமட்டுமின்றி ஈரானுக்குள்ளாக தரைப்படையை அனுப்புவதும், தரைவழி தாக்குதல் என்பது சாத்தியமில்லாத ஒன்று. இது மிகப்பெரிய அளவுக்கு அழிவை வந்து அமெரிக்காவுக்கு கொடுக்கும் என்று இதை மறுத்திருக்கிறார்கள். அமெரிக்காவினுடைய உயர்மட்ட தளபதிகளை பதவிநீக்கம் செய்துள்ளது டிரம்ப் நிர்வாகம். அப்போது ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவிற்குள்ளாக பெரிய எதிர்ப்பு இருக்கிறது.
ஓமனில் வைத்து இருதரப்பு பேச்சு வார்த்தை நடந்தது. ஈரான் அமெரிக்கா சொல்லக்கூடிய அனைத்து ஒப்பந்தங்களுக்கும் அனைத்து கோரிக்கைகளுக்கும் ஏற்றுக்கொண்டார்கள்,. அந்த சமயத்தில் அமெரிக்கா குண்டு போட்டு கமேனியை கொலை செய்கிறது.
ஈரானுக்கு ஒரு பண்பாடு இருக்கிறது. ’ஷியா’ நம்பிக்கையின் அடிப்படையில் இந்த சமூகத்தை காக்கின்ற போரில் உயிர் கொடுப்பது என்பது அவர்களுக்கு மிகப்பெரிய ஒரு மரியாதையை கொடுக்கும் என்பதால், அதனை விரும்பி ஏற்கக்கூடிய மனநிலை அவர்களுக்கு உண்டு.
கேள்வி: டிரம்ப் கூட அதை சொல்கிறார். விடுதலைக்காக எந்த எல்லைக்கும் போவார்கள் என்று!
பதில்: அதுவும் ரமலான் மாதத்தில் கொலை செய்கிறது. இப்படியான ஒரு மாதத்தில் இறப்பு தனக்கு நேருகிறது என்றால், அது மிக உயர்ந்த பரிசாக நினைக்கக்கூடிய சமூகத்தில், அந்த நேரத்தில் கொலை செய்கிறது. உலக அளவில் இருக்கக்கூடிய ஷியா மக்களின் தலைவராக இருக்கக்கூடிய கமேனியை கொலை செய்தபின், ஈரான் இந்த போர் சமாதானத்துக்கு போக வேண்டிய அவசியமே இல்லை. இந்த இடத்தில்தான் ஒரு கட்டத்தில் ஈரான் போரிலிருந்து டிரம்ப் வெளியேற வேண்டும் என விரும்புகிறார்.

ப்ளூ வாட்டர் நேவி (Blue Water Navy) என்று சொல்லக்கூடிய ஒரு பலம் அமெரிக்காவுக்கு உண்டு. உலகத்தில் மிக சில நாடுகளுக்குதான் இந்த ப்ளூ வாட்டர் நேவி இருக்கும். அது என்னவெனில் கடலில் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போய் தாக்குதல் நடத்தக்கூடிய அளவுக்கு வலிமையான கப்பல் படை வைத்திருப்பார்கள். அது அமெரிக்காவுக்கு இருக்கிறது. இங்கிலாந்துக்கு இருக்கிறது, பிரான்சுக்கு இருக்கிறது, ரஷ்யாவுக்கு இருக்கிறது, சீனா தற்போது கட்டிக்கொண்டு இருக்கிறது. இந்த நான்கு நாடுகளும் வலுமையான நாடுகள். இதில் அமெரிக்காதான் முதன்மையான நாடு.
அமெரிக்காவினுடைய கப்பல் படை பிரிவு ஈரானினுடைய கப்பல் படையை வேண்டுமானால் அழித்திருக்கலாமே ஒழிய, ஈரானுக்கு அருகில் ஒரு தாக்குதலை நடத்துவதற்கு ஒரு தரைவழி தாக்குதல் நடத்துவதற்குரிய வலிமையை பின்புலத்தை தருவதற்கு அமெரிக்காவின் கப்பல் படையால் இயலாமல் போனது. எவ்வளவு தூரம் போனது என்றால், அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம்தாங்கி கப்பலை ஈரான் பகுதிகளிலிருந்து இந்திய பெருங்கடலுக்குள் (அதுவும் பாதுகாப்பற்றதாக இருக்கும் என்று சொல்லி) குரோவேஷியா / கிரீஸ் கொண்டு போனார்கள். அதாவது ஐரோப்பாவில் கொண்டு போய் நிறுத்த வேண்டியதாயிற்று. அந்த அளவுக்கு ஒரு பெரிய நெருக்கடி அமெரிக்காவுக்கு கொடுத்து ஈரான்.
அப்போது அமெரிக்காவினால் கப்பல் படை பின்புலம் இல்லாமல் விமானப்படைகளை மட்டுமே வைத்து கொண்டு நடத்துவது என்பது, (கடந்த மூன்று நாட்களுக்கு முன் நடந்த ஈரானுக்குள் சென்று தாக்குதல் நடத்தி, அது காணாமல் போன விமானியை தேடுவதற்கு போய், அதில் ஒரு மூன்று விமானத்தை இழந்தது) ஒரு பெரிய நெருக்கடி உள்ளானது. அந்த நிலப்பரப்பு (Terrain) அப்போதுதான் புரிகிறது. இது ஆப்கானிஸ்தானை விட மோசமாக இருக்கிறது. இதற்குள் போய் விமானப்படையும் பெரிய அளவுக்கு பயன்படாத போது, தரைப்படை போனால் எவ்வாறு அமெரிக்கா பாதுகாக்கும்? இதனால் ஒரு ராணுவ ரீதியான நெருக்கடியை அமெரிக்கா எதிர்கொண்டது.

இரண்டாவது ஈரானை எதிர்கொள்வதற்குரிய ஆயுத வலிமை உருவாக்க வேண்டும். அமெரிக்காவினுடைய ஆயுதங்கள் மிக பொருட்செலவு கொண்டது. ஈரானுடைய ஆயுதங்கள் மிக குறைந்த செலவு கொண்டது. ஈரானால் ஆயிரக்கணக்கில் உற்பத்தி செய்துக்கொண்டே இருக்க முடியும். இந்த தாக்குதல் நாளைக்கு மறுபடியும் தொடரலாம், அதை நம்மால் சொல்ல முடியாது. ஏன்னெனில் ஈரானினுடைய ஆயுத உற்பத்திக்கான தொழிற்சாலைகளை எல்லாம் அதற்குரிய ரசாயன தொழிற்சாலைகளை எல்லாம் தாக்குதலால் அழித்தது. இதையும் தாண்டி ஈரானால் மீண்டு வர முடியும்.
ஏன்னெனில் ஈரானுக்கு மேல் காஸ்பியன் கடல் இருக்கிறது. அந்த காஸ்பியன் கடலையடுத்த எல்லையில் ரஷ்யா இருக்கிறது. அப்போது அது வழியாக ஆயுதங்களை கொண்டு வந்து இறக்கிவிட முடியும். அந்த தொடர்புகள் ஈரானுக்கு இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் ஈரான் தன்னை வலிமைப்படுத்திக் கொண்டது. சீனாவும் உளவு தகவல்களை முழுவதுமும் கொடுத்தது. சீனாதான் குறிப்பான / நுணுக்கமான தகவல்களை கொடுத்தார்கள்.
அதில் மிக முக்கியமானது: நாம் எல்லாருமே ஏதோ ஒரு ஜிபிஎஸ் உபயோகப் படுத்துகிறோம். அந்த ஜிபிஎஸ் எல்லாமே அமெரிக்கன் அமைப்பு (Systerm) சார்ந்தது. இப்போது அதில் இரானுக்குள் இருந்து நீங்கள் ஒரு வேலை செய்தால் அது எப்படி கையாடல் செய்யலாம். ஈரான் என்ன செய்தது எனில், சீனா அமைப்பு சார்ந்த ஜிபிஎஸ்-க்கும், உளவுத்துறைக்கும் போகிறார்கள். இதில் சீனா தன்னுடைய சிஸ்டத்தை எல்லாம் பரிசோதனை (Test) செய்து பார்க்கிறது. குற்ப்பாக இது ஈரான் போர் பயன்படுகிறது. இது ஒரு கூட்டாக இயங்க ஆரம்பிக்கிறார்கள்.
அதே மாதிரி ரஷ்யாவிலிருந்து ஒரு என்ன சொல்றது போர் கூட்டம் (Battle Hordened) எனசொல்லக்கூடிய (போரில் நன்கு பழக்கப்பட்ட படையணியும் பங்கெடுப்பது) சிச்சன் படையணியும் இந்த போர் நடக்கும் நிலப்பரப்பில் சண்டையிடுவதாக அறிவித்தார்கள். அப்போது இது போர் ஒரு நீண்ட நெடிய போராக மாறுவிட்டால், அமெரிக்காவிற்கு நெருக்கடி ராணுவ ரீதியானது. ஆனால் அதைவிட மிக மோசமானது: மேற்காசியாவில் இருக்கக்கூடிய அத்தனை நாடுகளுக்கும் அமீரகத்தில் (UAE) இருந்து (பஹரைனிலிருந்து, கத்தாரிலிருந்து, சவுதி அரேபியாவிலிருந்து இது அனைத்தும்) நாடுகளுக்குமான பொருளாதார கட்டமைப்பு முழுக்க தகர்ந்து போகும்.
உலக அளவில் துபாய், அபுதாபி எல்லாமே பொருளாதார நகரங்கள் கட்டுமான நகரங்கள். இந்த பொருளாதார முதலீடுகளை ஈர்க்கக்கூடிய இந்த நகரங்கள் மீது தாக்குதல் நடக்க ஆரம்பிக்கும், அமெரிக்க நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தும், அமேசான் உடைய சேவையகம் (Server) மேல், மைக்ரோசாப்ட் மேல் தாக்குதல் நடத்த ஆரம்பிக்கிறது ஈரான். அப்போது அங்கு பொருளாதார தளம் நெருக்கடிக்கு உள்ளாகும், குவைத, பஹ்ரைன் உடைய எண்ணெய் உற்பத்தி வெளியில் கொண்டு வருவதற்கு வழி இல்லாமல் ஈரானிடம் மாட்டிக்கொள்ளும், அல்லது வடக்கு பகுதியில கொண்டு போகக்கூடிய இடத்துதில் நிறுத்துவார்கள். இப்படிப்பட்ட நெருக்கடி வந்து நின்றபின் இந்த நாடுகள் பொருளாதார சீரழிவு நோக்கி நகர்ந்தால், இந்த பொருளாதாரம் கீழே இறங்கும். இப்படி இறங்கினால் இங்கே இருக்கும் மன்னராட்சி முடிவுக்கு வந்துவிடும்.
சவுதி அரேபியாவில் ’சல்மானா எம்பிஸ்’ செய்த திட்டங்கள் எல்லாமே குளறுபடியானது. அவர் மிகப்பெரிய அளவுக்கு 56 கிலோமீட்டக்கு நிலத்துக்குள் ஒரு நகரம் அமைப்பது என்பது மிக பெரிய செலவு செய்து இருக்கிறார். ஆனால் அங்கு 8 கிலோமீட்டக்கு மேல் நகரத்தை அமைக்க முடியவில்லை. அது மிகப்பெரிய அளவுக்கு பணம் மாட்டியுள்ளது. இது மாதிரி பல திட்டங்கள் (Real Estate Projects) பல தோல்வியில் போய் முடிந்துள்ளது. இதற்கு நடுவில் போர் ஆரம்பிக்கும் என வந்தால், அங்கு ஈரான் மட்டும் தாக்குதல் நடத்தாது, ஹவுத்தீஸ் தாக்குதல் நடத்துவார்கள்.
ஹீவுத்தீஸ் தாக்குதல் நடத்தினால் சவுதி அரேபியாவுடைய ஒட்டுமொத்த எண்ணெய் உற்பத்தியும் நெருக்கடிக்கு உள்ளாக ஆரம்பிக்கும். அப்போது ஆர்.எம்.கோவின் கட்டமைப்பு நெருக்கடி உள்ளாக்க ஆரம்பிக்கும். இந்த ஆர்.எம்.கோ நிறுவனத்தினோடு மிகப்பெரிய ஒப்பந்தமும் ரிலயன்ஸ் அம்பானிக்கு இருக்கிறது. இஸ்ரேலில் இருக்கக்கூடிய ’ஐபா’(Haifa) துறைமுகத்துக்கு ரிலையன்ஸ் அம்பானி பெரிய முதலீடுகள் இருக்கிறது. அப்போது இந்த போரில் ஊம குத்து அடி வாங்கியது எல்லாம், இந்தியாவில் இருக்கக்கூடிய குஜராத்தி நிறுவனங்கள்.

மிக முக்கியமான நாம் கவனிக்க வேண்டியது: இந்தியாவில் எவ்வளவு பெரிய தோல்வி நடந்திருக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். ஏன்னெனில் உலக அளவில் சமாதானத்தை ஏற்படுத்தக்கூடிய வலிமை இந்தியாவுக்கு இருந்தது. இந்த போரில் ஈரானோடு இந்தியாவுக்கான நெருக்கம் என்பது நீண்ட கால உறவு. ஈரான் இஸ்லாமிய நாடாக இருந்த பொழுதும் கூட, காஷ்மீர் விடயத்தில் இந்தியாவுக்கு எதிரான தீர்மானத்தை பாகிஸ்தான் ஐ.நாவில் கொண்டு வந்த பொழுது, இந்தியாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை ஈரான் எடுத்ததால் இந்தியா தப்பித்தது. அன்றைக்கு இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் சேர்ந்து இந்தியாவுக்கு பெரிய நெருக்கடி வந்திருக்கும். அன்றைக்கு காஷ்மீரில் நடந்த மிகப்பெரிய கொலைகள் & தாக்குதல்களுக்கு எல்லாம் ஒரு பெரிய எதிர்ப்பலை வந்தபோது, ஈரான் இந்தியாவோடு துணையாக நின்றது. அதேபோல ஈரான் மீது பொருளாதார நெருக்கடி வந்த பொழுது கூட இந்தியாவிற்கு மிக குறைந்த விலையில் நமக்கான கச்சா எண்ணையை கொடுத்துக்கொண்டு இருந்தார்கள்.
ஈரான் வந்து ஒரு மிகப்பெரிய அளவுக்கான நம்மளுக்கு ஒரு நெருக்கமான பண்பாட்டு ரீதியான நெருக்கத்தை கொண்ட நாடு. இந்த சமயத்தில் இந்தியா, ஈரானுக்கும் -அமெரிக்காவிற்கும் நடுநிலைமையை வகித்து, இந்த போர் நிறுத்துவதற்குரிய ஒரு பணியை செய்து, இந்த பிராந்தியத்தில் முக்கியமான ஒரு ஆளுமையாக வந்திருக்க முடியும். ஆனால் இந்தியா முற்றிலுமாக ஒதுக்கி தள்ளப்பட்டது.
இந்த ஈரான் மேல் தாக்குதல் ஆரம்பிக்கும் இரண்டு நாளைக்கு முன்தான் மோடி இசுரேல் போனார். இசுரேல் மேல் இனப்படுகொலை வழக்கு நடந்துகொண்டு இருக்கிறது, நேத்தன்யாகு இனப்படுகொலை குற்றவாளி என்று அவரை கைது பண்ணுவதற்கான பிடியாணை (Warrant) பிரபிக்கப்பட்டிருக்கிறது. ஒரு கொலை பண்றவனிடம் போய் விருது வாங்கிட்டு வரக்கூடிய ஒரு கீழ்த்தரமான ஒரு அரசியலை மோடி செய்தார். இவரை கூப்பிட்டு உட்கார வைத்து ”இந்தியா இசுரேல் பக்கம் தான் இருக்கிறது” என்பதை உலகத்தை காட்டிவிட்டு போரை தொடக்குகிறது. உலக்த்திலுள்ள எந்த பிரதமரும் இப்படி செல்ல மாட்டார்கள்.

இந்தியாவின் வெளியுறவு துறை அமைச்சரோ, பாதுகாப்பு துறை அமைச்சரோ இந்த விடயத்தில் என்ன முடிவு எடுத்திருக்க வேண்டும்? ”ஆசியா கண்டத்திற்குள்ளாக இந்தியா அனைத்து நாடுகளோடும் உறவுகளை சுமுகமாக பேணி, இங்கு ஒரு அமைதித்தன்மை உருவாக்குவதற்கான ஒரு முயற்சியை இந்தியா எடுக்கும்” எனசொல்லி இருந்தால், உலகத்தில் பெரிய ஆளுமையாக இருந்திருப்பீர்கள். இசுரேல் லெபனானில் கொலை செய்கிறான், காசா- பாலஸ்தீனத்தில் கொலை செய்கிறான், சிரியாவில் கொலை செய்கிறான், ஈரான் மீது ஒரு போர் நடத்திக் கொன்ற இனப்படுகொலை வழக்கில் குற்றச்சாட்டு பட்டிருக்கக்கூடிய ஒரு பிரதமரை, மோடி கட்டி அணைத்துக்கொண்டு வருகிறீர்கள் என்றால், உங்கள் மீதான நம்பிக்கை முற்றிலுமாக சிதைந்து போனது.
இன்றைக்கு இந்தியா எதுவுமே பேச முடியாத இடத்தை பயன்படுத்திக் கொண்டு பாகிஸ்தான் உள்ளே வருகிறது. பாகிஸ்தானும் இந்த அமைதி ஒப்பந்தத்திற்கான வேலையை செய்கிறது. நாளைக்கு இஸ்லாமாபாத்தில் பேச்சு வார்த்தை நடக்க இருக்கிறது எனில், வரலாற்றில் யார் வருவார்? இந்த இரண்டு நாடு சண்டைகளில் மிக முக்கியமான அமைதியை கொண்டு வந்து, அதன் மூலமாக நற்பெயர் எடுக்கக்கூடிய ஆள் யாராக இருப்பார்? இந்தியா இனி வரும் காலங்களில் உலக அளவில் ஐநாவுக்கு போய் இஸ்ரேல் & பாகிஸ்தான் பயங்கரவாத நாடுகள் என்று சொன்னால் சிரிக்க மாட்டார்களா?
கேள்வி: இன்றைகே பாகிஸ்தான் போர் அமைதி ஒப்பந்தம் எங்களால் நடந்தது என சொல்கிறார்களே!
பதில்: அவர்கள் நடந்த உண்மைதானே, அது உலகமே ஏற்றுக்கொண்ட ஒன்றுதானே! இசுரேல் காரன் ஊர் முழுக்க குண்டை போட்டு இத்தனை குழந்தைகளை இனப்படுகொலை செய்தவனிடம் போய் கை குளிக்கொண்டு வருபவர் நீ(மோடி) பயங்கரவாதியா? அல்லது ஈரான் அமெரிக்கா போர் உச்சகட்டத்திற்கு வந்து, ஒரு அணு குண்டு போடக்கூடிய அளவுக்கு நிலைமை வரும்பொழுது, அதில் தலையிட்டு அமைதி கொண்டு வரக்கூடிய பாகிஸ்தான் பயங்கரவாதியா? என மற்ற நாட்டுக்காரன் கேட்ப்பானா, மாட்டானா? இதுதான் இன்றைக்கு மோடி அரசு இந்தியாவிற்கு கொண்டு வந்து சேர்த்திருக்கக்கூடிய அவமானம்.
நாம் ஏன் இதை சொல்கிறோம் எனில், தமிழ்நாட்டில் திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகளில் பிராமணர்களுக்கு இடமில்லை, பார்ப்பனர்களுக்கு இடமில்லை எனஒரே ஒப்பாரி பிஜேபி தரப்பில் இருந்து வைக்கப்படுகிறது. ஏற்கனவே அவர்கள் முடிவு எடுக்கும் அதிகாரிகளாக இருக்கிறார்கள். ஆனால் ஒரு அரசியல் முடிவுகள் எடுக்கக்கூடிய இடத்தில் தவறான முடிவுகளை தான் எடுப்பார்கள், மக்கள் விரோத முடிவுகள் எடுப்பார்கள். இதற்கு பெரிய உதாரணமாக பாரதிய ஜனதா கட்சியினுடைய வெளியுறவு துறை செயலாளராக இருக்கக்கூடிய ஜெய்சங்கர் வழியாவே நாம் தெரிந்து கொள்ளலாம். ஜெய்சங்கர் பார்ப்பனர் தான், தமிழ்நாட்டுக்காரர்தான். இந்த வெளியுறவு துறை தோல்வி அடைந்ததா இல்லையா?
ஈரான் கூட இந்தியா ஒப்பந்தத்தை போட்டு இருந்தால் இநேரம் நம் ஊரில் எரிவாயு (Gas) பிரச்சனை கிடையாது, பெட்ரோல் பிரச்சனை கிடையாது, குறைந்த விலையில் தங்கு தடை இல்லாமல் கிடைத்திருக்கும். அதை செய்ய முடியாமல் கூலிக்கு மாறடிக்கிற வேலையை செய்தார்கள். இதேபோல நிதியமைச்சர் நிர்மலாஅதே சமூகத்தை சேர்ந்தவர்தான். வெளிப்படையாக பூண்டு, வெங்காயம் சாப்பிட மாட்டோம் என்கிறார்கள். இருவரும் தமிழ்நாட்டை சேர்ந்த பார்ப்பனர்கள் தான். இவர்கள் வெளிப்படையாக தங்கள் அடையாளத்தை சொல்லக்கூடிய ஆட்கள்தான்.

இந்த மாதிரி ஆட்கள் அரசியல் அதிகாரத்துக்குள் கொண்டு வந்தால் எப்படி நல்லது பண்ணுவார்கள்? நிர்மலாவோ ஜெய்சங்கரோ மக்களுக்கான சிக்கலை தீர்ப்பதற்குரிய ஒரு பார்வை இருக்கிறதா? ஒரு அண்டை நாடுகளோடு உறவுகளை உருவாக்கின்ற ஒரு ஒரு பண்பு இருக்கிறதா? நட்பு தோழமை இருக்கிறதா? எதுவுமே இல்லை. ஈழத்தில் இருக்கக்கூடிய தமிழர்களை எதிரிகளாக மாற்றக்கூடிய வேலையை இவர்கள் தான் செய்தார்கள். இலங்கை விடுதலை அடைந்த பொழுது சிங்களவர்கள் சிங்கள கொடியை கொழும்பில் ஏற்றினார்கள், ஆனால் தமிழர்கள் யாழ் கோட்டையில் இந்திய கொடி ஏற்றினார்கள்.
காந்தி கொலை செய்யப்பட்ட நான்காவது நாள் பிப்ரவரி 4, 1948ல் இலங்கையில் விடுதலை அடைகிறது. எனினும் அன்றைக்கு இந்திய கொடியை அரைக்கம்பத்தில் ஏற்றி, காந்திக்கு மரியாதை செலுத்தினர். இந்தியாவினுடைய அடையாளத்தை தங்களுடைய அடையாளமாக வைத்த ”ஈழ தமிழர்களை படுகொலை செய்வதற்கு இந்தியாவிலிருந்தே படையை அனுப்பிய கூட்டம் யார் எனில், அது பார்ப்பனக் கூட்டம்”. இதை நான் சொல்லவில்லை. அன்றைக்கு இந்திய அமைதிகாப்பு படையிலே போன ஒரு அதிகாரி வெளிப்படையாக டுவிட்டரில் (X தளத்தில்) எழுதினார். இந்த ஒட்டுமொத்த ஐபிகே ஆபரேஷன் எதற்கு செய்கிறீர்கள் என தலைமை தளபதியாக இருந்தவரிடத்தில் கேட்ட போது, அவர் சொன்னார்: தமிழ்நாடு பார்ப்பனர்களுக்கு ஒரு பதட்டம் வந்துவிட்டது. இலங்கை மீது பிடிப்பு போய்விடுமே என சொல்லி, அதனால் இந்த மாதிரி (தமிழர்கள் மீதான படுகொலை) ஒரு சூழலை உருவாக்கி கொண்டு போய் சேர்த்தார்கள். மற்றபடி அதற்கு எந்த நோக்கமும் கிடையாது என வெளிப்படை எழுதிருந்தார்.
தமிழ்நாடு ஏன் பார்ப்பனர்களை அரசியல் கட்டத்துக்குள் ஏற்றுக்கொள்ள வேண்டும்? அவர்களால் சமூகத்துக்கு நல்லதாக யோசிக்கக்கூடிய எந்த வேலையும் செய்த மாதிரி நாம் பார்க்கவில்லை. ஆக எல்லாருரையும் நாம் கெட்டவர்கள் என சொல்லவில்லை. தமிழர்களுக்கு நல்லது செய்தால் ஏற்றுக்கொள்ள இடத்திற்கு வருவோம். அப்படி இதுவரைக்கும் செய்யவில்லை.
திருப்பரங்குன்றம் பிரச்சனை வந்தது. நம்மல்லாம் என்ன சொன்னோம்? அது காலம் காலமாக இருக்கிறது, மக்கள் கும்பிடுறார்கள், எந்த பிரச்சனையும் இல்லை. ஏன் இதை சமூக பிரச்சனையாக மாற்றுகிறீர்கள்? எனஎல்லாருமே சொன்னோம். இதைப்பற்றி பார்ப்பன சமூகம் ஏதாவது சொன்னார்களா? எத்தனை பேர் பேசினார்கள்? எச். ராஜாவை கண்டித்து இருக்க வேண்டும் அல்லவா? செய்தார்களா? இல்லையே.
கேள்வி: இப்போது டிரம்ப் நேட்டோ அமைப்பின் மீது கோபத்தை வெளிப்படுத்துகிறாரே! அதை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: நேட்டோவில் இருக்கக்கூடிய உறுப்பு நாடுகளில் டென்மார்க் உள்ளது. டென்மார்க் உடைய நிலப்பரப்பு கிரீன்லாண்ட் ஆகும். அதை டிரம்ப் கைப்பற்றுவேன் என சொன்னவுடன், டென்மார்க்காரன் பயந்துவிட்டான். இவ்வளவு நாள் நம்மெல்லாம் ஒரே நாடுதானே, ஒரே நேட்டாவில் இருக்கிறார்கள் என்று நினைத்தால், டிரம்ப் நேட்டா நாடு மேலேயே படை எடுக்கிறேன் சொல்லிவிட்டார். உடனே அவசரமாக ஒரு கூட்டு படையை உருவாக்கி அங்கு கொண்டு போய் இறக்க வேண்டிய நிலைமை வந்துவிட்ட்து. இதேபோல நாளைக்கு டிரம்ப் யார் மேலே வேண்டுமானாலும் பாய்வார் என்குன்ற இடம் வந்துவிட்டது. அதனால்தான் பிரான்ஸ் ஈரானுக்கு ஆதரவு தெரிவிக்கக்கூடிய நிலைப்பாடு எடுத்தார்கள்.

டிரம்ப் தனிமைப்பட்டு போனதுக்கு காரணம்: அவர் இஷ்டத்துக்கு பேசுவதுதான். அவர் தோணுவதை எல்லாம் பேசுவார். அவர் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட மனிதர்தான். இது எந்த வகையான மனநலம் பாதிக்கப்பட்டவர் எனில், மனித குலத்துக்கு எதிரான ஒரு மனநிலையோடதான் இருக்கிறார். குண்டு போடுவேன், கொலை பண்ணுவேன், மிரட்டுவேன், தூக்கிட்டு வருவேன், கிரீன்லாண்டை நான் எடுத்துக் கொள்கிறேன், கியூபாவை எடுத்துக் கொள்கின்றேன், அந்த பெருமை எனக்கு வரட்டும் என பேசுகிறார். இந்த மாதிரியான அதிகார போதையில் இருக்கக்கூடிய, மிக மோசமான மனநலம் பாதிக்கப்பட்ட மனிதராகத்தான் இருக்கிறார். இவர் மோடியினுடைய நண்பர். ட்ரம்புக்காக வாக்கு கேட்ட மோடியையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டியருக்கிறது.
உலக வரலாறு இன்றைக்கு மிக முக்கியமான ஒரு காலகட்டத்தில் வாழ்கிறோம். இந்த போர் நீடித்தால் நாளைக்கு எங்கு வேண்டுமானாலும் வரலாம், எந்த பகுதி வேண்டுமானாலும் பரவலாம் என்பதை தான் நாம் பார்க்கிறோம். நம் இலங்கை கடற்கரையை ஒட்டி ஈரானுடைய கப்பலை அமெரிக்கா அடித்தது, சர்வதேச கடல் பரப்புபில் மோசமான சம்பவம் இது.
நாளைக்கு தமிழ்நாடு எவ்வளவு தூரம் இருக்கிறது? இந்த பிரச்சனை நடந்துக்கொண்டு இருக்கும் போது, கல்பாக்கத்தில் அணு உலையை திறந்துவிட்டோம் எனபேசுகிறார்களே, நாளைக்கே கல்பாக்கத்தில் ஒரு குண்டை தூக்கி போட்டால் என்று வைத்துக்கொள்வோம் யார் பாதிப்புக்கு உள்ளார்வர்கள்? அயோத்தியா பாதிக்குமா? போபால் பாதிக்குமா? லக்னோ பாதிக்குமா? குஜராத் பாதிக்குமா? இல்லை, தமிழன் பாதிப்பு அடைவான். இதுகுறித்து நிறைய பேச வேண்டிய இருக்கிறது. அந்த அணுஉலைக்கு கொண்டு வரக்கூடிய அந்த பொருட்கள் எல்லாம் பாதுகாப்பற்றது நிலையற்றது எனசொல்லி, ஏற்கனவே அதற்கான அறிக்கைகள் எல்லாம் வந்துவிட்டது. இது எதற்கு தமிழ்நாட்டின் மேல் திணிக்கிறார்கள்.
இந்த சூழலில் நாம் மிக கவனமாக பார்க்க வேண்டிய அரசியலை புரிந்து கொள்ள வேண்டும். இதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்டியன் இந்த கதை எல்லாம் கிடையாது. அப்படிதான் போரை தொடங்கியதன் நோக்கம். ஆனால் அதுவல்ல, ’ஆதிக்கம், கட்டுப்பாடு’ ஈரானில் இருக்கக்கூடிய எண்ணெய் வளங்களை கொள்ளை அடிப்பது, இதெல்லாம்தான் போரின் நோக்காமே ஒழிய, இதில் மதத்துக்கு ஒரு வேலையும் கிடையாது.
உங்கள் நேரம் ஒதுக்கி பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி.
நன்றி!