ஹவாய் தீவை ஆக்கிரமித்த அமெரிக்கா

ஹவாய் தீவை ஆக்கிரமித்த அமெரிக்கா

ஹவாய் கரையை வந்தடைந்த அமெரிக்க படை

வடக்கு பசிபிக் பெருங்கடலின் வடக்கு பகுதியில் உள்ள மிக அழகான ஒரு பெரிய தீவுக்கூட்டம் ஹவாய் (Hawaii). தற்போது அமெரிக்காவின் ஒரு மாகாணமாக இருக்கும் இது, 1898-கக்கு முன்பு வரை பூர்வகுடிகளின் கட்டுப்பாட்டில் ஒரு தனி சுதந்திர நாடாக இருந்தது. 1959 முதல் அமெரிக்காவின் ஒரு மாகாணமாக இணைக்கப்பட்டது. காலனிய காலத்தில் ஐரோப்பியர்களின் படையெடுப்பில் உலகின் பல்வேறு தேசங்கள் அடிமைப்படுத்தப்பட்டது போன்றே, ஹவாய் தீவும் ஐரோப்பியர்களின் ஆக்கிரமிப்பிற்குள்ளானது.

ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கா வந்திறங்கிய வெள்ளையர்கள், அமெரிக்காவின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்களை ஒடுக்கி, அவர்களது நிலங்களை பிடுங்கி தங்களுக்கான ஒரு அரசாட்சியை அமைத்துக்கொண்டனர். அவர்கள் ஹவாய் தீவையும் விட்டுவைக்கவில்லை. ஹவாய் தீவை அடைந்த வெள்ளையர்கள் பண்ணைகளை மட்டுமே உருவாக்கவில்லை. பூர்வகுடி மக்களின் நிலங்களை அபகரித்து கொண்டு அங்கே ஆட்சி செய்த கொண்டு இருந்த ராணியின் அதிகாரத்தை கைப்பற்றி கொண்டார்கள்.

ஹவாய் தீவில் சக்கர்பர்க் வாங்கியுள்ள பகுதிகள்

இன்று அதே யுக்தியை  முகநூல் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் (Facebook owner Mark Zuckerberg) பின்தொடர்கிறார். முகநூல் மூலம் பல்லாயிரக்கணக்கான கோடிகளுக்கு அதிபதியான மார்க் சக்கர்பெர்க், அமெரிக்க அரசாங்கத்தின் துணையோடு பூர்வகுடி மக்களின் நிலங்களை 100 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கியுள்ளார் ( அபகரித்துள்ளார்).

2000 வருடங்களுக்கு முன்பு (Polynesian) பாலினேசியன் மக்கள் கூட்டம் சிறிய படகுகள் மூலம் ஹவாய் தீவிற்கு வந்தார்கள் பிறகு அவர்கள் அனைவரும் சேர்ந்து ஹவாய் ராஜ்ஜியம் இறையாண்மை கொண்ட நாடாக உருவாக்கினார்கள்.

ஹவாய் என்பது அவர்களுடைய கலாச்சாரம் மொழி என்று உருவாகியது. ஹவாய் இராஜ்ஜியம் பலவருடங்கள் யாருடைய படை எடுப்பும் இன்றி தனித்த அமைதியான தீவாக காணப்பட்டது. 17-18 ஆம் நூற்றாண்டில் கடல் வழி பயணங்கள் உலகெங்கும் போட்டி போட்டு கொண்டு இருந்த நேரத்தில், 1778 ஆம் ஆண்டு சனவரி 8-இல் இங்கிலாந்து நாட்டின் சேர்ந்த கேப்டன் ஜேம்ஸ் குக் (James Cook) ஹவாய் தீவில் உள்ள ஓஹு (Ohau) கடற்கரையில் தரை  இறங்கினார். வந்தவர்கள் ஹவாய் தீவு மக்களிடையே இரும்பை வியாபாரம் செய்தார்கள்.

ஜேம்ஸ் குக் – ஹவாய் மக்கள் மோதல்

அவர்கள் வரும்போது கூடவே பல நோய்களையும் ஹவாய் தீவில் இறக்குமதி செய்தார்கள். குறிப்பாக அம்மை நோய்கள். அந்த நோய்களில் இருந்து தங்களை பாதுகாக்க அவர்களுக்கு எந்த வழியும் இல்லாமல், 1770 ஆம் ஆண்டு 3 லட்சமாக இருந்த ஹவாய் மக்கள் தொகை 1850 ல் 60,000 ஆகியது. 1920-ல் 24,000 மக்களே உயிரோடு இருந்தார்கள்.

பிரித்தானிய கடல் பயணி கேப்டன் வேன்கோவெர் யூனியன் ஜாக் (The Union Jack) கொடியை 1791-ஆம் ஆண்டு, ஹவாய் அரசர் முதலாம் கமிகமெகாவிடம் (Kamehameha-I) கொடுத்தார். அவரும் அதை பெற்று கொண்டார். பிறகு இராணுவ தளவாடங்களை கொடுத்து சிறு சிறு குழுக்களாக சிதறி கிடந்த ஹவாய் தீவை ஒரே ராஜ்ஜியமாக  (Kingdom of Hawaii) உருவாக்கினார்கள். கால்நடைகளை  இறக்குமதி செய்து ஹவாய் தீவில் வியாபாரம் செய்தார்கள்.

அப்போது ஹவாய் தீவில் ஐரோப்பாவில் இருந்து குடியேற்றம் மிக பெரிய அளவில் நடைபெற ஆரம்பித்தது. அவர்கள் அங்கு கரும்பு தோட்டங்கள் உருவாக்கினார்கள். அந்த காலத்தில் சர்க்கரை என்பது  வெள்ளை தங்கம் (White Gold) என்று அழைக்கப்பட்டது. பின்னர் கிருஸ்துவ மிஷனரிகள் வந்தார்கள். பண்ணைகளில் வேலை செய்ய ஆட்கள் தேவைப்பட்டார்கள் சம்பளம் குறைவாக ஜப்பான், சீனா, பிலிப்பைன்ஸ் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்தார்கள்.

ஒரு நாள் களவுபோன இங்கிலாந்து கப்பலை மீட்டு தரவேண்டும் என்று ஹவாய் தீவு மக்களின் தலைவரை கேப்டன் ஜேம்ஸ் குக் பணயக் கைதியாக பிடித்தது வைத்திருந்தார். அப்போது  ஹவாய் மக்களுடன் நடந்த கலகத்தில் கேப்டன் ஜேம்ஸ் குக் கொல்லப்பட்டார். அங்கிருந்து தப்பிய இங்கிலாந்து இராணுவத்தினர், கடலில் நங்கூரமிட்டு வைத்து இருந்த கப்பலில் இருந்து பீரங்களால் தீவில் உள்ள அப்பாவி மக்கள் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தி மிகக் கொடூர படுகொலையை செய்தார்கள்.

ராணி லில்லி உஓகளானி

1700 களில் ஹவாய் தீவிற்கு வந்த அமெரிக்கர்களில் மதபோதகம் செய்ய வந்த சிலர் அங்கேயே தங்கி விட்டார்கள். அவர்களின் அடுத்த தலைமுறை மதபோதகம் செய்ய விரும்பவில்லை. அவர்கள் வியாபாரம் செய்ய ஆரம்பித்தார்கள். கட்டிடங்கள், தோட்டங்கள், பண்ணைகளை உருவாக்கினார்கள். முக்கியமாக வெள்ளை தங்கம் என்று அழைக்கப்பட்ட சர்க்கரை. அவர்கள் வியாபாரம் மட்டும் செய்யவில்லை. அங்கு இராணியாக இருந்த லில்லி உஓகளானி (LiLi Uokalani) என்பவரது முடியாட்சியை தூக்கி எறிந்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை அவர்கள் கைப்பற்ற முடிவு செய்தார்கள். அவர்கள் ஹவாய் தீவில் பிறந்தவர்கள். சட்டப்படி அவர்கள் ஹவாய் தீவின் குடிமக்கள். ஆயினும் அவர்கள் அவர்களுடைய முன்னோர்களின் நாடான அமெரிக்காவையே நம்பி இருந்தார்கள்.

ஹவாய் ராஜ்ஜியத்தில் ஹவாயின் அமெரிக்க அமைச்சராக இருந்தவர் ஜான் ஸ்டீவன்ஸ். இவர் அதிகாரத்தை கைப்பற்ற அமெரிக்க பின்கதவு வழியாக உள்ளே நுழைய மறைமுகமாக உதவி செய்தார். 1890-களில் அமெரிக்கா உலகெங்கும் தனக்கு என்று ஒரு அதிகாரத்தை உருவாக்கி கொண்டு இருந்த காலம் அது. அப்போது ஹவாய் தீவிற்கு தூதராக இருந்தவர் US Boston. அவர், அமெரிக்க  போர் கப்பலை ஆயுதங்களால் நிரப்பி ஹவாய் தீவிற்கு அனுப்பினார். இது அமெரிக்காவின் குள்ளநரி அரசியல் சூழ்ச்சி. ஆம், கடல் வளங்களை கொண்ட மற்றும் சர்க்கரை உற்பத்தி செய்து கொண்டிருந்த ஹவாய் தீவில் அமெரிக்காவை எதிர்த்து போர் செய்யும் அளவிற்கு பலமும் இல்லை இராணுவமும் இல்லை. அது Coup d’État என்று அழைக்கப்படும் இராணுவ துணையுடன் நடத்தபடும் அரசியல் கவிழ்ப்பு (Coup) என்று அழைப்பார்கள். ஹவாய் தீவில் பிறந்த அமெரிக்கர்கள், அமெரிக்க இராணுவ துணையோடு கலகம் செய்து ஆட்சியை கவிழ்த்தார்கள். அமெரிக்காவின் Old Glory Flag என்னும் கொடியை பறக்க விட்டார்கள். இதை தொடர்ந்து 38,000 ஹவாய் தீவின் பூர்வகுடி மக்கள நாங்கள் அமெரிக்காவிடம் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கையெழுத்துயிட்டு கொடுத்தார்கள். அப்போது ஒட்டு மொத்த பூர்வகுடிகளின் மக்கள் தொகையே 40,000 தான்.

அமெரிக்க படைகள்

1843-ஆம் ஆண்டு ஹவாய் தீவு ஐரோப்பாவிற்கு வெளியே ஒரு தனித்த தேசமாக இருந்தது (An Independent Recognized state). பிறகு ஸான் ஃபோர்டு டோல் (Sanford Dole) என்பவரை ஹவாயின் புதிய ஜனாதிபதியாக கொண்டு ஒரு பொம்மை அரசை 1894 ஆம் ஆண்டு ஜுலை 4 ஆம் தேதி  நிறுவினார்கள். டோல் உணவு நிறுவனம் (Dole food company) என்னும் இவர்களுடைய நிறுவனம் தான் ஹவாய் மக்களின் நிலங்களை கையகப்படுத்தும் வேலைகளை மிகபெரிய அளவில் செய்தது. 1895 நில அபகரிப்பு சட்டம் இயற்றியது. இதன் மூலம், அனைத்து பொது மக்களின் நிலங்களையும் அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. பிறகு 1898 ஆண்டுவாக்கில் 18 லட்சம் ஏக்கர் நிலங்களை அமெரிக்காவின் ஆளுகையின் கீழ் ஹவாய் கொடுத்த அனைத்தும் கரும்பு சாகுபடி செய்யப்பட்ட நிலங்கள். 1959 அமெரிக்க காங்கிரஸ் ஹவாய் சேர்க்கை சட்டம் (Hawaii Admission Act) ஒன்றை உருவாக்கியது. ஹவாய் 30,176.185 ஏக்கர் நிலங்களை அமெரிக்காவிற்கு ஏக்கர் ஒன்றுக்கு 1$ டாலர் என்று 65 வருடங்கள் குத்தகைக்கு கொடுத்தது.

Brewer & Co, Théo H. Davies & Co, Amfac, Castle & Cookie, Alexandre & Baldwin இந்த ஐந்து நிறுவனங்கள் தான் ஹவாய் தீவில் உள்ள நிலங்களை கையகபடுத்தி மக்களின் ரத்ததை உறிஞ்சி குடித்தது. 1959 ஆம் ஆண்டு ஹவாய் தீவில் அமெக்காவின் 50 வது மாகாணமாக அறிவித்த பிறகு சில தனியார் கரும்பு பண்ணைகள் படிபடியாக மூடப்பட்டது. இப்போது இந்த நிறுவனங்கள் திவால் ஆகிவிட்டது; மற்றவர்களின் கைகளுக்கு மாறிவிட்டது.

Alexander & Baldwin என்னும் நிறுவனம் மட்டும் இப்போது பழைய கோட்பாடுகளின் படியே இயங்கி கொண்டு வருகிறது. இது தற்போது 91,000 ( 370 சதுர கிலோமீட்டர்) ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளது.

ஹவாய் அமெரிக்காவின் 50 வது மாகாணம் ஆன பிறகு, ஹவாய் மக்கள் புனிதமானது என்று கருதப்பட்ட மலைகள் காடுகளை அழித்து கரும்பு தோட்டங்களை விரிவு படுத்தினார்கள். அனைத்திற்கும் மேலாக ஹவாய் மொழியை புறந்தள்ளி விட்டு அனைத்திலும் ஆங்கிலத்தை புகுத்தினார்கள் .பள்ளிகள், அரசு அலுவலகங்கள், சட்டங்களை செயல்படுத்துவது அனைத்திலும் ஆங்கிலம் வந்தது. பூர்வகுடி மக்கள், எங்களுடைய அடையாளத்தை படுகொலை செய்யாதே என்று போராடினார்கள்.

1993 ஆம் ஆண்டு ஹவாய் முழுவதும் அமெரிக்காவின் வசம் ஆனது. அதாவது 3,600 மைல் தொலைவில் பசிபிக் பெருங்கடலில் இன்னொரு அமெரிக்காவை பூர்வகுடி மக்களின் நிலங்களை திருடி ஒரு அமெரிக்காவை உருவாக்கியது. அதே ஆண்டு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பில் கிளிண்டன் 1893 ஆம் ஆண்டு ஹவாய் தீவில் அமெரிக்க படைகள் நடத்திய கலகத்துக்கு (Coup) பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.

இருந்தபோதிலும் ஹவாய் மக்கள் தங்கள் எங்கள் நாட்டை எங்களிடம் திருப்பி கொடுங்கள் என்று போராடி கொண்டு தான் இருக்கிறார்கள். மொழியை அழிந்து விடாமல் பாதுகாப்பு காத்து கொண்டு இருக்கிறார்கள். இப்போது பள்ளிகளில் ஹவாய் மொழியை மீண்டும் அறிமுகம் செய்துள்ளார்கள். அவர்களுடைய வழிபாட்டு முறைகளையும் காலச்சாரகங்களையும் பாதுகாத்து கொண்டு இருக்கிறார்கள் தங்களுடைய நிலங்களை அமெரிக்க ஏகாதிபத்தியம் பின் கதவு வழியே வந்து ஆக்கிரமிப்பு செய்து கொண்டாலும், இன்றும் மார்க் சக்கர்பெர்க் போன்ற நவ-கார்பரேட்களிடம் இருந்து தங்கள் நிலங்களை மீட்க பூர்வகுடி மக்கள் போராடி கொண்டு தான் இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »