பாலியல் குற்றங்களின் புகலிடமாக விளங்கும் பாரதிய ஜனதா கட்சி

பாரதிய ஜனதா கட்சியினர் தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகிவிட்டது என்று தேர்தல் சமயத்தில் திடீர் ஞானோதயம் வந்ததைப் போல பேசிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் பாரதிய ஜனதா கட்சி என்பது பாலியல் ஜனதா கட்சி என்று சொல்லும் அளவிற்கு, அக்கட்சியின் கீழ் மட்டங்களில் இருந்து மேல் மட்டம் வரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கும் கட்சி என்பதற்கான சான்றுகள் ஏராளமாக குவிந்து கிடக்கின்றன.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எங்கு நடந்தாலும், யார் செய்தாலும் அது கண்டிக்கக் கூடியது என்பதில் யாருக்கும் எவ்வித மாற்று கருத்தும் இருக்க முடியாது. ஆனால் பாரதிய ஜனதா கட்சியோ தனது கட்சியில் இருக்கக்கூடிய பெண்களுக்கு எதிராக நடக்கக்கூடிய பாலியல் குற்றங்களை மறைப்பதற்கு தமிழ்நாட்டை குறை சொல்கிறது. சொந்த கட்சியில் உள்ளவர்களின் பாலியல் குற்றங்கள் குறித்து வாய் திறக்காமல் ஊருக்கு உபதேசம் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறது. 

பாலியல் குற்றத்தில் பாரதிய ஜனதா கட்சியாக முதலிடத்தில் இருப்பதாக, ‘ஜனநாயக சீரமைப்புக்கான அமைப்பு (ADR)’ ஒன்று 2024-ம் ஆண்டு கணக்கெடுப்பு ஒன்றை வெளியிட்டது. பாஜக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் என 151 பேர் மீது பாலியல் குற்றச்சாட்டு இருப்பதாக அது அம்பலப்படுத்தியது. பாஜகவின் மேல்மட்ட பொறுப்பில் இருப்பவர்கள் மட்டுமல்ல, அக்கட்சியின் கீழ்மட்டம் உள்ளவர்கள் வரை பாலியல் வன்கொடுமை வழக்குகள் ஏராளம். இந்தியாவில் உள்ள கட்சிகளில், பாலியல் குற்றத்தில் முதன்மை இடத்தைப் பிடித்திருக்கும் பாஜக கட்சியின் பாலியல் குற்றங்கள் பட்டியலில் அடங்காதவை.

தமிழ்நாட்டில் பாஜக கட்சியினர், ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார அமைப்பினர் மீதுள்ள பாலியல் குற்றச்சாட்டுகளில் சிலவற்றின் பட்டியல்:

  1. பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு நாள்தோறும் கொதிக்கும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியின், மாநில துணைத் தலைவராக இருக்கும் கரு. நாகராசன் தன்னை வலுக்கட்டாயமாக அறைக்குள் அழைத்து பாலியல் அத்துமீறல் செய்ததாக, அதே கட்சியின் மாவட்ட மகளிரணித் தலைவர் தங்கசோபனா மோடியிடம் தற்போது புகார் கடிதம் அனுப்பிய செய்தி பரபரப்பாகி இருக்கிறது.. 
  2. தமிழ்நாடு பாஜக-வின் பொதுச் செயலாளராக இருந்த கே.டி. ராகவன் ஒரு ஆபாச காணொளியில் சிக்கினார். மேலும் ஒரு பெண் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு தொடுத்தார். அண்ணாமலை கட்சியிலிருந்து இவரை ஒதுக்க திட்டமிட்டு இந்த காணொளிகளை எடுத்ததாக சர்ச்சைகளும் உள்ளது. 
  3. 2025 ஜனவரியில் தமிழ்நாடு பாஜக பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ். ஷா மீது 15 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த குற்ற வழக்கினால் போக்சோ சட்டம் அவர் மீது பாய்ந்தது.
  4. இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த சசிகலா புஷ்பாவிடம் பாஜகவின் மூத்த நிர்வாகி பொன். பாலகணபதி செய்த பாலியல் சீண்டல் செய்த காட்சி காணொளியாக அனைவருமே காண முடிந்தது.
  5. திருச்சி சூர்யா – டெய்சி, காயத்ரி ரகுராம், அலிஷா, அமர்பிரசாத் ரெட்டி என தமிழ்நாடு பாஜகவின் முக்கியப் பிரமுகர்கள் அனைவரும் பாலியல் நெருக்கடியில் சிக்கி அண்ணாமலையிடம் சண்டையிட்டு சச்சரவான நிகழ்வுகளெல்லாம் நடந்தன.
  6. 2017 – அரியலூரில் 17 வயதான நந்தினியுடன் பழகி கர்ப்பிணியாக்கி, பின்பு மூன்று பேருடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொன்றவன் மணிகண்டன் என்னும் இந்து முன்னணியைச் சார்ந்தவன்.
  7. 2019 – கோவை துடியலூரில் 6 வயது குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற சந்தோஷ் குமார் ’இந்து பாரத் சேனா’ என்னும் அமைப்பைச் சேர்ந்தவர்கள்..
  8. 13வயது சிறுமியை உறவினர்களே பாலியல் தொழிலில் தள்ளிய கொடுமையில், வட சென்னை பாஜக கிழக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினரான ராஜேந்திரன், சிறுமியை அதிக பணம் கொடுத்து வாங்கி, எண்ணூர் காவல் துறை ஆய்வாளர் புகழேந்தியின் பாலியல் இச்சைக்கு அனுப்பிய கொடுமை 2020, நவம்பரில் வெளிவந்தது. அந்த சிறுமிக்கு நேர்ந்த கொடுமை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதில் 11 பேர் போக்சோ சட்டத்தில் அடைக்கப்பட்டனர். 
  9. செங்கல்பட்டு வடக்கு பாஜக இளைஞரணி செயலாளர் தமிழரசன் என்பவன், 10க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி, அவர்களுடன் இருந்ததை காணொளியாக்கி, அவர்களை மிரட்டி பணம் பறித்ததை, அவன் காதலி புகார் கொடுத்து கைது செய்ய வைக்கப்பட்டான்.
  10. திரிபுவனம் கிழக்கு ஒன்றிய பாஜக செயலாளர் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உறவினர்களே கடுமையாகத் தாக்கி வழக்கு கொடுத்தனர். 
  11. தஞ்சாவூர் ஒரத்தநாடு அருகே இளம்பெண்ணை தனது நண்பர்களுடன் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததில் கவிதாசன் என்பவன் முக்கியமானவன். அவனும் பாஜக நிர்வாகி.  
  12. நாகர்கோவிலில் பாஜக நிர்வாகி நாஞ்சில் ஜெயக்குமார் பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை கெடுத்ததாக 2024-ல் கைது செய்யப்பட்டான்.
  13. பழனி அருகே ஊராட்சி ஒன்றிய காலை உணவு திட்ட பொறுப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மகுடீசுவரன் 2024-ல் கைது செய்யப்பட்டான்.
  14. சேலம் சாமிநாதபுரம் சார்ந்த 8வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த பாஜக நிர்வாகி தமிழரசன் கைது செய்யப்பட்டான்.
  15. தர்மபுரியில், அறிவியல் கண்காட்சியில் உலக அளவில், தேசிய அளவில் முதலிடம் பிடித்த பெண், இந்த ஆய்வுக்கான உதவிக்காக ஏரியூர் பகுதியில் பாஜக நிர்வாகியை அணுகிய போது, தன்னைப் படுக்கைக்கு அழைத்ததாக, அப்பெண்  அப்பகுதியில் நடந்த மகளிர் தினத்தின் போது வெளிப்படுத்தினார்.

தென்காசியில் ஒரு வாரம் முன்பு மார்ச், 2026-ல் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என தென்காசி நகர்மன்ற பாஜக பெண் உறுப்பினரே, நகர்மன்ற கூட்டத்தில் பேசியது பரவலாக வெளிவந்தது. கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருந்த காயத்ரி ரகுராம், பெண்களுக்கு பாதுகாப்பில்லை எனக் கூறி பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார். அவர், அண்ணாமலை முதற்கொண்ட பாஜக முக்கிய நிர்வாகிகள் வார் ரூம் வைத்து பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல் கொடுக்கின்றனர் எனக் கூறி விலகினார்.

பாஜகவினரின் பாலியல் குற்றங்கள் பெருகும் அதே நேரத்தில், பெண்கள் மீது நடக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான களங்களில் தொடர்ச்சியாக நிற்பதுடன். பாஜக – ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார அமைப்புகள் செய்யும் பாலியல் குற்றங்களைத் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது மே 17 இயக்கம்.

பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை செய்த பாஜகவினரின் பட்டியலை வெளிப்படுத்தி  2021-ம் ஆண்டு மே 17 இயக்கக்குரலில் எழுதப்பட்ட கட்டுரை :

ஒரு சமூகத்தில் ஆணாதிக்கத்தை வலுப்படுத்தும் காரணிகள் வலுவாகும் போது, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் பெருகுகின்றன. ஆணாதிக்கத்தை கருத்தியலாகக் கொண்ட கட்சி பாஜக. ஆண்களுக்கு சேவை செய்யும் கட்டுப்பாட்டை மீறி நடந்தால் பெண்களை திருமண உறவிலிருந்து நீக்கி வைக்கலாம் என்கிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத். ஆர்.எஸ் எஸ், பாஜக, சங்பரிவாரக் கும்பல்கள் வழிகாட்டியாக வழிபடும் கோல்வால்கர், 1960-ம் ஆண்டு குஜராத் பல்கலைக் கழகத்தில், கேரளாவின் பெண்களுக்கு நீண்ட கால அநீதியாக இருந்த பாலியல் வன்கொடுமையை ‘மனித இனத்தை மேம்படுத்தும் சோதனை’ என வர்ணித்தார். நம்பூதிரி பார்ப்பனர்களில் இளையவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் பல நாயர் பெண்களுடன் உறவு வைத்து அந்த சாதியினரை இனப்பெருக்கத்தால் தூய்மைப்படுத்துவது தான் மனித இன மேம்படுத்தும் சோதனை என்றார் ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார கும்பலின் வழிகாட்டியான கோல்வால்கர். இந்த சிந்தனை தான் சமூகத்தில் பெண்களை போகப் பொருளாக மட்டுமே பார்க்கும் உளவியலை ஆண்களுக்கு வளர்த்து, சமூகத்தில் ஆணாதிக்க சிந்தனையை வலுப்படுத்தி, பாலியல் வன்கொடுமைகளுக்கு உரமிட்டிருக்கிறது.

திமுக ஆட்சியில் மட்டுமல்ல அதிமுக ஆட்சியிலும் பெண்கள் மீதான வன்கொடுமைகள் பொள்ளாச்சி சம்பவம் முதற்கொண்டு எண்ணற்ற சம்பவங்கள் தொடர்ந்தன. திமுக,  அதிமுக என எந்தக் கட்சி தமிழ்நாட்டை ஆண்டாலும், எவ்வளவு சட்ட ஒழுங்கை கடுமையான பின்பற்றினாலும், ஆர்.எஸ்.எஸ் சனாதன சித்தாந்தம் மூலம் வளர்த்து விட்ட, பெண்களை பாலியல் பொருளாகவே பார்க்கும் தன்மையை மாற்றி விட முடியாது. ஏனென்றால் அவர்கள் குருவாக ஏற்றுக் கொண்ட வழிகாட்டிகள் கூறி வைத்த  கருத்துக்களே பாலியல் குற்றங்கள் நிகழக் காரணமாக இருக்கின்றன.

இந்தியா முழுமையிலும் பாஜகவினரின் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் ஏற்ற மதவெறியர்கள் பெண்கள் மீது நடத்திய கூட்டுப் பாலியல் வன்முறைகள்:

1.  பெண்களை பாலியல் பண்டமாக சிந்தனையில் ஏற்றிக் கொண்ட சித்தாந்தத்தில் ஊறியவர்களே, நம்மை உறைய வைக்கும் வகையில் மணிப்பூரில் 100 பேருக்கு மேல் சேர்ந்து, இரு பெண்களை ஆடைகளின்றி, சொல்லவே கூசும் வகையில் அப்பெண்களின் பாலியல் உறுப்புகளில் கைவைத்து இழுத்துச் சென்றவர்கள்.

2. 2002-ல் குஜராத் இனப்படுகொலையில் பில்கிஸ் பானோ என்ற கர்ப்பிணியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அப்பெண்ணின் உறவுகளைக் கொன்று, மூன்று வயது குழந்தையை கல்லில் அடித்துக் கொன்ற சங்பரிவாரக் கும்பல்களின் சிந்தனைக்குள் அந்த சித்தாந்தமே ஊறியிருந்தது.

3. இந்தியாவையே தலை நிமிரச் செய்த ஒலிம்பிக் வீராங்கனைகள் மீது பாலியல் சீண்டல் செய்த பாஜக எம்.பி. பிரஜ்பூஷன் மீது நடவடிக்கை எடுக்காமல், போராட்டம் நடத்திய வீராங்கனைகளை தரதரவென்று இழுத்துச் சென்று மிக மோசமான முறையில் கைது செய்ய வைத்ததற்கு ஆர்.எஸ்.எஸ் -சின் பெண்கள் மீதான சிந்தனையே காரணமாக இருந்தது.

4. ஆயிரக்கணக்கான பெண்களுக்கு மேல் பாலியல் வன்கொடுமை செய்து, அதைக் காணொளியாக எடுத்து வைத்து மிரட்டிய பிரஜ்வல் ரேவண்ணாவுக்காக, அவள் போட்டியிடும் தொகுதியில் பிரச்சாரம் செய்தவர் மோடி.

5. 2023-ம் ஆண்டு வாரணாசியின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில்  பி.டெக் படிக்கும் மாணவியை பாஜக ஐடிவிங் நிர்வகித்த மூன்று பேர் துப்பாக்கி முனையில் மிரட்டி இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோவாகவும் எடுத்த நிகழ்வு வெளிவந்தது.

6. சமீபத்தில் மார்ச் 2026-ல் கோவா மாநிலத்தின மாநிலத்தின் பாஜக கவுன்சிலர் சுஷாந்த் நாயக் என்பவரின் மகன் இளம் பெண்களை சமூக வலைதளம் மூலமாக பேசி வரவழைத்து அவர்களை ஆபாச வீடியோ எடுத்து நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளான். நூற்றுக்கணக்கான சிறுமிகள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்படி 151எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் பெண்கள் மீது நடத்திய பாலியல் கொடுமையை தான் ADR அறிக்கை அம்பலப்படுத்தி இருக்கிறது. இன்னமும் அடிமட்ட தொண்டர்களின் கணக்கெடுப்புகளை எடுத்தால் பட்டியல் போதாது.

இது மட்டுமல்லாமல் ஆர்.எஸ்.எஸ், பாஜக, சங்பரிவார கும்பல்கள் ஊக்குவிக்கும் இந்துத்துவ சாமியார்களை நம்பி செல்லும் பெண்கள், சிறுமிகள் ஏமாற்றப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதை, தனி கட்டுரையாகவே மே 17 இயக்கம் வெளியிட்டது. அதற்கான இணைப்பு:

கடந்த வாரம், மகாராஷ்டிராவைச் சார்ந்த சாமியாரும், ஜோதிடருமான அசோக் கரத் என்பவன் மயக்க மருந்து கொடுத்து உறவு கொண்ட 68 பெண்களை வீடியோ எடுத்து வைத்து மிரட்டியதாக கைதாகி இருக்கிறான். பாஜக, ஆர்.எஸ்.எஸ் கும்பல்களால் பெண்களை போகப் பொருளாக்கும் சாமியார்களின் அட்டூழியம் தொடர்கதையாகிறது. 

பாஜக-வின் பெண்கள் மீதான வன்கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்தவைகளே பட்டியல் போட முடியாத அளவிற்கு நீள்கிறது. இன்னும் வெளிச்சத்திற்கு வராத பாலியல் கொடுமைகள் எவ்வளவென்று அந்தக் கட்சியினருக்கே வெளிச்சம்.

ஒவ்வொரு முறை பெண்கள் மீது நிகழ்தப்படும் பாலியல் வன்முறையை மே 17 இயக்கம் கண்டித்து அறிக்கை விடுவதும், அரசின் செயலற்ற தன்மை குறித்து கேள்விகள் கேட்பதும், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்துவதும் என தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட பெண்களின் பக்கம் நின்று பேசுகிறது.

கடந்த 2024-ம் வருடம் தஞ்சாவூர் ஒரத்தநாடு பகுதியின் பாப்பநாடு அருகிலுள்ள ஊரில் ஒரு இளம்பெண்ணை அதே ஊரை சேர்ந்த கவிதாசன் உட்பட ஐந்து பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினர். இடைநிலை ஆதிக்க சாதியினராக அவர்கள் இருப்பதால் எந்த கட்சியும் இந்த செய்தியை கையிலெடுக்காது கடந்த போது, மே 17 இயக்கம் அப்பகுதிக்கு சென்று, விசாரித்து அறிக்கை விடுத்து, கள ஆய்வு நடத்தியது. சென்னையில் அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் இணைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. சமீபத்தில் பிணை வாங்கி வந்து அப்பெண்ணை அக்கும்பல் மிரட்டியிருக்கிறது. இன்றும் கடுமையான நெருக்கடி தரும் சாதியவாதிகளிடமிருந்து அப்பெண்ணை  மே 17 இயக்கத் தோழர்கள் பாதுகாப்பு அளித்து நிற்கின்றனர்.

2014-ல் காரைக்கால் சிறுமி புனிதா பாலியல் வன்புணர்வுக்கு எதிராக பல்லாவரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

 2017 – அரியலூர் நந்தினியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இந்து முன்னணி சார்ந்தவனான மணிகண்டன்.    

2019 –  தமிழகத்தையே அதிர வைத்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக போராட்டம், ஆர்ப்பாட்டம், கண்டன அறிக்கை என அனைத்தும் நடத்தியது.

2021-ல் கோவை சின்மயா பள்ளியில் படித்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி, அப்பள்ளி  ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார். மே 17 இயக்கத் தோழர்கள் பள்ளி தந்த கடும் பெருக்கடிக்கு இடையிலும் கள ஆய்வு மேற்கொண்டு உண்மைகளை வெளிக்கொண்டு வந்தனர். 

2011-ல் டெல்லி காவல்துறை அதிகாரி  ராபியா சஃரி மீது நடத்தப்பட்ட கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக அறிக்கை, கேளம்பாக்கத்தில் சுசில் ஹரி என்னும் பள்ளியை நடத்தி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த சிவசங்கர் பாபாவை கைது செய்ய சொல்லி கண்டன அறிக்கை,

2022 ல் மயிலாப்பூர் கலாசேத்ரா நடனப் பள்ளி மற்றும் Y.G. மகேந்திரன் மகள் நடத்தும் பிஎஸ்பிபி பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு கொடுத்த பாலியல் தொல்லைகளுக்கு எதிரான அறிக்கைகள், சென்னை ஐஐடியில் வங்கதேச பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைக்கு கண்டன அறிக்கை, மணிப்பூரில் சொல்லவே கூசும் அளவிற்கு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததை கண்டித்து எண்ணற்ற ஆர்ப்பாட்டங்கள் எனத் தொடர்ந்து பெண்கள் மீதான வன்கொடுமைக்கு எதிராக களத்தில் நிற்கிறது மே 17 இயக்கம்.

திமுக அரசைக் காப்பாற்ற இந்தி அழிப்பு போராட்டம் என கொச்சைப்படுத்துகிறது சங்கிக் கூட்டம். திமுக ஆட்சிக்கு எதிராக அனகாபுத்தூர் வீடு இடிப்பு எதிர்த்து தொடர் போராட்டம், மாஞ்சோலைத் தொழிலாளர்களுக்கு உரிய நீதி கோரி தொடர் போராட்டம், தூய்மைப் பணியாளர்கள், இடைநிலை ஆசிரியர்கள், கெளரவ பேராசிரியர்கள், மருத்துவப் பணியாளர்கள் என ஒப்பந்தப் பணியாளர்களின் பணி நிரந்தரம் கோரிய எண்ணற்ற போராட்டங்களில் கலந்து கொண்டு, அவர்களுக்கு ஆதரவளித்து அரசை நோக்கி வைத்த கண்டனங்கள், மீனவர்கள் மீது இலங்கை அரசு தாக்குதல் நடத்துவதற்கு எதிரான போராட்டங்கள் என எதிர்கட்சி கூட செய்யாத அளவிற்கு எண்ணற்ற போராட்டங்களை முன்னெடுத்த இயக்கம் மே 17 இயக்கம்.

தேர்தல் காலம் வந்ததும் பெண்கள் மீதான வன்புணர்வுகள் தெரிய வரும் இந்த வலைதள சங்கிக் கூட்டத்திற்கு, பெண்கள் மீதான வன்புணர்வில் முதலிடத்தில் இருக்கும் பாஜக படியளக்கிறது. சமூக வலைதளம் முழுக்க மொய்த்திருந்து கள செயல்பாட்டாளர்களை மலினப்படுத்தி, அருவருப்பாகப் பேசி தங்களின் பிழைப்பை ஓட்டுகிறது சங்கிக் கூட்டம். 

பெண்களை போகப் பொருளாக பார்க்கும் உளவியலை காலம் காலமாக வளர்த்து விட்டவர்கள் பார்ப்பன சனாதனவாதிகள். அந்த ஆதிக்கமே மதவாத ஆணாதிக்கமாக, சாதியவாத ஆணாதிக்கமாக பெண்களின் மீதே திரும்புகிறது. பாலியல் வன்கொடுமைகளின் ஆணிவேராக இருக்கும் இந்த ஆணாதிக்க இயல்பினைப் பற்றிப் பேசாமல் கடந்து விடுவதால், சட்டம் ஒழுங்கு பார்வையாக மட்டும் இதனை பார்க்க வைத்து, மக்களின் கோவத்தைத் தூண்டுகிறது பாஜக.

பெண்களின் பாதுகாப்பில் அரசாங்க எந்திரமான காவல் துறைக்கு முக்கியப் பங்குண்டு. கொலை, கொள்ளை, கஞ்சாப் புழக்கம் போன்றவற்றைத் தடுப்பதில் மெத்தனம் காட்டுவது கண்டிக்கப்பட வேண்டியது. காவல் துறையைக் கண்டித்தும் மே 17 இயக்கம் தொடர்ந்து கண்டன அறிக்கைகளை விடுத்திருப்பதோடு, போராட்டங்களும் நடத்தியிருக்கிறது.

பாலியல் வன்புணர்வு என்பது ஒரு சமூகத்தின் உளவியலில் ஆணாதிக்கத்தை மேலும் மேலும் புகுத்தும் நச்சு சக்திகளால் தொடரக் கூடியது. தங்கள் சித்தாந்தத்திலேயே பெண்களைத் தாழ்வாகப் பார்க்கும் பாஜக, ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவாரக் கும்பல்கள் பெண்கள் மீதான வன்கொடுமைகளை எதிர்ப்பது தேர்தல் கால நாடகம். எந்த ஆதாயமுமின்றி, கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று, கள போராட்டங்களில், செயல்பாடுகளில் பெண்கள் மீதான வன்கொடுகளை என்றும் எதிர்த்து நிற்பது மே 17 இயக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »