கோவையில் ஆதரவளித்த தோழமைகள்- திருமுருகன் காந்தி

கோவை ஒண்டிப்புதூரில் மே பதினேழு தோழர்கள் பரப்புரையை தடுத்து நிறுத்த பெருமளவில் சங்கிகள் குவிந்து கலவரம் செய்ய முயன்ற போது பொதுமக்களும் தோழமை அமைப்புகளும் உடன் நின்றனர் என்பதை மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் தனது முகநூலில் கணக்கில் ஏப்ரல் 11, 2024 அன்று பதிவு செய்தது.

நேற்று சங்கிகளின் கோட்டை என சொல்லப்பட்ட இடங்களில் கோவை பரப்புரையை நிறைவு செய்து உதகை கிளம்பியுள்ளோம்.

கோவை ஒண்டிப்புதூரில் எங்கள் உரையை தடுத்து நிறுத்த பெருமளவில் சங்கிகள் குவிந்து கலவரம் செய்ய முயன்ற போது பொதுமக்களும் தோழமை அமைப்புகளும் உடன் நின்றனர். அப்பகுதி ஆட்டோ ஓட்டுனர்கள், சில பெண்கள், பின்புறமிருந்த பட்டத்தரசியம்மன் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் என பலர் திரண்டனர். இதில் பேராசிரியர் ஒருவரும் அடக்கம். அச்சமயத்தில் அங்கிருந்த திமுக படிப்பகத்தில் இருந்தவர்கள், கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக தோழரொருவர், மக்கள் நீதி மைய தோழர்கள் என பலரும் ஒன்றாக ஆதரவளித்தனர். எங்கள் பரப்புரை தொடங்குவதற்கு முன்பு எங்களுக்கு பிரச்சார வாகனமளித்து உதவிய வேட்பாளரையும் சங்கிகள் மிரட்டியுள்ளனர். அவர் இதை வழக்காக பதிவும் செய்துள்ளார்.

இரண்டாம் நாள் பரப்புரையை தொடங்கும் முன்னர் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் செழியன் தொடர்பு கொண்டு விசாரித்தார். முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர் தோழர் கருணாஸ் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் அவரது கட்சியின் மாவட்ட தலைவர் கலையரசனையும் இதர உறுப்பினர்களையும் ஆதரவளிக்கவும், பக்கபலமாக நிற்கவும் அனுப்பினார். மக்கள் அதிகாரத்தின் தோழர்.இராசன் தோழர்களுடன் வந்தார். செய்தியறிந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொருப்பாளர் தோழர்.குரு மற்றும் பகுதி செயலாளர் குயின்ஸ் மனோகரன் இதர சிறுத்தை தோழர்களுடன் வந்திருந்தார். தமிழ்ப்புலிகளின் கட்சி தலைவர் தோழர். நாகை திருவள்ளுவன் நேரில் சந்தித்து விசாரித்தார். பின்னர் தமிழ்ப்புலிகளின் பொதுச்செயலாளர் தோழர்.இளவேனில் தோழர்கள் பலருடன் பரப்புரையின் போது உடனிருந்தார். திராவிடர்-தமிழர் கட்சியின் தலைவர் தோழர் வெண்மணி நேரில் சந்தித்து விவரமறிந்து ஆதரவு தெரிவித்தார். சிக்கல் நேர்ந்தால் தமது தோழர்களுடன் களத்திற்கு உடன் வருவதாக உறுதியளித்தார்.

தமிழர் விடியல் கட்சியின் தோழர் நவீன், தம் கட்சி தோழர்களுடன் முழுமையாக பரப்புரையில் பங்கேற்றார். தமிழ்ச் சிறுத்தைகள் கட்சியின் தோழர் அகத்தியன் இரு நாட்களும் நம்முடன் பயணித்து பரப்புரை மேற்கொண்டார். கோவையில் இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து இயங்கி வரும் தந்தைப் பெரியார் தி.கவின் தலைவர் தோழர். கு.இராமகிருட்டிணன் அவர்களை பெரியார் படிப்பகத்தில் சந்தித்து விவரங்களை பகிர்ந்து கொண்டோம்.

தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் தோழர் அபுதாகிர், ஷேக், சுரேஷ் ஆகியோர் வந்திருந்தனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாத்தின் தோழர்கள் நேரில் வந்திருந்து ஆதரவளித்தனர். விடியல் பதிப்பகத்தின் தோழர் இராஜாராம் தோழர்களுடன் வந்திருந்து ஆதரவளித்தார். இதுதவிர எஸ்.டி.பி.ஐ கட்சியின் தோழர்கள் சிலரும் வந்திருந்து ஆதரவை தெரிவித்தனர். கோவை கண்ணப்பநகர் பகுதியின் மார்க்ஸிஸ்ட் கட்சி பொறுப்பாளர் தோழர்.அருள் நேரில் பங்கெடுத்தார். எழுத்தாளர், கவிஞர் மீனாட்சி சுந்தரம் குடும்பத்தினருடன் பங்கெடுத்து ஆதரவளித்தார்.

இவர்களுடன் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தோழர்கள் சந்திரன், செருகை சுரேஷ் ஆகியோர் கும்பகோணத்திலிருந்து விரைந்து வந்து சேர்ந்திருந்தனர். இவர்கள் மற்றும் மே17 இயக்கத்தின் தோழர்களுடன் நானும், தோழர்.குடந்தை அரசனும் மோடி ஆட்சியின் மோசடிகள், பாஜகவின் பயங்கரவாத ஆட்சியினை விளக்கி உரையாற்றிய பொழுதில் சாமானிய மக்கள் திரண்டனர். பெரும் கூட்டத்தை கூட்டிக்கொண்டு நாங்கள் பரப்புரை செய்வதில்லை. அதனால் சாமானிய மக்கள் எளிதில் எமது பரப்புரையின் போது நின்று கவனிக்கின்றனர். பேசி முடித்ததும் நேரில் வந்து பாராட்டுகின்றனர். கைகொடுக்கின்றனர். அவரவர் எதிர்கொண்ட சிக்கல்களை நம்மிடம் சொல்கின்றனர்.

நமது தோழர்களை திரட்டி நாமே பேசிக்கொள்வதில் இருந்து மாறுபட்டு தோழர்கள் ஒதுங்கி நிற்க, பிரச்சார வாகனத்தின் முன் வெகுமக்கள் திரள்வதற்கு வசதியாக கூட்டத்தை நடத்துகிறோம். எமது பரப்புரையில் முற்போக்கு இயக்கங்களும், சாமானிய மக்களுமே பாதுகாப்பளிக்கின்றனர். பல்லாயிரக்கணக்கான துண்டறிக்கைகளை விநியோகித்துவிட்டோம். பாஜக எதிர்ப்பு துண்டறிக்கைகளை மக்கள் வீதியில் வீசுவதில்லை. பல தரப்பிலிருந்து பாஜக எதிர்ப்பு பரப்புரைக்கு ஆதரவு கிடைக்கிறது. சொந்த செலவில் பல நூறு மே17 தோழர்கள் பல தொகுதிகளில் பணியாற்றுகின்றனர். குறிப்பாக சிதம்பரம், தென்சென்னை, திருச்சி, கோவை, உதகை ஆகியவற்றில் மையமாக இயங்குகின்றனர்.

பாஜக தலைவர்களை அம்பலப்படுத்துகின்ற எமது பரப்புரைக்கான வாகனமோ, அனுமதியோ கிடைக்காத சமயங்களில் சுயேட்சை வேட்பாளர்கள் வாகனம் கொடுத்து, அனுமதியை பெற்றுக்கொடுத்து உதவுகின்றனர். தங்களுக்கு வாக்குகேட்க வேண்டுமென அவர்கள் நம்மிடம் வேண்டுவதில்லை. பாஜக எதிர்ப்பு முன்னிலை பெறவேண்டுமென்பதில் கவனம் அனைவருக்குமுள்ளது. சில நண்பர்கள் இந்த சுயேட்சைகளின் சின்னங்கள், பெயர்களை தோண்டியெடுத்து எம்மை அவதூறு செய்வதற்காக பரப்புகின்றனர். இது அச்சுயேட்சைகளுக்கு பெரிய உதவியாகவும், அவதூறு செய்பவர்களின் ஆதரவு கட்சிக்கு எதிராகவும் மட்டுமே முடியும். நாங்கள் இந்த சுயேட்சைகளுக்கு ஆதரவாக வாக்கு கேட்டு பேசினோமா? அல்லது இல்லையா? என்பதற்கு இருநாட்களும் எம்முடம் நின்ற இத்தனை தோழமைக் கட்சிகளின் பொறுப்பாளர்களும், நேரலையும், காணொளிகளுமே சாட்சி. இவர்களிடம் களநிலவரத்தை அறிந்துகொள்ள வாய்பிருந்தும், உண்மையை சொல்ல மனமில்லாமல் அவதூறுகள் நடக்கின்றன.

இவ்வாறான ‘கண்ணியமாக காட்டிக்கொடுத்தல்’ என்பதைக் கடந்து, கோவையை சங்கிகளிடமிருந்து மீட்கும் எங்கள் பரப்புரையில் பெருமளவிலான தோழமைகள் தோள்கொடுத்து நிற்கின்றனர்.

கோவையில் இளம் வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் பலவேறு பொய்ப்பரப்புரைகளை பாஜக செய்துவருகிறது. இது சிலரிடத்தில் ஈர்ப்பை கொடுத்துள்ளது. பாஜக செய்த படுபாதக செயல்களை பரப்புரை செய்யாமல் பாஜகவை அம்பலப்படுத்த இயலாது. பாஜகவை அம்பலப்படுத்தாமல் அதை வெற்றி கொள்ள இயலாது. இவ்வாறாக பாஜகவின் மோசடிகளை சமரசமில்லாமல் அம்பலப்படுத்த போராடும் இயக்கங்களாலேயே இயலும். ஆனால் அவ்வாறான இயக்கங்களுக்குரிய ஆதரவுகள் உரிய ஆற்றல்களிடமிருந்து கிடைப்பதில்லை. இதை விரைந்து நீக்கவில்லையெனில் பாஜக மிக எளிதாக முன்னேறும். நாங்கள் இங்கிருந்த நாட்களில் பாஜகவின் வீதி பரப்புரைகள் கலவரத்தை உண்டாக்கும் நோக்கில் நடப்பதை கவனிக்க இயலுகிறது. அவர்கள் நேரடியாக திராவிடர் இயக்க கொள்கை மீதான தாக்குதலை தொடுக்கின்றனர். மக்கள் நலத்திட்டங்களை முன்னிறுத்தி இதை திமுக எதிர்கொள்ள முனைவது ஓட்டு அரசியலுக்கு பயன்படலாம், கொள்கை அரசியலுக்கு கேடாக முடியும். 52 பக்க திராவிட எதிர்ப்பு புத்தகத்தை பரப்புரை செய்கிறது பாஜக. இதற்கு எதிரான எங்களின் ‘ஆரிய-பாஜக எதிர்ப்பு’ புத்தகத்தை நாங்கள் விநியோகிக்கக் கூடாதென மிரட்டுவதைத் தான் ஒண்டிப்புதூர் கலவரத்தில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதற்காகவே, பாஜகவினர் எமது பரப்புரையினை தடுத்த நிறுத்த முனைகின்றனர். இவற்றை மீறி எமது பரப்புரை கோவையில் நடந்தது. இப்பரப்புரையிலும், நெருக்கடியிலும் உடனிருந்து தோள்கொடுத்த தோழமைகளுக்கு மிக்க நன்றி.

இத்தோழமைகள் இருக்கும் வரை நம்மை சங்கிகளால் வெல்ல இயலாது.

முகநூல் இணைப்பு:

https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fthirumurgangandhimay17%2Fposts%2Fpfbid02dTkjB3jAHKbJsTYhiWJvd3jRwwRevStJeKW8fqnzuouLDLPGqpJuVf5tqLmQHzqql&show_text=true&width=500

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »